Posts

Showing posts with the label FRIENDSHIP

FRIENDSHIP BETWEEN MGR WITH KALAIGNAR

Image
  FRIENDSHIP BETWEEN MGR  WITH KALAIGNAR #எங்களுடைய_நட்பு_அத்தகையது ! - #கலைஞரைப் பற்றிச் சொன்ன #எம் . #ஜி . #ஆர் மதுரையிலிருந்து கலைஞர் திருச்செந்தூருக்கு நடைப்பயணம் சென்றார். அன்றைக்கு அவர் எதிர்க்கட்சித் தலைவர். அந்தப் பயணம் அண்ணா தி.மு.க அரசுக்குத் தற்காலிகத் தலைவலி தான். விருதுநகரைக் கடந்து செல்லும்போதே கலைஞருக்குக் காலில் கொப்புளங்கள் என்று தகவல்கள் வந்தது. மருத்துவர்கள் சிகிச்சை அளித்ததாகவும் ஆனாலும் காலில் கட்டுப்போட்டு நடைப் பயணத்தை கலைஞர் தொடர்கிறார் என்றும் சேதிகள் வந்தன. அப்போது மாம்பலத்தில் உள்ள தமது அலுவலகத்தில் எம்.ஜி.ஆர் இருந்தார். அவருக்கு மதிய உணவு பரிமாற முத்தண்ணன் தயாராக இருந்தார். ஆனால் எம்.ஜி.ஆர் தனது அறையை விட்டு வெளிவரவில்லை. எம்.ஜி.ஆருடைய அழைப்பின் பேரில் நானும் காத்திருந்தேன். முத்தண்ணன் தைரியம் சொன்னார். “லேசாகக் கதவைத் தட்டிவிட்டு நீங்கள் அறையைத் திறங்கள்” என்றார். அச்சத்தோடு அவ்வாறே செய்தேன். “உள்ளே வாருங்கள்” என்று எம்.ஜி.ஆர் அழைத்தார். “மணி ஒன்றரை. இன்னும் நீங்கள் சாப்பிட வில்லையே?” என்றேன். “அதை விட முக்கியமான ஒரு வேலை. நடைப்பயணம் சென்ற கலைஞரின...

ALEXANDER `S FRIENDSHIP

Image
ALEXANDER `S FRIENDSHIP அலெக்சாண்டரின், அரண்மனை வைத்தியனான பிலிப், அவனது ஆரூயிர் நண்பரும் கூட! அமைச்சர்களிடம் விவாதிக்க விரும்பாத விஷயங்களை கூட, பிலிப்புடன் ஆலோசிப்பான், அலெக்சாண்டர். இது, அமைச்சர்களுக்கு பிடிக்கவில்லை. படையெடுப்பின் போது ஒருநாள், அலெக்சாண்டருக்கு கடும் வயிற்று வலி; அதற்குரிய மருந்தை தயாரித்து எடுத்து, அலெக்சாண்டரின் கூடாரத்துக்குள் போனான், பிலிப். அவன் கண்களை ஊடுருவிப் பார்த்த அலெக்சாண்டர், 'இந்த மருந்து, என் உயிரை காப்பாற்றுமா?' என்று கேட்டான். 'ஆம்; அதிலென்ன சந்தேகம்?' 'சந்தேகமில ்லை; சந்தோஷம் தான்...' என்று கூறி, பிலிப் கொடுத்த மருந்தை வாங்கி, ஒரே மூச்சில் பருகி, 'நண்பா... இக்கடிதத்தை நான் படித்து விட்டேன்; நீயும் ஒருமுறை படித்துப் பார்...' என்று கொடுத்தான். கடிதத்தை வாங்கிய பிலிப், அதைப் படித்தான்... மன்னர் அலெக்சாண்டருக்கு... தங்களால், நாடுகளை இழந்த மன்னர்கள் பலர் ஒன்று கூடி, தங்களை கொல்வதற்கு, சதித் திட்டம் தீட்டியுள்ளனர்; அதற்கு உடந்தையாக இருப்பவன், உங்கள் நண்பன் பிலிப். இதற்கென, அவர்களிடம், பெரும் பணம் பெற்றுள்ளா...

