stock market -a story








stock market -a story


பங்கு வர்த்தகம் என்பது இதுதான் - 
எனவே அதன் அருகில் பலகீனமானவர்களே ! செல்லாதீர்கள்

ஒரு பணக்காரன் ஒரு கிராமத்திற்கு வந்து சொன்னான்...
வெளி நாடுகளுக்கு அனுப்ப ஏராளம் பாம்புகள் தேவை படுகிறது. நீங்கள் ஒரு பாம்பை பிடித்து தந்தால், 10 ரூபாய் தருகிறேன் என்றான். உடனே கிராம மக்கள் ஊரில் உள்ள பாம்புக்களை எல்லாம் பிடித்து கொடுத்து 10 ரூபாய் வீதம் வாங்கி கொண்டார்கள்.
ஊரில் உள்ள எல்லாப் பாம்புகளையும் பிடித்து விட்டதால் அதன் எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது.
அதனால் மக்களுக்கு அதில் இருந்த ஆர்வம் குறைந்து போய் விட்டது. உடனே அந்த பணக்காரர், இனி பாம்பை பிடித்து கொடுப்பவர்களுக்கு 25 ரூபாய் தருவதாக சொன்னார்.

அவர்கள் மீண்டும் உற்சாகமாகி தேடி தேடி பாம்பை பிடித்து கொடுத்தார்கள் .ஊரில் ஒன்று கூட மிச்சம் வைக்காமல் எல்லாப் பாம்புகளையும் பிடித்து விட்டதால் அதன் எண்ணிக்கை மிக மிக மிக குறைய ஆரம்பித்து பாம்பை பார்ப்பதே அரிதாகி விட்டதால் அதில் இருந்த ஆர்வம் குறைந்து போய் விட்டது.
அந்த பணக்காரர் விடவில்லை.

இப்போது 50 ரூபாய் தருவதாக அறிவித்தார். உடனே ஊரில் உள்ள மக்கள் அருகில் இருந்த காடு மலை சென்று ஒன்று விடாமல் பிடித்து கொடுத்தார்கள்.
இப்போது பாம்பே இல்லாத நிலையாகி விட்டது.
அவர் இப்போதும் விடவில்லை.எனக்கு இன்னும் அதிகபாம்புகள் தேவை. மேலும்பாம்பு கிடைப்பது அரிதாகி விட்டதால் 200 ரூபாய் தருவதாக அறிவித்தார்.
அதுமட்டுமல்லாமல் தான் அவசரமாக இன்னொரு தொழில் விஷயமாக மற்றொரு ஊர் செல்ல வேண்டும் என்பதால் ஒரு வாரத்தில் வந்து வாங்கி கொள்கிறேன். அதனால் உங்களால் முடிந்த அளவு பிடித்து கொண்டு வாருங்கள் என்று சொல்லி, நான் வரும் வரைக்கும் என் உதவியாளர் இங்கு இருப்பார் என்று சொல்லி சென்று விட்டார்.

அடுத்த நாள் அந்த உதவியாளர் ஊர் மக்களை கூப்பிட்டு..."மக்களே இங்கே பாருங்கள் நீங்கள் பிடித்து தந்த அனைத்து பாம்புகளும் இந்த கூண்டில் உள்ளது. நிச்சயமாக சொல்லுகிறேன் இந்த ஊரிலும் அதற்கு அருகில் எங்கேயும் பாம்புகளே இல்லை. அதனால் நான் ஒரு ஐடியா வைத்து இருக்கிறேன்.இந்த பாம்புக்களை எல்லாம் நான் உங்களுக்கு 75 ரூபாய்க்கு விற்கிறேன். அதன்பின் முதலாளி வருவதற்கு முதல் நாள் நான் அவசர அவசரமாக வெளியூர் செல்ல வேண்டி இருக்கிறது என்று அவருக்கு போன் மூலம் சொல்லி சென்று விடுகிறேன். அவர் வந்ததும், இதே பாம்பை நீங்கள்அவரிடம் 200 ரூபாய்க்கு விற்றுவிடுங்கள்" என்று சொன்னார்.

உடனே மக்கள் தங்கள் சேமிப்பில் இருந்த பணத்தையும் இருந்த நகைகளையும் விற்று அந்த பணத்தில் பாம்பை போட்டி போட்டுக் கொண்டு வாங்கி குவித்தார்கள். எல்லாப் பாம்பையும் விற்ற அந்த உதவியாளர் முதலாளி நாளை வருகிறார் அதனால் நான் இன்று போய் விடுகிறேன் என்று சொல்லி கிளம்பி சென்று விட்டார்.

அந்த நாளில் இருந்து இந்த நாள் வரை அந்த ஊர் மக்கள் அந்த முதலாளியையும் பார்க்கவில்லை..அந்த உதவியாளனையும் பார்க்கவில்லை....!

இப்போது அவர்களிடம் இருப்பது அந்த பாம்புகள் மட்டும்தான்....!

ஸ்டாக் மார்க்கெட் எப்படி செயல் படுகிறது என்பதற்கான விளக்கம் சரிதானா என்பதை தெரிந்தவர்கள் உறுதி படுத்தவும்...!

Comments

Popular posts from this blog

DACOITS OF CHAMBAL

List of Muhammad's Wives and Concubines

MAHARANI SITADEVI OF BARODA the "Indian Wallis Simpson" INTERESTING LIFE STORY OF HER