QATAR - GULF OF PERSIAN
QATAR - GULF OF PERSIAN *கத்தார்: பாரசீக வளைகுடாவில் ஒரு இந்திய மாநிலம். நாடுகளின் கதை!* ஆச்சர்யமாக இருக்கே! ஆமாம்! ஒரு நாடு; அந்த நாட்டின் மக்களில் நால்வரில் ஒருவர் இந்தியர். அந்த நாடுதான் உலகின் முதலிடம் வகிக்கும் பணக்கார நாடு. கடந்த 20 ஆண்டுகளாக இந்த முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டிருக்கும் நாடும் இதுதான். அப்படியானால் அங்குள்ள இந்தியர்கள் கொடுத்து வைத்தவர்கள் எனச்சொல்லலாமா?! அங்குள்ள இந்தியர்கள் மட்டுமா? அந்த நாட்டில் வாழும் மக்களில் 90 சதவீதம் வெளிநாட்டவர்கள் தான்... அப்படியானால் எல்லோரும் கொடுத்து வைத்தவர்கள்தானே இல்லையா? ஆமாம்! அந்த நாடு... அதுதான் '#கத்தார்' (#Qatar) Qatar இந்தியாவின் 28 மாநிலங்களில் 27வது இடத்தில் இருக்கும் திரிபுராவை விட கொஞ்சம் பெரியது. 11 ஆயிரத்து 586 சதுர கிலோமீட்டர் பரப்புதான்.திரிபுரா அளவே! மக்கள் தொகை நம்ம இந்தியாவின் மணிப்பூர் மாநில மக்கள் தொகைதான். 27 லட்சம். அதில் 7 லட்சம் இந்தியர்கள். 27 லட்சத்தில் 3 லட்சத்து 13 ஆயிரம் பேர் மட்டுமே கத்தார் பிரஜைகள். மற்ற அனைவருமே வெளிநாட்டவர்கள். அது மட்டும் ஜனநாயக நாடாக இருந்திருந்தால், அமெரிக்கக் கட்சி...