11 amazing facts about Nauru, the least visited, most obese nation on Earth
11 amazing facts about Nauru, the least visited, most obese nation on Earth *இலவசங்கள் மக்களை வறுமையில் கொண்டு சேர்க்கும்* நவுரு தீவாக மாறும் தமிழகம் ==================== நவுரு, ஆஸ்திரேலியாவுக்கு அருகே உள்ள குட்டி தீவு நாடு. ஜனத்தொகை 10,000 மட்டுமே. தீவின் நீளம் ஐந்து கிமி, அகலம் மூன்று கிமி. 30 நிமிடத்தில் சுற்றிவரக்கூடிய நாடு. மீன்பிடித்தல், விவசாயம் என மகிழ்ச்சியாக சென்றுகொண்டிருந்த நாட்டுக்கு லாட்டரி அடித்தது.. ஆம்…தீவில் லட்சகணக்கான ஆண்டுகளாக பறவைகள் எச்சமிட்டு அவை முழுக்க பாஸ்பேட் எனும் தாதுவாக மாறியிருந்தன. பாஸ்பேட் சர்வதேச சந்தையில் ஏராளமான விலைக்கு போகும் பொருள். தீவில் கணக்கு, வழக்கற்ற எண்ணிக்கையில் பாஸ்பேட் இருந்தது. அதன்பின் பன்னாட்டு கம்பனிகள் வந்து இறங்கின. பாஸ்பேட்டை வெட்டி எடுத்தன. அரசுக்கு ஏராளமான வருமானம் வந்தது. ஒரு கட்டத்தில் 10,000 பேர் மட்டுமே உள்ள நாட்டின் அரசிடம் 170 கோடி டாலர்கள் இருந்தன. கணக்குபோட்டால் நபர் ஒருவருக்கு ஒன்றரை லட்சம் டாலர். அதாவது நால்வர் அடங்கிய குடும்பத்துக்கு தலா 1 கோடி ரூபாய்களை அரசால் கொடுத்திருக்க முடியும். அந்த பணத்தை என்ன செய...