Showing posts with label life. Show all posts
Showing posts with label life. Show all posts

Sunday, 27 February 2022

The Secret Life of Arsenic

 




The Secret Life of Arsenic

Posted on January 31, 2022

by Neil Bradbury, Ph.D.

Quick, think of a poison…

There’s a good chance that you came up with arsenic. Arsenic was first isolated by the famous alchemist Albertus Magnus in the thirteenth-century city of Cologne. By a strange coincidence, Cologne was named after the power-hungry Roman Empress Agrippina, who amassed her power by eliminating any competition by poisoning them with a white powder, which later turned out to be arsenic.

“A Glass of Wine with Caesar Borgia” painted by John Collier (1893)
From left: Cesare Borgia, Lucrezia, Pope Alexander, and a young man holding an empty glass.
This image is in the public domain via Wikicommons.

In the Renaissance, arsenic poisoning became a favorite of the Borgias, who used it to become one of the wealthiest and most powerful families in Europe. Rumors regarding the preparation of a poison called La Cantarella included spreading arsenic on the entrails of a slaughtered pig, and letting the whole mess dry to a goo, which could then be slipped into food and drink. By the seventeenth century, arsenic poisoning was so rampant, among the elite of French society, that it was known as ‘poudre de succession” or inheritance powder. In the 1930s, the realization that arsenic could be coupled with organized crime and life insurance payouts led to a mini-epidemic in working-class spousal poisonings. In what became known as the Great Arsenic Murder Ring of South Philadelphia, 24 people were convicted of arsenical murders to collect life insurance payouts.

Despite the close association of arsenic with murder, there are other sides to this chemical, including home decoration and medicine. The Victorians were the first to see the home as a sanctuary. Things were acquired to turn houses into homes, and not unlike today’s numerous television home improvement shows, the Victorians were awash with household guides and magazines, informing the reader of what was tasteful and fashionable. Yet, what went unnoticed was that these same sought-after items were secret killers. One sign of good taste and being modern was wallpaper, and the bolder the colors and more garish the pattern the better. Houses were getting gas lighting which meant that there was enough light for people to actually see and enjoy the vivid colors of wallpaper. Cassell’s Household Guide, one of the main influencers of taste, identified green as a desired wall color. One particularly vibrant green was a color called Scheele’s Green. So impressive and in-demand was the dye, that it was used in everything from dresses to children’s toys and even as a food coloring. But perhaps most importantly, it was in wallpaper. And as more homes had wallpaper, there were increasing newspaper accounts of unexplained illnesses and deaths in the home, including a six-month-old who died after chewing on green wallpaper. The thing that gave wallpaper its vibrant green color was, in fact, arsenic. As well as eating the paper, wallpaper was killing homeowners in a more insidious and invisible way. Dampness in Victorian rooms provided an ideal environment for mold to grow on the wallpaper, and the paste holding it to the wall. The mold broke down the green arsenic dyes and released arsenic gas into the very air that was being inhaled. While doctors and newspapers campaigned for a prohibition against arsenical wallpaper, other experts were quick to downplay the dangers. In the end, arsenical wallpaper didn’t need to be banned. Consumers simply stopped buying it, and wallpaper manufacturers started advertising their new products as arsenic-free. 

Madeleine Smith, the Glasgow socialite tried for the murder of her lover with arsenic-laced hot cocoa.
Courtesy of the Wellcome Foundation collection

During the 1850s, reports of Austrian peasants eating arsenic to give them a healthy porcelain-like complexion swept through Europe and America. An 1898 article in the San Francisco Call, noted the wonderful effectiveness of the natural arsenic found in cucumbers “to bleach the skin and eliminate those unsightly freckles.” The New York Times opined that the “natural arsenic in the cucumber makes it valuable as a skin whitener.” Cucumbers don’t actually contain arsenic and the origin of the myth is totally unknown. Did the green of cucumbers remind people of Scheele’s green? By 1889, anyone wanting “compelling admiration” could avail themselves of “Dr. Campbell’s Arsenic Complexion Wafers” which would “transform the most sallow skin into a radiant health.” While the use of arsenic in cosmetics is now prohibited, the many blogs and video postings of contemporary beauty tips, suggest that for marketing, very little has changed since Victorian times.

Along with its use in cosmetics, arsenic was also used as a cure-all for many conditions afflicting the body. During the eighteenth century, Thomas Fowler promoted a therapy for a multitude of diseases, including malaria, hypertension, ulcers, and cancer. The liquid, known as Fowler’s Solution was made from arsenic, and thoughtfully, lavender extract, to make it appear more medicinal. Fowler’s Solution was employed for over 150 years, as late as the 1940s. Arsenic’s reputation as a therapeutic was boosted in 1910 when Nobel laureate Paul Ehrlich developed a treatment for syphilis using arsenic, and even as late as 2000, a drug based on arsenic was approved as an effective therapy for leukemia. 

Despite arsenic’s historic and well-deserved infamy as a deadly poison, there is clearly also a secret life to arsenic, and with the possibility of arsenic being used in modern medicine, perhaps its tarnished reputation may now be somewhat rehabilitated. 

