DEVAYANI ஜெயலலிதா படித்த பள்ளியில் டீச்சராகிவிட்ட நடிகை தேவயானி! BORN JUNE 22,1974

DEVAYANI  ஜெயலலிதா படித்த பள்ளியில்

 டீச்சராகிவிட்ட நடிகை தேவயானி! BORN JUNE 22,1974



தேவயானி (Devayani, பிறப்பு: சூன் 22, 1974) இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவருடைய இயற்பெயர் சுஷ்மா. திரையுலகிற்காக தன் பெயரை தேவயானி என மாற்றிக் கொண்டார். 

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிப் படங்களில் நடித்துள்ளார். ஒரு சில இந்தி மற்றும் வங்காள மொழிப் படங்களிலும் நடித்துள்ளார். தமிழ்த் தொலைக்காட்சி நெடுந்தொடர்களிலும் நடித்துள்ளார். குறிப்பாக சன் டிவியின் கோலங்கள் தொடரில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
நடிகை தேவயானியை தெரியாதவர்கள் தமிழ்நாட்டில் யாரும் இருக்க முடியாது. போன தலைமுறை நடிகைகளில் நடிக்கத் தெரிந்த அழகிய நடிகை என்று பெயர் பெற்றவர். மும்பையில் இருந்து சென்னைக்கு வந்து தனது பண்பாலும், நடிப்புத் திறமையாலும் தமிழ்நாட்டுப் பெண்ணாகவே மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்.



1994இல் வெளியான கே.எஸ்.அதியமானின் 'தொட்டாற்சிணுங்கி' படத்தின்மூலம் தமிழில் அறிமுகமானவர் தேவயானி. ஆரம்பத்தில் ஒன்றிரண்டு படங்களில் கிளாமர் கேரக்டர்களை ஏற்று நடித்தாலும் 'காதல் கோட்டை' படத்தில் ஏற்ற கமலி கேரக்டரின் வெற்றிக்குப் பிறகு குடும்பப்பாங்கான வேடங்களை மட்டும் தேர்வுசெய்து நடித்தார். பல படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். மேலும் விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடித்து பல வெற்றிப் படங்களைக் கொடுத்தார். அவரது மார்க்கெட் உச்சத்தில் இருந்தபோது திரைப்பட இயக்குநர் ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்துகொண்ட தேவயானிக்கு, 2004க்குப் பின்னர் படவாய்ப்புகள் குறைந்தால், தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வந்தார். 

அவ்வப்போது, ஒருசில படங்களில் அக்கா, அண்ணி கதாபாத்திரங்களில் நடித்தார். சில வருடங்கள் சினிமாவில் நடிக்காமல் இருந்த தேவயானி, தற்போது மறுபடியும் நடிக்கத் தொடங்கியிருக்கிறார்.

இப்போது தேவயானி ‘மை ஸ்கூல்’ என்ற மலையாளப் படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருக்கு பள்ளிக்கூட ஆசிரியை வேடம். பள்ளியில் படிக்கும் ஒரு மாணவனை நாய் கடித்துவிடுகிறது. அவனை காப்பாற்று வதற்காக வகுப்பு ஆசிரியை போராடுவதே படத்தின் கதை. அடுத்து, ஒரு தெலுங்குப் படத்தில் இளம் ஹீரோவின் அக்காவாக தேவயானி நடிக்கிறார். தேவயானி தனது அடுத்த இன்னிங்ஸை ஆரம்பித்தி க்கிறார்.

திருமணம் வாழ்க்கை[தொகு]


தேவயானியும், இயக்குனர் ராஜகுமாரனும் காதலித்து வந்தனர். ஆனால் தேவயானியின் காதலுக்கு அவரது தாய் சம்மதம் தெரிவிக்கவில்லை. தேவயானி வீட்டில் கடும் எதிர்ப்பு இருந்ததால், நண்பர்கள் முன்னிலை யில் திருமணம் செய்து கொண்டனர்.

தமிழ் சினிமாவில் என்றென்றும் மறக்க முடியாத காதல் தேவதை தேவயானி. கவர்ச்சிக்கு முன்னுரிமை கொடுத்து தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த நட்சத்திரங்களுக்கு மத்தியில், கவர்ச்சிக்கு நோ சொல்லி சேலை, தாவனியில் மக்களை கிரங்கடித்தவர்.

