NOT ONLY LOVE ,A TRIANGLE BUT LIFE TOO
NOT ONLY LOVE ,A TRIANGLE BUT LIFE TOO காதல் மட்டும் முக்கோணம் அல்ல வாழ்க்கையும் தான் தேவவிரதன் ''பாரதி... நீங்க இந்த நிறுவனத்தில, 10 வருஷத்திற்கும் மேல வேலை பாக்குறீங்க... பல நிலைகளுக்கு உயர்ந்து, இன்று, உயர்ந்த பதவியில் இருக்கிறீங்க. பேச்சுத்திறமை உள்ளவரும் கூட. அதோடு, இந்த வேலைக்கே உங்கள அர்ப்பணிச்சுட்டது போல், திருமணம் கூட செய்துக்காம தனியா வாழ்றீங்க... நீங்க வந்து பேசினால், எங்க கிளப்பில் உள்ள பெண்கள், ஏன் ஆண்களுக்கு கூட உற்சாகமா இருக்கும்,'' என்று, ரோட்டரி கிளப் ஏற்பாடு செய்திருந்த மாதாந்திர கூட்டத்தில் பேசுமாறு குட்டிப் பிரசங்கமே செய்தார், அலுவலக நண்பர், வாசன். ''எதுக்கு சார் இத்தனை ஐஸ் வைக்கிறீங்க... தாராளமாக வந்து பேசுறேன்; என்ன தலைப்புன்னு சொல்லுங்க...'' ''கணினி துறையில் பெண்களின் பங்கும், எதிர்காலமும் என்பது பற்றி நீங்க பேசினால் தான் பொருத்தமாக இருக்கும்.'' ''சரி... என்னைக்கு, எந்த இடத்தில்?'' ''வரும் வியாழக்கிழமை; சென்னை -அடையார் காந்தி நகர் கிளப்பில்!'' ''நேரம்?'' '...