Monday, 8 November 2021

GOOD FAMILY LIFE

 


GOOD FAMILY LIFE

அமைதியான குடும்ப வாழ்க்கைக்கு என்ன வேண்டும்?
அமைதியான குடும்பவாழ்விற்கு மனைவி பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டிய சில பழக்கவழக்கங்கள்
1.அதிகாலை 5 மணிக்கு படுக்கையில் இருந்து எழுவதை வழக்கமாக கொள்ளல் வேண்டும்
2.தான் மட்டும் எழுந்தால் போதாது தனது கணவரையும் எழுப்பிவிடும் பழக்கத்தை கொண்டிடல் வேண்டும்
3.முதல் நாள் இரவே மறுநாள் செய்திடவேண்டிய வேலைகளை திட்டமிடல் வேண்டும்.
4. கணவனுக்கும் பிள்ளைகளுக்கும் நல்ல தாயாக மனைவியாக இருப்பது முக்கியமல்ல முதலில் நல்ல தோழியாக இருக்கவேண்டும் என்பதை மனதில் கொள்ளுங்கள்
5.பிள்ளைகளுக்கு முன்னால் கணவரை திட்டுவதை விட்டுவிடுங்கள் ..இல்லையெனில் நாளை உங்கள் பிள்ளைகளுக்கு உங்களைப்போலவே ..
6 .பிள்ளைகளுக்கு முன்னாள் மாமனார் மாமியர் மற்றும் நாத்தனார் மைத்துனரை வசைபாடுவதை தவிருங்கள்
7.கணவரை அடிப்படையாக கொண்டு பிள்ளைகளை திட்டாதீர்கள் "அப்பனமாதிரியே வந்திருக்கு "
8.எப்படி நீங்கள் சதா வீட்டுவேலைகளை பார்த்து குடும்பத்தை ஆரோக்கியமாகவும் செல்வ செழிப்பாகவும் வைத்துக்கொள்ள மெனப்படுகிண்டீர்களோ ..உங்கள் கணவரும் அப்படித்தானே என்பதை ஒருபோதும் மறவாதீர்
9.மாமனார் மாமியாரை அம்மா அப்பாஎன்று அழைக்காவிட்டாலும் அத்தை மாமா என்று அடிக்கடி அழைத்து அவர்களை உங்கள் வசப்படுத்தி கொள்ளுங்கள்
10.வீட்டிற்கு வந்த நாத்தனாரை யரோ என்று எண்ணாமல் சமையல் கட்டிற்கு அழைத்து அவருக்கும் ஒரு வேலைகொடுத்து மனமார பேசிக்கொண்டு ஒரு தோழியைப்போல நடந்துகொள்ளுங்கள்
11.வீட்டில் பாத்திரங்களை கழுவும் போது சத்தம் வரமால் பார்துகொள்ளுங்கள்
12.குறிப்பாக உங்கள் கணவரின் உறவினர் வருகையின் போது மிக மிக கவனமாக செயல்படுங்கள்
13.வீட்டை அழகாக வைப்பது வீட்டில் உள்ள அனைவரின் கடமை என்பதை உணர்த்தி அவர்களை அதற்கேற்றபடி அனைவருக்கும் பயிற்சி கொடுத்திடுங்கள்!
14.வீட்டில் சத்தம் போட்டு பேசாதீர் ..அமைதியாக பொறுமையாக பேசிடுங்கள் ..காட்டு தனமாக கத்துவதால் எதும் சீராகப் போவதில்லை
15. எந்தஒரு சூழ்நிநிலையிலும் ஏன்டா பெண்ணாகப் பிறந்தோம் என்று மட்டும் எண்ணிவிடாதீர் ..எண்ணவும் கூடாது
16. என்ன பிழைப்பு இது? நாலு சுவற்றிற்குள் எல்லோருக்கும் வடித்துக் கொட்டி..இதுக்கு பதில் ஆம்பளையா பொறந்திருக்கலாமேன்னு ..இப்படிப்பட்ட எண்ணங்கள் உங்களின் கனவில் கூட வரக்கூடாது
17.தேவையில்லாமல் பிரோக்களில் புடவைகளை வாங்கி சேகரிக்காதீர்கள்
18.நறுக் கென்றிந்தாலும் 4 புடவைகள் நச்சுனு வைத்திருங்கள்
19.அநேகமான நேரங்களில் நைட்டி அணிவதால் கூடுதலான நைட்டிகளை வைத்துக்கொள்ளுங்கள்
19.வேலைக்காரியின் கஷ்டங்களை தயவு செய்து கணவரிடம் உருக்கமாக பகிர்ந்து கொள்ளவேண்டாம்
20.நைட்டி இதனை வேலைசெய்திடும்போது மட்டுமே அணியுங்கள் ..மாலைவேளைகளில் நமது பாரம்பரிய உடையான சேலைக்கு மாறி பூமுடித்து கணவனை பளிச்சென வரவேறுங்கள்
21.உடைவிஷயத்திலும் உங்களை அழகாக காட்டிக்கொள்வதிலும் எப்பொதும் உங்களை நீங்கள் விட்டுக்கொடுக்காதீர்கள்
22.வயதுக்கு வந்த பெண்குழந்தைகள் இருந்தாலும் உங்களின் கணவருக்கு நீங்கள் தான் காதல் தேவதை என்பதை மறக்கவேண்டாம்
23.கணவருக்கு பிடித்தமாதிரியும் தங்களின் தன்னம்பிக்கைக்கு பாதகம் இல்லாத வகையிலும் ..உங்களுக்கு பிடித்த வகையிலும் ஆடைகளை அணிந்திடுங்கள்
24.குறிப்பாக உள்ளாடைகள் மீது அதிக கவனத்துடனும் ..சுத்தத்திலும் முக்கிய கவனதுடன் செயல் பட்டிடுங்கள்
25.கொடுமையான டிசைன் கடுமையான கலர் என உடைகளை அணிவதைத் தவிருங்கள்
26.கணவருடன் தினம் தினம் குறைந்தது 30 நிமிடமாவது அருகில் அமர்ந்து மனம் விட்டு பேசுங்கள் அதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்
