Posts

Showing posts with the label ROHMER

உலக சினிமா வரலாறு -

Image
உலக சினிமா வரலாறு - க்ளாத் சாப்ரோல் உலக சினிமா வரலாறு மறுமலர்ச்சி யுகம் 25: பிரான்சின் புதியஅலை: பகுதி - 4  சாப்ரோலின் படங்களைப் பற்றி ஒட்டுமொத்தமாக அளவீடு செய்தால் சுருக்கமாக இப்படிக் கூறிவிடலாம். அவர் ஹிட்ச்காக்கின் பிரெஞ்சு நிழல். இப்படிச் சொல்வது அவரது படங்களைக் குறைத்து மதிப்பிடுவதாகாது. 1930ல் வசதியான குடும்பத்தில் பிறந்தவரான சாப்ரோல் த்ரூபோ, கோதார்த் ஆகியோரின் திரைப்பட சங்கங்களில் அவர்களுடன் இணைந்த பிற்பாடு ராணுவசேவைக்குப் போய் சினிமா ஆசை காரணமாக பாதியில் ஓடிவந்து மீண்டும் நண்பர்களுடன் இணைந்து அவர்களோடு கையேது சினிமாவில் விமர்சகராகவும் எழுத்தாளராகவும் பங்களித்துப் பின் 20 செஞ்சுரி பாக்ஸின் பிரெஞ்சு விளம்பரப் பிரிவில் சிலகாலம் வேலை செய்து, அந்த வேலையையும் கோதார்த்திடம் கைமாற்றிவிட்டு தன் பணக்கார மனைவியின் கடைக்கண் அசைப்புக்கிணங்க தன் முதல் படமான ஹேண்ட்செம் செர்ஜ் படத்தை தயாரித்து இயக்கினார். 1958ல் வெளியான இந்த படம்தான் நியூவேவ் இயக்குனர்களின் முதல் படமாக வரலாற்றாய்வாளர்களால் தீர்மானிக்கப் படுகிறது. அதன் பிறகு தொடர்ந்து ஐம்பது ஆண்டுகள் திரை வாழ்க்கைக்குள் தன்னை ஈ...