Posts

Showing posts with the label KRISHNASAMY

KRISHNASAMY PAVALAR , FREEDOM FIGHTER

Image
KRISHNASAMY PAVALAR , FREEDOM FIGHTER  ஆக்கம் ஷாஜகான் - pudhiavan.blogspot.in  விடுதலைப் போராட்ட காலத்தில் கதரின் வெற்றி, தேசியக் கொடி, பதி பக்தி, பாணபுரத்து வீரன், கவியின் கனவு, வள்ளி திருமணம் போன்ற நாடகங்கள் புகழ்பெற்ற நடிகர்களால் பிரபலமான நாடக சபைகளால் நடத்தப்பட்டன. நாடகத்தின் மூலம் தேசபக்தியைப் பரப்பியவர்கள் குறித்து  கிருஷ்ணசாமிப் பாவலர் காங்கிரஸ் மகாசபை துவக்கப்பட்டு பத்து ஆண்டுகளுக்குப் பிறகு பண்டிட் கோபாலாச்சாரியார் எழுதிய ‘ஆரிய சபா’ என்னும் நாடகம்தான் தேசிய இயக்கத்தின் முதல் நாடகம். ஆயினும் இது காங்கிரஸ் மகாசபை பற்றி அறிமுகம் செய்வதோடு நின்றுகொண்டது. பால மனோகர சபை என்ற நாடகக் குழுவை நடத்திவந்த சதாவதானம் கிருஷ்ணசாமிப் பாவலர் எழுதிய ‘கதரின் வெற்றி’ குறிப்பிடத்தக்க தேசபக்தி நாடகம். சென்னையில் ராயல் தியேட்டரில் இந்த நாடகம் நடந்து முடிந்ததும் நாடகத்தைப் பார்த்த சிலர் அப்போதே மேடையில் ஏறி, எனக்கும் கதராடை தாருங்கள் என்று முழங்கும் அளவுக்கு உணர்ச்சிவசப்படச் செய்த நாடகம் இது என்கிறார் கா. திரவியம். கிருஷ்ணசாமிப் பாவலரின் நாடகங்களில் நடித்தவர் எம்.ஜி.ஆர...