RANI OF JHANSI
ஜான்சி ராணி.. ஒரு வீரப்பெண்ணின் கதை நவம்பர் 19, 1835 - 1858 ஜூன் 17
நவம்பர் 19, 1835இல் வாரணாசியில் பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்த மௌரியபந்தர்-பகீரதிபாய் தம்பதியினருக்குப் பிறந்தவர் சான்சி இராணி.[1] இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் மணிகர்ணிகா.[2] இவர் மனு எனவும் அழைக்கப்பட்டார்.[3] இவருக்கு நான்கு வயதாகும்போது பகீரதிபாய் இறந்து போனார்.[4] இவர் சிறு வயதிலேயே குதிரையேற்றமும் வாள் வீச்சும் கற்றுக் கொண்டார்.[5] மணிகர்ணிகாவின் தந்தையாகிய மௌரியபந்தர் பித்தூரிலுள்ள பேஷ்வா நீதிமன்றத்தில் வேலை செய்தார்.[6] பித்தூரின் பேஷ்வா மணிகர்ணிகாவைத் தனது சொந்த மகள் போல வளர்த்தார்.
சான்சியை ஆண்ட ராஜா கங்காதர ராவ் நெவல்கர் என்பவருக்கு 1842இல் மணிகர்ணிகாவைத் திருமணம் செய்து வைத்தார் தந்தை. அதிலிருந்து, மணிகர்ணிகா இராணி இலட்சுமிபாய் என அழைக்கப்பட்டதுடன் சான்சியின் ராணியாகவும் பதவியேற்றார்.[7]
1851இல் அவர்களுக்குப் பிறந்த மகனான தாமோதர் ராவ் நான்கு மாதங்களில் இறந்து போனான்.[8] தாமோதர் ராவின் இறப்பின் பின், ராஜா கங்காதர ராவ் நெவல்கரும் இராணி இலட்சுமிபாயும் ஆனந்த் ராவைத் தத்தெடுத்தனர். பின்னர், அக்குழந்தைக்குத் தாமோதர் ராவ் எனப் பெயர் சூட்டப்பட்டது. ஆனாலும் தனது மகனின் இழப்பின் துயரத்திலிருந்து மீளாத ராஜா கங்காதரராவ் நவம்பர் 21, 1853இல் உடல்நலமிழந்து இறந்தார்.[9]
மன்னர் கங்காதர ராவ் மறைந்த பின், வளர்ப்பு மகன் தாமோதர் ராவை ஆட்சியில் அமர்த்த எண்ணினார் சான்சி ராணி. ஆனால், அப்போதைய ஆங்கியேல ஆளுநர் டல்லவுசி, பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்தின் அவகாசியிலிக் கொள்கையின்படி, தத்துப்பிள்ளையை அதிகாரபூர்வமாக ஏற்றுக் கொள்ள மறுத்தார். ஒரு மன்னருக்கு நேரடி வாரிசு இல்லையென்றால், அந்த அரசு தங்களுக்கே சொந்தம் என உரிமை கொண்டாடி வந்த ஆங்கிலேயர்கள் சான்சி நாட்டைத் தமது ஆட்சிக்குட்படுத்த முடிவெடுத்தனர்.
