அமெரிக்கா ஐரோப்பாவில் கூட இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு எதிராக பேசுபவர்கள் தான் ஆட்சிக்கு வரமுடியும்



அமெரிக்கா ஐரோப்பாவில் கூட இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு எதிராக பேசுபவர்கள் தான் ஆட்சிக்கு வரமுடியும்

நம்முடைய பகுதி இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதி என்பதால் பல இஸ்லாமிய நண்பர்கள் உண்டு முன்பெல்லாம் பலரின் வீடுகளுக்கு நேரம் காலம் பார்க்காமல் செல்வோம் அந்த நண்பர்கள் எங்களுடன் முழு நேரமும் சுற்றுவார்கள் கிரிக்கெட் விளையாடுவோம் பல மணி நேரங்கள் அரட்டை அடித்துக்கொண்டு இருப்போம்

 இன்று மெல்ல அவர்களில் பலர் நட்பு வட்டத்தில் இருந்து விலகி விட்டார்கள் சிலர் வெறும் ஹலோ நண்பர்கள் ஆகிவிட்டார்கள் என்னை விட வயது முதிர்ந்த இஸ்லாமிய நண்பர்கள் கூட என்னிடம் நல்ல உறவு கொண்டிருந்தார்கள் இன்று அவர்களே சிறிது தள்ளி தான் இருக்கிறார்கள் பொதுவாகவே இஸ்லாமியர்கள் ஹிந்துக்களிடம் இருந்து விலகி போக ஆரம்பித்து விட்டார்கள் தமிழ்நாடு போன்ற மாநிலத்தில் இது நடக்கும் என்று நாம் கற்பனை கூட செய்திருக்க முடியாது.


முன்பெல்லாம் அவர்கள் வீட்டு பெண்கள் புடவையை தலைப்பாக சுற்றியிருப்பார்கள் இல்லை வெள்ளையாக ஒரு அங்கி இருக்கும் அதை மேலே சுற்றிக்கொண்டு இருப்பார்கள் இளம் பெண்கள் நம் வீட்டு பெண்களை போல் தான் இருந்தார்கள் அவர்கள் எல்லா சுதந்திரத்தையும் அனுபவித்தார்கள் அயத்துல்லா கொமேனி ஈரானில் கல்லூரி படிக்கும் பெண்களை கருப்பு அங்கியால் மூடியபோது கூட நம் ஊர் பெண்கள் சாதாரண ஆடைதான் அணிந்திருந்தார்கள் பாரதவிலாஸ் என்ற ஒரு சிவாஜி படம் நினைவிருக்கும் அதில் வி.கே.ராமசாமி மற்றும் ராஜசுலோச்சனா ஒரு கேரளா மாப்பிளா முஸ்லீம் ஜோடியாக நடித்திருப்பார்கள்

அதில் கூட ராஜசுலோச்சனா பாவாடை சட்டை போன்ற ஒரு உடை தான் அணிந்திருப்பார் பின்னந்தலையில் ஒரு அங்கி தொங்கும் அவ்வளவு தான் 











இன்று கேரளா முஸ்லிம்கள் முழு கருப்பு உடையில் தான் தங்கள் வீட்டு பெண்களை வைத்திருக்கிறார்கள்.
முன்பெல்லாம் இஸ்லாமிய இளைஞர்கள் நீண்ட ஜிப்பாவும் மார்பு வரை புரளும் தாடியும் முக்கா காலிற்கு கைலியும் அணிந்தெல்லாம் பார்த்தது கிடையாது இன்று 20 வயது பையன்கள் கூட அதை போல் திரிகிறார்கள்.

 கல்லூரி படிக்கும் பையன்கள் கூட லேசாக தாடி வைத்துக்கொள்கிறார்கள் கேட்டால் மார்க்கம் என்கிறார்கள் திடீரென்று இவர்கள் இப்படி மாற காரணம் என்ன.
மௌல்விகளும் முல்லாக்களும் இருக்கும் தோரணையில் சாதாரண மக்கள் இருக்க என்ன காரணம் இவர்கள் நமக்கு எதை உணர்த்துகிறார்கள்
.
ஈரான் ஈராக் சண்டை நடந்த போதும் அமெரிக்காவின் டெல்டா போர்ஸ் படை ஈரானில் தன்னுடைய தூதரகத்தில் மாட்டிக் கொண்டிருந்தவர்களை மீட்க தாக்குதல் நடத்தியபோதும் சதாம் ஹுசைன் குவைத்தை ஆக்ரமித்தபோதும் சோவியத் ரஷ்யா ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்த போதும் எந்த சலனமும் காட்டாதவர்கள் இன்று இஸ்ரேல் பாலஸ்தீன் பிரச்சனையில் போஸ்டர் அடித்து ஒட்டுகிறார்கள் அமெரிக்கா ஆப்கானை ஆக்ரமித்துவிட்டது என்று புலம்புகிறார்கள் இவர்கள் எப்படி சர்வதேசமயமானார்கள்.


