MOHAMED NABI PROPHETமுகமது நபியின் வாழ்கை வரலாறு / ஆற்றிய உரை


MOHAMED NABI PROPHET
முகமது நபியின் வாழ்கை வரலாறு / ஆற்றிய உரை 


முகம்மது நபி மரணமடைந்தார் 8 சூன் 632
முகம்மது நபி அல்லது முகம்மது (Muḥammad, (அரபு மொழி: محمد; அண். 570 - 8 சூன் 632[1]), அராபியப் பெயர்: அபூ அல்-காசிம் முகம்மது இப்னு அப்தல்லா இப்னு அப்தல்-முத்தாலிப் இப்னு ஆசிம் (Abū al-Qāsim Muḥammad ibn ʿAbd Allāh ibn ʿAbd al-Muṭṭalib ibn Hāshim, ابو القاسم محمد ابن عبد الله ابن عبد المطلب ابن هاشم), மக்கா நகரைச் சேர்ந்தவர். இவரே அராபியத் தீபகற்பம் முழுமையும் இசுலாம் என்ற ஒரே மதத்தின் கீழ் கொண்டு வந்தவர். இவர் முஸ்லிம்களால் மட்டுமல்லாமல், பாபிஸ்துகள், மற்றும் பகாய் சமயத்தவர்களாலும் கடவுளின் திருத்தூதர் என்றும் இறைவாக்கினர் என்றும் போற்றப்படுகிறார். உலக அளவில் முசுலிம்கள் முகம்மதுவை கடவுளால் மனித உலகிற்கு அனுப்பப்பட்ட கடைசி இறைவாக்கினர் என நம்புகின்றனர்.[2]
முகம்மது நபி கிபி 570 இல் சவூதி அரேபியாவில் மக்கா நகரில் பிறந்தார்[3][4][5]. இவரது தந்தை அப்துல்லாஹ் மற்றும் தாயார் ஆமினா ஆவார்கள். சிறு வயதிலேயே பெற்றோர்களை இழந்து சிறிய தந்தை அபூ தாலிபிடம் வளர்ந்து வந்தார். இவரது 40 வது வயதில் நபித்துவம் பெற்று இறை தூதுகள் கிடைக்கத் துவங்கின. அதன் பின்னர் அவர்க வாழ்ந்த மிகக் குறுகிய காலமாகிய 23 ஆண்டுகளிலேயே வியத்தகு மாற்றங்களை நிகழ்த்திக் காட்டினார்.
வாழ்க்கை[தொகு]

