Tuesday 12 June 2018

SUN GLASSES AND READING GLASSES




SUN GLASSES AND READING GLASSES




பிரச்னையைத் தீர்க்க முடியாவிட்டால் சமாளி! இதுதான் பெரும்பாலான கண்டுபிடிப்புகளின் அடிப்படைத் தத்துவம். கிட்டப்பார்வை, தூரப்பார்வை போன்ற குறைபாடுகள் மனிதர்களை சிரமப்படுத்தியபோது, அந்தப் பிரச்னைகளை சமாளிக்கும் விதமாக உருவாக்கப்பட்டதுதான் மூக்குக் கண்ணாடி. துரதிர்ஷ்டவசமாக இந்த மூக்குக்கண்ணாடியின் கண்டுபிடிப்பாளர் யார் என்ற குறிப்புகள் எதுவும் இல்லை.

அலங்காரத்துக்காகப் பயன்படுத்தப்படும் கண்ணாடியின் பயன்பாடு கி.மு 15ம் நூற்றாண்டிலேயே எகிப்தியரால் தொடங்கப்பட்டுவிட்டது என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். அதன்பிறகு, கால மாற்றத்துக்கேற்ப பல்வேறு அவதாரங்களை எடுத்தது. இந்த பரிணாம வளர்ச்சியில் ஒளிபுகும் விதமாகவும், வெட்டும் விதமாகவும் கண்ணாடி மாற்றப்பட்டது பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

இதுதான் மூக்குக் கண்ணாடி வடிவமைப்புக்கும் பெரிதும் உதவியது. கையில் ஒரு பெரிய பூதக்கண்ணாடி வைத்துக்கொண்டு புத்தகம் படிப்பது போன்ற தந்தை பெரியாரின் புகைப்படத்தைப் பார்த்திருப்பீர்கள். இதே போல, கி.பி. 10ம் நூற்றாண்டில் பெரிய கண்ணாடிக் கோளங்களில் தண்ணீரை நிரப்பிப் படிப்பதற்காக லென்ஸ் போல பயன்படுத்தியிருக்கிறார்கள் (இப்போதும் தண்ணீர் நிரப்பப்பட்ட கண்ணாடி டம்ளரின் வழியே மற்ற உருவங்கள் பெரிதாகத் தெரிவதை உணர முடியும்).

இந்த பூதக்கண்ணாடியை மாட்டின் கொம்பு, மரச்சட்டம் போன்றவற்றில் பொருத்திப் பயன்படுத்தினார்கள். இந்த கண்ணாடிக்கு ரீடிங் ஸ்டோன் (Reading stone) என்று பெயரும் வைத்தார்கள். கி.பி. 11ம் நூற்றாண்டில் இத்தாலியின் வெனிஸ் நகர கண்ணாடி வியாபாரிகள், ரீடிங் கிளாஸை தயாரித்து விற்பனை செய்யத் தொடங்கினார்கள்.

ஒற்றைக் கண்ணை மூடிக்கொண்டு எவ்வளவு நேரம்தான் பார்ப்பது? இப்படி அடுத்த கட்டமாக யோசித்தபோதுதான் சிசர்ஸ் கிளாஸ்(Scissors glass) முறை உருவானது. ஒரு கத்திரிக்கோலின் இரண்டு முனைகளிலும் கண்ணாடிக் கோளங்களைப் பொருத்திவிட்டால், அதுதான் சிசர்ஸ் கிளாஸ். ஜார்ஜ் வாஷிங்டன், நெப்போலியன் போன்ற பிரபலங்கள் சிசர்ஸ் கிளாஸ் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

அதன்பிறகு, காதில் அணிந்துகொள்ளும் வகையில் வடிவம் பெற்ற கண்ணாடி, ‘மூக்குக் கண்ணாடி’ என்று பெயர் வாங்கிவிட்டது. இதை கி.பி. 1284ம் ஆண்டு, இத்தாலியை சேர்ந்த சால்வினோ டி அர்மேட் இரு பக்கமும் லென்ஸ் கொண்ட கண்ணாடியாக வடிவமைத்தார். அதனால், மூக்குக்கண்ணாடியின் கண்டுபிடிப்பாளர் என்று இவரைத்தான் சொல்கிறார்கள். இந்த கண்டுபிடிப்பை நவீனப்படுத்தி கி.பி. 1752ம் ஆண்டில் ஜேம்ஸ் ஐஸ்காஃப், இப்போது நாம் அணிந்திருக்கும் நவீன கண்ணாடியை பிரபலப்படுத்தினார்.

