Madurai Nayak dynasty
மதுரை நாயக்கர்கள், 1529-1736பாளையங்களின் பெயர்ப் பட்டியல்
மதுரை நாயக்கர்கள், மதுரையையும், அதைச் சார்ந்த பகுதிகளையும் 1529 தொடக்கம், 1736 வரை ஆண்டார்கள்.[1][2]
கிருஷ்ண தேவராயர் |
தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட இவர்கள் ஆரம்பத்தில் விஜயநகரப் பேரரசின் கீழ் அரசப் பிரதிநிதிகளாக இருந்தனர்.
விஜயநகரப் பேரரசு பலமிழந்தபோது, தங்கள் ஆட்சிப்பகுதிகளில் தங்களைப் பலப்படுத்திக்கொண்டு பேரரசிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டனர். நிர்வாக முறைகளில் புதுமைகளைப் புகுத்தியதன் மூலம் மதுரை நாயக்கர்கள் மக்களோடு தங்கள் தொடர்புகளை வலுப்படுத்திக் கொண்டனர். இவற்றுள் தங்கள் நாட்டை 72 பாளையங்களாகப் பிரித்து நிர்வாகம் மேற்கொண்டது முக்கியமானது.
மதுரை நாயக்கர் தோற்றம்[தொகு]
விஜயநகரத்துப் பேரரசர் கிருஷ்ண தேவராயர் ஆட்சியில் தளபதி, மண்டலாதிபதி போன்ற பொறுப்புக்களை வகித்தவர் நாகம நாயக்கர். இவருடைய மகன் விசுவநாத நாயக்கர். கிருஷ்ண தேவராயரிடம் பணிக்குச் சேர்ந்த விசுவநாத நாயக்கர், பேரரசரின் நம்பிக்கைக்குப் பாத்திரமானார். அக்காலத்தில் விஜயநகரப் பேரரசின் கீழிருந்த பாண்டிய மண்டலத்தில் குழப்பங்கள் தலைதூக்கின அதனை அடக்குவதற்காக விசுவநாத நாயக்கர் படையுடன் அனுப்பிவைக்கப்பட்டார் . எடுத்த பொறுப்பைச் செவ்வனே முடித்த விசுவநாத நாயக்கர், மதுரை மண்டலத்தின் நிர்வாகியாக அமர்த்தப்பட்டார். இவருடைய பரம்பரையினரே மதுரை நாயக்கர்கள் என அழைக்கப்பட்டவர்கள்.
விஜயநகரத்துப் பேரரசர் கிருஷ்ண தேவராயர் ஆட்சியில் தளபதி, மண்டலாதிபதி போன்ற பொறுப்புக்களை வகித்தவர் நாகம நாயக்கர். இவருடைய மகன் விசுவநாத நாயக்கர். கிருஷ்ண தேவராயரிடம் பணிக்குச் சேர்ந்த விசுவநாத நாயக்கர், பேரரசரின் நம்பிக்கைக்குப் பாத்திரமானார். அக்காலத்தில் விஜயநகரப் பேரரசின் கீழிருந்த பாண்டிய மண்டலத்தில் குழப்பங்கள் தலைதூக்கின அதனை அடக்குவதற்காக விசுவநாத நாயக்கர் படையுடன் அனுப்பிவைக்கப்பட்டார் . எடுத்த பொறுப்பைச் செவ்வனே முடித்த விசுவநாத நாயக்கர், மதுரை மண்டலத்தின் நிர்வாகியாக அமர்த்தப்பட்டார். இவருடைய பரம்பரையினரே மதுரை நாயக்கர்கள் என அழைக்கப்பட்டவர்கள்.