27.உங்களுக்கு பிடித்தமாதிரி ஆடை அணிகலன்களை உங்கள்கணவருக்கு நீங்களே தேர்வு செய்த்திடுங்கள். .உங்கள் கணவரின் அழகை பிரதிபலிக்கும் கண்ணாடி நீங்களே அதை எப்பொதும் மறக்கவேண்டாம்
28.கணவரின் தொழிலை பற்றி முழுமையாக ஆக்கபூர்வமான தகவல்களை தெரிந்து வைத்து கொள்ளுங்கள்
29.கணவரின் தொழில் அல்லது வேலைசெய்திடும் சூழல் மற்றும் அவரின் செயல்பாடுகள் குறித்து தெரிந்து வைத்துகொள்ளுங்கள் .
30.கணவரின் வேலை மற்றும் வியாபார விஷயங்களில் அடிகடி மூக்கை நுழைக்காமல் அவர் மற்றவர்களோடு பழகும் விதத்தை சந்தேக கண் கொண்டு பார்க்காதீர்கள்
31.எல்லா கணவர்களுக்கும் தங்களின் மனைவி நல்ல தோழியாக இருக்கவேண்டும் என்பதும் அதேநேரம் கட்டுக்குள் அடங்கியவளாக இருக்கவேண்டும் என்பதே விருப்பம்
32.உங்கள் கணவரை ஜெயிக்கவேண்டும் என்றால் கொஞ்சம் பயப்படுவதாக காட்டிக்கொள்ளுங்கள்
33.பணிபுரியும் இடத்தில் உள்ள ஆண்கள் பற்றி அதிகம் பேசவேண்டாம்.
34.எவ்வளவு உயிர்தோழியாக இருந்தாலும் அவர்களை ஒரு எல்லைக்குள் வைதிருங்கள் ..வீட்டில் அனுமதிப்பதும் அளவோடு இருக்கட்டும்
35.வாரம் ஒருமுறை ஷாப்பிங் செல்வதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்
36.ஷாப்பிங் என்றவுடன் நகை கடை துணிக்கடை என்றுமட்டும் எண்ணவேண்டாம் உழவர்சந்தை செல்வது கூட ஷாப்பிங் தானே .
37.வீடுகளில் அதிக குப்பைகள் சேராமல் பார்துகொள்ளுங்கள் வாடகை வீடு எனில் தேவையான பொருட்களை மட்டும் வைத்துக்கொள்ளுங்கள்
38.உங்கள் குடும்ப விஷயங்களை குறிப்பாக உங்கள் அம்மாவிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம்
39.உங்களின் வளர்ச்சிகளை முடிந்தமட்டும் உங்களின் அக்கா தங்கைகள் அண்ணன்களிடம் பகிர்ந்துகொள்ளவேண்டாம்
40.அம்மாவின் ஆலோசனைகளை கேட்ப்பது நல்லதுதான் ஆனால் அதை அளவோடு நிறுத்திக்கொள்ளவது நல்லது ..
41.தேவைஇல்லாமல் மகளுக்கு ஆலோசனை சொல்வது ..மருமகளை சரி செய்வது போன்ற செயல்களை தவிர்த்திடுங்கல்
42.அநேக பெண்களின் வாழ்க்கை கெட்டுப்போவது அம்மக்களால்தான் என்பது ஆண்கள் சமூகத்தில் அசைக்கமுடியாத நம்பிகை மறக்கவேண்டாம்
43..கணவரின் வெளிநாடு பயணங்கள் ..கிளப் ஆக்டிவிடிகளில் பெரும்பாலும் கலந்து கொள்ளுங்கள்
44.புகைபிடிக்கும் கணவன்மார்களை கொஞ்சம் கொஞ்சமாக கட்டுக்குள் கொண்டுவாருங்கள் அதுவே நல்லது
45.கணவன்கள் நண்பர்களுடன் அடிக்கும் லூட்டிகளை ரசியுங்கள் ஆனால் அதில் உள்ள குற்றங்களை கண்டுபிடித்து ஆயுதமாக பயன்படுத்தாதீர்
46.உங்களின் கணவர் உங்களுக்கு ஒரு ஆண் ..ஆனால் வெளியுலகில் அவர் ஒரு ஹீரோ என்பதை மறக்கவேண்டாம்
47.பெண்களுக்கு வாய் நீளுமானால் ஆண்களுக்கு கைநீளம் என்பதை மறக்கவேண்டாம்
48ஒரு நல்ல பெண் தன் வீட்டை கோயிலாக மாற்றுகிறாள் என்பது வேத வாக்கியங்கள்..
49.உங்களை வைத்துதான் உங்கள் கணவரின் சமுதாய மதிப்பு உள்ளது என்பதை அவருக்கு உணர்த்துங்கள்
50.உங்களின் செயல்பாடுகள் உங்கள் பெண்பிள்ளைகளின் எதிர்காலத்தில் பங்குகொள்கிறது என்பதை ஒருபோதுமே மறக்கவேண்டாம்
51.உங்களின் சந்தோஷமான வாழ்க்கை ..உங்களின் எதிர்கால மருமகளின் சந்தோஷமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும் அநேக ஆண்கள் தங்களின் மனைவியை ..தங்களின் தாய் பட்ட கஷ்டங்களை தனது மனைவிக்கு தரக்கூடாது என்பதில் மிகுந்த அக்கரை கொண்டுள்ளனர்
52.சாமிகளை அளவோடு கும்பிடுங்கள் ..சாமி கும்பிட்டு உங்களின் ஆசாமிகளை கோட்டை விட்டுவிடாதீர்கள்
53.சுவையாக சமைக்கும் பெண்களை விட அழகாகவும் இனிமையாகவும் பரிமாறும் பெண்களைத்தான் ஆண்களுக்கு பிடிக்கிறதாம்
54.மொத்தத்தில் நீங்கள் தாயக ..தோழியாக ..மனைவியாக ..பல பல யாக இருந்தால் வாழ்க்கை சிறக்கும்
சமுதாயம் மதிக்கும் ... வாழ்க்கை எளிமையாகும் ..இனிமையாகும். அன்பு நிலை பெற
ஆருயிர் மனைவியை இல்வாழ்வில் சக மனித உயிராக மதித்து நடந்தாலே போதும் அகமகிழ்ச்சி பெருகும், இல்லத்தில் நிம்மதி நிலைத்திடும்.
வாழ்க வளமுடன்...
Tamil Selvan, As Suresh Kumar and 6 others

