Friday 23 June 2017

HITLER ஹிட்லர் ஜெர்மனியின் கல்லறைக்கு அடிக்கல் நாட்டிய நாள் ஜூன் 22 ,1941



HITLER ஹிட்லர் ஜெர்மனியின் கல்லறைக்கு 
அடிக்கல் நாட்டிய நாள் ஜூன் 22 ,1941




தொடக்கக் கட்டம் ( 22 ஜூன் 1941 - 3ர்ட் ஜூலை 1941)[தொகு]
பர்பரோசாவின் தொடக்க கட்டத்தில் ஜெர்மனியின் முன்னேற்றங்கள்
ஜுன் 22, 1941 அதிகாலை 3.15 பொழுது, அச்சு துருப்புகள் சோவியத் எல்லை நெடுகிலும் குண்டுமழை பெய்து, தாக்கத் தொடங்கின. 22 ஜூன் அன்று 3 மில்லியன் ஜெர்மானிய த்ருப்புகள் ஆக்கிரமிப்பில் கலந்து கொண்டனர் என்பது கணிப்பு.; அவைற்றை எதிர்து சிறிய அளவு சோவியத் துருப்புகள் தான் இருந்தன. சோவியத்துகள் முழுதுமாக ஆச்சரிய பட்டனர். ஸ்டாவ்கா, எல்லை சோவியத் துருப்புகளை எச்சரிப்பு மேல் ஒரு ஆணையும் கொடுக்க வில்லை. ஜெர்மானிய துருப்புகளை தவிர, 500,000 ருமானிய, ஹங்கெரிய, ஸ்லோவாகிய, குரோவேஷிய, இத்தாலிய துருப்புகள் , ஜெர்மானியர்களுடன் சேர்ந்து படை எடுத்தனர்..
”லூஃப்ட்வாஃப” ஜெர்மனியின் விமானப் படை சோவியத் துருப்பு குவிப்பு இடங்கள், விமான தளங்கள், ஆயுத கிடங்குகள் இவற்றை அவசரமாக படத்தில் போட்டு, அவற்றை அழைக்க தய்யர் செய்தனர். லூஃப்ட்வாஃபயின் பணி சோவியத் விமான அணியை முடக்கி, செயலறச் செய்வதாகும்[50] . லூஃப்ட்வாஃப முதல் நாளிலேயே 1489 சோவியத் போர் விமானங்களை தரையிலே அழித்ததாக பீற்றிக் கொண்டது. ஆனால் உண்மையில் 2000 மேல் விமானங்கள் அழிக்கப் பட்டன.. லூஃப்ட்வாஃப முதல் நாள் போரில் 35 விமானங்களை இழந்ததாக அறிவித்தது. ரஷ்ய சரித்திர ஆய்வாளர் விக்டர் குகிகாவ் படி, முதல் 3 நாட்களில் 3922 சோவியத் விமானங்கள் அழிக்கப் பட்டன[51]- பெரும்பாலும் தரையிலேயே.. லூஃப்ட்வாஃப 3 போர் பகுதிகளிலும் ஆகாய மேன்மையை வருடம் பூராகவும் நிலைநாட்டியது[

பர்பரோசா நடவடிக்கை (Operation Barbarossa, இடாய்ட்சு மொழியில்: Unternehmen Barbarossa) 