முதல் ஐந்து மதுரை நாயக்கர்களும் விஜயநகரப்பேரரசுக்கு விசுவாசமாக அதற்கு அடங்கியே இருந்தார்கள். ஆறாவதாக 1609 தொடக்கம் 1623 வரை மதுரையை ஆண்ட நாயக்கரான முத்துவீரப்ப நாயக்கர், அக்காலத்தில் வலுவிழந்திருந்த விஜயநகரத்துக்குத் திறை கொடுப்பதை நிறுத்திக்கொண்டார். இவர் பின்னர் ஆட்சிக்கு வந்த திருமலை நாயக்கர் காலம் மதுரை நாயக்கர்களின் பொற்காலம் எனலாம். திருமலை நாயக்கருக்குப் பின்னர் இவ்வம்சத்தைச் சேர்ந்த மேலும் அறுவர் ஆட்சி செய்தனர். இவர்களுள் இராணி மங்கம்மாள் குறிப்பிடத்தக்கவர். இறுதியாக ஆட்சிப்பொறுப்பை ஏற்றவர் இராணி மீனாட்சி. 1732 இல் நாயக்க மன்னர் விஜயரங்க சொக்கநாத நாயக்கர் வாரிசு இல்லாமல் இறந்தபோது அவனது மனைவி மீனாட்சிக்கு ஆட்சிப் பொறுப்புக் கிடைத்தது. எனினும் அரசுரிமைப் போட்டியில் அவருக்கு உதவி செய்யும் சாக்கில் தலையிட்ட கர்நாடக நவாப்பின் மருமகனான சாந்தா சாகிப் அவரை சிறைப்பிடித்து மதுரை அரசையும் கைக்கொண்டார். இதன் மூலம் மதுரை நாயக்கர் வம்சம் ஒரு முடிவுக்கு வந்தது.[3]
மிகவும் புகழ்பெற்ற வரலாற்று அறிஞரும் எழுத்தாளருமான ஆச்சாரியா திருமலா ராமச்சந்திரா என்பவர், 'மாமன்னர் திருமலை நாயக்கர்' 'கம்ம' இனத்தைச் சேர்ந்தவர் என்பதை சான்றுடன் விளக்கியுள்ளார்.[சான்று தேவை] மேலும் 'பெனுகொண்டா சரித்திரத்தில்' மதுரை நாயக்கர்களின் குடும்ப பெயர் 'பெம்மசானி' என குறிப்பிடப்பட்டுள்ளது. அப்பெயர் கம்ம இனத்திற்கு மட்டுமே உரிய பெயராகும். தமிழகவாழ் கம்ம நாயக்கர்களின் வரலாறும் மதுரை நாயக்கர்களே இன்றைய கம்மவார்களின் முன்னோர்கள் எனத் தெளிவாகக் கூறுகின்றன. அவர் நெற்றியில் நாமம் அணியும் வழக்கம் கொண்டவர், வைணவத்தில் நாட்டம் கொண்டவர். மேலும், இராணி மங்கம்மாளின் பெயரை பெரும்பாலும் இன்று வரையில் சூட்டிமகிழும் ஒரே இனம் கம்ம இனம். மேலும், 'பாரதி' எனப்படும் பத்திரிக்கையிலும் 'கம்ம' இனத்தவர்கள் என சுட்டியுள்ளனர். இவை, மதுரை நாயக்கர்கள் கம்மவார்கள் என காட்டுகிறது. ஆயினும், க.அ நீலகண்ட சாஸ்திரி மதுரை நாயக்கர்களின் குலப்பெயர் 'பலிஜா' இனத்திலுள்ள 'கரிகப்பட்டி' என்று குறிப்பிட்டுள்ளார். அந்த குலப்பெயர் 'கம்ம' இனத்திலும் அதிகப்படியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் எழுத்தாளர்களான 'அ.கி பரந்தாமனார்' மற்றும் 'சு. வெங்கடேசன்' முதலானோர் மதுரை நாயக்கர்களை 'தொட்டிய/ராஜகம்பள' நாயக்கர்களாக காட்டியுள்ளனர். அந்த சமூகத்தினர் 'யாதவர்' எனப்படும் 'சந்திரவன்ஷி க்ஷத்ரிய' வம்சத்தவரின் கிளைசாதியினர் என்று 'எட்கர் தர்ஸ்டன்' எனப்படும் ஆங்கிலேயர் தனது 'தென்னிந்திய நாட்டின் சாதிகள் மற்றும் பழங்குடியினர்கள்' என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார். கம்பளத்தார்கள் 'பலிஜா' (க்ஷத்ரியர் அல்லாத) இனத்தின் கிளைசாதியினர் என்று சிலர் பதிவேற்றுகின்றனர். தஞ்சை நாயக்கர்களின் குலப்பெயர் 'அல்லுரி' என்பதாகும். அப்பெயர் 'பலிஜா' உள்ளிட்ட வெவ்வேறு சாதிகளுக்கும் வீட்டுபெயராகத் திகழ்கிறது. இவை அனைத்தும் ஒன்றுக்கொன்று முரண்களாய் உள்ளன.[