Monday, 26 July 2021

The Fascinating Life of Hedy Lamarr

 




The Fascinating Life of Hedy Lamarr

The woman behind today's Bluetooth, Wi-Fi 
and encryption technology.


June 11, 2018

 It had been a long day. As an intern at New America, I have been researching the global internet governance debates, collecting sources to analyze different frameworks and working on the draft of an article about the global impact of repealing net neutrality in the U.S. After work, all I wanted to do was curl up on the couch with my cat and watch a documentary, escaping my life for an hour or so to dive into the perils of someone else’s. After clicking through a few channels, I stumbled across “Bombshell: The Hedy Lamarr Story.” Though I’d never heard of her, I was immediately hooked by the story of one of Hollywood’s most famous actresses who also happened to be a hugely influential inventor.  

In 1942, in the throes of her cinematic fame, Lamarr and friend, George Antheil, were granted a patent for their frequency-hopping communications system. This system allowed for communication between launched torpedoes, strengthening defenses against radio jamming by enemy signals. As a self-taught inventor, Lamarr learned that these weapons could unfortunately be easily tracked, so she and Antheil developed a system that allowed torpedoes to hop from frequency to frequency, guiding them to their target while being undetected by enemy trackers. This technology is known as the frequency-hopping signal system.

My excitement grew as the documentary continued, but it quickly turned to frustration. Although the military used the frequency-hopping signal system in the 1950’s and during the Cuban Missile Crisis, which led to the development of modern tools such as Bluetooth capabilities, Wi-Fi services, and encryption technology, Lamarr was never taken seriously as an inventor and didn’t receive compensation for her ideas. Many suggested that because of Lamarr’s beauty and career as an actress, she was a spy, or that she stole the invention from her first husband.

As I was watching Lamarr’s story, I couldn’t help but think about my life as a recent college graduate trying to navigate a career path in the cybersecurity field.  I became interested in the field because of my curiosity to learn about emerging technologies and the development of strategies to defend against high level threats. Lamarr’s story has become an important factor in my professional development because it’s a reminder that following your interests, even if they defy societal or personal expectations, is crucial. 

Hedy Lamarr’s work broke stereotypes and her accomplishments were ahead of their time. The U.S. Navy long refused to work with her, even with her advanced knowledge of developing German technology, but she continued to invent anyway. Eventually, the military utilized her frequency-hopping signal system. Though my work on internet governance strategies and policies around the world is not directly related to Lamarr’s, her story reminds me of the challenges that women have faced in the past when trying to follow their passions, and makes me eager to continue the path that many have worked so hard to pave.

After 55 years of little recognition for her frequency-hopping signal system, she was finally honored in a special ceremony by receiving the Electronic Frontier Foundation Pioneer Award. It highlighted her groundbreaking invention that proved foundational to so much of our technology today. When the foundation called to inform her of the award, she replied: “Well, it’s about time.” Indeed it is, Hedy Lamarr.


Thursday, 1 April 2021

NOT ONLY LOVE ,A TRIANGLE BUT LIFE TOO

 