என்பது இரண்டாம் உலகப் போரின் கிழக்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு போர் நடவடிக்கை. இது நாசி செருமனி சோவியத் ஒன்றியத்தின் மீது நடத்திய படையெடுப்பின் ஆரம்பகட்ட நடவடிக்கைக்கு இடப்பட்டிருந்த குறிச்சொல். நடவடிக்கையின் துவக்கத்தில் ஜெர்மானியப் படைகள் சோவியத் படைகளை வேகமாக முறியடித்து முன்னேறினாலும், திட்டமிட்டபடி இலக்குகளை அவற்றால் அடையமுடியவில்லை. பர்பரோசா நடவடிக்கையின் தோல்வியால் கிழக்குப் போர்முனையில் மேலும் நான்கு ஆண்டுகள் கடும் போர் நீடித்தது. இருமுனைப் போர் புரியும் நிலைக்கு ஆளான ஜெர்மனி நான்காண்டுகளில் நேச நாட்டுப் படைகளால் தோற்கடிக்கப்பட்டது.
பர்பரோசா நடவடிக்கையின் இலக்கு சோவியத் ஒன்றியத்தின் ஐரோப்பிய பகுதிகளை வேகமாக வென்றெடுத்து, ஆர்க்கன்கெல்சுக்கு, ஆசுத்ராகான் (Arkhangelsk and Astrakhan) நகரங்களை இணைக்கும் கோடு வரை (இதனை A-A Line என்பர்), 1941 ஆம் ஆண்டு முடியும் முன்னர் கைப்பற்றுவது. ஆனால் 1941 டிசம்பர் முடிவில் செஞ்சேனை வேர்மாக்டின் (Wehrmacht) மிக வலுவான தாக்குதலை எதிர்த்துத் துரத்தியது. சூழ்ச்சிநுணுக்க நோக்கில் செருமானியர்கள் பெரும் படை வெற்றிகளை பெற்றனர், உக்ரைன் உட்படப் பல சோவியத் ஒன்றியத்தின் முதன்மையான பொருளாதாரப் பகுதிகளைக் கைப்பற்றினர்[10]. இருப்பினும், உருசியர்கள் செருமனியர்களை மாசுக்கோவில் இருந்து வெளியேற்றினர்; இதன் பிறகு பின்னெப்பொழுதும் செருமனியரால் ஒரே நேரத்தில் அன்று தனிமுதன்மை பெற்றதாகக் கருதப்பட்ட சோவியத்-செருமன் எல்லை முகப்பில் வலிந்து படையெடுத்து முன்னேற முடியவில்லை.
பர்பரோசா நடவடிக்கையின் தோல்வி, இட்லரை இன்னும் பல படை முன்னெடுப்புகளையும், போர்களையும் சோவியத் ஒன்றியத்துக்குள் செய்யத் தூண்டியது; லெனின்கிராட் முற்றுகை[11][12], சுடாலின்கிராட் முற்றுகை, நார்ட்லிக்ட் நடவடிக்கை அடங்கிய இப்படிப்பட்ட போர்கள் கைப்பற்றப்பட்ட சோவியத் ஒன்றியத்துக்குள் இடம்பெற்றிருந்தாலும், அவை தோல்வியிலேயே முடிந்தன[13]>[14][15][16][17].
பார்பரோசா படைத்தள நடவடிக்கை, அது நடைபெற்ற நிலப்பரப்பு, பங்குகொண்ட மொத்த வீரர்கள், மாண்டவர் அல்லது படுகாயம் அடைந்தவர் எண்ணிக்கை ஆகியவற்றைக் கணக்கில் கொண்டால் மனித வரலாற்றிலேயே மிகப்பெரிய போர்நடவடிக்கை எனக் கணிக்கப்படுகின்றது[18]. இத் தோல்வி நாட்சி செருமனியின் (நாட்சி இடாய்ட்சுலாந்தின்) அதுவரை இருந்த நல்வாய்ப்புகளின் திருப்பு முனையாகும். முக்கியமாக பர்பரோசா நடவடிக்கை கிழக்குக் களத்தைத் திறந்து, உலக வரலாற்றிலேயே மிகப் பெரிய போர்க்களமாகி, நட்பு நாடுகளின் வெற்றிக்கு அடிகோலியது. பர்பரோசா நடவடிக்கையும், அது நடைபெற்ற பகுதிகளும் மிகப் பெரிய போர்க் களங்களையும், மிகப் பெரிய அட்டூழியங்களையும், மிகப் பெரிய மனித இழப்புகளையும், ஏற்படுத்தி, செருமானியரையும், சோவியத்தினரையும் மிகக் கொடுமையான நிலைகளுக்குத் தள்ளி இரண்டாவது உலகப்போரின் விளைவையும் 20ம் நூற்றாண்டின் வரலாற்றையும் வெகுவாக மாற்றின.

செருமனியரின் இலக்குகள்[தொகு]
சோவியத் ஒன்றியம் பற்றி நாசிக்களின் கருத்து[தொகு]