பார்வைக் குறைபாடு தவிர, வெயிலில் இருந்தும் கண்களைப் பாதுகாக்க வேண்டியிருக்கிறது என்பதற்காகவே, 1929ல், அமெரிக்காவின் சாம் ஃபாஸ்டர் சன் கிளாஸை வடிவமைத்தார். மூக்குக் கண்ணாடி தயாரிப்பு வெற்றி அடைந்ததன் தொடர்ச்சியாகவே மைக்ராஸ்கோப் கண்டுபிடிக்கப்பட்டு, அதன் தொடர்ச்சியாகவே பாக்டீரியாக்கள் போன்ற நுண்ணுயிரிகள் மனிதர்களை இம்சிப்பது கண்டுபிடிக்கப்பட்டது!










The inventor of the first spectacle lenses is unknown. Roman tragedian Seneca (4 BC -65AD) is said to have used a glass globe of water as a magnifier to read ''all the books of Rome''. It's been reported that monks in the middle ages used glass spheres as magnifying glasses to read.

The 13th century Venetians glass blowers are known to have produced reading stones made of solid glass that was put into hand-held, single lens-type frames made of horn or wood. These reading stones were similar to hand-held magnifying lenses of today.

Most historians believe that the first form of eyeglasses was produced in Italy by monks or craftsmen in Pisa (or perhaps Venice) around 1285-1289. These magnifying lenses for reading were shaped like two small magnifying glasses and set into bone, metal, or leather mountings that could be balanced on the bridge of nose.

The first known artistic representation of the use of eyeglasses was Tommaso da Modena's painting in 1352. His painting depicts monks reading and writing manuscripts. One monk uses a magnifying glass, but another wears glasses perched on his nose.

The first eyeglasses can only be used to rectify hyperopia and presbyopia. And those eyeglasses for myopia appeared much later, sometime in the early 1400's.

Eyeglasses History

The first vision aid, called a reading stone, was invented around 1000 AD. The reading stone was a glass sphere that was laid on top of the reading material to magnify the letters. The first wearable eye glasses were invented around 1284 in Italy. It is thought that Salvino D'Armate was their inventor.

Inventor of Glasses
Salvino D'Armate is most often credited with the invention of the first wearable eye glasses around 1284. The earliest glasses was prescribed for hyperopia and perched on the bridge of nose.Sunglasses as we know them today was invented in 1929 by Sam Foster. He made it utilizing the polarizing filter and sold it to the public in an Atlantic City Woolworths.



Later Developments of Glasses
In the 17th century people knew the principle of the concave and convex lenses. Eyeglasses can be produced with single lenses that correct for distance vision or up close, or they can be manufactured with multifocal lenses, which correct both distance and reading. Concave glass is used to correct nearsightedness, so that the rays of light are diverged. Convex lenses are used to aid the correction of farsightedness, so that the light rays are converged. Cylindrical lenses used to correct astigmatism were invented by Sir George Airy in 1825. Bifocal lenses can be used to treat with nearsightedness and presbyopia (with a lower part for viewing objects near at hand (as in reading)). They were the first devised by Benjamin Franklin in 1784.

Glasses 1

The first eyeglass frame temples were made by Spanish craftsmen in 1600's. They affixed ribbons of silk or strings to the frame and loop them over the user's ears. The new types of eyeglasses carried out to China by Spanish and Italian missionaries. Instead of making loops, the Chinese attached small metal weights to the strings. In 1730 Optician Edward Scarlett designed rigid temples that rest atop the wearer's ears.

Glass, plastic or polycarbonate are lens materials for glasses. Glass was the original material for spectacles because it has great optical clarity, but the glass lenses can be very heavy in stronger prescriptions. Plastic lenses are much lighter than glass but they are prone to easily being scratched. The lightest and thinnest lens material for glasses is polycarbonate, also called CR-39.

It is believed that approximately 64 percent of the adult population in America wear glasses while 20.5 million age 60 and over have cataracts.

Incorrect eyeglasses may do harm to your eyes, so lenses should be prescribed by an ophthalmologist or optometrist and made by a skilled optician.


















No comments:

Post a Comment