இயக்குநர் ராஜ்குமாரை திருமணம் செய்து கொண்டாலும், இவரது காதல் திருமணம் சில கரடு முரடான பாதைகளை சந்தித்துள்ளன.
விண்ணுக்கும் மண்ணுக்கும் மற்றும் சூரிய வம்சம் படத்தினை ராஜ்குமார் இயக்கியுள்ளார். இந்த படத்தில் தேவயானி கதாநாயகியாக நடித்த போதுதான் இவர்கள் இருவருக்குள்ளும் காதல் மலர்ந்துள்ளது.
தேவயானியின் தந்தை மும்பையை சேர்ந்தவர். அம்மா ஒரு மலையாளி ஆவார். தேவயானியின் காதல் விவகாரம் இவரது வீட்டிற்கு தெரிவித்த தையடுத்து கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கடைசி வரை இவரது  காதலுக்கு சம்மதம் தெரிவிக்க மறுத்ததோடு மட்டுமல்லாமல், அவரை வீட்டுக்குள் சிறை வைத்துள்ளனர் இவரது குடும்பத்தார்.

ஆனால், ராஜ்குமாரை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த தேவயானி, ஒரு நாள் இரவு யாருக்கும் தெரியாமல் சுவரை ஏறி குதித்து வீட்டை விட்டு ஓடியுள்ளார். அந்த அளவுக்கு, ராஜ்குமார் மீது அதீத காதல் கொண்டுள்ளார். தேவயானி ராஜ்குமாரை திருமணம் செய்துகொண்டது அவர்களது குடும்பத்தினருக்கு பேரதிர்ச்சியாக இருந்தது.



திருமணம் முடிந்த பின்னர் கூட இவர்களை ஏற்றுக்கொள்ளவில்லை. அதன் பிறகு, தேவயானிக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்த பின்னர்தான் குடும்பத்தினர் இவர்களோடு உறவாட ஆரம்பித்தார்கள்.
தமிழ் சினிமாவில் காதல் தேவதை மட்டுமின்றி, நிஜத்திலும் இவர் காதல் தேவதை தான்.

இவர்களது திருமணம் ஏப்ரல் 9, 2001 ஆம் ஆண்டு திருத்தணியில் காலை 9.30 மணிக்கு நடந்தது.[1] இத்தம்பதியருக்கு இனியா மற்றும் பிரியங்கா என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.[2]

சென்னையின் பிரபபல பள்ளிகளில் ஒன்றான சர்ச் பார்க் கான்வென்டில் ஆசிரியையாக பணியில் சேர்ந்துள்ளார் பிரபல நடிகை தேவயானி. கல்லூரி வாசல் படத்தில் அறிமுகமானவர் தேவயானி. காதல் கோட்டை மூலம் முதல் நிலை நடிகையானார்.

அஜீத், கார்த்திக், விஜய், சரத்குமார் போன்றவர்களுடன் அதிக படங்களில் நடித்துள்ளார் தேவயானி. ஜெயலலிதா படித்த பள்ளியில் டீச்சராகிவிட்ட நடிகை தேவயானி! தேவயானி படங்கள் திருமணமாகி, படங்களில் வாய்ப்புக் குறைந்ததும் சொந்தப் படம் எடுத்தார்.  அது கையைச் சுட்டுவிட, தொடர்களில் நடிக்க ஆரம்பித்தார். அங்கும் முன்னணி நடிகையாகத் திகழ்ந்தவர், பின்னர் டிவியில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார்.
இப்போது சர்ச் பார்க் கான்வென்டில் ஆசிரியையாக வேலைப் பார்க்கிறார் டிவியில் நடித்துக் கொண்டே அஞ்சல் வழியில் ஆசிரியப் பயிற்சியை முடித்துள்ளார்.

