SAARUHAASAN CINEMA ACTOR ,LAWYER BORN 1931 JANUARY 5
SAARUHAASAN CINEMA ACTOR ,LAWYER BORN 1931 JANUARY 5 அந்த நடிகர் ஒரு திருமணத்துக்கு போய் விட்டு காரில் ஏறுகிறார். "டேய்....இந்த ஆளு தான்டா தலைவருக்கு பெண் தரமாட்டேன்னு சொன்னவரு. மம்முட்டி கேட்டும் இல்லைன்னு சொன்ன ஆளு...யோவ்..என்னா தில்லு இருந்தா எங்க தலைவருக்கே பொண்ணு இல்லைன்னு சொல்லுவே...போடுடா..." ஆம்..அப்படி ரஜினி ரசிகர்களால் கூவப்பட்ட நடிகர் தளபதி படத்தில் ஷோபனாவுக்கு அப்பாவாக நடித்து பெண் தர மறுக்கும் சாரு ஹாசன். சாருஹாசனின் தந்தை சீனிவாசன் சுதந்திர போராட்டத்துக்கு சிறை சென்ற போது அங்கு மற்ற கைதிகளிடமிருந்து சீனிவாசனை காப்பாற்றிய சக கைதியின்பெயர் யாக்கூப் ஹாசன். அப்போதே தன் குழந்தைகளுக்கு ஹாசன் என பெயரிட முடிவெடுத்த சீனிவாசன் தன் முதல் குழந்தைக்கு வைத்த பெயர் 'சாருஹாசன்'. 1931 காலகட்டத்தில் இப்படி ஒரு இந்து-முஸ்லீம் பெயர் வைக்க எத்தனை துணிச்சல் வேண்டும். சீனிவாசன் அந்த மதுரை, ராமநாதபுரம் பகுதிகளில் பெயர் பெற்ற வழக்கறிஞர். சுதந்திர போராட்ட வீரர். இந்திய தேசிய காங்கிரஸில் ஈடுபாடுடையவர். அந்த மாவட்டத்தின் கல்வியை கண்காணிக்கும் பொறுப்பில் சீனிவாசன் இருந்தாரென்றால்...