Monday 19 June 2017

KUMARI KAMALA TOP DANCER OF TAMIL CINEMA குமாரி கமலா (பிறப்பு: 16 சூன் 1934)


KUMARI KAMALA  TOP DANCER OF TAMIL CINEMA குமாரி கமலா (பிறப்பு: 16 சூன் 1934)




குமாரி கமலா (பிறப்பு: 16 சூன் 1934) பழம்பெரும் நடிகையும், பரதநாட்டியக் கலைஞரும், பாடகியும் ஆவார். 1950களில் புகழ்பெற்ற நடிகையாக விளங்கிய இவர் 80 இற்கும் மேற்பட்ட தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். கமலா பரத நாட்டியத்தில் இணையற்றத் தாரகைகளான பாலசரஸ்வதி, ருக்மிணிதேவி ஆகியோர் வரிசையில் எண்ணத்தக்கவர் ஆவார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

தமிழ்நாட்டின் மயிலாடுதுறையில் ராமமூர்த்தி ஐயர், ராஜம்மாள் ஆகியோருக்குப் பிறந்தவர் குமாரி கமலா. இருவரும் கலையார்வலர்கள். இவருக்கு 3 வயதானபோது குடும்பம் பம்பாய்க்கு இடம் பெயர்ந்தது. அந்த வயதில் கமலா கதக் நாட்டியம் பயின்றார். அங்கு மூன்றரை வயதில் பம்பாய் ஆஸ்திக சமாஜத்தில் நடன மேதை ருக்மிணி முன்னிலையில் ஆடி அவர் கையால் மாலையிடப்பட்டு வாழ்த்து பெற்றார். 

ஐதராபாத்தில் கவியரசி சரோஜினி நாயுடு முன்னிலையில் நடனமாடி வாழ்த்து பெற்றார். தந்தை ஈரானிலும் பின்னர் பம்பாயிலும் பணி புரிந்தவர். கமலாவிற்கு ராதா, வசந்தி என இரு உடன்பிறந்தவர்கள் உண்டு. இரண்டாம் உலகப்போரால் கமலாவின் குடும்பம் சொந்த ஊரான மயிலாடுதுறைக்கு இடம்பெயர்ந்தது. இது அவர் வாழ்வின் முக்கிய திருப்பம். கமலா பரதம் பயின்றார். அவரது பரதத்துக்கு காட்டுமன்னார் கோயில் முத்துக்குமரப் பிள்ளை அடித்தளமிட்டார். அதை வளர்த்து விட்டவர் வழுவூர் பி. இராமையா பிள்ளை.


 ராமையா பிள்ளையிடம் 25 ஆண்டு சிட்சை. பம்பாயிலிருந்த ரஞ்சித் மூவிடோன் கம்பெனியில் மாதச் சம்பளத்தில் இவர் குழந்தை நடிகையாகச் சேர்ந்தார். ராம ராஜ்யா, கிஸ்மத், விஷ்கன்யா, ஷாஜி, கந்தன், தத்புரி போன்ற இந்திப் படங்களில் நடித்தார். மியூசிக் அகடாமியிலிருந்து, எலிசபத் அரசியின் முடிசூட்டு விழா வரை கமலாவின் நாட்டியம் நடக்காத இடமேயில்லை என்றாயிற்று. அவர் புகழ் எங்கும் பரவியது. நாம் இருவர் உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் இவரின் நடனம் இடம்பெற்றது.


திரைப்படங்களில் நடிப்பு[தொகு]

மும்பையில் இருந்து தமிழ்நாட்டுக்கு திரும்பி வந்ததும், காட்டு மன்னார்கோவில் முத்துக்குமாரப் பிள்ளை என்பவரிடம் முறையாக பரதம் கற்றுக் கொண்டு மாயவரத்திலேயே அரங்கேற்றமும் செய்தார். பின்னர் சென்னைக்குக் குடி பெயர்ந்து வழுவூர் ராமையா பிள்ளையிடம் பரதம் கற்று பல நிகழ்ச்சிகள் செய்தார். ஸ்ரீராமுலு நாயுடுவின் இயக்கத்தில் 1944 இல் வெளிவந்த ஜகதலப் பிரதாபன் திரைப்படத்தில் பாம்பு நடனம் ஆடிப் புகழ் பெற்றார். அதன் பின்னர் இவருக்குப் பல திரைப்படங்களில் நடனம் ஆட வாய்ப்புக் கிடைத்தது. 