மக்காவில் பிறந்த முகமது, தனது வாழ்நாளில் 52 வருடங்களை அங்கேயே கழித்தார். இந்த 52 வருடக்காலத்தை இரண்டு பாகங்களாக பிரிக்கின்றனர், அவை:
இறைதூது கிடைக்கும் முன் முகம்மது நபியின் வாழ்க்கை.
இறைதூதர் என தன்னை அறிவித்தப் பின்னர் முகம்மது நபியின் வாழ்க்கை.
இறைத்தூது கிடைக்கும் முன்[தொகு]
முகமது அவர்கள் கி.பி. 570 ஆண்டு பிறந்தார். அவர் இசுலாமிய நாட்காட்டியின் முன்றாவது மாதமான ரபியுல் அவ்வல்[6] மாதத்தில் பிறந்ததாக நம்பப்படுகிறது. பனு ஹாஷிம் எனும் குலத்தை சேர்ந்த மக்காவின் மிகவும் பிரபலமான குடும்பத்தில் அவர் பிறந்தார்.[3][7] . குரைஷ் எனும் பழங்குடியின மக்களின் ஒரு இனமே இந்த பானு பனு ஹாஷிம். ஆபிரகா எனும் அக்குசுமைட் மன்னன் தனது யானை பலம் பொருந்திய படையுடன் மக்காவை தாக்க முயன்று தோல்வியுற்றதனால், கி.பி 570-ஆம் வருடத்தை யானை ஆண்டு என கூறி வந்தனர். அந்த வருடத்தில் முகமது நபி பிறந்ததாக கூறப்படுகிறது. இருபதாம் நூற்றாண்டின் வல்லூனர்கள் இந்த தோல்வியுற்ற யுத்தத்ததை ஓரிரு வருடங்கள் பின்தள்ளி வைக்கின்றனர்.[8]. மேலும், சின்னம்மை தொற்றே அந்த அக்குசுமைட் படையின் தோல்விக்குக் காரணம் என்கின்றனர்[9].
திருகுர்ஆன் 105வது அத்தியாயத்தில் யானை படை அழிவைப் பற்றி கூறப்பட்டுள்ளது
முகமதின் பிறப்பிற்கு ஆறு மாதங்கள் முன்னரே அவரது தந்தை அப்துல்லா இறந்துவிட்டார்.[13]. பாலைவனமே குழந்தையின் வளர்ச்சிக்கு நல்லது என கருதி, சிறுபிள்ளையான முகம்மதை பாலைவனத்தில் உள்ள ஓர் பெதாவுன் குடும்பத்திற்கு அனுப்பி வைத்தனர்.[14]செவிலித்தாய் ஹலிமா பின்த் அபு துயப் மற்றும் அவளது கணவரின் பாதுகாப்பில் இரண்டு வயது வரை முகம்மது வளர்ந்தார். ஆனால், சில மேற்கத்திய இசுலாமிய வல்லுனர்கள் இதை மறுக்கின்றனர்.[14]ஆறு வயதில் தன்னைப் பெற்ற தாயான அமீனாவை பறிகொடுத்து அனாதையானர் முகம்மது நபி. அடுத்த இரண்டு வருடங்களுக்கு தனது தந்தை வழி தாத்தா அப்து அல்-முத்தலிப் அவர்களின் பாதுகாப்பில் வளர்ந்து வந்தார்.[15][16] . தாத்தாவின் மரணத்திற்குப்பின் பனு ஹாஷிமின் புதிய தலைவரான தனது சிறிய தந்தை அபு தாலிப் அவர்களின் மேற்பார்வையில் வளர்ந்தார். ஆறாம் நூற்றாண்டு அரபு தேசத்தில், ஒரு குலத்தின் வலுவற்றவர்கள் நன்கு கவனிக்கப்படவில்லை என இசுலாமிய வரலாற்று எழுத்தாளரான வில்லியம் மோன்ட்கோமேரி வாட் கருதுகிறார். அவர் எழுதுகையில், 'சிறுவனான முகம்மது சாகாமல் இருக்க மட்டுமே உணவு அளித்து வந்தனர் காப்பாளர்கள், ஏனெனில் அப்பொழுது பனு ஹாஷிம் குலம் வறுமையில் வாடிக்கொண்டிருந்தது'[17].
பதினம் வயதில் முகம்மது, அவரது சிறிய தந்தையுடன் சிரியா தேசத்திற்கு வணிகம் செய்ய ஒத்தாசையாகச் சென்றுள்ளார்[15][17]. இசுலாமிய வல்லுநர்கள் இந்த நிகழ்வு முகம்மது அவர்களின் ஒன்பதாவது அல்லது பன்னிரெண்டாவது வயதில் நிகழ்ந்ததாகக் கருதுகின்றனர். மேலும், இது போன்ற ஓர் வணிகப் பயணத்தின் பொழுது, பஹிரா எனும் கிறிஸ்த்துவ துறவியை முகம்மது சந்தித்துள்ளார். அந்த துறவி முகம்மது இறைதூதராக வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளார்[18].
முகம்மதின் இளைய வயதை பற்றி தெளிவான வரலாற்றுச் சான்றுகள் இல்லை. மேலும், சில நிகழ்வுகள் வரலாறா அல்லது கதையா என முடிவு செய்ய இயலவில்லை[15][17]. முகமது அவர்கள் ஓர் வணிகராக பணிப்புரிந்துள்ளார். நடுநிலக் கடல் மற்றும் இந்திய பெருங்கடல் இடையே நடந்த வணிகத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்[19]. அவரது நேர்மையை பாராட்டி, அவருக்கு அல்-அமீன் என்ற பட்டப்பெயர் சூட்டப்பட்டது[20]. முகமதுவை 'பேதமற்ற நடுவர்' என அக்காலத்தில் அவரை பலர் நாடியுள்ளனர்.[5][3][21]. அவரது இந்த புகழால் 595-ஆம் ஆண்டில் கதீஜா எனும் நாற்பது வயது விதவை பெண் அவரை திருமணம் செய்ய விரும்பினார். முகம்மது கதீஜாவை மணம் முடித்த பின் வாழ்க்கை சந்தோஷமாக இருந்ததாக கூறப்படுகிறது[15][19].
வரலாற்றாசிரியர் இப்னு இஷாக் அவர்கள் விவரிக்கையில், கிபி 605 ஆம் ஆண்டு காபாவில் கல் பதிப்பு நிகழ்வில் முகம்மது அவர்களின் பங்கு இருப்பதாகக் கூறுகிறார். காபாவில் சீரமைப்பு பணிகள் நடைபெறும் பொருட்டு அதில் இருந்த புனித கருப்புக் கல் அகற்றப்பட்டது. ஆனால், அந்த கல்லை திரும்ப அதே இடத்தில் எந்த குலத்தை சேர்ந்தவர் நிறுவுவது என்பதில் மக்காவின் தலைவர்கள் மத்தியில் சமரசம் எட்டப்படாமல் போனது. அவ்வழியே யார் அடுத்து வருகிறார்களோ, அவரே அத்திருப்பணியை செய்யத் தகுதியானவர் என்று முடிவு செய்தனர். அப்பொழுது அவ்வழியே முகம்மது நபி வந்துக் கொண்டிருந்தார். அவர் ஒரு துணியில் அந்த கருப்பு கல்லை தாங்கி, மற்றவர் உதவியுடன் அதனை காபாவிற்கு எடுத்து சென்று, முகமது அவர்கள் அக்கல்லை காபாவில் திரும்ப நிறுவினார்[22].
இறைத்தூது கிடைத்த ஆரம்ப காலங்கள்.[தொகு]