ஆங்கிலேயர்கள் 1854ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் ராணி லட்சுமிபாய்க்கு 60000 ரூபாயை ஓய்வூதியமாகக் கொடுத்து ஜான்சிக் கோட்டையை விட்டு வெளியேறச் சொன்னார்கள்.[10]
முதல் இந்திய விடுதலைப்போர்[தொகு]
சான்சி கோட்டை, 1882
ஆயினும் 1857ஆம் ஆண்டு மே 10ஆம் திகதி இந்தியக் கிளர்ச்சி மீரட்டில் ஆரம்பமாகியது.[11] போர் வீரர்க ளுக்குப் புதிதாக வழங்கப்பட்ட துப்பாக்கிக் குண்டுகளில் பசுவினதும் பன்றியினதும் கொழுப்புப் பூசப்பட்டதால் இக்கிளர்ச்சி ஏற்பட்டுப் பரவத் தொடங்கியது.[12][13] இச்சந்தர்ப்பத்தில், ஆங்கிலேயர்கள் இந்தியக் கிளர்ச்சி சம்பந்தமாகவே கவனம் செலுத்தினர். ஜான்சி பற்றி அதிகக் கவனம் செலுத்தவில்லை. இதன் காரணமாக, இராணி இலட்சுமிபாய் தனியாகவே ஜான்சியை ஆட்சி செய்தார். வடமத்திய இந்தியாவிலே ஜான்சி அமைதி யான பிரதேசமாக இருந்தமையைக் காட்டுவதற்கா கவும் ஜான்சி எந்த விதமான முற்றுகையை எதிர்கொ ள்வதற்கான அபாயத்தைக் கொண்டிருக்க வில்லை என்பதனைத் தெளிவுபடுத்துவதற்காகவும் இராணி இலட்சுமிபாயால் ஹால்டி குங்குமப் பண்டிகை ஏற்பாடு செய்யப்பட்டுக் கொண்டாடப்பட்டது.[14]
ஆனாலும் இராணி இலட்சுமிபாய் ஆங்கிலேயர்களை எதிர்க்கக்கூடும் என்ற அச்சம் ஆங்கிலேயர்களிடம் இருக்கவே செய்தது. இதனால், ஆங்கிலேயர்கள் 1857ஆம் ஆண்டு சூன் 8ஆம் திகதி ஜோக்கன் பாக்கில் பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்தின் அதிகாரிகளைப் படுகொலை செய்ததில் இராணி இலட்சுமிபாய்க்கும் பங்கு உள்ளதாகக் கூறினர்.
பொதுமக்களும் விவசாயிகளும் இராணி இலட்சுமிபாய் மீது வைத்திருந்த மதிப்பைச் சீர்குலைக்கவே இவ்வாறு கூறினர்.[15]
இதனையே காரணமாக வைத்து, 1858ஆம் ஆண்டு மார்ச்சு 23ஆம் திகதி ஹீ ரோஸ் தலைமையில் ஆங்கிலேயர்களின் படை ஒன்று ஜான்சியைக் கைப்பற்றுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டது.[16
] ஜான்சியின் படைகளுக்கு உதவி செய்வதற்காகத் தாந்தியா தோபேயின் தலைமையில் 20000 பேரைக் கொண்ட படை அனுப்பி வைக்கப்பட்டது. ஆனாலும் அப்படையின் ஆயுதங்கள் மார்ச்சு 31ஆம் திகதி ஆங்கிலேயர்களின் படையுடன் இணைந்த காரண த்தினால் தாந்தியா தோபேயினால் ஜான்சி ராணிக்கு உதவ முடியாமல் போனது. தாந்தியா தோபேயும், பான்பூர் மன்னரும் வரும் வழியில் தங்களது ஆயுத வண்டிக்காக காத்திருந்த சமயம், ஆயிரம் பேர் கொண்ட ஹியூரோஸ் தலைமையிலான குதிரைப்படை என்பீல்ட் ரக துப்பாக்கிகளின் உதவியோடு அவர்களைத் தாக்கி 1500 பாரத வீரர்களை மரணமடையச் செய்தது.