இன்று உலகின் இரண்டாவது பெரிய மதம் எப்படி தன்னை மற்றவர்கள் வஞ்சிக்கிறார்கள் என்று குற்றம் சொல்லி தன்னை பாதிக்கப்பட்டவனாக ஆக்குகிறது. சோவியத் ரஷ்யா ஆப்கானை ஆக்ரமித்தபோது வாளாவிருந்த இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள் இன்று இஸ்ரேல் பாலஸ்தீனில் குண்டு போடுகிறது என்று பாராளுமன்றத்தை முடக்குகிறார்கள் என்ன நடக்கிறது இங்கே.




இஸ்ரேலில் 20% அரேபிய முஸ்லிம்கள் வசிக்கிறார்கள் உயர்பதவிகளில் இருக்கிறார்கள் ஆனால் ஈரானிலோ ஈராக்கிலோ சவுதியிலோ ஒரு சதவீதம் யூதர்கள் கூட கிடையாது 

ஆனால் இந்த நிலங்களில் அவர்கள் வரலாற்று காலம் தொட்டே பல்கி பெருகி வாழ்ந்தவர்கள் துருக்கிய ஆட்டமன் அரசு காலத்தில் வாழ்ந்த அவர்களால் இந்த நவநாகரீக உலகில் இதே இடங்களில் வாழமுடியாமல் போன காரணம் என்ன. சவுதியின் வாஹாபி இஸ்லாமின் நீட்சியா இது.



இன்று பாரூக் என்ற இஸ்லாமியர் கோவையில் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார் அவர் பெரியார் விடுதலை கழகத்தை சேர்ந்தவர் கடுமையான நாத்திகம் பேசினார் என்று சொல்கிறார்கள் அதற்காக அவரின் நண்பர்களே அவரை கொலை செய்யும் வரை சென்றிருக்கிறார்கள்.
ஹிந்து கடவுள்களை பற்றி இந்த பெரியார் திராவிட கும்பல் பேசாத பேச்சா அதற்காக அவர்கள் படுகொலையா செய்யப்பட்டார்கள். என்னிடமே சண்டைக்கு வந்த திராவிட கழக நண்பர்கள் இருக்கிறார்கள் கைகலப்பு கூட நடந்திருக்கிறது அதற்காக யாரும் இந்த எல்லைக்கு போனதில்லையே. கிறிஸ்தவர்கள் தங்கள் மதத்தை பற்றி வைக்காத விமர்சனமா அவர்களின் சீர்திருத்தவாதிகள் அவர்களில் இருந்தே எழுந்தல்லவா வந்தார்கள் இஸ்லாம் மட்டும் மீண்டும் மீண்டும் தன்னை ஒரு கூட்டுக்குள் அடைத்துக்கொள்ளும் காரணம் என்ன.

மற்றவர்களிடம் நேசக்கரம் நீட்டாமல் மறுப்பதன் நோக்கம் என்ன. 1000 வருடங்கள் பழமைக்கு செல்வேன் என்று இந்த நவீன யுகத்தில் அடம்பிடிப்பதன் காரணம் தான் என்ன.



இன்று உலகம் முழுக்க தீவிரவாத செயல்களில் ஈடுபடுபவர்களாகவும் பலரின் பயத்திற்கும் வெறுப்பிற்கும் ஆளானவர்களாக அவர்கள் மாறிக்கொண்டு இருக்கிறார்கள் இது அவர்களுக்கே தெரியுமா என்று தெரியவில்லை இன்று அமெரிக்கா ஐரோப்பாவில் கூட இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு எதிராக பேசுபவர்கள் தான் ஆட்சிக்கு வரமுடியும் என்ற நிலை வந்திருக்கிறது இது அவர்களுக்கு நல்லதல்ல.இன்று நம் அறிவுஜீவிகள் கடைபிடிக்கும் கள்ள மௌனத்தின் மூலம் இதை கண்டும் காணாமலும் இருந்துவிட்டால் மறுமையில் கூட இதற்கு மன்னிப்பு கிடையாது என்பதே நிதர்சனம்..

Comments

Popular posts from this blog

DACOITS OF CHAMBAL

List of Muhammad's Wives and Concubines

MAHARANI SITADEVI OF BARODA the "Indian Wallis Simpson" INTERESTING LIFE STORY OF HER