ஜபல் அல்-நூர் எனும் மலையில் அமைந்துள்ள ஹிரா எனும் குகையில் தான் முகம்மதுக்கு குரான் ஓதப்பட்டதாக இசுலாமிய வரலாறு கூறுகிறது.
மக்காவில் உள்ள ஹிரா எனும் மலைக் குகையில், முகம்மது அவர்கள் வருடத்தின் பெரும் வாரங்களை, பிரார்த்தனை செய்து கழிப்பது வழக்கம்[23][24].கிபி 610-ஆம் வருடம், இதேப்போல் முகமது அம்மலைக்குச் சென்றபோது, கபிரியேல் எனும் இறைத்தூதர் அவருக்கு சில வாக்கியங்களை கூறி ஒப்பிக்க சொன்னதாகவும், பின் அதுவே குரானில் இடம்பெற்றதாகவும் இசுலாமிய வரலாறு கூறுகிறது[25]. காப்ரியல் முதலாவதாகத் தோன்றியப்பின், முகமது பெரும் துயரத்திற்கு ஆளானார். வீடு திரும்பிய முகமதுவை அவரது மனைவி கதீஜா மற்றும் அவரது கிறிஸ்த்துவ நண்பரான வரக்கா இப்னு நஃபல்[26] இருவரும் ஆறுதல் படுத்தினர். காப்ரியல் தோன்றியதை கண்டு முகம்மது அஞ்சவில்லை என்றும், மேலும் அவர் அந்த நிகழ்வை முன்பே அறிந்ததுபோல அந்த தூதரை வரவேற்றதாகவும் ஷியா வரலாறு கூறுகிறது[27]. கப்ரியலின் முதல் தோற்றத்திற்கு பின்பு மூன்று வருடங்களுக்கு மறுதோற்றம் நடக்கவில்லை, இந்த காலக்கட்டத்தை ஃபத்ரா என்கின்றனர். இக்காலக்கட்டத்தில் முகமது தொழுதல் மற்றும் ஆன்மீகத்தில் ஈடுப்பட்டு வந்தார். காப்ரியலின் மறுதோன்றாலுக்குப் பின் இயல்பு நிலைக்கு திரும்பினார் முகமது. கப்ரியல் அவரை பார்த்து "உம்முடைய இறைவன் உம்மைக் கை விடவுமில்லை; அவன் (உம்மை) வெறுக்கவுமில்லை[28][29][30]." எனக்கூறி மதபோதகம் செய்யச் சொல்லி தூதர் அறிவுறுத்தினார்.
"மணியடிப்பதுப்போல வாசகங்கள் தோன்றின" என முகமது கூறியதாக புகாரி ஹதீஸ் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. "ஒவ்வொரு தெய்வ வாசகம் தோன்றிய பிறகு, நபிகளின் நெற்றியில் வியர்வை துளிகள் தோன்றும்" என்று அவரது மனைவி ஆயிஷா கூறினார். தனது யோசனைகளையும் தெய்வ வாக்குகளையும் பிரிக்கும் திறன் தமக்கு இருந்ததாக முகம்மது அவர்களே நம்பிக்கைக் கொண்டார். குர்ஆனின்படி, உலகின் இறுதிகால தண்டனைகளை பற்றி இறைநம்பிக்கை இல்லாதவர்களுக்கு எடுத்து கூறவே முகம்மது இறைத்தூதராக வந்ததாகக் கருதப்படுகிறது. சில இடங்களில், குரான் தீர்ப்பு நாளைப் பற்றி நேரடியாகச் சொல்லாதபோதும், முன்னர் அங்கு இருந்த சமூகங்களின் அழிவை எடுத்துக்காட்டி, முகம்மது காலத்தில் வாழ்ந்தவர்களை எச்சரிக்கிறது. கடவுளின் வாசகங்களை ஏற்றுக்கொள்ளாதவர்களை எச்சரிப்பதோடு நில்லாமல், தீயவைகளை துறப்பவர்களுக்கும், தெய்வீக வாசகங்களை கேட்பவர்களுக்கும், கடவுளுக்கு சேவகம் செய்பவர்களுக்கும் நற்செய்தி கூறினார். ஓரிறைவாதமே முகமதின் முக்கியப் பணியாகக் கருதப்படுகிறது. அல்லாஹ்வின் பெயரை அறிவிக்கவும் மற்றும் புகழவும் மற்றும் சிலைகளை வழிப்படுதல் அல்லது வேறுக்கடவுளுடன் அல்லாஹ்வை ஒப்பிடுதளையும் தவிர்க்குமாறு குரான் முகம்மது அவர்களுக்கு கட்டளை இடுகிறது.
தன்னைப் படைத்தவரிடம் காட்டவேண்டிய பொறுப்புகள், இறந்தவர்களை உயிர்ப்பித்தல், இறைவனின் கடைசி தீர்ப்பு மற்றும் அதனை தொடர்ந்து சொர்க்கம் மற்றும் நரகத்தை பற்றிய விரிவான விளக்கங்கள் மற்றும் வாழ்க்கையின் அத்தனைக் கோணங்களிலும் கடவுளின் அறிகுறிகள் என பல்வேறு விஷயங்கள் குரானின் முதல் வரிகளில் அடங்கியுள்ளன. இறைநம்பிக்கை, பாவமன்னிப்பு கோருதல், தொழுதல், உதவி புரிதல், பிறரை ஏமாற்றாமல் இருத்தல் மற்றும் செல்வத்தில் நாட்டம் இல்லாமல் இருத்தல், கற்பு மற்றும் பெண்சிசுவதைக்குத் தடை என இசுலாமியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.[3]
முகமதுநபி(ஸல்) திருமணம் செய்த
10 பெண்கள்[தொகு]

கதிஜா
சௌதா பிந்த் சமா
ஆயிஷா
ஹவ்சா பிந்த் உமர்
சைனாப் பிந்த் குசைமா
உம் சலாமா ஹிந்த் பிந்த் அபி உமயா
யுவேரியா பிந்த் ஹரித்
உம் ஹபிபா ரம்லா
சபியா பிந்த் ஹீயாய்
மைமுனா பிந்த் அல் ஹரித்
எதிர்ப்பு[தொகு]