மதுரை நாயக்கர்களின் பட்டியல்[தொகு]
விசுவநாத நாயக்கர் (1529 - 1564)
முதலாம் கிருஷ்ணப்ப நாயக்கர் (1564 - 1572)
வீரப்ப நாயக்கர் (1572 - 1595)
இரண்டாம் கிருஷ்ணப்ப நாயக்கர் (1595 - 1601)
முத்துக் கிருஷ்ணப்ப நாயக்கர் (1601 - 1609 )
முதலாம் முத்துவீரப்ப நாயக்கர் (1609 - 1623)
திருமலை நாயக்கர் (1623 - 1659)
இரண்டாம் முத்துவீரப்ப நாயக்கர் (1659 - 1659)
சொக்கநாத நாயக்கர் (1659 - 1682)
அரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கர் (1682 - 1689)
இராணி மங்கம்மாள் (பகர ஆளுனர்) (1689 - 1704)
விஜயரங்க சொக்கநாத நாயக்கர் (1704 - 1732)
இராணி மீனாட்சி (1732 - 1736)
முதலாம் கிருஷ்ணப்ப நாயக்கர் (1564 - 1572)
வீரப்ப நாயக்கர் (1572 - 1595)
இரண்டாம் கிருஷ்ணப்ப நாயக்கர் (1595 - 1601)
முத்துக் கிருஷ்ணப்ப நாயக்கர் (1601 - 1609 )
முதலாம் முத்துவீரப்ப நாயக்கர் (1609 - 1623)
திருமலை நாயக்கர் (1623 - 1659)
இரண்டாம் முத்துவீரப்ப நாயக்கர் (1659 - 1659)
சொக்கநாத நாயக்கர் (1659 - 1682)
அரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கர் (1682 - 1689)
இராணி மங்கம்மாள் (பகர ஆளுனர்) (1689 - 1704)
விஜயரங்க சொக்கநாத நாயக்கர் (1704 - 1732)
இராணி மீனாட்சி (1732 - 1736)
படைமுதலி பட்டம்[தொகு]
பீஜப்பூர் சுல்தான் விஜயநகரப் பேரரசின் மீது படையெடுத்து வந்தான். போர்க்களத்தில் சல்மத்கான் என்பவன் கிருஷ்ணதேவராயரை குறிவைத்து தாக்க அவரை நெருங்கியபோது, அரியநாதர் அந்த வீரனுடன் யுத்தம் செய்து அவனை அவனது படையோடு துரத்தி அடித்து, தம் மன்னர்தான் வெற்றிவாகை சூடப் பேருதவியாக விளங்கினார்.
அரியநாதரின் இந்த செயலை மன்னர் பாராட்டி, அவருக்கு படைமுதலி என்னும் பட்டத்தைத் தந்து, அவரைப் படைத் தளபதியாக்கி அமைச்சருக்கு உரிய தகுதியையும் வழங்கினார். அன்றைய நாள் முதலாக அரியநாதர் தளவாய் அரியநாத முதலியார் என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்பட்டதோடு, அவரது வழிவந்த மரபின் மக்களும் தம் இயற்பெயரோடு முதலியார் என்னும் அப் பட்டப்பெயரையும் இணைத்துக்கொள்ள, அந்த விருதுப்பெயர் காலப்போக்கில் இனப்பெயராக வழங்கப்பட்டு வருகிறது[8] .
தளவாய் அரியநாத முதலியார், விசயநகர முன்னாள் அரசப் பிரதிநிதியும் (வைஸ்ராய்) மற்றும் பின்னாள் ஆட்சியாளருமான விசுவநாத நாயக்கர் (1529–1564 ) ஏற்படுத்திய, மதுரை நாயக்க மன்னர்கள் அரசில் பணியாற்றிய வெள்ளாள தளவாயும் முதலமைச்சருமாவார்[1][2][3].
இவர் பகுதியளவில் நிலமானிய முறை அமைப்பை (quasi-feudal organization of regions) நாட்டின் பாளையங்களில் பாளையக்காரர் முறை (poligar or the palayakkarar system) என்ற பெயரில் நிறுவினார். இந்த அமைப்பில் நாட்டின் பகுதிகள் பாளையங்களாகப் (palayams) (சிறு இளவரசாட்சிகள்) (small principalities) பிரிக்கப்பட்டு பாளையக்காரர்களின் (குறுநில முதன்மையர்கள்) (petty chiefs) ஆளுகையில் நிர்வாகிக்கப்பட்டன[4]..
