Posts

Showing posts with the label JAFFNA FORT

JAFFNA FORTயாழ்ப்பாணக் கோட்டை வரலாறு

Image
JAFFNA FORT யாழ்ப்பாணக் கோட்டை வரலாறு கலாநிதி க.குணராசா அவர்கள் எழுதிய யாழ்ப்பாணக் கோட்டை வரலாறு என்னும் புத்தகத்தை சமீபத்தில் படிக்க நேர்ந்தது. நானூறு ஆண்டுகளுக்கு மேலான வரலாற்றை, இலக்கிய வடிவில் விறுவிறுப்பு குறையாமல் படிக்கும்படி தந்துள்ளார். இன்றைய சூழ்நிலையில் யாழ்ப்பாணக் கோட்டை தொல்லியல் ஆய்வுத்தளமாகவும், சுற்றுலாத் தளமாகவும் முக்கியத்துவம் பெற்றுவரும் வேளையில், கோட்டையின் கட்டமைப்பு பற்றிய அத்தியாயத்தை இங்கு பகிர்ந்து கொள்வது பொருத்தமாக இருக்கும் என நம்புகின்றேன். ஒல்லாந்தரால் அமைக்கப்பட்ட கோட்டை கட்டமைப்பில் மிக அற்புதமானதாகும். கீழைத்தேசத்தில்லுள்ள கோட்டைகள் யாவற்றிலும் யாழ்ப்பாணக் கோட்டை மிகப்பலமானதும் பாதுகாப்பானதும் என அனைத்துக் கட்டிடக்கலை விற்பன்னர்களாலும் விதந்துரைக்கப்பட்டது. யாழ்ப்பாணக் கோட்டை அமைக்கப்பட்ட காலத்தில் இந்து சமுத்திர நாடுகள் பலவற்றிலும் பலமான கோட்டைகள் கட்டப்பட்டிருந்தன. ஆனால் அவை எதுவும் யாழ்ப்பாணக்கோட்டையின் முழுமைக்கும் நிறைவுக்கும் தொழில்நுட்பத்திறனுக்கும் நிகராகாது என பலரும் போற்றியுள்ளனர். யாழ்ப்பாணக்குடா நாட்டின் தென் விளிம்பில் யாழ்ப்...