இசுலாமிய வரலாற்றுப்படி, முகம்மது நபியை இறைத்தூதர் என அவரது மனைவி கதீஜா தான் முதலில் நம்பினார்[31]. கதீஜாவை தொடர்ந்து முகம்மது நபியின் சிறிய தந்தை மகன் அலி இப்னு அபி தலிப், நெருங்கிய நண்பரான அபு பக்கர் மற்றும் வளர்ப்பு மகன் சையித் அவரை நபிகளாக கருத ஆரம்பித்தனர்[31]. கிபி 613-ஆம் வருடத்தில், முகமது பொதுமக்களுக்கு போதனை புரிய ஆரம்பித்தார்(Quran 26:214).[32]. மெக்காவை சேர்ந்த பலர் அவரை புறக்கணித்தனர் மற்றும் கேலி செய்தனர் எனினும், சிலர் அவரை பின்பற்ற ஆரம்பித்தனர். பெரிய வணிகர்களின் தம்பிகள் மற்றும் மகன்கள், குலத்தில் பெரும் பதவியை பறிகொடுத்தவர்கள் மற்றும் அடைய முடியாதோர் மற்றும் நலிந்த அயல்நாட்டினர் - என மூன்று வகையானவர்களே இசுலாத்தில் முதலில் இணைந்தனர்[33].
சிலை வழிபாடு மற்றும் பல இறைக்கொள்கை பின்பற்றிய மக்காவின் முன்னோரை முகம்மது நபி கண்டித்ததை தொடர்ந்து அவருக்கு எதிர்ப்பு கிளம்பியதாக இப்னு சையிது கூறுகிறார்[34]. ஆயினும், அவருக்கு எதிர்ப்பு ஆரம்பித்ததற்கான காரணம் அவரது பொது போதனை என குரானிய விளக்கங்களில் கூறப்படுகிறது[35].அந்நகரை ஆள்பவர்கள் மற்றும் குலங்களுக்கு, அவர்களின் பிடியில் இருந்த செல்வமதிப்புள்ள காபா மற்றும் அதனை சுற்றி அமைந்த முந்தைய மதத்தை, பலர் பின்பற்றும் முகம்மது நபி எதிர்க்கிறார் என்பது அச்சுறுத்தலாக தெரிந்தது.மக்காவின் முந்தைய மதத்தை முகம்மது நபி கண்டிப்பதை, அவரது குலமான குரைஷ்க்கு பிடிக்கவில்லை. காரணம், அவர்கள் தான் காபாவின் காப்பாளர்களாக இருந்து வந்தவர்கள்[33].வணிகர்கள் மத்தியில் பெரும்பதவி மற்றும் திருமணம் மூலம் முகம்மது நபியைத் தடுத்து நிறுத்த சில செல்வந்தர்கள் முயன்றனர், எனினும் அவ்விரண்டையும் முகம்மது நபி மறுத்தார்[33].
முகம்மது நபி மற்றும் அவரை பின்பற்றியவர்களை பலர் துன்புறுத்தினர். அபு ஜஹ்ல் எனும் மக்காவின் தலைவரின் அடிமையான சுமையா பின்த் கபாப் எனும் பெண் தான் இசுலாத்தின் முதல் தியாகி ஆவார். இசுலாத்தைத் துறக்கக் கூறி அவளை ஈட்டியால் குத்திக் கொன்றனர். இசுலாத்தில் இருந்து மதம் மாற வற்புறுத்தி வேறொரு அடிமையான பிலால் இப்னு ரிபாவின் மார்பில் கல்லை வைத்துக் கொடுமை படுத்தினார் உமையா இப்னு கலப். முகம்மது நபி பானு ஹஷிம் இனத்தை சேர்ந்ததனால், அவருக்கு யாரும் தீங்கு இழைக்கவில்லை
கிபி 615-ஆம் ஆண்டில் முகம்மது நபியைப் பின்பற்றிய சிலர் எத்தியோபியாவின் அக்குசுமைட் பேரரசிற்குப் புலம்ப்ப்பெயர்ந்தனர். அங்கே, எத்தியோபியாவின் கிறிஸ்த்துவ பேரரசர் ஆஷாமா இப்னு அப்ஜர் பாதுகாப்பில் ஓர் சிறிய குடியிருப்பை உருவாக்கினர். இவ்வாறு இருவேறு புலம்பெயர்தலை இப்னு சாத் கூறுகிறார். அவர் கூறுகையில், ஹிஜ்ராவிற்கு முன்னாரே அதில் பல இசுலாமியர்கள் மக்காவிற்குத் திரும்பியதாகவும், மற்றும் அடுத்த குழு இவர்களை மதினாவில் சேர்ந்தனர். எனினும், இப்னு ஹிஷாம் மற்றும் தபரி எத்தியோபியாவிற்கு ஒரே புலம்பெயர்தல் நடைபெற்றதாகக் கூறுகின்றனர். மக்காவில் இசுலாமியர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளே, தன்னை பின்பற்றுபவர்களை அபிசீனியாவில் உள்ள கிறிஸ்த்துவர்கள் மத்தியில் குடியேறும் முடிவை முகமது எடுத்திருக்கலாம் என்பதும், இவர்களின் கூறுதல்களும் ஒற்று போகின்றன.
அல்-தபாரியில் பாதுகாக்கப்பட்ட உர்வாவின் கடிதத்தின்படி, மக்காவில் உமர் மற்றும் ஹம்ஸா இஸ்லாத்திற்கு மதம் மாறியப்பின், பல இசுலாமியர்கள் தங்களின் சொந்த ஊரிற்குத் திரும்ப தொடங்கினர். இருப்பினும், இசுலாமியர்கள் எதியோப்பியாவிலிருந்து மக்கா திரும்பியதற்கு வேறொரு காரணமும் இருக்கிறது. இந்த காரணத்தை அல்-வகிடி, இப்னு சாத் மற்றும் தபரி கூறுகின்றனர், ஆனால், இப்னு ஹிஷம் மற்றும் இப்னு இஷாக் கூறவில்லை[36]. தனது பிறப்பு குலத்துடன் ஒன்றிணைய முகம்மது அவர்கள், அல்லாவின் புதல்விகள் என கருதப்பட்ட மூன்று மக்காவின் பெண் கடவுள்களை பற்றிய வரிகளை கூறுகிறார். மறுநாளே, கப்ரியலின் வற்புறுத்தலின் காரணமாக, சாத்தான் அந்த வரியை தனக்கு ஓதியதாக கூறி, அந்த வரியை பின்வாங்குகிறார். [37][n 1]இந்த ஒரு நாள் வழுவை தவிர்த்து, குரான் வேறு எங்கும் புறச்சமயம் மீது கருணை காட்டவில்லை. இந்த வரியும் அப்புத்தகத்தில் இருந்து நீக்கப்பட்டது." [38] இந்த "நாரைகளின் கதை"(மொழிபெயர்ப்பு: قصة الغرانيق, Qissat al Gharaneeq) எனும் நிகழ்வு தான் "சாத்தானிக் வெர்சஸ்" என்று அறியப்படுகிறது. இந்த கதையின்ப்படி, இது முகம்மது நபி மற்றும் மக்காவினர் மத்தியில் இணக்கம் ஏற்பட வழிவகுத்தது, மற்றும் அபிசீனியா சென்ற இசுலாமியர்கள் வீடு திரும்ப வழி வகுத்தது. அவர்கள் வீடு திரும்பிய சமயம், இந்த இரண்டு காராணிக் வரிகளும் அல்லா கூறியதல்ல என்றும், சாத்தானின் சதிவேலை என்றும் தேவதூதன் கப்ரியல் முகமது அவர்களுக்கு அறிவித்தார்.
குறிப்பிடத்தக்க சமகால அறிஞர்கள் இந்த கதை மற்றும் வரிகளை மறுத்துள்ளனர். [39][40][n 2]பின்னர், இந்த நிகழ்வுக்கு சில ஒப்புதல்கள் வரத்தொடங்கின, எனினும், 10ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர் இந்த நிகழ்விற்கு கடும் எதிர்ப்பு தொடர்கிறது. இந்த கதை மற்றும் வரிகளை எதிர்ப்பது மட்டுமே இசுலாமிய நிலை என கருதும் அளவிற்கு எதிர்ப்புகள் தொடர்கின்றன. [41]
617ஆம் ஆண்டு, மக்ஸும் மற்றும் பனு அப்து-ஷம்ஸ் எனும் இரு முக்கிய குரைஷ் குலத்தின் தலைவர்கள், தங்களது வணிகரீதியான எதிரியான பானு ஹஷிம் குலத்திற்கு எதிராகப் புறக்கணிப்பு நிகழ்த்தினர். முகமதுக்கு கொடுக்கப்பட்டு வரும் பாதுகாப்பை பானு ஹஷிம் திரும்பப் பெறவே இந்தப் புறக்கணிப்பு நிகழ்ந்தது[42][43]. இந்தப் புறக்கணிப்பு மூன்று வருடங்கள் நீடித்தது, எனினும், இதன் கொள்கையில் வெற்றிபெறாமல் சரிந்தது. இந்தக் காலக்கட்டத்தில் முகமது புனித பயண மாதங்களில் மட்டுமே அறவுரை கூற முடிந்தது. ஏனெனில், இந்த மாதங்களில் மட்டுமே அரேபியர்கள் மத்தியில் சண்டைகள் நிறுத்திவைக்க பட்டிருந்தன.[44]
இசுலாமிய வரலாற்றின்படி, "இஸ்ரா மற்றும் மிஃராஜ் பயணம்" என்றழைக்கப்பட்ட நெடு-இரவு பயணத்தை தேவதூதர் கப்ரியலுடன் முகம்மது நபி 620-ஆம் ஆண்டு நிகழ்த்தினார். அப்பயணத்தின் தொடக்கமான "இஸ்ரா"வில், "புராக்" எனும் இறக்கை முளைத்த போர்க்குதிரையில், முகம்மது நபி மக்காவிலிருந்து "தூரத்து மசூதிக்கு" (அரபு மொழியில் "மஸ்ஜிது அல்-அக்சா") பறந்தார். பின்பு, மிஃராஜ் பயணத்தில், சொர்க்கம் மற்றும் நரகம் பயணித்தார் முகம்மது. முந்தைய இறைத்தூதர்களான ஆபிரகாம், மோசஸ், மற்றும் இயேசு ஆகியோருடன் உரையாடினார். [44][46] முகமதின் வாழ்க்கை வரலாற்றை முதலில் எழுதிய இப்னு இஷாக், இந்த நிகழ்வை ஓர் ஆன்மீக அனுபவமாக வழங்கியுள்ளார். பின்வந்த அல்-தபரி மற்றும் இப்னு கதிர் போன்ற வரலாற்றாசிரியர்கள், இதனை ஓர் உடல்சார்ந்த அனுபவமாக வழங்கியுள்ளனர்[46]. மக்காவில் உள்ள ஓர் புனித இடத்திலிருந்து "அல்-பைது ல-மமூர்" எனும் காபாவின் வானுலக மாதிரிக்கு சென்ற பயணமே இஸ்ரா மற்றும் மிராஜ் என்கின்றனர் சில மேற்கத்திய அறிஞர்கள். பின்பு வந்த அறிஞர்கள் இதனை மக்காவில் இருந்து ஜெருசேலம் சென்ற பயணம் என்றே குறிப்பிடுகின்றனர்.[47]
மக்காவிலிருந்து மதீனாவில் குடியேறல்.[தொகு]