NOT ONLY LOVE ,A TRIANGLE BUT LIFE TOO

காதல் மட்டும் முக்கோணம் அல்ல
வாழ்க்கையும் தான்
தேவவிரதன்
''பாரதி... நீங்க இந்த நிறுவனத்தில, 10 வருஷத்திற்கும் மேல வேலை பாக்குறீங்க... பல நிலைகளுக்கு உயர்ந்து, இன்று, உயர்ந்த பதவியில் இருக்கிறீங்க. பேச்சுத்திறமை உள்ளவரும் கூட. அதோடு, இந்த வேலைக்கே உங்கள அர்ப்பணிச்சுட்டது போல், திருமணம் கூட செய்துக்காம தனியா வாழ்றீங்க... நீங்க வந்து பேசினால், எங்க கிளப்பில் உள்ள பெண்கள், ஏன் ஆண்களுக்கு கூட உற்சாகமா இருக்கும்,'' என்று, ரோட்டரி கிளப் ஏற்பாடு செய்திருந்த மாதாந்திர கூட்டத்தில் பேசுமாறு குட்டிப் பிரசங்கமே செய்தார், அலுவலக நண்பர், வாசன்.
''எதுக்கு சார் இத்தனை ஐஸ் வைக்கிறீங்க... தாராளமாக வந்து பேசுறேன்; என்ன தலைப்புன்னு சொல்லுங்க...''
''கணினி துறையில் பெண்களின் பங்கும், எதிர்காலமும் என்பது பற்றி நீங்க பேசினால் தான் பொருத்தமாக இருக்கும்.''
''சரி... என்னைக்கு, எந்த இடத்தில்?''
''வரும் வியாழக்கிழமை; சென்னை -அடையார் காந்தி நகர் கிளப்பில்!''
''நேரம்?''
''மாலை, 6:30 மணி,'' என்றார், மிகுந்த மகிழ்ச்சியுடன்!
''சரி,'' என்று தலையசைத்தேன், அங்கே எனக்கு ஏற்படப் போகும் அதிர்ச்சி பற்றி அறியாமல்!
நான், வசதியில்லாத, தந்தையற்ற, தாய் மட்டுமே உள்ள பெண். பட்டப் படிப்பு முடித்ததுமே, கணினி துறையில் வேலையும், நல்ல சம்பளமும் கிடைத்தது. வயது, 40; திருமணம் ஆகவில்லை; வேண்டுமென்றே, நான் திருமணம் செய்யாமல் இருப்பதாக நினைத்தனர், சிலர். ஒருவகையில் அது நிஜம் தான்; முன்பின் தெரியாத ஒருவனை தேர்ந்தெடுத்து, கழுத்தை நீட்டி, அவனுக்கு ஏற்றார் போல் என் வாழ்க்கையை மாற்றிக்கொள்ள விரும்பவில்லை. ஆனால், ஒருவன் வேண்டாம். அது, முடிந்து போன கதை!
இப்போது, என் வாழ்க்கையில் தனிமை இருந்தபோதிலும், அமைதி இருக்கிறது; அதை கலைத்துக் கொள்ள விரும்பவில்லை.
மாலையில், 15 நிமிடங்களுக்கு முன்பே, அரங்குக்கு போய் சேர்ந்து விட்டேன். வாசனும், காரியதரிசி மற்றும் இயக்குனர் ஆகியோர், கூட்டம் நடக்க இருக்கும் சிறிய ஹாலுக்கு என்னை அழைத்துச் சென்றனர். 50 பேர் அமரக்கூடிய ஹால் அது; 10 பேர் தான் வந்திருந்தனர். அதில், மூன்று பேர் பெண்கள்; வாசன் மற்றும் இயக்குனர் தவிர, இதர அங்கத்தினர்கள் அனைவரும் இளைஞர்களாகவே இருந்தனர்.
கூட்டத்தில், என் கல்வி, உத்தியோகம், பதவி உயர்வுகள், சாதனைகள் மற்றும் வெளிநாட்டு பயணங்களை பற்றி குறிப்பிட்ட பின், ''பாரதி ஒரு புதுமைப்பெண்; ஆண்களுக்கு நிகராக எந்த துறையிலும் ஒரு பெண்ணால் தனித்து நின்று சாதிக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளவர்,'' என்றார், நண்பர் வாசன். அவர் பாராட்டு, கூச்சத்தை ஏற்படுத்தியது.
பின், நான் பேசத் துவங்கினேன்... கணினி துறையில் பொதுவாக உள்ள பிரச்னைகளான வேலை அழுத்தம், குறிப்பிட்ட நேரத்தில் முடிப்பதற்கு படும் சிக்கல்கள், மாறுபடும் வேலை நேரங்கள், உடல்நலம், திருமணம் ஆனவர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு மகப்பேறு, உடல்நலம், கருவில் உள்ள குழந்தையின் வளர்ச்சி என, இந்த வேலையால் உண்டாகும் சங்கடங்கள் பற்றி குறிப்பிட்டு, அவற்றை சமாளிப்பது எப்படி என்பது பற்றியும் சில குறிப்புகள் தந்தேன். கூட்டம் முடிவடைந்தது; பலர் என்னிடம் வந்து பாராட்டு தெரிவித்தனர்.
ஒருசில பெண்கள், 'உங்கள் ஆங்கிலப் புலமை மிக அற்புதம்; நீங்க, எங்க லேடீஸ் கிளப்பில் வந்து பேசணும்; உங்க போன் நம்பர் கொடுங்க...' என்று வாங்கிச் சென்றனர்.