1925 இலேயே, இட்லர் மைன் கம்ப் ("என் போர்") எனும் தன்னுடைய தன்வரலாற்றில், சோவியத் ஒன்றியத்தின் மீது படையெடுக்கும் குறிக்கோளை, செருமானியர்கள் "வாழும் இடம்" (இடாய்ட்சு மொழியில்: Lebensraum) அதிகரிப்பதற்கு கிழக்கு ஐரோப்பா, உருசியாவைக் கைப்பற்ற வேண்டும் என்று எழுதினார். நாசி இனக் கருத்துகள் படி, சோவியத் ஒன்றியம் "கீழ்மக்களாகிய" சிலாவியர்கள் "யூதக் கம்யூனிஸ்டுகளால்" ஆளப் படுகிறார்கள்[19][20]; அதை ஜெர்மானியர் பிடித்து தாம் `வாழும் இடத்தை` கைப்பற்ற முயல வேண்டும்[21]. செருமனி 600 ஆண்டுகளுக்கு முன் படையெடுத்தது போல, மறுபடியும் உருசியா மீது படையெடுத்து யூதர்கள் ஆளும் சோவியத் ஒன்றியத்தை ஒழிக்க வேண்டும். இட்லர் அகண்ட-சிலாவியர் என்ற இலட்சியத்தை ஒழித்துக் கட்டியவுடன் “உலகத்தின் உரிமையாளர் ஆகிவிடுவர்” என நினைத்தார். அதனால், நாசிக்களின் பகிரங்க கொள்கை உருசியர்களையும், மற்ற சிலாவியர்களையும் அடிமையாக்க வேண்டும் அல்லது நாடு கடத்த வேண்டும், அப்படி செய்து அவ்விடங்களில் செருமானிய இனத்தவரை குடியேற்ற வேண்டும்[22].
1939-40 சோவியத்-செருமன் உறவுகள்[தொகு]
1939ல் போலந்தின் மீதான ஆக்கிரமிப்புக்கு சற்று முன் மோலோடாவ்-ரிப்பண்ட்ராப் ஒப்பந்தம் கையெழுத்திடப் பட்டது[23]
அது ஆக்கிரமிப்பின்மை உடன்பாடு என அழைக்கப் பட்டாலும், அதன் மறைமுக உட்கூறுகள் செருமனியும் சோவியத் உருசியாவும் கிழக்கு ஐரோப்பவை தங்களுக்குள் பங்கு போட்டுக் கொள்ளலாம் என்பது. அவ்வொப்பந்தம் உலகை அதிர்ச்சி அடைய செய்தது[24], ஏனெனில் இரு நாடுகளுக்கும் இடையே ஒன்றுக்கொன்று மிகுந்த காழ்ப்பு உணர்வு கொண்டிருந்தது. மேலும் அந்த ஒப்பந்தத்தின் படி சோவியத் ஒன்றியம் செருமனிக்கு எண்ணெய் முதலிய தொழிலக துவக்கப் பொருள்களை தரும், அதற்கு ஈடாக செருமனி தொழில் உற்பத்திசெய்த பொருள்களையும், (படைத்) தளவடங்களையும் தரும்[25] .
இப்படி ஒப்பந்தம் இருந்தாலும், இரு நாடுகளும் ஒன்றையொன்று ஐயத்துடனேயே அணுகின. இரு நாடுகளுக்கும் இடையே உரசல் அதிகமாயிற்று. அதை கட்டுப்படுத்த இரு நாடுகளும் ஜனவரி 1941ல், எல்லை, வணிக உடன்பாட்டை ஏற்படுத்திக்கொண்டன[2

செருமனி படையெடுப்பைத் திட்டமிடல்[தொகு]