முஹம்மது நபி நபித்துவம் வழங்கப்பட்டு பதினான்காம் வருடம் இறைவனின உத்தரவுப்படி தன் உற்ற தோழர் அபூபக்கர்ருடன் மதீனாவிற்கு (ஹிஜ்ரத்) குடிபெயர்ந்து சென்றார். இந்த ஹிஜ்ரத் பயணத்தை மேற்கொண்ட கி.பி. 622ம் வருடம் இசுலாமிய நாட்காட்டியின் முதல் ஆண்டாக நிர்ணயிக்கப்பட்டது.
மதீனா வாழ்க்கை[தொகு]

முதன்மைக் கட்டுரை: முகம்மது நபியின் மதீனா வாழ்க்கை
மதீனா நகரில் அனைத்து மக்களும் முகம்மது நபியை வரவேற்றனர். முகம்மது நபி தமது ஒட்டகம் சென்று அமர்ந்த அபூ அய்யூப் அன்சாரியின் வீட்டுக்கருகிலுள்ள இடத்தில் தமது தங்குமிடத்தை அமைத்தார்.[48][49] முகம்மது நபி தமது தங்குமிடத்திற்கு அருகில் தொழுகைக்கு கட்டியப் பள்ளிவாசல் அல்-மஸ்ஜித் அந்-நபவி (முகம்மது நபி கட்டிய பள்ளிவாசல்) என்று அழைக்கப்படுகிறது. மக்காவிலிருந்து வந்த முஹாஜிர்களுக்கும் மதீனா நகர அன்சாரிகளுக்கும் சகோதரத்துவ ஒப்பந்தம் ஏற்படுத்தினார்.[50] மேலும் மதீனா யூதர்களுடன் நட்புறவு உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொண்டார்.[51]
முகம்மது நபியின் போர்கள்[தொகு]
முதன்மைக் கட்டுரை: முகம்மது நபியின் இராணுவச் செயல்பாடுகள்
மக்கா எதிரிகள் பல நிலைகளிலும் முகம்மது நபிக்குத் தொல்லைக் கொடுத்தார்கள். அவர்களைச் சமாளிக்க முகம்மது நபி பல போர்களில் ஈடுபட்டார். பதுருப் போர், உஹத் யுத்தம், கைபர் போர், அகழ்ப்போர், தபூக் போர், ஹுனைன் போர் உள்ளிட்ட பல போர்களில் முகம்மது நபி ஈடுபட்டார்.[52]
மக்கா வெற்றி[தொகு]
முகம்மது நபி ஹிஜ்ரி 8 இல் ரமலான் 17 அன்று (கி.பி.630) மக்கா நகருக்கு தமது படையினருடன் அணிவகுத்துச் சென்றார். இராணுவ சண்டை இல்லாமலேயே மக்கா நகரம் முகம்மது நபியின் வசம் வந்தது.[53][54][55]
இறுதிக் காலம்[தொகு]
இறுதி ஹஜ்[தொகு]