கூட்டம் கலைந்து, நிகழ்ச்சியாளர்களிடம் விடைபெற்று வெளியே வந்தபோது, எதிரே அவன்... நான் எவ்வளவோ மறக்க முயன்றும், முடியாமல், என் மனதில் ஆழமாக பதிந்து போனவன்!
வழியை மறிப்பது போல், புன்னகையுடன் நின்றிருந்தான், ரகுராம். திடுக்கிட்டு அவனை பார்த்தேன்.
ஆறு ஆண்டுகள்...
அவனின் அந்த முகமும், தோற்றமும் அதிகம் மாறவில்லை. சற்று பெரிய மனிதத்தனம் மட்டும் முகத்தில் வந்திருந்தது; அதுவும், ரிம்லெஸ் கண்ணாடி அணிந்திருந்ததால்!
''பாரதி... என்னை அடையாளம் தெரிகிறதா?'' என்றான். அதே மென்மையான குரல்!
'மனதில் எழுதி வைத்த உருவத்தை மறப்பதென்ன அவ்வளவு எளிதா...' என நினைத்தாலும், எதிர்பாராத இந்த சந்திப்பு, என்னை பேச்சிழக்க செய்திருந்தது.
''ஹலோ... உங்கள தான்; என்ன அப்படியே நிற்கிறீங்க,'' என்று என் பிரமிப்பை பார்த்து, கிண்டல் செய்தான்.
அதிர்ச்சியை சமாளித்து, புன்னகைத்து, ''ரகுதானே... பாத்து எவ்வளவு நாளாச்சு '' என்றேன்.
''பரவாயில்லயே... நினைவு இருக்கிறதே...'' என்று பாராட்டியவன், ''அந்த நாட்கள்ல ஆங்கிலத்துல பிளந்து கட்டியது போன்ற அதே ஆங்கிலப் புலமை... வாவ்...'' என்றான்.
''நீ எங்கே இங்கே?''
''நான், பெங்களூருல இருக்கேன்னு உங்களுக்கு தான் தெரியுமே... என் நண்பன் ஒருவன் இந்த சங்கத்தோட உறுப்பினர்; அவனை சந்திக்க வந்த போது, தான், இந்த மீட்டிங்கிற்கு செல்வதாகவும், என்னையும் உடன் வரச்சொன்னான். பேசப் போவது நீங்க தான்னு தெரிஞ்சவுடன், அட நமக்கு தெரிஞ்சவங்களாச்சே... அதோடு பாத்தும் ரொம்ப வருஷம் ஆச்சேன்னு வந்தேன். எப்படி இருக்கீங்க... ஐஞ்சு வருஷத்துக்கு முன் பார்த்தது போல் அப்படியே இருக்கீங்க,'' என்றான்.
'ஐஞ்சு வருஷம் இல்ல; ஆறு வருஷம், எட்டு மாசம்...' என்று மனதிற்குள் சொல்லி, ''ப்ரீதி எப்படி இருக்கிறா, குழந்தைக?'' என்றேன்.
''நல்லா இருக்கா... ஒரே ஒரு பையன்; நாலு வயசு.''
''ப்ரீதி வேலைக்கு போறாளா?''
''ம்... போறா,'' என்று இழுத்த மாதிரி சொன்னவன், அங்கு வந்த தன் நண்பனை அறிமுகம் செய்து வைத்தான். பின், அவனிடம், ''ஒரு காலத்தில எனக்கு இவங்க பாஸ்... ரொம்ப தெரிஞ்சவங்க... பயங்கர புத்திசாலி. அதான், பேசினத கேட்டாயே... ஐஞ்சு வருஷத்துக்கு பின் பாக்கிறேன்... பாரதி... எங்களோட டின்னருக்கு வாங்களேன்...''என்றான்.
''இல்ல; நான் வீட்டுக்கு போகணும்,'' என்றேன் அவசரமாக!
அதற்குள், அவனின் நண்பன், ''சாரி ரகு... நான் உடனே பேக்டரிக்கு போகணும்; ஏதோ பிரச்னையாம்... நீ இவங்க கூட போ,'' என்றான்.
''பாரதி... நீங்க எனக்கு கம்பெனி கொடுத்துதான் ஆகணும்,'' என்றான் உறுதியாக ரகு!
''வீட்ல அம்மா காத்திருப்பாங்களே...'' என்றேன் சங்கடமாக!
''போன் பண்ணி சொல்லுங்க; ப்ளீஸ், பாரதி, பிகு பண்ணாதீங்க,'' என்றான்.
எனக்கு மனசு துடித்தது; அது மகிழ்ச்சியினாலா, பதற்றத்தினாலா, எதிர்பாராத சந்திப்பினாலா என்று தெரியவில்லை.
ஒரு நிமிடம் யோசித்தேன்; பின், ஒரு முடிவுடன், ''சரி போகலாம்... நீ எங்க தங்கியிருக்கே?'' என்றேன்.
''ஸவேரா.''
''சரி... என் கார்ல போயிடலாம்,'' என்று கூறி, வெளியே வந்தோம்.
''சொல்லுங்க பாரதி... உங்க லைப் எப்படி போகுது... இன்னும் சிங்கிள்... என்ஜாயிங் யுவர் ப்ரீடம்,'' என்றான்.
எனக்கு கத்திக்குத்து பட்டாற்போலிருந்தது. சமாளித்துக் கொண்டேன். அன்று, என்னிடம், தான் ப்ரீதியை காதலிப்பதாக சொன்னதையே தாங்கிக் கொண்டவள் தானே... அடுத்த ஆறு மாதங்களிலேயே திருமணம் செய்து, ரகு - ப்ரீதி இருவருமே, நான் இருந்த நிறுவனத்திலிருந்து விலகி, பெங்களூருவில் வேறு வேலைக்கு சென்றனர். அங்கு சென்றபின், ரகு ஓரிரு மெயில்கள் அனுப்பியதற்கு கூட நான் பதில் தரவில்லை. காரணம், நான், அவனை பார்க்கும் பார்வையில், காதலும், ஏமாற்றமும் தெரிகிறது என்று ப்ரீதி, ரகுவிடம் சொன்னதாகக் கூறியபின், அவன் நட்பைத் தொடர்வதில் என்ன அர்த்தம்!