நாம் இருவர் (1947) திரைப்படத்தில் ஆடுவோமே பள்ளு பாடுவோமே என்ற பாடலை இரட்டை வேடத்தில் நடித்துப் பாடினார். ஏவிஎம் இன் பராசக்தி திரைப்படத்தில் ஓ... ரசிக்கும் சீமானே... என்ற பாடல், கொஞ்சும் சலங்கை படத்தில் இவரும் நடிகை குசலகுமாரியும் இணைந்து ஆடிய போட்டி நடனம் ஆகியவை இவருக்குப் புகழ் சேர்த்தன.


பாவை விளக்கு (1960) திரைப்படம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், தணிகாசலம் என்ற எழுத்தாளனாக நான்கு கதாநாயகிகளுடன் நடித்து வெளிவந்தது. இப்படத்தில் முதல் கதாநாயகியாக குமாரி கமலா செங்கமலம் என்ற பாத்திரத்தில் குமாரி கமலா நடித்திருந்தார். இப்படத்தில் வண்ணத்தமிழ்ப் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள் என்று கதாநாயகன் எழுதிப் பாடும் பாட்டிற்கு குமாரி கமலா நாட்டியமாடி இருந்தார்.


ஸ்ரீதேவி நடித்த தெய்வத் திருமணம், ஜெயசித்ரா நடித்த வருவான் வடிவேலன் போன்ற சில படங்களுக்கு நடன ஆசிரியையாகப் பணியாற்றியுள்ளார்.


குடும்பம்[தொகு]

பிரபல ஓவியர் ஆர். கே. லட்சுமணனை திருமணம் புரிந்தார் கமலா. அவருடன் 1960 இல் மணமுறிப்பு செய்த பின்னர்[1] 1964-ல் இராணுவ வீரர் மேஜர் லெட்சுமிநாராயணன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டு திரையுலகில் இருந்து விலகி குடும்ப வாழ்க்கையில் ஈடுபடலானார். 

1980-ல் அமெரிக்காவில் உள்ள குயின்ஸ் என்ற இடத்தில் குடியேறி அங்கே "ஸ்ரீபரதகலாலயா' என்கிற நாட்டியப் பள்ளி ஒன்றை ஆரம்பித்து ஏராளமானவர்களுக்கு பரதக் கலையைக் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார். 1983-ல் கணவர் இறந்த பிறகு தன் மகனோடு அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கில் வசித்து வருகிறார்.


விருதுகள்[தொகு]
இவர் பெற்றுள்ள விருதுகள்[2]:

1967 - கலைமாமணி விருது
1968 - சங்கீத நாடக அகாதமி விருது
1970 - இந்திய அரசு இவரது கலைத் திறமையை பாராட்டும் விதமாக இவருக்கு பத்ம பூசண் விருது வழங்கி பாராட்டியது.[3]
1975 - கால்கேட் பல்கலைக்கழகத்தின் பேராசியர் பதவி (Branta Professorship from Colgate University)
1989 - இ. கிருஷ்ண அய்யர் பதக்கம் (சுருதி அமைப்பு)
1993 - சங்கீத ரத்னகாரா (கிளீவ்லேண்டு தியாகராஜ ஆராதனை)
2002 - சென்னை மியூசிக் அகாதமியின் பவள விழா விருது (Platinum Jubilee award-)
2010 - தேசிய பாரம்பரிய ஆய்வுதவித் தொகை (National Heritage Fellowship)

நடித்த திரைப்படங்கள் சில[தொகு]


ஸ்ரீ வள்ளி (1945)
பாலயோகினி
ஜகதலப்பிரதாபன்
கொஞ்சும் சலங்கை
காத்தவராயன்
பக்தமீரா
நாம் இருவர்
வீரக்கனல்
வேதாள உலகம்
குல தெய்வம்
பார்த்திபன் கனவு
சிவகங்கைச் சீமை
சிவகாமி
பராசக்தி

பாவை விளக்கு


இந்திய விடுதலைத் திருநாள், குடியரசு தினம், காந்தி ஜெயந்தி, பாரதி விழா நேரங்களில் தமிழர்களின் மனங்களில் நினைவுப் பதியம் போட்டு மிக நெருக்கமாகிவிடுவார் குமாரி கமலா. 1934 ஜூன் 16-ல் மயிலாடுதுறையில் பிறந்தவர்.

‘ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே’, ‘வெற்றி எட்டுத் திக்கு என்று கொட்டு முரசே!’, ‘ஆஹா காந்தி மகான்!’ போன்ற பாடல்கள் செவிகளைக் குளிர வைக்கும். அவ்வேளையில் கண்ணுக்கும் நெஞ்சுக்கும் நிறைவாக கமலாவின் நடனம் புதுப் பொலிவுடன் ’பொதிகை’யை ஆக்கிரமிக்கும்.