பரவலாக அறியப்பட்டிருந்த ஸ்டாலினின்கொடுங்கோலாட்சி, நாசிக்கள் படையெடுப்பதற்கு ஒரு பொருத்தமான காரணமாக அமைந்தது; அதே சமயம் அச்சூழல் அவர்களின் வெற்றிக்கு ஒரு நம்பிக்கையையும் கொடுத்தது. 1930 களில் ஸ்டாலின் மில்லியன்கணகான மக்களை கொன்றான் அல்லது சிறையில் அடைத்தான்; அதில் பல திறமை வாய்ந்த செஞ்சேனை தளபதிகளும் இருந்ததால், செஞ்சேனை தக்க தலைமை இல்லாமல் வலுவிழந்து நின்றது. மற்ற கிழக்கு ஐரோப்பிய்ர்களிடம் (இசுலாவியர்களிடம்) செருமனி சோவியத் ஆட்சியின் கொடுமைகளை முன்னிறுத்தி பரப்புரை செய்தது. செஞ்சேனை தாக்குதல் நடத்த இருக்கின்றது என்றும், அதனை முன்கூட்டியே தடுக்க தாங்கள் படையெடுக்க வேண்டியுள்ளது என்றும் நாசி செருமனி பரப்புரை செய்தது.
1940 செருமனியில் துவக்கப் (கச்சாப்) பொருள் நெருக்கடியும் கிழக்கு ஐரோப்பிய உரசல்களும் ஏற்பட்டபோது, இட்லருக்கு சோவியத் மீது படையெடுப்பது சரியான வழி எனத் தோன்றியது.[28] இன்னும் அறுதியான திட்டம் தீட்டாவிட்டாலும், இட்லர் ஒரு செருமானிய படைத்தலைவருக்கு (செனரலுக்கு)ச் சொன்னார்: அந்த சூலை மாதத்தில் மேற்கு ஐரோப்பாவில் வெற்றிகள் தன் வாழ்க்கையின் மைய இலக்கை அடைய முடியும் : அதாவது கம்யூனிசத்தை அழிப்பது என்று.[29] இட்லரின் படைத்துறை தளபதிகள் உருசியாவைக் கைப்பற்றுவது செருமனிக்கு பெரிய பொருளாதார பாரங்களைக் கொடுக்குமே ஒழிய, நன்மை பயக்காது என்றனர்.
டிசம்பர் 5ம் தேதி, இட்லருக்கு சோவியத் ஒன்றியத்தின் மேல் படையெடுக்க திட்டம் கிடைத்தது, அவர் திட்டத்தை ஏற்றபின் மே 1941-ல் படையெடுப்பது என முடிவெடுக்கப்பட்டது.[30]. டிசம்பர் 18, 1940 அன்று இட்லர், செருமானிய உயர் படைத்துறை மேலிடத்துக்கு விடுத்த போர் ஆணை நம்பர் 21 ல், இப்போது “பர்பரோசா நடவடிக்கை” என்றழைக்கப் பட்ட படைத்துறை நடவடிக்கைகளில் “செருமானிய படைத்துறை விரைவாக சோவியத் ஒன்ற்யத்தினை நசுக்கத் தயார் செய்ய வேண்டும்” என ஆணையிட்டார்[31]. அது ஃபிரெடரிக் பர்பரோசா என்ற 12ம் நூற்றாண்டு புனித உரோமப் பேரரசின், பேரரசர் பெயரைப் பயன்படுத்தியது. படையெடுப்பின் நாள் மே 15 , 1941 என நிச்சயம் செய்யப் பட்டது.[32] .