இவர் பாண்டிய நாட்டை 72 பாளையங்களாகப் பிரித்தார். இப்பாளையம் ஒவ்வொன்றும் ஒரு படைநிலை ஆகும். இவ்வாறு பிரிக்கப்பட்ட பாளையங்களை 72 பாளையக்காரர்கள் 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆண்டனர்[2][4].
பாளையங்களின் பெயர்ப் பட்டியல்[தொகு]
அம்மையநாயக்கனூர்
அத்திப்பட்டி
அழகாபுரி
ஆய்க்குடி
ஆற்றங்கரை
இளசை
இரசக்கயனூர்
இலக்கையனூர்
இடையக்கோட்டை
இராமகரி
உதயப்பனூர்
ஊற்றுமலை
ஊர்க்காடு
எட்டையபுரம்
ஏழுமலை
ஏழாயிரம்பண்ணை
கடலூர்
கல்போது
கன்னிவாடி
கம்பம்
கண்டமனூர்
கவுண்டன்பட்டி
கடம்பூர்
காமநாயக்கனூர்
காடல்குடி
காசையூர்
குமரவாடி
குளத்தூர்
குருவிகுளம்
கூடலூர்
கொல்லப்பட்டி
கொல்லங்கொண்டான்
கோலார்பட்டி
கோட்டையூர்
கோம்பை
சந்தையுர்
சக்கந்தி
சமுத்தூர்
சேத்தூர்
சிவகிரி
சிங்கம்பட்டி
சுரண்டை
சொக்கம்பட்டி
தலைவன்கோட்டை
தேவாரம்
தொட்டப்பநாயக்கனூர்
தோகைமலை
தும்பிச்சிநாயக்கனூர்
படமாத்தூர்
பாஞ்சாலங்குறிச்சி
பாவாலி
பெரியகுளம்
போடிநாயக்கனூர்
ரோசலைப்பட்டி
வடகரை
வாராப்பூர்
விருப்பாட்சி
வெள்ளிக்குன்றம்
விரமலை
நத்தம்
நடுவக்குறிச்சி
நாகலாபுரம்
நிலக்கோட்டை
நெற்கட்டும் செவல்
மணியாச்சி
மருங்காபுரி
மன்னார்கோட்டை
மலைப்பட்டி
மருதவானையூர்
முதுவார்பட்டி
முல்லையூர்
மேல்மாந்தை
அம்மையநாயக்கனூர்
அத்திப்பட்டி
அழகாபுரி
ஆய்க்குடி
ஆற்றங்கரை
இளசை
இரசக்கயனூர்
இலக்கையனூர்
இடையக்கோட்டை
இராமகரி
உதயப்பனூர்
ஊற்றுமலை
ஊர்க்காடு
எட்டையபுரம்
ஏழுமலை
ஏழாயிரம்பண்ணை
கடலூர்
கல்போது
கன்னிவாடி
கம்பம்
கண்டமனூர்
கவுண்டன்பட்டி
கடம்பூர்
காமநாயக்கனூர்
காடல்குடி
காசையூர்
குமரவாடி
குளத்தூர்
குருவிகுளம்
கூடலூர்
கொல்லப்பட்டி
கொல்லங்கொண்டான்
கோலார்பட்டி
கோட்டையூர்
கோம்பை
சந்தையுர்
சக்கந்தி
சமுத்தூர்
சேத்தூர்
சிவகிரி
சிங்கம்பட்டி
சுரண்டை
சொக்கம்பட்டி
தலைவன்கோட்டை
தேவாரம்
தொட்டப்பநாயக்கனூர்
தோகைமலை
தும்பிச்சிநாயக்கனூர்
படமாத்தூர்
பாஞ்சாலங்குறிச்சி
பாவாலி
பெரியகுளம்
போடிநாயக்கனூர்
ரோசலைப்பட்டி
வடகரை
வாராப்பூர்
விருப்பாட்சி
வெள்ளிக்குன்றம்
விரமலை
நத்தம்
நடுவக்குறிச்சி
நாகலாபுரம்
நிலக்கோட்டை
நெற்கட்டும் செவல்
மணியாச்சி
மருங்காபுரி
மன்னார்கோட்டை
மலைப்பட்டி
மருதவானையூர்
முதுவார்பட்டி
முல்லையூர்
மேல்மாந்தை
No comments:
Post a Comment