உண்மை சுடும்; அது, என்னையும் சுட்டது.
ஓட்டலுக்கு சென்று, அமைதியான ஓரிடத்தில் அமர்ந்து, உணவுக்கு ஆர்டர் செய்த பின், தன் குடும்பம், வேலை, குழந்தை பற்றி கூறினான், ரகு. தாங்கள் குடும்பத்துடன் சென்ற இடங்கள் என்று மொபைல் போனில் புகைப்படங்களைக் காட்டினான். நான் மவுனமாக, ''ஓ... வெரி நைஸ்... அப்படியா... குட்,'' என்று ஒற்றை சொற்களாக பதில் சொல்லியபடி இருந்தேன்.
அவன் பேசி முடித்த பின், ''ரகு... சந்தோஷமாக தானே இருக்கிறாய்,'' என்றேன் புன்னகையுடன்!
உடனே, மவுனமானான். என் முகத்தை நேராக பார்க்காமல், உணவையே பார்த்தான். அவன் மவுனம் வியப்பை தந்தது.
''ஏய்... என்ன திடீர்ன்னு அமைதியாயிட்டே?''
நிமிர்ந்து, என்னை பார்த்த ரகுவின் முகத்தில், மெலிதாக ஒரு சோகம் படர்ந்திருந்தது.
''என்ன ரகு...'' என்றேன், சற்றே கவலை தோய்ந்த குரலில்!
''நான் சந்தோஷமாக இல்ல...''
இதைக் கேட்டதும், எனக்கு வருத்தமாக இருந்தது; என்னைப் பொறுத்தவரை காதல் என்பது ஓர் உயர்ந்த உணர்வு; ஒருவர் மீது தோன்றும் காதலின் ஆழம், காலப்போக்கிலோ, பார்வையிலிருந்து விலகுவதாலோ, தொடர்பு அற்றுப் போவதாலோ நீர்த்துப் போகாது என்று நினைப்பவள். ரகு எனக்கு கிடைக்காமல் போயிருக்கலாம்; அதற்கு காரணங்கள் பல... அவன், என்னை விட இளையவன்; அந்த வகையில், என் காதலை அவனிடம் வெளிக்காட்டியதில்லை. அவன் பேச்சு, பழக்கம், நட்பு இவற்றின் மூலம், அவன் என்னை விரும்புகிறானோ என்ற எதிர்பார்ப்பு உருவானது நிஜம்தான். ஆனால், அவனே, தன் வயதொத்த ப்ரீதியை காதலிப்பதாக கூறியபோது, அதிர்ச்சியாக இருந்தாலும், அது நியாயமானது என்றே முடிவு செய்தேன். என்னுடையது ஒருதலைக் காதல்... அது நிறைவேறவில்லை; அதற்கு அவனை நோவதில் என்ன பயன்!
என்னை சமாளித்து, ''என்ன சொல்றே...'' என்றேன் அழுத்தமாக!
''நான், ப்ரீதிய காதலிக்க ஆரம்பித்த போது, அவள், என்னை உங்க கூட அதிகம் பழக வேணாம்ன்னு சொன்னாள்ன்னு சொன்னேனே... அதாவது, உங்க பார்வையில் காதல் தெரிகிறதுன்னு சொன்னாள்... நான் கூட, 'ரப்பிஷ்' என்றேன்... ஞாபகம் இருக்கா...'' என்று கேட்டான்.
'எப்படி மறப்பேன்... அவள் சொன்னது உண்மை தானே...' என்று மனதில் கூறினாலும், ''ஆமாம்... அதற்கென்ன...'' என்றேன் குரலை சாதாரணமாக வைத்து!
''ப்ரீதி சந்தேக பிராணி; நான் எந்த பெண்ணிடம் பேசினாலும், பழகினாலும் அவளுக்கு உடனே சந்தேகம் வந்துடும். உங்கள பற்றி கூறியதுபோல் அவர்களை பற்றியும் சொல்ல ஆரம்பிச்சுடுவாள்... ரொம்ப பொசசிவ்!''
எனக்கு இந்த பதில் சற்று ஆச்சரியம் தந்தாலும், அதிர்ச்சி தரவில்லை. பொதுவாகவே, எந்த மனைவி தான், தன் கணவன், மற்ற பெண்களுடன் சகஜமாக பேசிப் பழகுவதை சகித்துக் கொள்வாள்... அதை, சரசம் என்றல்லவா நினைப்பாள்!
நான் லேசாக சிரித்து, ''அது, இயற்கை தான் ரகு... பெண்கள், கணவனை தங்கள் ஆளுமைக்குள் வைத்திருக்கதான் விரும்புவாங்க,'' என்றேன்.
''எல்லாரும் அப்படியில்ல; என் நண்பர்களோட மனைவியரை பாத்திருக்கிறேனே... ப்ரீதி ரொம்ப அதிகம்; சில நேரங்கள்ல இதனால் எங்க ரெண்டு பேருக்கும் வாக்குவாதம் துவங்கி சண்டையாகிடும். சில நேரங்கள்ல அவ, ஹிஸ்டரிகலாக ஆவதும் உண்டு.''
''ஓ...'' என்றேன். நிஜமாகவே ரகுவின் நிலை குறித்து வருத்தம் தோன்றியது.
''யாராவது சைக்யாட்ரிஸ்ட்டை சந்திக்கலாமே...''