நிச்சயமாக அது ஒரு பாக்கியம் கமலாவுக்கு.


தமிழ் சினிமாவின் ஆரம்ப கால பொம்மலாட்டங்களில் கமலாவின் நாட்டியம் டூரிங் டாக்கீசுகளில் கல்லா கட்ட உதவியது.

இரு கரு நாகங்களைத் தன் தோள்களில் போட்டுக் கொண்ட மாதிரி 13 வயது கமலாவின் இரட்டை ஜடையும், பாவாடை சட்டையும் ‘அண்ணா... அண்ணா’ என்கிற பாசமிகு குரலும் ’நாம் இருவர்’ படத்துக்கு மெருகூட்டியது.


தொடக்கத்தில் மும்பைவாசி கமலா. ஐந்து வயதுக்கெல்லாம் கதக், அப்புறம் பரதம் என அவரது முழங்கால்கள் நர்த்தனமாடியே முழு வளர்ச்சி அடைந்தன. சந்துல்ஷா தயாரித்த ‘யூத் லீக்’ இந்திப் படம் கமலாவுக்கு ஆடுவதற்கு முதலில் சந்தர்ப்பம் அளித்தது. (தமிழில் ’வாலிபர் சங்கம்’) யதாஷ் சர்மாவின் இயக்கத்தில் பார்வை இழந்த பாலகியாக நடனமாடிய அனுபவம் கமலாவுக்கு உண்டு.


இரண்டாம் உலகப் போருக்குப் பயந்து தமிழகம் திரும்பியது கமலாவின் குடும்பம். மயிலாப்பூர் அப்பு முதலித் தெருவில் வாசம். வழூவூர் ராமையா பிள்ளையிடம் பரதப் பயிற்சி தொடர்ந்தது. கமலா முதலில் ஆடிய நேரடித் தமிழ்ப் படம் பி.யூ. சின்னப்பா நடித்த ‘ஜகதலப்பிரதாபன்.’ ‘பட்சிராஜா’ ஸ்ரீராமுலு நாயுடு கமலாவின் நடனம் ஒன்றைப் பார்த்துவிட்டு வழங்கிய வாய்ப்பு.


கமலாவின் பாதங்களை சினிமா காமிரா வெகுவாகப் படம் பிடித்தது. ஏ.வி. மெய்யப்பச் செட்டியாரின் தயாரிப்புகள் கமலாவின் நடனங்கள் இல்லாமல் வெளிவராது என்கிற நிலைமை உண்டானது. குறிப்பாக ’நாம் இருவர்’ முரசு நடனம். மெய்யப்பச் செட்டியார் அதை கமலாதான் ஆட வேண்டும் என்று கண்டித்துச் சொல்லிவிட்டார். திரையின் இரு புறமும் வெவ்வேறு கமலாக்கள் ஆடிக் காண்போரைக் கவர்ந்தனர். இந்தி, தமிழ்,மலையாளம், கன்னடம், சிங்களம் என்று எல்லை கடந்தும், கமலாவின் கால்கள் பேசின.


பராசக்தி சினிமாவில் ’ஓ! ரசிக்கும் சீமானே!’ பாட்டுக்கான ஆட்டம், கமலாவை இளைஞர்களிடத்தில் நிரந்தரமாகக் கொண்டுசேர்த்தது. 1958-ல் சிவாஜி- சாவித்ரி இணைந்து நடித்த காத்தவராயனில் கோபிகிருஷ்ணா - கமலா சேர்ந்து ஆடியிருக்கிறார்கள். அவர்களது சிவன்-பார்வதி நடனம் படத்துக்குக் கூடுதல் சிறப்பைக் கொடுத்தது.


அகிலனின் ‘பாவை விளக்கு’ 1960 தீபாவளிக்கு டாக்கியாக வெளியானது. அதில் நடிகர் திலகத்துடன் காதலி ‘செங்கமலமாக’நடிக்கும் அதிர்ஷ்டம் கமலாவுக்குக் கிடைத்தது. ‘பாவை விளக்கு’ படத்தில் கே.வி.மகாதேவனின் இசையில் ‘ஆயிரம் கண் போதாது வண்ணக்கிளியே, ‘வண்ணத்தமிழ் பெண்ணொருத்தி’, ‘நான் உன்னை நினைக்காத’, ‘சிதறிய சலங்கைகள் போல’ உள்ளிட்டப் பாடல் காட்சிகள் காலத்தால் கமலாவை மறக்கச் செய்யாது.