1940 இல், சில செருமானிய உயர் அதிகாரிகள் அதற்கு சோவியத் ஒன்றியத்தின் மீதான படையெடுப்பு செருமனி மீது பெரும் பொருளாதார பாரத்தை தரக்கூடும் என மறுப்பு தெரிவித்தனர்[33]. மற்றொரு செருமனிய அதிகாரி “சோவியத் நாடு, பெரும் ஆட்சிநடத்தும் குளறுபடிகளில் சிக்கிக் கொண்டு இருப்பதால், அதால் ஒன்றும் செய்ய முடியாது,, ஆக்கிரமிப்பு செருமனிக்கு ஒரு வரவையும் கொடுக்காது, ஏன் உருசியாவை அதன் பயன்படாத கம்யூனிசத்தில் சிக்க வைக்கக் கூடாது” என வாதிட்டார். இட்லர் `பொருளாதார தடுப்புவாதிகளை இனிமேல் கேட்கப்போவதில்லை, அப்படிப்பட்ட பொருளாதார வாதங்களுக்கு தன் காதை மூடிக்கொண்டு, மன நிம்மதியை அடைவேன்` என்றார்[34]. அது, படையெடுப்பின் பொருளாதார விளைவுகளை ஆய்ந்து கொண்டிருந்த அதிகாரியிடம் சொல்லப் பட்டது, அந்த அதிகாரியின் வாதம் சோவியத் ஒன்றியத்தினை ஒரு சேதமின்றி கைப்பற்றினால் ஒழிய, செருமனிக்கு பெரிய பொருளாதார இழப்பே என இருந்தது. நாசிக்களில் சோவியத் ஒன்றியத்தினை மொத்தமாக அழிக்கும் கொள்கை அவர்கள் கருத்தான `வாழ்விடத்தை` `ஆரிய` செருமானியரின் நலனுக்காக கைப்பற்றுவதற்கு ஒத்து இருந்தது.
பர்பரோசா நடவடிக்கை, லெனிகிராட் மேல் வடக்கு திசையில் ஒரு அடியையும், மாசுக்கோவை கைப்பற்றுவதையும், பொருளாதாரக் கொள்கையான யுக்ரெயின் மற்றும் காகசஸ் எண்ணை வளங்களை கைப்பற்றுவதையும் ஒன்று சேர்த்தது. இட்லர், தன் தளபதிகளுடன் எதைக் கைப்பற்றுவதில் முதன்மை கொடுக்க வேண்டும் என விவாதித்தார். இட்லர் மறுபடியும், மறுபடியும் `லெனின்கிராட் முதலில், பின்பு டோனெட்ஸ்க் பள்ளத்தாக்கு, மாஸ்கோ மூன்றாவது` என அறுதியிட்டு வந்தார்[35][36]. இட்லர் சோவியத் ஒன்றிய படையெடுப்பிற்கு பொறுமையை இழந்து கொண்டிருந்தார். முதலில் சோவியத் ஒன்றியத்தினை நசுக்கினால், பிரித்தன் அமைதிக்கு பிச்சை கேட்கும் என நம்பினார்.
இட்லர், மேற்கு ஐரோப்பாவில் செய்த அதி வேகமான வெற்றிகளினாலும், சோவியத் ஒன்றியத்தின் ஃபின்லாந்து எதிரான போரில் மோசமாக போரிட்டதாலும், தன் திட்டத்தின் மீது அலவுக்கு மீறிய நம்பிக்கை வைகத் தொடங்கினார். சில மாதங்களில் போர் வெற்றியில் முடிந்து விடும் என நம்பி, பனிக்கால போருக்கு முன்யோசனையுடன் திட்டம் தீட்டவில்லை. அதனால் ஜெர்மனியின் படைகள் பனிக்கால போருக்கு வேண்டிய ஏற்பாடுகளை சரியாக செய்யவில்லை[37]
ஜெர்மனியின் ஆயத்தங்கள்[தொகு]
இந்த படையெடுப்பின் ஆயத்தமாக, ஹிட்லர் 3.5 மில்லியன் ஜெர்மன் துருப்புகளையும், 1 மில்லியன் இதற அச்சு ராணுவங்களையும் சோவியத் எல்லையில் குவித்து, சோவியத் நிலப்பரப்பின் மீது பல ஆகாய கண்காணிப்புகளை நடத்தி, கிழக்கில் ஆயுதங்களை குவித்தார். படையெடுப்பின் போது, ஸ்டாலினின் நம்பிக்கையான, ஹிட்லர் மோலோடாவ்-ரிப்பண்டிராப் ஒப்பந்தத்தின் 2 வருடங்கள் வரை சோவியத் யூனியனை தாக்கமாட்டான், என்பதால் சோவியத்துகள் மிகவும் வியப்பும், பீதியும் அடைந்தனர். மேலும், ஸ்டாலின் ஹிட்லர் முதலில் பிரித்தனுடன் போரை முடித்து விட்டு தான் சோவியத் பக்கம் திரும்புவான் எனவும் நம்பினார்.. ஹிட்லரின் ஆயத்தங்களை பற்றி எச்சரித்த பல உளவு அறிக்கைகளை, அது பிரித்தனின் , சோவியத்-ரஷ்ய யுத்தத்தை தூண்டிவிடும் சூழ்ச்சி என நம்பவில்லை. சோவியத்தின் உயர் ஒற்றனான் டாக்டர்.