மாவீரன் தாந்தியா தோபேயும் மிகுந்த மனவருத்தத்துடன் புறமுதுகிட நேரிட்டது. பின்னால் வந்த தாந்தியா தோபேயின் ஆயுத வண்டியும் கொள்ளையடிக்கப்பட்டு, பாதுகாவலர்களும் கொல்லப்பட்டனர்.ஜான்சி ராணிக்கு உதவுவதற்காக கொண்டு வரப்பட்ட ஆயுதங்கள் அவருக்கே எதிராக ஆங்கிலேயர்களால் பயன்படுத்தப்பட்டன.[13][13]
ஆனாலும் சான்சி இராணி பிரித்தானியருக்கு அடிபணிய மறுத்துத் தமது படைகளுடன் இணைந்து கடுமையாகப் போர் புரிந்தார். தனது நாட்டை விட்டுக் கொடுக்க மறுத்த சான்சி இராணி இலட்சுமிபாய், தனது படை வீரர்களை முன்னின்று வழி நடத்திச் சென்று பெரும் ஆற்றலுடனும் மிகுந்த துணிச்சலுடனும் போர் புரிந்தார். எனினும் மூன்று நாட்களின் பின்னர், ஆங்கிலேயர்களால் அத்துமீறி நுழைந்து நகரத்தைக் கைப்பற்ற முடிந்தது. பாரதநாட்டின் ஆயிரக்கணக்கான வீரர்களுடன் மாவீரன் குதாபக்ஷ், பீரங்கி படைத்தளபதி கௌசல்கான் ஆகியோரும் மரணமடைந்தனர். கடுங்கோபத்திலிருந்த பிரித்தானியர், அரண்மனை யைச் சூறையாடிப் பொருட்களைக் கொள்ளையடித்தனர்.ஆங்கில கொள்ளையர்கள் நகர வீடுகளில் புகுந்து மாணிக்கமணிகளையும், பொன்னையும், பொருளையும், பல இடங்களிலும் பெண்களையும் சூறையாடி தங்களது வெற்றியைக் கொண்டாடினர்.[17]
தனது குதிரை பாதலுடன் தத்துக் குழந்தையுடன் இராணி இலட்சுமிபாய் தாவிய இடம்[18] ஜான்சி இராணி 1858ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் திகதி இரவு நேரத்திலே தனது மகனுடன் மதிலிலிருந்து பாய்ந்து தப்பித்தார்.[19] அதிகம் பெண்களைக் கொண்ட பாதுகாவலர் படையணியின் பாதுகாப்புடன் ஜான்சி ராணி நகரத்தை விட்டு நீங்கினார்.
ஆக்ராவிலுள்ள ராணி லட்சுமிபாயின் சிலை
ஆங்கிலேயர்களால் ஜான்சியைவிட்டு வெளியேறச்சொல்லி பிறப்பித்த ஆணை, ஜான்சியை எழுச்சியுறச் செய்தது. தனது நிலையை வலுப்படுத்தத் தொடங்கினார் லட்சுமிபாய். அதில் வீரம் மிக்க பெண்கள் படையும் இடம்பெற்றது. அண்டை நாடுகளான ஓர்ச்சா மற்று டாடியா மீது படையெடுத்து, அந்த நாட்டு வீரர்களையும் சேர்த்துக்கொண்டு ஆங்கிலேயரை எதிர்த்தார். தமது படை வீரர்களை முன்னின்று வழி நடத்திச்சென்று பெரும் ஆற்றலுடனும் மிகுந்த துணிச்சலுடனும் ஆங்கிலேயரை எதிர்த்துப் போர் புரிந்தார்.[20]
மறைவு[தொகு]
சான்சி ராணி
இராணி இலட்சுமிபாய், தாமோதர் ராவுடனும் தமது படைகளுடனும் கல்பிக்குச் சென்று தாந்தியா தோபேயின் படையுடனும் ராவ் சாஹிப் பேஷ்வாவின் படையுடனும் ஏனைய புரட்சிப் படைகளுடனும் இணைந்து கொண்டார். இவர்கள் குவாலியருக்குச் சென்று குவாலியரின் மகாராஜா ஜயாஜிராவ் சிந்தியாவின் படையைத் தோற்கடித்து, குவாலியரின் கோட்டையொன்றைக் கைப்பற்றிக் கொண்டார்கள்.
வெள்ளையரின் படை குவாலியரைக் கைப்பற்ற முகாமிட்டது. 1858ஆம் ஆண்டு சூன் 17ஆம் திகதி, கோட்டாகி சேராய் என்ற இடத்தில் வெள்ளையரை எதிர்த்துச் சான்சி ராணி போரிட்டார்.[21]
துரதிர்ஷ்டவசமாக இப்போரின்போது படுகாயமடைந்து அத்தினத்திலேயே வீரமரணம் அடைந்தார் இந்த வீரப் பெண்மணி.[22] ஆனால் வீழ்ந்தது ராணிதான் என்று ஆங்கிலேயருக்கு தெரியாததால், அவரது உடல் உடனடியாக பூல்பாக் என்ற இடத்தில் ஒரு குடிசையோடு ராணியின் படையைச் சார்ந்த ராமச்சந்திரராவால் தகனம் செய்யப்பட்டது.
[23] பிரித்தானியர் மூன்று நாட்களின் பின்னர் குவாலியரைக் கைப்பற்றினர்.