''வேறு வினையே வேணாம்... 'என்னை பைத்தியம்ன்னா நினைச்சே'ன்னு கத்தி ஆர்பாட்டம் செய்துடுவா...'' என்ற போது, அவன் முகம், வேதனையில் தோய்ந்திருந்தது.
''என் பையனோட எதிர்காலத்த நினைச்சு தான் கவலைப்படுறேன்; அவ, அவனிடமும் ரொம்ப பொசசிவ்,'' என்றான்.
இது உண்மையிலேயே பிரச்னைக்குரிய விஷயம் தான்; ஆனால், ரகுவிற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.
''கவலைப்படாத... காலமும், வயதும் எல்லாவற்றையும் சரி செய்யும்,'' என்றேன் சமாதானமாக! அதேசமயம், மனதின் ஒரு மூலையில் குரூரமான திருப்தி தோன்றுவது, அவமானமாக இருந்தது.
ஒரு நிமிடம் மவுனமாக இருந்தான், ரகு. பின், என் முகத்தை நேராக பார்த்து,''நான் ஒண்ணு சொன்னா, தப்பாக எடுத்துக்க மாட்டீங்களே...'' என்றான்.
''என்ன... 'உங்களப் போல் கல்யாணமே செய்துக்காம இருந்திருக்கலாம்'ன்னு சொல்லப் போறே அதானே... கல்யாணம் செய்து, சந்தோஷமாக குடும்பம் நடத்தும் எல்லாரும் என்னிடம் வழக்கமாக பேசும் வசனம் தானே...'' என்றேன் சிரித்தபடி!
''இல்ல பாரதி...''
''பின்னே...''
''ஆறு வருஷத்துக்கு முன், வலிய வந்து, ப்ரீதி என் வாழ்க்கையில் நுழையாமல் இருந்திருந்தால், நான் உங்களத்தான், 'என்னை, கல்யாணம் செய்துகிறீங்களா'ன்னு கேட்டிருப்பேன்,'' என்றான் ரகு அழுத்தமாக!
அன்று, ரகு, ப்ரீதியை காதலிப்பதாக சொன்ன போது, என் மனதில், மின்னல் இன்றி, இடி இறங்கியது போலிருந்தது. இப்போது, வானமே பிளந்து, இடியும், மின்னலுமாக மழை என் மீது பொழிவது போல் இருந்தது. விதி, எவ்வளவு வலியது!
இரண்டு நிமிடம் பேசவேயில்லை. தொட்டாலே வலிக்குமோ என்று பயந்து கொண்டிருந்த என் மனதை, அவன் வார்த்தைகள் கூரான கத்தியால் கிழித்து திறந்தது போல் இருந்தது. வலியா, சுகமா, வேதனையா, இன்பமா... எங்கோ லேசாகி, வானத்தில் பறப்பது போல் பறந்து, திடீரென்று கீழே விழுந்தது போல் இருந்தது.
உணர்ச்சிகளுக்கு முன், அறிவு விழித்துக் கொண்டது.
''என்ன பாரதி... பதிலே பேசாமல் இருக்கீங்க... நான் தப்பாக பேசிட்டேனா...''
அதுநாள் வரை நெருங்கி பழகியும், ரகுவை, நான் தீண்டியதில்லை. இன்று, அவனை அணைத்துக் கொள்ள வேண்டும் போல் தோன்றியது. ஆனால், அது அபத்தம்; என் வலது கரத்தால் அவன் கைமேல் தட்டினேன்.
''ரகு... குடும்பம்ன்னா, இதுபோன்ற கருத்து வேற்றுமைகள், சச்சரவுகள் வர்றது சகஜம். நீ புத்திசாலி; நிலைமையை புரிந்து சரி செய்வாய்ங்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது,'' என்றேன் புன்னகையுடன்!
''ஒரு பேச்சுக்கு கேட்கிறேன்... அன்று, நான், உங்களிடம் அப்படி ஒரு கேள்வி கேட்டிருந்தால், என்ன பதில் சொல்லி இருப்பீங்க...'' என்றான் ரகு!
மெல்ல சிரித்து, ''கேட்காத கேள்விகளுக்கும், சொல்லாத பதில்களுக்கும் மதிப்பு அதிகம்; அதைப் பற்றி பேசக்கூடாது,'' என்று கூறி, ''நீ, ஜாவேத் அக்தர் என்ற இந்தி கவிஞர் எழுதிய பாடலை கேட்டிருக்கிறாயா...'' என்றேன்.
''என்ன அது?''
'கனவுகளின் ஊர்வலம், சில நொடிகளுக்கே நின்றது; நீயும், நானும் நம் வழிகளில் பிரிந்து சென்றோம். நம் இதயங்களின் கதை, சில நொடிகளுக்கே தோன்றியது; நீயும், நானும் நம் வழிகளில் பிரிந்து சென்றோம்...' எனும் அர்த்தம் தோனிக்கும் அந்த பாடலின் வரிகளை இந்தியில் சொன்னதும், ''கேட்டிருக்கேன்... ஷாருக்கான் - ப்ரீதி ஜிந்தா நடித்த படம்; அருமையான பாடல்,'' என்றான் மெதுவாக!
''நாம் பிரிந்து செல்லும் நேரம் வந்து விட்டது; எங்கோ ஒருநாள் மீண்டும் சந்திப்போம்,'' என்று கூறி கிளம்பினேன்.
அந்த பாடலின் வரிகளும், ரகுவின் பார்வையும் என்னை பின்தொடர்ந்தது; நான் திரும்பவில்லை.
தேவவிரதன்
s