Posts

Showing posts with the label பூனை

சூடு பட்ட பூனை short story

சூடு பட்ட பூனை காலையில் எழும்போதே நல்ல தலைவலி. ‘இன்று வேலைகள் அதிகம். எப்படி சமாளிக்கப் போகிறோம்?’ என்ற அயர்ச்சி வந்தது. “என்ன ராதா… எழுந்திரிக்கலையா?” என்று படுக்கையில் எழுந்து உட்கார்ந்து கேட்டான் விக்ரம். “இல்ல! இன்னைக்கு என்னவோ ஒரே தலைவலியா இருக்கு. ஆனா, ஆபீஸ்ல இன்னைக்கு ஒரு ‘பிளானை’ முடிச்சாகμம். நேத்தே சொல்லிட்டாங்க.” விக்ரம் ஒரு ‘எலெக்ட்ரிக்கல் என்ஜினீயர்’. ஒரு பெரிய ‘கம்பெனி’யில் வேலை செல்கிறான். இரண்டு தங்கைகளுடன் பிறந்தவன். ராதா அவன் மனைவி. அவள் ஒரு ‘ஆர்க்கிடெக்ட்’. கட்டுமான நிறுவனத்தில் வேலை செல்கிறாள். பல ஆண்கள் மட்டுமே வேலை செல்யும் இடத்தில் ஒரே பெண்ணாக வேலை செல்து கொண்டிருப்பவள். இவர்களுக்கு இரண்டு வயதில் ஒரே பெண் குழந்தை. பெயர் பூஜா. வீட்டின் தலைப்பிள்ளையாக இருப்பதால் தங்கைகளின் திருமணத்தை நடத்தி வீட்டின் பொறுப்பையும் கவனித்தாக வேண்டிய கடமை இருந்தது. தம்பதியர் இருவரின் சம்பளத்தையும் வைத்து ‘லோன்’ எடுத்து ஒரு வீடு வாங்கி இருந்தார்கள். ராதாவின் திறமையை உணர்ந்து மேலதிகாரி மைக்கேல், தான் இருக்கும் ‘சைட்’களில் தன்னுடனே வைத்துக்கொண்டு அவளின் திறமைக்கேற்ற வே...