மக்காவில் இருந்து மதீனா வந்த பின்னர் பத்து வருடங்கள் கழித்து முகம்மது நபி தமது இறுதி ஹஜ் கடமையை மக்காவிற்கு சென்று நிறைவேற்றியப் பின்னர் மதீனா திரும்பினார்.[56] அதில் தமது இறுதிப் பேருரையை நிகழ்த்தினார்.
இறப்பு[தொகு]

தமது கடைசி ஹஜ் யாத்திரைக்கு சில மாதங்களுக்கு பிறகு, முகம்மது காய்ச்சல், தலைவலி மற்றும் பலவீனத்தால் பல நாட்கள் நோய்வாய்ப்பட்டு பாதிக்கப்பட்டார்.[57].அவர் கி.பி.632 ஆம் வருடம் ஜூன் 8 ஆம் தேதியன்று, மதினாவில் 62 அல்லது 63 வது வயதில், அவரது மனைவி ஆயிஷாவின் வீட்டில் மரணமடைந்தார்[58], அங்கேயே அடக்கம் செய்யப்பட்டார்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@



முகம்மது நபி தன் கடைசி சரித்திரம்
முக்கியத்துவம் வாய்ந்த உரை
முகம்மது நபி தன் கடைசி ஹஜ்ஜின் பொழுது மக்கா அருகில் உள்ள அரபா குன்றின் மீது நின்றவராய் அங்கு குழுமியிருந்த ஒரு இலட்சம் சஹாபாக்களைப் பார்த்து நிகழ்த்திய உரை சரித்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த உரையை முகம்மது நபி துல் ஹிஜ்ஜா 9 ஹிஜ்ரி 10 (9 மார்ச் 632) அன்று அரபா நாளில் நிகழ்த்தினார்.[1]
பேச்சின் இறுதியில் மக்களை நோக்கி இங்கு வந்திருப்பவர்கள், வராதவர்களுக்கு இந்த வழிகாட்டல்களை எடுத்துச் சொல்லட்டும்; விஷயம் சென்று சேருபவர்களில் சிலர், நேரடியாக கேட்பவரைவிட நன்கு ஆராயும் தன்மை உடையவராக இருக்கலாம்.
(ஸஹீஹுல் புகாரி 67,105,1741)
என்று கூறியதாகவும் பதியப்பட்டுள்ளது. முஹம்மத் நபியின் ஒவ்வொரு வசனங்களும் மிக நுணுக்கமாக ஆதாரபூர்வமாக களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதால் இவ்வுரையை கட்டுரை வடிவில் தொகுக்க முடியாதுள்ளது
தொடக்கவுரை.[தொகு]
மக்களே! என் பேச்சை கவனமாகக் கேளுங்கள்! இந்த ஆண்டிற்குப் பிறகு மீண்டும் இந்த இடத்தில் சந்திப்பேனா என்பது எனக்குத் தெரியாது.
(தாரீக் இப்னு கல்தூன் 2/58, இப்னு ஹிஷாம் 2/603, அர்ரஹீக் அல்மக்தூம் 461)

பிறப்பால் உயர்வு தாழ்வு காட்டாதீர்![தொகு]
மக்களே! உங்களது இறைவன் ஒருவனே; அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஒர் அரபிக்கும் ஒர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஒர் அரபி அல்லாதவருக்கும் ஒர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறை அச்சம் உள்ளவர்தான்.
(அஸ்ஸில்ஸலதுல் ஸஹீஹா2700, அத்தர்கீப் வத்தர்ஹீப், அல்பைஹகீ, தஹாவி)
தலைமைக்குக் கீழ்ப்படிவீர்![தொகு]
மக்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் கருப்பு நிற (அபிசீனிய) அடிமை ஒருவர் உங்களுக்குத் தலைவராக ஆக்கப்பட்டாலும் அவர் அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு உங்களை வழி நடத்தி அதை உங்களுக்கிடையில் நிலைநிறுத்தும் காலமெல்லாம் (அவரது சொல்லைக்) கேட்டு நடங்கள். (அவருக்குக்) கீழ்ப்படியுங்கள்!
(ஸுனன் நஸாயி 4192, ஜாமிவுத் திர்மிதி1706)
அராஜகம் செய்யாதீர்கள்![தொகு]
அறிந்து கொள்ளுங்கள்! எனக்குப் பிறகு ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக் கொள்ளும் வழிகெட்டவர்களாய் இறை நிராகரிப்பாளர்களாய் மாறி விடாதீர்கள்.
(ஸஹீஹுல் புகாரி 4403)
உங்களது இறைவனை நீங்கள் சந்திக்கும் வரை (இப்படியே வாழுங்கள்!) நீங்கள் அனைவரும் தவறாமல் அல்லாஹ்வின் முன்னிலையில் ஆஜராகப் போகிறீர்கள்! அப்போது அல்லாஹ் உங்களது செயல்களைப் பற்றி விசாரிப்பான். நான் மார்க்கத்தை உங்களுக்கு எடுத்துரைத்து விட்டேன். உங்களில் எவராவது மற்றவருடைய பொருளின் மீது பொறுப்பேற்றிருந்தால், அதை அவர் உரிய முறையில் அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்து விடட்டும்!
(ஸஹீஹ் முஸ்லிம் 2334, ஸஹீஹுல் புகாரி 67, 105, 1741, 1742)
பணியாளர்களைப் பேணுவீர்![தொகு]