ரிசர்ட் சோர்க ஸ்டாலினுக்கு படையெடுப்பின் சரியான தேதியை கொடுத்தார்; பிரித்தானிய ராணுவ உளவு ULTRA எனும் உளவுமுறையால் அறிந்து , ஸ்டாலினுக்கு ஹிட்லர் படையெடுப்பை பல மாதங்கள் முன்பே எச்சரித்து இருந்தனர்[38].
ஜெர்மானியர்களும் ஏப்ரல் 1941 முதல் , தங்கள் உண்மையான ஆக்கிரமிப்பு நோக்கங்களை ஒளிக்க , தங்கள் ஆக்கிரமிப்பின் இலக்கு இங்கிலாந்துதான் என ஸ்டாலினை ஏமாற்ற,பல நடவடிக்கைகளை செய்தனர். இவற்றின் பெயர்கள் ஆபரேஷன் ஹைபிஷ், ஆபரேஷன் ஹார்பூன்.. இங்கிலாந்து மேல் படை எடுக்க எத்தனங்கள் போல் பல ராணுவ பயிற்சிகள் நடத்தப் பட்டன; அதற்கேற்றால் போல் போர்கப்பல், விமான ஓட்டங்கள் செய்யப்பட்டு ,சில பொய் ”தகவல்கள்”, சோவியத் உளவு கையில் சிக்க வைத்தன. ஜெர்மானிய ரானுவ தளபதிகள் நெப்போலியனின் தோல்வியில் முடிந்த 1812 ரஷ்ய படையெடுப்பையும் தீவிரமாக ஆராய்ந்தார்கள்.
ஹிட்லரும், ஜெனரல்களும் மூன்று தனி ராணுவ கூட்டங்கள் (Army Groups) குறிப்பிட்ட பகுதிகளை கைப்பற்றுவதற்கு ஒதுக்கும் யுக்தியை ஒப்புக்கொண்டார்கள். ஜெர்மனியின் முன்னேற்றங்கள் வரலாற்று பிரசித்தி பெற்ற ரஷ்யாவின் மீது தாக்குதலின் வழிகளில் இருந்தன. வடக்கு ராணுவ கூட்டம் (Army Group North )பால்டிய பகுதி வழியாக சென்று லெனின்கிரார்டையும், வடக்கு ரஷ்யாவையும் கைப்பற்றவும், மத்திய ராணுவ கூட்டம்(Army Group Center) ரஷ்ய நகரமான ஸ்மாலென்ஸ்க்கை கைப்பற்றி மாஸ்கோவிற்கு சென்று அதையும், பெலாருசையும் மத்திய-மேற்கு ரஷ்யாவை கைப்பற்றவும், தெற்கு ராணுவ கூட்டம் ( Army Group South) விவசாய பகுதியான உக்ரெயின் வழியாக படையெடுத்து, புல்வெளி தேசங்களான தெற்கு ரஷ்ய வழியாக வோல்காவையும் , எண்ணை வளம் மிகுந்த காகசஸ் பகுதிகளை கைப்பற்றவும் ஒதுக்கப் பட்டன.
ஹிட்லரும், ராணுவ தளபதிகளும் எது முக்கியமான இலக்கு என்பதில் வேறுகருத்து கொண்டிருந்தனர். அதிபதிகள் மாஸ்கோவின் மீது நேராக ராணுவம் செல்ல வேண்டும் என்றனர்; ஹிட்லரோ, முதலில் வளங்கள் மிகுந்த உக்ரெயினையும், பால்டிய நாடுகளையும் மாஸ்கோவின் முனால் கைப்பற்றுவது என வைத்தார். படையெடுப்பின் ஆரம்ப நாள் மே நடுவில் இருந்து ஜூன் முடிவிற்கு தள்ளி போடப் பட்டது