புகழ்[தொகு]
ஸ்ரீமதி சுமித்ர குமாரி சௌகான் என்ற புகழ்பெற்ற இந்திய கவிஞர் எழுதிய ஜான்சி ராணி பற்றிய இந்தி மொழிக் கவிதைகள் இந்தியில் மிகுந்த புகழ் பெற்றவை.[24]
"ஸ்வராஜ்ய கனவின் அக்கினி குஞ்சு
இங்குதான் ஜனித்தது..
ஒரு வீராங்கனையின் இறுதிநாள்
சாதனைகள் அரங்கேறிய வீரபூமியில் நிற்கும்
இந்த நினைவிடம் சிறியதுதான்...
ஆனால் இந்த வீர சரித்திரம் கேட்டால்
புற்றீசல் கூடப் புலியாக மாறிப் போராடத் தொடங்கிவிடும்" [23]
ஆங்கிலேயர்களின் படையை வழிநடத்திய ஹீ ரோஸ் வீரத்துக்காகவும் விவேகத்துக்காகவும் விடாமுயற்சிக்காகவும் குறிப்பிடத்தக்கவர் என்றும் அனைத்துப் புரட்சித் தலைவர்களிலும் மிகவும் ஆபத்தானவர் என்றும் இராணி இலட்சுமிபாயைப் புகழ்ந்து கூறினார்.[25]
இவரது வீரதீரச் செயல்களும் ஆங்கிலேயரை எதிர்த்து இவர் புரிந்த போரும் இந்திய நாட்டில் இன்றும் நாட்டுப்புறப் பாடல்களாகவும் நாடகங்களாகவும் பலரால் போற்றப்படுகின்றன. அமரத்துவம் பெற்ற ஒரு வீராங்கனையாக என்றென்றும் இவர் பெயர் அழியாப் புகழ் பெற்றுள்ளது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ஜான்சி ராணி... ஒரு வீரப்பெண்ணின் கதை
(Jhansi Rani, இந்தி: एक वीर स्त्री की कहानी... झाँसी की रानी, மராத்தி: झाशीची राणी, தெலுங்கு: ఝాన్సీ లక్ష్మీబాయి) என்பது ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்ட இந்தி மொழியிலமைந்த சான்சி கி இராணி தொலைக்காட்சி நாடகத் தொடரின் தமிழாக்கம் ஆகும். இந்தத் தொடர் இந்தி மொழியில் ஆகத்து 18, 2009 அன்று முதல் முறையாக ஒளிபரப்பப்பட்டது.[1]
தமிழ் மொழியில் இந்த நிகழ்ச்சி மார்ச்சு 8, 2010 தொடங்கியது. முதலில் திங்கள் முதல் வியாழன் வரை இரவு ஏழு மணி முதல் எட்டு மணி வரை ஒளிபரப்பப்பட்டது. பின்பு திங்கள் முதல் வெள்ளி வரை இரவு ஏழு மணிக்கு ஒளிபரப்பானது.[2] சூலை 18, 2011இலிருந்து நிகழ்ச்சி இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பானது.[3]
இது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. தலைப்புக் குறிப்பிடுவது போல, இத்தொடரின் கதையானது 1857 இந்தியக் கிளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்த சான்சியின் இராணி இலட்சுமிபாயினுடைய வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டது.[4] இந்தத் தொடர் தமிழ் மொழியில் சனவரி 27, 2012 அன்று மகாராணி இலட்சுமிபாயின் வீர இறப்புடன் முடிவடைந்தது. சனவரி 30, 2012இலிருந்து 50 நாட்களில் முடியும் வண்ணம் ஒரு சிறப்புத் தொகுப்பாக இந்தத் தொடரை ஜீ தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பி முடித்துள்ளது.[5]
கதைக்கரு[தொகு]
மகாராணி இலட்சுமிபாயாகக் கிரத்திக்கா
இது சான்சி இராணி இலட்சுமிபாய் பற்றிய ஒரு வரலாற்றுத் தொடர் ஆகும். இராணி இலட்சுமிபாயின் சிறு வயதிலிருந்து அவரின் இறப்பு வரையான நிகழ்வுகளை இத்தொடர் மையமாகக் கொண்டுள்ளது.[6]
இராணி இலட்சுமிபாய்/மனு பாய்[தொகு]
இராணி இலட்சுமிபாய், மௌரியபந்தர் தம்பேயின் மகள் ஆவார். இராணி இலட்சுமிபாய் குதிரையேற்றம், வாட்போர், சுடுகுழலால் சுடுதல் என்பனவற்றில் திறமை வாய்ந்தவர். மறை, பழங்கதை, கீதை என்பனவற்றில் நிறைந்த அறிவுடையவர். இவர் ஒரு நேர்மையான ஆட்சியாளராக இருந்து அனைத்து மக்களுக்கும் அறத்தை வழங்கினார்.
