SUN GLASSES AND READING GLASSES
SUN GLASSES AND READING GLASSES பிரச்னையைத் தீர்க்க முடியாவிட்டால் சமாளி! இதுதான் பெரும்பாலான கண்டுபிடிப்புகளின் அடிப்படைத் தத்துவம். கிட்டப்பார்வை, தூரப்பார்வை போன்ற குறைபாடுகள் மனிதர்களை சிரமப்படுத்தியபோது, அந்தப் பிரச்னைகளை சமாளிக்கும் விதமாக உருவாக்கப்பட்டதுதான் மூக்குக் கண்ணாடி. துரதிர்ஷ்டவசமாக இந்த மூக்குக்கண்ணாடியின் கண்டுபிடிப்பாளர் யார் என்ற குறிப்புகள் எதுவும் இல்லை. அலங்காரத்துக்காகப் பயன்படுத்தப்படும் கண்ணாடியின் பயன்பாடு கி.மு 15ம் நூற்றாண்டிலேயே எகிப்தியரால் தொடங்கப்பட்டுவிட்டது என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். அதன்பிறகு, கால மாற்றத்துக்கேற்ப பல்வேறு அவதாரங்களை எடுத்தது. இந்த பரிணாம வளர்ச்சியில் ஒளிபுகும் விதமாகவும், வெட்டும் விதமாகவும் கண்ணாடி மாற்றப்பட்டது பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இதுதான் மூக்குக் கண்ணாடி வடிவமைப்புக்கும் பெரிதும் உதவியது. கையில் ஒரு பெரிய பூதக்கண்ணாடி வைத்துக்கொண்டு புத்தகம் படிப்பது போன்ற தந்தை பெரியாரின் புகைப்படத்தைப் பார்த்திருப்பீர்கள். இதே போல, கி.பி. 10ம் நூற்றாண்டில் பெரிய கண்ணாடிக் கோளங்களில் தண்ணீரை நிரப்பிப் படிப்ப...