சோவியத்துகளின் ஆயத்தங்கள்[தொகு]

ஹிட்லர் சோவியத் யூனியனை நோஞ்சான் என நினைத்தாலும், சோவியத்துகள் 1930ல், தொழில் உற்பத்தியில் அதிகமாக முன்னேறி இருந்தனர். மெதுவாக தொழில்கள் ஆயுத உற்பத்தியை அதிகரித்தன. 1930 களில் நவீன ராணுவ சித்தாந்தத்தை வளர்த்து, 1936ல் போரட்கள செயல்விதிகளாக அமுலாக்கப் பட்டன.
சோவியத் ராணுவத்தின் வளர்ச்சி 1939-1941 [39]
1 January 193922 June 1941% increase
டிவிஷன்கள் கணிப்பு131.5316.5140.7
ஆட்கள்2,485,0005,774,000132.4
துப்பாக்கி, பீரங்கிகள்55,800117,600110.7
டாங்கிகள்21,10025,70021.8
விமானங்கள்7,70018,700142.8

ஆனால் சோவியத் ராணுவத்திற்கு பல குறைபாடுகள் இருந்தன. ஒரு வாசிப்பு படி, மேற்கு சோவியத் யூனியனில் 2.5 சோவியத் துருப்புகள், அச்சு துருப்புகளான 4 மில்லியனோட ஒப்பிடுகலையில் குறைவு. சோவியத் படை அளவு 5 மில்லியன் ஆக இருந்தாலும், 2.6 மேற்கிலும், 1.8 ஜப்பானுக்கு எதிராக கிழக்கிலும், மற்றவரக்ள் மற்ற இடங்களிலும் , பயிற்யிலும் இருந்தனர்[40]. போர் நடக்கத் தொடங்கியவுடன், சோவியத்துகளின் துருப்பு ஒருங்குசேர்ப்பு அதிகரித்தது. 1941 படையெடுப்பின் தொடக்கத்தில், ஜெர்மனி சோவியத் படையை விட துருப்பு அளவில் சிறிது அதிகமாகவே இருந்தது.. சில முக்கிய தளவாடங்களில் சோவியத்தின் எண்ணிக்கை பலம் ஜெர்மனியை விட அதிகமாக இருந்தது. செஞ்சேனை 23, 106 டாங்கிகளை வைத்து, ஜெர்மனியை விட அதிக வலு கொண்டிருந்தது[41]. ஆனால் இவ்வாயுதங்களின் தயார் நிலைமையும், பராமரிப்பும் மோசமாக இருந்தன; ரவைகளும், ரேடியோக்களும் தட்டுப்பாடில் இருந்தன. பல ராணுவ யூனிட்டுக்ள் போதுமான அளவு டிரக்குகளும் , பார வண்டிகளும் வைத்திருக்க வில்லை[42].
1938 பிறகு, சோவியத்துகள் டாங்குகளை தரைப் படைக்கு ஆதரவாக பரப்பி வைத்திருந்தனர்; 1940ல் இருந்துதான் டாங்கிகளை ஒன்று சேர்த்து, டாங்கி டிவிஷன்களாக ஆக்கினர், 1941ல் அவ்வேலை முடிபடவில்லை. ஜெர்மானிய படை 5200 டாங்கிகளை வைத்திருந்தது, அதில் 3350 டாங்கிகள் படையெடுப்பிற்கு தயாரக இருந்தன. சோவியத் யூனியனின் மிக நவீனமான டாங்கிகள் T-34 மிக உயர்ந்த ரகமானாலும், போர் முதலில் பெரிய அளவு உற்பத்தி செய்யப் படவில்லை. அதே சமயம், டாங்கி தரம் உயர்ந்ததாக இருந்தும், ரேடியோ தொடர்பு ஆயுதங்களும், அப்படிப்பட்ட ஆயுதங்களை செம்மையாக பயன்படுத்துவதற்கு வேண்டிய பயிற்சியும் அவ்வளவு இல்லை.
சோவியத்துகளின் எண்ணிக்கை பலம், ஜெர்மானியரின் உயர்தர தயார்நிலையினாலும், பயிற்சிகளாலும் எதிர்க்கப்பட்டு, அதன் வீரியம் குறைந்தது. சோவியத் ராணுவ அதிகாரம் ஒவ்வொரு படியிலும் ஸ்டாலினின் பெரும் கழிப்பு (1936-1938) செயல்களால் மெலிக்கப் பட்டது. 90 ஜெனரல்கள் கைது செய்யப்பட்டதில், 6 பேர் தான் உயிர்தப்பினர், 180 டிவிஷனல் கமாண்டர்கள் கைது செய்யப் பட்டதில் 36 பேர்தான் உயிர் தப்பினர்; 57 ராணுவ கமாண்டர்களில் 7 பேர் தான் உயிர்தப்பினர். மொத்தமக 30,000 ராணுவ அதிகாரிகள் சுட்டுக் கொல்லப் பட்டனர். அது பெரும்பாலும் அனுபவம் இல்லாத இளய ஆபீசர்களுக்கு பதவி உயர்வு கொடுத்தது. 1941ல், 75% ராணுவ அதிகாரிகள் தங்கள் பதவியில் 1 வருடத்திற்கு குறைவாக இருந்தனர். சராசையாக சோவியத் கமாண்டர் ஜெர்மானிய கமாண்டரை விட 12 வயது குறைந்தவராக இருந்தார். அதனால், அவர் அரசியல் நிலைகளுக்கு அஞ்சி, பயிற்சி இலாதவராய், சுய முனைப்பு இல்லாதவராக இருந்தார்.
படையெடுப்பு முதலில் சோவியத் விமானப் படை நவீன விமானங்கள் இல்லாமல் தத்தளித்தது. சோவியத் சண்டை விமானப் படை I-15, I-16 போன்ற காலம் கடந்த விமானங்களை வைத்திருந்தது[43]. புதிய ரக விமானங்களான, MIG-3,LaGG-3, Yak-1 போன்றவை, 1941 கடைசியில் தான் தயாரிக்கப் பட்டன. அவை ஜெர்மனியின் மெசர்ஷ்மிட் B-109 போன்ற விமானங்களை விட கீழ் தரத்தில், திறமையிலும் இருந்தன. படையெடுப்பு தொடங்கிய நாள் ஜூன் 22, 1941 அன்று 200 புது ரக விமானங்கள் இருந்தும், அவற்றிற்கு 4 பயிற்சி பெற்ற ஓட்டுனர்தான் இருந்தனர்[44] . செஞ்சேனை பெரும் விஸ்தீரணங்களில் பரப்பப் பட்டு, சரியான வாகன வசதி இல்லாமல் போருக்கு வேண்டிய குவிப்பு நிலைக்கு எளிதாக போக முடியவில்லை.