மக்களே! முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்கள். உங்கள் பணியாளர்கள் விஷயத்தில் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ளுங்கள்! அவர்களை நன்றாகப் பராமரியுங்கள்! நீங்கள் உண்பதையே அவர்களுக்கும் உண்ணக் கொடுங்கள்; நீங்கள் உடுத்துவதையே அவர்களுக்கும் உடுத்தச் செய்யுங்கள்!
(தபகாத் இப்னு ஸஅது, முஹம்மது அந்நபிய்யுல் காதிம் மாஜித் அலீ கான்)
அநீதம் அழிப்பீர்![தொகு]
அறியாமைக்கால அனைத்து விவகாரங்களும் என் பாதங்களுக்குக் கீழ் புதைப்பப்பட்டு விட்டன. மேலும், இன்று வரையிலான எல்லா வட்டிக் கணக்குகளையும் ரத்துச் செய்து விட்டேன். எனினும், உங்களது மூலதனம் உங்களுக்கே உரியது.
(ஸஹீஹ் முஸ்லிம் 2334, இப்னு மாஜா 3074)
முறைதவறி நடக்காதீர்![தொகு]
அறிந்து கொள்ளுங்கள்! குழந்தை விரிப்புக்கே சொந்தமானது. (அனுமதிக்கப்பட்ட திருமண உறவுடன் இருக்கும் கணவனுக்கே குழந்தை உரியதாகும்) மணமுடித்துக் கொண்ட பிறகும் விபசாரம் செய்பவர் கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும்.எவர் தம் தந்தை அல்லாதவரை தம்முடைய தந்தையாக அழைக்கிறாரோ, எவர் தம் உரிமையாளர் அல்லாதவருடன் தம்மை இணைத்துக் கொள்கிறாரோ, அவர்கள் மீது அல்லாஹ்வுடைய, வானவர்களுடைய இன்னும், மக்கள் அனைவருடைய சாபமும் உண்டாகட்டும்! அவர்களின் கடமையான உபரியான எந்த வணக்கமும் ஏற்றுக் கொள்ளப்படாது.
(இப்னு மாஜா 2712, ஸஹீஹுல் ஜாமிஇ1789) [2]
உரிமைகளை மீறாதீர்![தொகு]
மக்களே! ஒவ்வொருவருக்கும் சொத்தில் அவரவரின் உரிமைகளை அல்லாஹ் வழங்கி இருக்கின்றான். இனி, எவரும் தமது எந்த வாரிசுக்கும் உயில் எழுதக் கூடாது.(நஸாயி 3642, ஸுனன் அபூதாவூத் 2870, 3565, தபகாத் இப்னு ஸஅது)

பெண்களை மதிப்பீர்![தொகு]
கவனியுங்கள்! பெண்கள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்; அவர்களுக்கு நன்மையே நாடுங்கள்; அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டவர்கள். அல்லாஹ்வுடைய அமானிதமாக அவர்களை நீங்கள் பெற்றுள்ளீர்கள்! எப்படி உங்கள் மனைவியர் மீது உங்களுக்கு உரிமைகள் இருக்கின்றனவோ, அதே போல் உங்கள் மனைவியருக்கும் உங்கள் மீது உரிமைகள் இருக்கின்றன. அவர்கள் உங்களுக்குச் சிறந்த முறையில் பணிவிடை ஆற்றட்டும்! அவர்களுக்குரிய கடமை என்னவென்றால், நீங்கள் எவரை விரும்ப மாட்டீர்களோ, அவரை அவர்கள் வீட்டுக்குள் அனுமதிக்காமல் இருக்கட்டும்; இன்னும், மானக்கேடான செயலைச் செய்யாமல் இருக்கட்டும்! அவர்கள் குற்றம் புரிந்தால், அவர்களைத் தண்டிக்கிற உரிமையும் உங்களுக்கு உண்டு. அது அவர்களை இலேசாக காயம்படாதபடி தண்டிப்பதாகும். அவர்களுக்கு ஒழுங்கான முறையில் உணவும் உடையும் வழங்குங்கள்; அவர்களுக்கு நன்மையை நாடுங்கள்; அவர்கள் உங்களின் உதவியாளர்களாகவும் உங்களைச் சார்ந்தவர்களாகவும் இருக்கிறார்கள். அல்லாஹ்வின் பெயரை முன்மொழிந்தே நீங்கள் அவர்களுடன் மணவாழ்க்கை மேற்கொண்டுள்ளீர்கள்!
(ஸஹீஹ் முஸ்லிம் 2334, ஸஹீஹ் ஜாமிஇ 7880)
இரண்டைப் பின்பற்றுவீர்![தொகு]
மக்களே! சிந்தித்துப் புரிந்து கொள்ளுங்கள்; எனது பேச்சை கவனமாக கேட்டுக் கொள்ளுங்கள். நான் எனது பிரசாரத்தை உங்களுக்கு எடுத்துரைத்து விட்டேன். உங்களிடையே அல்லாஹ்வின் வேதத்தை(யும் அவனது தூதரின் வழிமுறையும்) விட்டுச் செல்கிறேன். நீங்கள் அவற்றைப் பின்பற்றினால், ஒருபோதும் வழிகெட மாட்டீர்கள்!
(ஸஹீஹ் முஸ்லிம் 2334, இப்னு மாஜா 3074) (முஅத்தா இமாம் மாலிக்/மிஷ்காத்182. ஸஹீஹுத் தர்கீப் 40.)
எச்சரிக்கையாக இருப்பீர்![தொகு]
மக்களே! உங்களது இந்த நகரத்தில், தான் வணங்கப்படுவதைப் பற்றி ஷைத்தான் நம்பிக்கை இழந்து விட்டான். ஆனாலும், அவன் மகிழ்ச்சியுறும் விதமாய் நீங்கள் அற்பமாக கருதும் சில விஷயங்களில் அவனுக்கு நீங்கள் கீழ்ப்படிவீர்கள். ஆகவே, உங்களது மார்க்க விஷயத்தில் அவனிடம் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்!
(பிக்ஹு சூரா456. ஸஹீஹ் ஜாமிஇ 7880/முஸ்தத்ரகுல் ஹாகிம். ஸஹீஹுத் தர்கீப் 40)
இன்னும், (மகா பொய்யன்) தஜ்ஜாலைப் பற்றியும் உங்களுக்கு எச்சரிக்கிறேன். அல்லாஹ் அனுப்பிய எந்த இறைத்தூதரும் (அவனைப் பற்றித்) தம் சமுதாயத்தாரை எச்சரிக்காமல் இருந்ததில்லை. (இறைத் தூதர்) நூஹ் அவர்கள் (தம் சமுதாயத்தாருக்கு) அவனைப் பற்றி எச்சரித்தார்கள். அவர்களுக்குப் பின்னால் வருகை தந்த இறைத்தூதர்களும் எச்சரித்தார்கள். மேலும், (என் சமுதாயத்தினரான) உங்களிடையேதான் (இறுதிக் காலத்தில்) அவன் தோன்றுவான். அவனது (அடையாளத்) தன்மைகளில் எதேனும் சில உங்களுக்குப் புலப்படாமல் போனாலும், நிச்சயமாக உங்களுடைய இறைவன் உங்களுக்குத் தெரியாதவனல்லன் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும்! உங்கள் இறைவன் ஒற்றைக் கண்ணன் அல்லன். அவனோ, (தஜ்ஜாலோ) வலது கண் குருடானவன். அவனது கண் (ஒரே குலையில்) துருத்திக் கொண்டிருக்கும் திராட்சை போன்று இருக்கும்.
(ஸஹீஹ்ல் புகாரி 4402)
சொர்க்கம் செல்ல வழி![தொகு]

