Posts

Showing posts with the label ஐடா சோபியா

“இந்தியப் பெண்மணிகளுக்கு உடனடி தேவை பெண் மருத்துவர்கள்”- இறைவனின் வார்த்தை

Image
“இந்தியப் பெண்மணிகளுக்கு உடனடி தேவை பெண் மருத்துவர்கள்”- இறைவனின் வார்த்தை தமிழ் நாட்டில், திண்டிவனம் என்ற நகரை எல்லோரும் அறிந்திருப்பார்கள். அந்த நகரில் ஒரு இரவு பொழுது மின்சாரம் இல்லாத காலம்., வருடமோ 1890. அந்த கிறிஸ்தவ மிஷின் பங்களாவில், சிம்னி விளக்குவெளிச்சத்தில், 20 வயதான அமெரிக்க நங்கை ஆங்கில நாவல் படித்துக் கொண்டிருந்தாள். அவளின் பெயர் :ஐடா சோபியா ஸ்கட்டர்.   அமெரிக்காவில் கிறிஸ்தவ இறை பணி செய்ய பயிற்சியும் பெற்ற இவளது தந்தை ஜாண் ஸ்கட்டர், திண்டிவனத்தில் மருத்துவ சேவையையும், இறை பணியும் செய்து வந்தார். தந்தையை பார்க்க திண்டிவனத்துக்கு ஐடா சோபி யா ஸ்கட்டர் வந்திருந்த போதுதான், இரவு நேரத்தில் அந்த சோக காட்சிகள் அரங்கேறின…. ஐடா ஸ்கட்டர், நாவல் புத்தகத்தை படித்துக்கொண்டு இருந்த போது, தலையில் குல்லா அணிந்திருந்த ஒரு இஸ்லாமியர் ஓடி வந்து, கதவை தட்டினார். கதவை திறந்த போது அந்த இஸ்லாமியர்,”எனது மகளுக்கு இது தலை பிரசவம்., அவள் பிரசவ வேதனையால் துடிக்கிறாள்., அவளுக்கு பிரசவம் பார்க்க நீங்கள் வாருங்கள்” என்று கதறினார். இதனை கேட்ட ஐடா ஸ்கட்டர், “ நான் டாக்டர் அ...