அதனால் படையெடுப்பு தொடங்கிய நாள், எண்ணிக்கை அளவில் சோவியத் ராணுவம், ஜெர்மனியைவிட வலுப் பெற்றது போல தோன்றினாலும், தரத்தில் மோசமாக இருந்தனர். ராணுவ யூனிட்டுகள் எண்ணை மாற்றீடு, தளவாடங்கள் மற்றும் ஆட்கள் மாற்றீடு இவற்றின் வசதி குறைவினால், ஒரு போர் பின்பே, மறுபடியும் சண்டை போட முடியாமல் தோற்றனர். 1938 வரை, சோவியத் ராணுவ சித்தாந்தம் கோடிட்ட பாதுகாப்பு (linear defence) - அதாவது பாதுகாபுப் படைகள் எதிரியை ஒரு கோட்டில் சண்டையிட்டு தடுப்பர் - என்பதை அனுசரித்தது. பிரான்சின் தோல்விக்கு பிறகு, அதை கைவிட்டு, தரைப்படை பெரும் அமைப்புகளில் குவிக்கப் பட்டனர்[45][46].









தொடக்கக் கட்டம் ( 22 ஜூன் 1941 - 3ர்ட் ஜூலை 1941)[தொகு]

பர்பரோசாவின் தொடக்க கட்டத்தில் ஜெர்மனியின் முன்னேற்றங்கள்

ஜுன் 22, 1941 அதிகாலை 3.15 பொழுது, அச்சு துருப்புகள் சோவியத் எல்லை நெடுகிலும் குண்டுமழை பெய்து, தாக்கத் தொடங்கின. 22 ஜூன் அன்று 3 மில்லியன் ஜெர்மானிய த்ருப்புகள் ஆக்கிரமிப்பில் கலந்து கொண்டனர் என்பது கணிப்பு.; அவைற்றை எதிர்து சிறிய அளவு சோவியத் துருப்புகள் தான் இருந்தன. சோவியத்துகள் முழுதுமாக ஆச்சரிய பட்டனர். ஸ்டாவ்கா, எல்லை சோவியத் துருப்புகளை எச்சரிப்பு மேல் ஒரு ஆணையும் கொடுக்க வில்லை. ஜெர்மானிய துருப்புகளை தவிர, 500,000 ருமானிய, ஹங்கெரிய, ஸ்லோவாகிய, குரோவேஷிய, இத்தாலிய துருப்புகள் , ஜெர்மானியர்களுடன் சேர்ந்து படை எடுத்தனர்..
”லூஃப்ட்வாஃப” ஜெர்மனியின் விமானப் படை சோவியத் துருப்பு குவிப்பு இடங்கள், விமான தளங்கள், ஆயுத கிடங்குகள் இவற்றை அவசரமாக படத்தில் போட்டு, அவற்றை அழைக்க தய்யர் செய்தனர். 

லூஃப்ட்வாஃபயின் பணி சோவியத் விமான அணியை முடக்கி, செயலறச் செய்வதாகும்[50] . லூஃப்ட்வாஃப முதல் நாளிலேயே 1489 சோவியத் போர் விமானங்களை தரையிலே அழித்ததாக பீற்றிக் கொண்டது. ஆனால் உண்மையில் 2000 மேல் விமானங்கள் அழிக்கப் பட்டன.. லூஃப்ட்வாஃப முதல் நாள் போரில் 35 விமானங்களை இழந்ததாக அறிவித்தது. ரஷ்ய சரித்திர ஆய்வாளர் விக்டர் குகிகாவ் படி, முதல் 3 நாட்களில் 3922 சோவியத் விமானங்கள் அழிக்கப் பட்டன[51]- பெரும்பாலும் தரையிலேயே.. லூஃப்ட்வாஃப 3 போர் பகுதிகளிலும் ஆகாய மேன்மையை வருடம் பூராகவும் நிலைநாட்டியது[5



சோவியத் எல்லையில் எதிர்த்து நிற்க்கும் படைகளின் பலங்கள் ஜூன் 22, 1941
ஜெர்மனியும், சகாக்களும்சோவியத் யூனியன்விகிதம்
டிவிஷன்கள்1661901 : 1.1
ஆட்கள்4,306,8003,289,8511.3 : 1
துப்பாக்கி, பீரங்கிகள்42,60159,7871 : 1.4
டாங்கிகள் (incl assault guns)4,17115,6871 : 3.8
விமானங்கள்4,389[47]11, 537[2]1 : 2.6


No comments:

Post a Comment