மக்களே! உங்கள் இறைவனையே வணங்குங்கள்; உங்கள் இறைவனுக்கே பயந்து கொள்ளுங்கள்; கடமையான ஐவேளைத் தொழுகைகளையும் தவறாது பேணுங்கள்; (ரமழானில்) நோன்பு நோற்று வாருங்கள்; விருப்பமுடன் ஸகாத் கொடுத்து விடுங்கள்; அல்லாஹ்வின் இல்லத்தை ஹஜ் செய்யுங்கள்; உங்களில் அதிகாரம் உடையோருக்குக் கட்டுப்பட்டு நடங்கள்; நீங்கள் சொர்க்கம் செல்வீர்கள்!.
(ஜாமிவுத் திர்மிதி616, ஸஹீஹுத் திர்மிதி516, மிஷ்காத் 576, முஸ்னத் அஹ்மத், தாரீக் இப்னு ஜரீர், தாரீக் இப்னு அஸப்கிர், மஆதினுல் அஃமால் 1108,1109)
குற்றவாளியே தண்டிக்கபடுவார்![தொகு]
ஒருவர் குற்றம் செய்தால் அதற்கான தண்டனை அவருக்கே கொடுப்படும்; மகனுடைய குற்றத்திற்காக தந்தையோ, தந்தையின் குற்றத்திற்காக மகனோ தண்டிக்கப்பட மாட்டார்.
(ஸஹீஹுல் ஜாமிஇ 7880, ஜாமிவுத் திர்மிதி2159,3078, ஸஹீஹுத் திர்மிதி373,461, ஸுனன் இப்னு மாஜா 3055, ஸஹீஹ் இப்னு மாஜா 1015.)
மக்களே! எனக்குப்பின் எந்த ஒர் இறைத்தூதரும் இல்லை; உங்களுக்குப்பின் எந்த ஒரு சமுதாயமும் இல்லை. ( ளிலாலுஸ் ஜன்னா 1061)
இஸ்லாம் முழுமையாகி விட்டது![தொகு]
இறுதியில் மக்களை நோக்கி, மறுமை நாளில் உங்களிடம் என்னைப் பற்றி விசாரிக்கப்படும்போது நீங்கள் என்ன சொல்வீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், "நீங்கள் (மார்க்க போதனைகள் அனைத்தையும் எங்களிடம்) தெரிவித்து விட்டீர்கள்; (உங்களது தூதுத்துவப் பொறுப்பை) நீங்கள் நிறைவேற்றி விட்டீர்கள்; (சமுதாயத்திற்கு) நன்மையை நாடினீர்கள் என நாங்கள் சாட்சியம் அளிப்போம் என்றார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் அவர்கள், தமது ஆட்காட்டி விரலை வானை நோக்கி உயர்த்தி சைகை செய்துவிட்டுப் பிறகு, அதை மக்களை நோக்கித் தாழ்த்தி "இறைவா! இதற்கு நீயே சாட்சி! இறைவா! இதற்கு நீயே சாட்சி! இறைவா! இதற்கு நீயே சாட்சி! என்று முடித்தார்கள்.
(ஸஹீஹ் முஸ்லிம் 2334)
இறுதி இறை வசனம்.[தொகு]

இவ்வாறு அவர்கள் கூறிய அதே இடத்தில் அல்லாஹ்வின் புறத்திலிருந்து கீழ் வருமாறு இறைவசனம் இறங்கியது:
"இன்றைய தினம் உங்களுக்காக உங்களுடைய மார்க்கத்தை முழுமையாக்கி விட்டேன்; மேலும், நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும், உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே தேர்ந்தெடுத்துக் கொண்டேன். (அங்கீகரித்துக் கொண்டேன்.) (அல்குர்அன் 5:3)
ஸஹீஹ்ல புகாரி 4406, 4407, முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா, தாரீக் இப்னு ஜரீர், தாரீக் இப்னு கஸீர், அத்துர்ருல் மன்ஸுர்)

Comments

Popular posts from this blog

DACOITS OF CHAMBAL

List of Muhammad's Wives and Concubines

MAHARANI SITADEVI OF BARODA the "Indian Wallis Simpson" INTERESTING LIFE STORY OF HER