Posts

Showing posts with the label TEACHER

டாக்டர் சங்கர் தயாள் சர்மா ஜனாதிபதியாக இருந்த சமயம்..

Image
டாக்டர் சங்கர் தயாள் சர்மா ஜனாதிபதியாக இருந்த சமயம்.. அரசு முறை பயணமாக 'மஸ்கட்'டுக்கு செல்கிறார்.. அந்த நாட்டின் மரபை மீறி அரசரே விமான நிலையம் வந்து அவரை வரவேற்க காத்திரு கிறார் ..விமானம் நின்று படிகள் இணைக் கப் பட சர்மா அவர்கள் வெளிப்படு கிறார்..  அவரைக் கண்டதும் அரசர் படியில் ஓடிச் சென்று அவர் கைகளைப் பற்றிக் கொண்டு அளவளாவிக் கொண்டு இறங்கி வருகிறார்..இது அந்நாட்டு அதிகாரிகளுக்கும், பத்திரிகை யாளர்களுக்கும் கொஞ்சம் அதிகப்படியாகவே தோன்றுகிறது.. எதுவும் காட்டிக் கொள்ளவில்லை, அரசர் ஆயிற்றே.. ஆயிற்று.. அரசு சார்ந்த காரியங்கள் அனைத்தும் முடிந்து இரு நாட்டு தலைவர்களும் கூட்டாக பத்திரிக்கை யாளர்களைச் சந்திப்பு நடைபெறுகிறது... சம்பிரதாய கேள்விகள் முடிந்து அந்த நாட்டு பத்திரிகை நிருபர் அந்த கேள்வியை அரசரின் வைக்கிறார்.."இதுநாள் வரை எத்தனையோ நாட்டின் உயர் தலைவர்கள் வந்த போதும் நேரில் வராத அரசர் ஒரு ஜனாதிபதியை வரவேற்க ஏன் மரபை மீறி வரவேண்டும், அப்படி என்ன அவர் சிறப்பு".??? அங்கே ஒரு சிறு சலசலப்பு.. அரசர் பதிலளிக்கிறார், " நான் இப்போது அரசனாக இருக்கலாம்,  அவர...

DEVAYANI ஜெயலலிதா படித்த பள்ளியில் டீச்சராகிவிட்ட நடிகை தேவயானி! BORN JUNE 22,1974

Image
DEVAYANI   ஜெயலலிதா படித்த பள்ளியில்  டீச்சராகிவிட்ட நடிகை தேவயானி! BORN JUNE 22,1974 தேவயானி (Devayani, பிறப்பு: சூன் 22, 1974) இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவருடைய இயற்பெயர் சுஷ்மா. திரையுலகிற்காக தன் பெயரை தேவயானி என மாற்றிக் கொண்டார்.  தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிப் படங்களில் நடித்துள்ளார். ஒரு சில இந்தி மற்றும் வங்காள மொழிப் படங்களிலும் நடித்துள்ளார். தமிழ்த் தொலைக்காட்சி நெடுந்தொடர்களிலும் நடித்துள்ளார். குறிப்பாக சன் டிவியின் கோலங்கள் தொடரில் கதாநாயகியாக நடித்துள்ளார். நடிகை தேவயானியை தெரியாதவர்கள் தமிழ்நாட்டில் யாரும் இருக்க முடியாது. போன தலைமுறை நடிகைகளில் நடிக்கத் தெரிந்த அழகிய நடிகை என்று பெயர் பெற்றவர். மும்பையில் இருந்து சென்னைக்கு வந்து தனது பண்பாலும், நடிப்புத் திறமையாலும் தமிழ்நாட்டுப் பெண்ணாகவே மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர். 1994இல் வெளியான கே.எஸ்.அதியமானின் 'தொட்டாற்சிணுங்கி' படத்தின்மூலம் தமிழில் அறிமுகமானவர் தேவயானி. ஆரம்பத்தில் ஒன்றிரண்டு படங்களில் கிளாமர் கேரக்டர்களை ஏற்று நடித்தாலும் 'காதல் கோட்டை' படத்தில் ஏற்ற கம...