நானா சாகேபு[தொகு]
நானா சாகேபு, மாதவு நாராயண் இராவு என்பவரின் மகன் ஆவார். 1839இல் இரண்டாம் பேசுவா பாசி இராவு என்பவரால் தத்தெடுக்கப்பட்டார். இவர் இரக்கம், துணிவு, அறிவு என்பனவற்றை உடையவர். இவருடைய அறிவாற்றலும் முக்காலவுணர்வும் 1857 இந்தியக் கிளர்ச்சியில் இவரின் முக்கியத்துவத்தை உணர்த்தின.
மௌரியபந்தர் தம்பே[தொகு]
மனுவின் தந்தையான மௌரியபந்தர் தம்பே மென்மையான இதயம் படைத்தவர். இவர் தனது மகளுக்குத் தேவையான அனைத்து அறிவுரைகளையும் கூறினார். தனது மகள் சிறந்ததை அறிய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.
மைனா பாய்[தொகு]
மைனா பாய், பாசி இராவின் முதலாவது மனைவி ஆவார். இவர் எளிமையான, அடக்கமான, தனது பிள்ளைகளில் அக்கறையுள்ள பெண் ஆவார். இவர் தனது சொந்த மகளைப் போல் மனுவை நேசித்தார்.[7]
பேசுவா பாசி இராவு[தொகு]
இரண்டாம் பேசுவா பாசி இராவு ஓர் ஆட்சியாளர். இவருக்கு இரண்டு மகள்கள். இவர் இரண்டு மகன்களைத் தத்தெடுத்துக் கொண்டார்.
தாந்தியா தோப்பே[தொகு]
தாந்தியா தோப்பே, மனு பாயின் ஆசான் ஆவார். மனு, இராணி இலட்சுமிபாயாக வருவதற்கு உதவி புரிந்தவர்களுள் இவரும் ஒருவர். இராணி இலட்சுமிபாயின் இறப்பின் பின் இவர் ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்டார்.
வாகினி சாகேபு[தொகு]
வாகினி சாகேபு இத்தொடரில் ஒரு புனைவுக் கதைமாந்தர். இவர் பேசுவாக் குடும்பத்தின் மூத்த பெண் ஆவார்.
வைசாலி[தொகு]
வைசாலி இத்தொடரில் ஒரு புனைவுக் கதைமாந்தர். இவர் இயசோதாவின் மகள் ஆவார்.[8]
வரலாறு[தொகு]
முதன்மைக் கட்டுரை: ராணி லட்சுமிபாய்
இராணி இலட்சுமிபாய் நவம்பர் 19, 1835 மௌரியபந்தர் தம்பே, பகீரதிபாய் தம்பே ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார்.[9] இவருக்குப் பெற்றோர் மணிக்கர்ணிக்கா என்று பெயர் சூட்டினர்.[10] மணிக்கர்ணிக்காவுக்கு நான்கு வயதாக இருக்கும்போது பகீரதிபாய் தம்பே இறந்து விட்டார்.[11]
1842இல் மணிக்கர்ணிக்காவுக்கு சான்சியின் மகாராசாவான கங்காதர இராவு நெவல்கருடன் திருமணம் நடைபெற்றது.[12] அதிலிருந்து மணிக்கர்ணிக்கா சான்சி இராணி ஆனார்.[13] திருமணத்தின் பின்பு, மணிக்கர்ணிக்காவுக்கு இலட்சுமிபாய் என்ற பெயர் சூட்டப்பட்டது.[14] 1851இல் இராணி இலட்சுமிபாய் தாமோதர் இராவு என்ற மகனைப் பெற்றெடுத்தார்.[15] என்றாலும் அக்குழந்தை ஏறத்தாழ நான்கு மாதங்களில் இறந்து போனது.[16] அதன் பின்னர், இருவரும் ஆனந்து இராவு என்ற குழந்தையைத் தத்தெடுத்தனர்.[17] பின்னர், அக்குழந்தைக்குத் தாமோதர் இராவு என்ற பெயர் சூட்டப்பட்டது.[18] ஆனாலும் தனது மகனின் இறப்பினால் ஏற்பட்ட துயரத்திலிருந்து மீளாத மகாராசா கங்காதர இராவு நெவல்கர் நவம்பர் 21, 1853 இறந்தார்.[19]