A.S.IBRAHIM ROWTHER AND VIJAYKANTH FRIENDSHIP - DIED 2015 JULY 22

Image
A.S.IBRAHIM ROWTHER AND VIJAYKANTH  FRIENDSHIP - DIED 2015 JULY 22 ``விஜயகாந்த் சார் ஏன் அப்படி அழுதார்னா..!’’ - இப்ராஹிம் ராவுத்தரின் வாரிசு சந்தோஷ் மாதேவன் விஜயகாந்த் தன் திரை வாழ்க்கையில் தொடர் தோல்விகளால் துவண்டு கிடந்த காலத்தில், ராவுத்தர் ஃபிலிம்ஸ் என்ற ஒரு தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி, 'பூந்தோட்டக் காவல்காரன்', 'புலன் விசாரணை', 'கேப்டன் பிரபாகரன்' என விஜயகாந்தின் திரைப்பாதையில் மைல்கற்களை நட்டவர் இப்ராஹிம் ராவுத்தர். இப்ராஹிம் ராவுத்தர் அவர்கள் இருவருக்கும் இடையே இருந்த நட்பு நாடறிந்தது. பள்ளிப்பருவத்திலிருந்தே ஒன்றாய் இணைந்து அலைந்து, திரிந்து, விளையாடி, பிறகு பல கதைகள் பேசியபடியே நடந்து தீராத அவர்கள் இருவரின் செருப்பும் ஒரே போல மதுரையின் வீதிகளில் தேய்ந்தன. அந்தத் தீரா நடைப்பயணங்கள், இருவரும் சென்னை வந்த பின்னரும் தியாகராய நகர், சாலிகிராமம், வடபழனி எனத் தொடர்ந்தன. திரைத்துறையிலும் அவர்களின் வளர்ச்சி ஒரே விகிதத்தில் இருந்தது. ஒருவர் பாதையில் முட்கள் இருந்தால் மற்றொருவர் அதற்கு மெத்தை விரித்திட, ஒருவருக்கொருவர் படைக்கப்பெற்றவர்கள் எனும் ...

Victoria and Abdul: The Friendship that Scandalized England

Image
Victoria and Abdul: The Friendship that Scandalized England Previously undiscovered diaries have been found by an author based in the UK which show the intense relationship between Queen Victoria and the Indian man employed to be her teacher. The diaries have been used by London-based author Shrabani Basu to update her book Victoria and Abdul - which tells the story of the queen's close relationship with a tall and handsome Indian Muslim called Abdul Karim. The diaries add weight to suggestions that the queen was arguably far closer to Mr Karim than she was to John Brown - the Scottish servant who befriended her after the death of her beloved husband Prince Albert in 1861. They show that when the young Muslim was contemplating throwing in his job, soon after his employment started, because it was too "menial", the queen successfully begged him not to go. 'Closest friend' Mr Karim was just 24 when he arrived in England from Agra to wait at table ...

FRIENDSHIP BETWEEN SIVAJI GANESAN AND B.R.BANDULU

Image
FRIENDSHIP BETWEEN  SIVAJI  GANESAN AND  B.R.BANDULU ” டேய் , என்னடா பாப்பான் இங்கே வர்றான். காரணமில்லாமல் பாப்பான் வர மாட்டானே டா.” சிவாஜி பி.ஆர்.பந்துலு தமிழகத்தின் சிசில் பி டிமிலி என்று அறியப்பட்ட இயக்குனர்.வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன்,கர்ணன் படங்களின் இயக்குனர். சிவாஜிக்கும் இவருக்குமான நட்பு வித்தியாசமானது . அந்த நெருக்கம் காரணமாக கொஞ்சம் ஓவராகவே சிவாஜியிடம் நடந்து கொள்வார். பந்துலுவின் வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன்,பலே பாண்டியா படங்களுக்கு பிறகு- ஒரு ஸ்டுடியோவில் சிவாஜி ஒரு படப்பிடிப்பில் இருக்கிறார். மேக் அப்புடன் ஒரு மரத்தடியில்,சுற்றிலும் சில கைத்தடிகள் நிற்க,சிகரட்டை பற்றவைக்கும்போது பந்துலு காரில் வந்து இறங்குகிறார். சிவாஜி பார்க்கிறார். பக்கத்திலுள்ளவர்களிடம் கேட்கிறார் ” டேய் , என்னடா பாப்பான் இங்கே வர்றான். காரணமில்லாமல் பாப்பான் வர மாட்டானே டா.” சிவாஜி எப்போதும் எல்லோரையும் ஏகாரத்தில் தான் குறிப்பிடுவார்.அதோடு ஜாதியை குறிப்பிட்டே பேசுவார். பாப்பாரப்பய , யோவ் செட்டி , ரெட்டி எங்கேடா, வாய்யா நாயுடு ...