கவிஞர் கண்ணதாசனின் எழுச்சிப் படைப்பு ‘சிவகங்கைச் சீமை’. அதில் கதாநாயகி கமலா. படத்தின் க்ளைமாக்ஸில் மழையில் கமலா ஆடிடும் பரதம் மெய்சிலிர்க்க வைக்கும். ‘கனவு கண்டேன் நான், கன்னங்கருத்த கிளி’ ஆகிய பாடல்கள் கமலாவுக்குத் தனிப் புகழைத் தேடித் தந்தன. கல்கியின் ’பார்த்திபன் கனவு’ படமானது. சிவகாமியாக மாமல்லர் எஸ்.வி. ரெங்காராவுடன் நடித்தவர் கமலா.


‘கொஞ்சும் சலங்கை’ படத்தின் வெற்றியிலும் கமலாவுக்கு மிக முக்கியப் பங்குண்டு. ‘பிரம்மன் தாளம் போட’ என்று தொடங்கும் பாடலில் கமலா-குசலகுமாரி ஆடிய ‘சிம்ம நந்தனம் ஆடிடும் முன்னே மயூர பந்தனம் செய்யட்டுமா...’ போட்டி நடனம் விறுவிறுப்பூட்டியது. ஏறக்குறைய நாலு நறுக்கான இந்தப் படங்களோடு, நடிப்பில் கமலாவின் பங்களிப்பு நிறைவு பெற்றது.


இந்தி தெரிந்திருந்தும் வைஜெயந்திமாலா, பத்மினி போல் அகில இந்தியாவிலும் வெற்றிகரமான கதாநாயகியாக அவரால் ஜொலிக்க முடியவில்லை. ‘அது ஏன்?’ என்கிற கேள்விக்கு மிக நேர்மையாகப் பதில் அளித்துள்ளார் கமலா.


“உண்மையைச் சொல்லப்போனால் நடனம் வந்த அளவுக்கு எனக்கு நடிப்பு வரவில்லை. அதோடு நீள நீள டயலாக் வேறு.ஒரு தடவை பேசும்போது கொஞ்சம் தடுமாறிவிட்டாலும் போதும்; மறுபடியும் முதலில் இருந்து பேச வேண்டும். இப்போது மாதிரி டப்பிங் வசதியெல்லாம் கிடையாது. நமக்காக இன்னொருவர் குரல் கொடுப்பதை அனுமதிக்க மாட்டார்கள்.


 திரையில் நடிக்கிறவரே முழு வசனமும் பேசியாக வேண்டும். நீண்ட நெடிய உரையாடலில் வார்த்தைகளோ முகபாவங்களோ விடுபட்டுப் போனால் மறுபடியும் பேசச் சொல்வார்கள். ‘அய்யோ கடவுளே!’ என்று மனசு அலறும். இப்படியொரு டென்ஷன் தேவையா என்கிற கேள்வி என்னுள் எழுந்தது. நமக்கு நன்கு தெரிந்த நடனத்தை மட்டும் தொடரலாம் என்று முடிவு செய்தேன்.”

1971-ல் ‘செண்டா’ என்கிற மலையாளப் படத்தில் கமலாவின் நாட்டியம் கடைசியாக இடம்பெற்றது. உலகப் புகழ் பெற்ற கேலிச் சித்திரக்காரர் ஆர். கே. லட்சுமணனுடன் ஏற்பட்ட திருமண பந்தம் 1960-ல் முடிவுக்கு வர, 1964-ல் மேஜர் லட்சுமி நாராயணனின் திருமதி ஆனார் கமலா. ஒரே ஒரு ஆண் வாரிசு. பயாஸ்கோப்பிலிருந்து விடுபட்ட பின்னர் முழு மூச்சுடன் தன்னை நாட்டியக் கலைக்காக கமலா அர்ப்பணித்துக்கொண்டார். இங்கிலாந்து அரசி எலிசெபத்தின் அவையில், லண்டனிலும் பின்னர் சென்னையிலுமாக இரு முறை கமலாவின் நாட்டியம் நடைபெற்றது.


‘சென்னை ராஜ்பவனில் ராணிக்கு முன்னால் நான் ஆடிய பாம்பு நடனம் அவருக்கு ரொம்பவே பிடித்துப் போனது. ஒண்டர்ஃபுல் என்று நீண்ட நேரம் என்னைப் பாராட்டியபடியே இருந்தார்.’- குமாரி கமலா.