ஆனாலும் அப்போதைய ஆங்கிலேய ஆணையரான இடல்லவுசி அவகாசியிலிக் கொள்கையின்படி, மகவேற்ற பிள்ளையை உத்தியோக முறையில் ஏற்க மறுத்து, சான்சியையை ஆங்கிலேயர்களின் ஆட்சியின் கீழ் கொண்டு வர முயற்சித்தார்.[20] ஆனாலும் இதற்கு மகாராணி இலட்சுமிபாய் ஒத்துக் கொள்ளவில்லை.[21]
இச்சந்தர்ப்பத்தில், ஆங்கிலேயருக்கு எதிரான இந்தியக் கிளர்ச்சி மீரட்டில் ஆரம்பமாகியது.[22] இக்கலகத்திற்கு இராணி இலட்சுமிபாய் உதவக்கூடும் என்ற ஐயத்தினால் சூன் 8, 1857 சோக்கன் பாகில் பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்தின் தலைவர்களைக் கொன்றதாக இராணி இலட்சுமிபாய் மீது குற்றஞ்சுமத்தி, பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனம் ஈ உரோசு தலைமையிலான படையை சான்சியைக் கைப்பற்றுவதற்காக அனுப்பி வைத்தது.[23] ஆனாலும் மகாராணி இலட்சுமிபாய் தனது படைகளுடன் இணைந்து ஆங்கிலேயர்களுடன் கடுமையாகப் போர் புரிந்தார்.[24] என்றாலும் ஆங்கிலேயர்கள் சான்சி நகரத்தைக் கைப்பற்றியவுடன் ராணி லட்சுமிபாய் தனது மகனுடன் மதிலிலிருந்து பாய்ந்து தப்பித்தார்.[25]
பின்னர், மகாராணி இலட்சுமிபாய் கல்பி என்ற இடத்துக்குச் சென்று தனது படைகளுடனும் தாந்தியா தோப்பேயின் படைகளுடனும் இணைந்து கொண்டார்.[26] மகாராணியும் தாந்தியா தோப்பேயும் குவாலியருக்குச் சென்று குவாலியரின் மகாராசா சயாசிராவு சிந்தியாவின் படையைத் தோற்கடித்தார்கள். அத்தோடு, குவாலியரின் கோட்டையையும் கைப்பற்றிக் கொண்டார்கள்.[27] அப்போது, ஆங்கிலேயரின் படை குவாலியரைக் கைப்பற்ற முகாமிட்டது. உடனே, மகாராணி இலட்சுமிபாய் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போர் புரிந்தார். ஆனாலும் போகூழாக சூன் 17, 1858 மகாராணி இலட்சுமிபாய் போரில் இறந்தார்.[28]
பகுதியான புனைவு[தொகு]
வைசாலி, கங்கா, இலத்தி, வாகினி சாகேபு போன்ற புனைவுக் கதைமாந்தர்களும் இத்தொடரில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
நடிகர்கள்[தொகு]
இளைய இராணி இலட்சுமிபாயாக நடித்தவர் உல்கா குப்தா ஆவார். இந்தி மொழியில் சூன் 8, 2010இலிருந்து வளர்ந்த இராணி இலட்சுமிபாயாக நடித்தவர் கிரத்திக்கா செங்கர் ஆவார். இருவரும் இராணி இலட்சுமிபாயாக நடித்ததற்காகப் பல விருதுகளைப் பெற்றுள்ளனர். மேலும் சமீர் தர்மாதிக்காரி மகாராசா கங்காதர இராவாக நடித்துள்ளார்.
