VIJAYA SHANTHI ACTRESS ,POLITICIAN
BORN 1966 JUNE 24
விஜயசாந்தி (பி: 24 சூன் 1966) ஒரு இந்திய திரைப்பட நடிகை மற்றும் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 2004இல் அரசியலில் சேருவதற்கு முன்னர் 186 திரைப்படங்களில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார். அதிரடி திரைப்படங்களில் நடித்ததன் மூலமாக இவர் தென்னிந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுகிறார். 1991ல் வெளியான கார்தவ்யம் திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான இந்திய தேசிய திரைப்பட விருதினை வென்றார். சிறந்த தெலுங்கு நடிகைக்கான பிலிம்பேர் விருதினை ஐந்து முறையும், ஆந்திர மாநில அரசின் நந்தி விருதினை நான்கு முறையும் வென்றுள்ளார். மேலும் தென்னிந்திய வாழ்நாள் சாதனையாளருக்கான பிலிம்பேர் விருதையும் வென்றுள்ளார்.
சிறுவயதில்[தொகு]
விஜயசாந்தி 1966 சூன் 24 அன்று சென்னையில் பிறந்தார்.[1] இவரது பெற்றோர் வரலட்சுமி, சீனிவாச பிரசாத் இருவரும் ஆந்திர மாநிலத்தின் கோதாவரி மாவட்டத்தின் ராஜமுந்திரியைச் சேர்ந்தவர்கள். ஆயினும் இவர்கள் ஆந்திராவின் வாராங்கல் மாவட்டத்தில் ராமாங்குடம் பகுதியில் (தற்போது தெலங்கானா) வாழ்ந்து வருகின்றனர்.[2] இவர் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்குவதற்கு முன்பு சென்னையில் ஹோலி ஏஞ்சல்ஸ் உயர்நிலைப் பள்ளியில் தனது பத்தாம் வகுப்பு கல்வியை பூர்த்தி செய்தார்.[3]
திருமண வாழ்க்கை[தொகு]
விஜயசாந்தி ஆந்திராவைச் சேர்ந்த எம். வி. சீனிவாச பிரசாத் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.[4]
பெங்களூர் சிறையில் சசிகலாவை சந்தித்த நடிகை விஜயசாந்தி பெங்களூர்: சசிகலா ஆதரவாளர் எனக் கூறப்படும் பிரபல நடிகை விஜயசாந்தி பெங்களூரு சிறைக்குச் சென்று அவரை ரகசியமாகச் சந்தித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சந்திப்பு சுமார் 40 நிமிடங்கள் நீடித்தது என்றும் அப்போது அதிமுகவில் நிலவும் குழப்பங்கள் குறித்து இருவரும் விவாதித்ததாகவும் கூறப்படுகிறது. விஜயசாந்தி தமிழக அரசியலில் ஈடுபட வேண்டும் என சசிகலா கோரிக்கை விடுத்துள்ளார் என்றும் இதை விஜயசாந்தி ஏற்றுக்கொண்டார் என்றும் தமிழக ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. தமிழக அரசியலில் ஈடுபடுவது குறித்து விஜயசாந்தி விரைவில் அறிவிப்பார் என்றும் அந்த ஊடகச் செய்தி மேலும் தெரிவிக்கிறது. இதற்கிடையே தினகரனையும் நேரில் சந்தித்து விஜயசாந்தி பல்வேறு விஷயங்களை விவாதித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பகைமையை தூண்டும்விதமாக பேசிய வழக்கில் பிரபல நடிகையும், தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி எம்.பி.யுமான விஜயசாந்தி கைது செய்யப்பட்டுள்ளார். ஹைதராபாத்தில் கடந்த புதன்கிழமையன்று நடந்த தமது கட்சித் தொண்டர்களின் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய விஜயசாந்தி, தெலங்கானா மாநிலம் அமைப்பதற்கு எதிரானவர்களை தெலங்கானா கட்சித் தொண்டர்கள் வெட்டி சாய்க்க வேண்டும் என்று பேசியதாக கூறப்படுகிறது. அவரது இந்த பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தி யதைத் தொடர்ந்து விஜயசாந்தி மீது மத, இன, பிறந்த இடம் அடிப்படையில் இரு குழுக்களிடையே பகை மையை ஏற்படுத்த முயன்றது உள்பட பல்வேறு பிரிவுகளின் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்னர்.
இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்வதற்காக நேற்று காவல்துறையினர் சென்றபோது, காவல்து றையினரை தடுத்து தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி தொண்டர்கள் கடும் ரகளையில் ஈடுபட்டதாக செய்தி வெளியாகி இருந்தது. இந்நிலையில், அவரை இன்று காவல்துறையினர் கைது செய்தனர்.
No comments:
Post a Comment