1970-ல் இந்திய அரசின் பத்மபூஷன் விருது கமலாவின் ஆடற்கலைக்கு மகுடம் சூட்டியது. இரண்டு கணேசன்கள், எஸ்.எஸ். ஆர். படங்களில் பங்கேற்ற கமலா, எம்.ஜி.ஆருடன் நடித்தது கிடையாது. ‘நாடோடி மன்னன்’ படத்தில் எம்.ஜி.ஆர். ஆட அழைத்தும், கமலா அதில் இடம்பெறவில்லை. காரணம் அதிக வேலைப் பளு.


1981-ல் நியூயார்க்கில் குடியேறினார் கமலா. அங்கு ’ஸ்ரீ பரத கலாலயா’ என்கிற நாட்டியப் பாடசாலை ஒன்றையும் அமைத்தார். அதற்குப் பிறகு சுற்றமும் நட்பும் அழைத்தால் தாயகம் வந்து போவது நிகழ்ந்தது.




மும்பை - மரணமடைந்த கார்ட்டூ னிஸ்ட் ஆர்.கே. லட்சுமண் உடல் தகனம் முழு அரசு மரியாதையுடன் நடைபெற்றது.  


புகழ் பெற்ற கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே. லட்சுமண் பத்திரிகைகளில் கேலி சித்திரங்கள் மூலம் கருத்துக்களை வெளியிடுவதில் சிறந்தவர். திருவாளர் பொதுஜனம் என்ற பெயரில் பிரபல ஆங்கில பத்திரிகைகளில் கேலி சித்திரங்கள் வெளியிட்டு பணியாற்றியுள்ளார். புனேயில் வசித்து வந்த அவருக்கு கடந்த 2003ம் ஆண்டு பக்கவாதம் ஏற்பட்டது. இடது கை செயல் இழந்தது. வலது  கையால் கார்ட்டூன்களை தொடர்ந்து வரைந்து வந்தார். 60 ஆண்டுகளாக பத்திரிகைகளில் பணியாற்றி வந்தார்.

94 வயதாகும் ஆர்.கே. லட்சுமண் சிறுநீரக கோளாறு காரணமாக புனேயில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மரணமடைந்தார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.  ஆர்.கே. லட்சுமண் உடல் தகனம் நேற்று புனேயில் முழு அரசு மரியாதையுடன் நடைபெற்றது.

முன்னதாக மராட்டிய முதல்வர் தேவேந்திர ப ட்னாவிஸ் புனே சென்று லட்சுமண் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். ஆர்.கே. லட்சுமண் 1921ம் ஆண்டு அக்டோபர் மாதம் 24ம் தேதி மைசூரில் பிறந்தார்.  இவரது பெற்றோர் தமிழ்நாட்டின் ராசிபுரத்தை சேர்ந்தவர்கள். தந்தை கிருஷ்ணசாமி அய்யர் சென்னையில் பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றினார்.


பின்னர் அவர் மைசூர் மகாராஜா மேல்நிலை பள்ளிக்கு மாற்றப்பட்டதால் குடும்பத்துடன் மைசூரில் குடியேறினார். அங்கு ஆர்.கே. லட்சுமண் பிறந்தார். பத்திரிகைகளில் பணியாற்றும் போது தனது பெயரு டன் பூர்வீக ஊரை குறிப்பிடும் வகையில் ராசியிம் கிருஷ்ணசாமி அய்யர் லட்சுமண் என குறிப்பிடும் வகையில் ஆர்.கே. நாராயண் என வைத்துக் கொண்டார்



இவருக்கு மறைந்த பிரபல எழுத்தாளர் ஆர்.கே. லட்சுமண் உட்பட 5  சகோதரர்கள், 5 சகோதரிகள். ஆர்.கே. லட்சுமண் நடன கலைஞரும், நடிகையுமான குமாரி கமலாவை திருமணம் செய்தார். 
1960ம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றனர். அதன் பின்பு ஆர்.கே. லட்சுமண் மறுமணம் செய்தார். 2வது மனைவி பெயரும் கமலா என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீனிவாஸ் என்ற மகள் இருக்கிறார். ஆர்.கே. லட்சுமண் மத்திய அரசின் பத்மபூஷன், பத்மவிபூஷன் விருதுகளும், பத்திரிகை துறையில் 60 ஆண்டு பணிக்காக மகாசேசே விருதும் பெற்றுள்ளார்.


No comments:

Post a Comment