திருவனந்தபுரம்: நடிகை தேவயானி பிரபல மலையாள சேனலான மழவில் மனோரமா டிவி ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியின் நடுவராக பொறுப்பேற்று இருக்கிறார். கொஞ்சும் தமிழில் பேசி மார்க் போடுவது நிகழ்ச்சிக்கு கூடுதல் அழகு. மலையாள சேனல்களையும் தமிழக ரசிகர்கள் அதிக அளவில் பார்த்து வருகின்றனர். ரியாலிட்டி நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சிகள் என பல நிகழ்ச்சிகளின் நடுவர்களாக தமிழ் நடிகர், நடிகைகள் உள்ளனர்.



‘உக்ரம் உஜ்வலம்' என்ற நிகழ்ச்சியின் நடுவராக பங்கேற்றுள்ளார் நடிகை தேவயானி. இந்த நிகழ்ச்சியின் பிரதான நடுவர்களாக நடிகர் வினீத், நடிகை கனிகா உள்ளனர். கொஞ்சும் தமிழ் பேசும் மலையாள சேனலில் நடுவராக இருந்தாலும் கொஞ்சும் தமிழ் பேசினார் தேவயானி. நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களின் திறமைகளை பாராட்டிய தேவயானி ஆங்கிலம் கலந்த தமிழில் தனது கருத்துக்களைத் தெரிவித்தார்.

சின்னத்திரையில் பிரபலம் நடிகை தேவயானி மலையாள ரசிகர்களுக்கு பரிட்சியமானவர். மலையாள சூப்பர்ஸ்டார்களுடன் பல படங்களில் நடித்திருக்கிறார். சின்னத்திரையில் சீரியல்களில் நடித்துள்ள தேவயானி தற்போது மலையாள சேனலில் நடுவராக பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் 90களில் கதாநாயகிகளில் மிக பிரபலமாக திகழ்ந்தவர் தேவயானி. ஒரு கட்டத்தில் இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அதன் பிறகு தொடர்ந்து படங்களில் நடிப்பதை தவித்தார். தற்போது தனது குழந்தைகள் ஸ்கூல் போகும் நிலைமை வந்ததால் மீண்டும் நல்ல கதாபாத்திரம் அமைந்தால் நடிக்க ஒத்துக்கொள்கிறார். இந்நிலையில், தேவயானி தற்போது மலையாளத்தில் ‘மை ஸ்கூல்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

DEVAYANI  ஜெயலலிதா படித்த பள்ளியில்
 டீச்சராகிவிட்ட நடிகை தேவயானி! BORN JUNE 22,1974

சென்னையின் பிரபபல பள்ளிகளில் ஒன்றான சர்ச் பார்க் கான்வென்டில் ஆசிரியையாக பணியில் சேர்ந்துள்ளார் பிரபல நடிகை தேவயானி. கல்லூரி வாசல் படத்தில் அறிமுகமானவர் தேவயானி. காதல் கோட்டை மூலம் முதல் நிலை நடிகையானார்.

அஜீத், கார்த்திக், விஜய், சரத்குமார் போன்றவர்களுடன் அதிக படங்களில் நடித்துள்ளார் தேவயானி. ஜெயலலிதா படித்த பள்ளியில் டீச்சராகிவிட்ட நடிகை தேவயானி! தேவயானி படங்கள் திருமணமாகி, படங்களில் வாய்ப்புக் குறைந்ததும் சொந்தப் படம் எடுத்தார்.

அது கையைச் சுட்டுவிட, தொடர்களில் நடிக்க ஆரம்பித்தார். அங்கும் முன்னணி நடிகையாகத் திகழ்ந்தவர், பின்னர் டிவியில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார்.

இப்போது சர்ச் பார்க் கான்வென்டில் ஆசிரியையாக வேலைப் பார்க்கிறார் டிவியில் நடித்துக் கொண்டே அஞ்சல் வழியில் ஆசிரியப் பயிற்சியை முடித்துள்ளார்.



ஆசிரியப் பணி குறித்து தேவயானி கூறுகையில், “இது எனக்கு நிறைவாக உள்ளது. பணம் மட்டுமே வாழ்க்கையல்ல. மன நிறைவு முக்கியம். இந்த வேலையில் என் பொறுப்பில் 45 குழந்தைகள் உள்ளனற்.












Comments

Popular posts from this blog

DACOITS OF CHAMBAL

List of Muhammad's Wives and Concubines

MAHARANI SITADEVI OF BARODA the "Indian Wallis Simpson" INTERESTING LIFE STORY OF HER