இறுதிப் படலம்[தொகு]
கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
காயமடைந்த இராணி இலட்சுமிபாய் தாந்தியா தோப்பே யிடம் இரகுநாத்து சிங்கு திரும்பி வர மாட்டார் எனக் கூறுகிறார். தாமோதரையும் அழைத்துக் கொண்டு கான்பூருக்குச் செல்லுமாறும் அச்சுச் செய்திகளைச் சான் இலாங்கிடம் ஒப்படைக்கும்படியும் தொடர்ந்து கூறுகிறார் இராணி இலட்சுமிபாய். மேலும் சான் இலாங்கு அவற்றைச் செய்தித் தாளில் வெளிவிடு வதால் தமது குறிக்கோள் நிறைவேறி விடுமென்றும் கூறுகிறார்.
இச்சமயத்தில் பிரித்தானிய வீரர்கள் சான்சி இராணி யைத் தேடிக் கொண்டிருக்கின்றனர். தாந்தியா தோப்பேயையும் தாமோதரையும் இராணி இலட்சுமி பாய் கட்டாயப்படுத்திச் செல்லவைத்தார். இராணி இலட்சுமிபாய் இதற்கிடையில் கோயிலொன்றின் உள்ளே செல்கிறார். படுகாயம் அடைந்த இராணி இலட்சுமிபாய் இராசமாதா, பேசுவா பாசி இராவு, கர்மா, கோவுசு கான், மகாராசா கங்காதர இராவு, மௌரியபந்தர் ஆகியோரின் தோற்றத்தைக் காண்கிறார்.
அவர்கள் சுதந்திரப் போராட்டத்தைத் தொடருமாறு இராணி இலட்சுமிபாயை வற்புறுத்துகிறார்கள். ஒவ்வொருவரும் இராணி இலட்சுமிபாயின் உடலில் நகைகளாக மாறுகின்றனர். பிரித்தானிய வீரர்கள் கோயிலுள் புகுகிறார்கள். இராணி இலட்சுமிபாய் ஹர ஹர மகாதேவா என்று முழங்கி ஆங்கிலேயர்களைத் துர்க்கையைப் போல் வீரமாகக் கொன்று குவிக்கிறார்.
உடனே, கோல் கோழையைப் போலே இராணி இலட்சுமிபாயைச் சுடுகிறார். படைவீரர்களை இராணி இலட்சுமிபாயின் கைகளைப் பிடிக்க விட்டு, அவரால் தாக்க முடியாதவாறு செய்துவிட்டுப் பின்பு வாளி னாற்தாக்குகிறார் கோல். இராணி இலட்சுமிபாய் காயமடைந்திருந்த போதிலும் படை வீரர்களைத் தாக்கி விட்டுத் துணிவுடன் கோலின் தலையில் தாக்குகிறார். அனைத்து ஆங்கிலேயர்களையும் அழித்து விட்டுக் கோயிலின் வாயில் வழியாகச் சென்ற வண்டியின் ஓட்டுநரிடம் தன் இறப்பைப் பற்றி யாரும் அறியக் கூடாது என்றும் தன் உடல் தீய ஆங்கிலேயர்களிடம் கிடைக்கக் கூடாது என்று வாக்குப் பெற்றுக்கொண்டு வீர இறப்பு அடைந்தார்
இராணி இலட்சுமிபாய். அந்த வண்டி ஓட்டுநர் சான்சி இராணியின் இறுதிக் கடமைகளைச் செய்கிறார். மகாராணி விக்டோரியா ஒழிக என்று இந்தியர்கள் ஊர்வலம் செல்கிறார்கள். இராணி லட்சுமிபாய் இறந்துவிட்டதாகச் சார்லசு கேனிங்கு நம்பவில்லை. இந்தியர்கள் சான்சி இராணி இலட்சுமிபாய் இறந்துவிட்டதை நம்ப மறுக்கிறார்கள், சுதந்திரத் தீயை அணையாமல் காக்கின்றனர்.[31]
மகாராசா கங்காதர இராவின் உயிர் இராணி இலட்சுமிபாயின் உயிரை அழைத்துச் செல்கிறது.
மகாராணி இலட்சுமிபாய் இறக்கவில்லை. இறக்கவும் மாட்டார்கள். என்றுமே புரட்சியின் தீச் சுடராக நம் மனதில் இருப்பார்கள்.
No comments:
Post a Comment