stock market -a story
stock market -a story பங்கு வர்த்தகம் என்பது இதுதான் - எனவே அதன் அருகில் பலகீனமானவர்களே ! செல்லாதீர்கள் ஒரு பணக்காரன் ஒரு கிராமத்திற்கு வந்து சொன்னான்... வெளி நாடுகளுக்கு அனுப்ப ஏராளம் பாம்புகள் தேவை படுகிறது. நீங்கள் ஒரு பாம்பை பிடித்து தந்தால், 10 ரூபாய் தருகிறேன் என்றான். உடனே கிராம மக்கள் ஊரில் உள்ள பாம்புக்களை எல்லாம் பிடித்து கொடுத்து 10 ரூபாய் வீதம் வாங்கி கொண்டார்கள். ஊரில் உள்ள எல்லாப் பாம்புகளையும் பிடித்து விட்டதால் அதன் எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது. அதனால் மக்களுக்கு அதில் இருந்த ஆர்வம் குறைந்து போய் விட்டது. உடனே அந்த பணக்காரர், இனி பாம்பை பிடித்து கொடுப்பவர்களுக்கு 25 ரூபாய் தருவதாக சொன்னார். அவர்கள் மீண்டும் உற்சாகமாகி தேடி தேடி பாம்பை பிடித்து கொடுத்தார்கள் .ஊரில் ஒன்று கூட மிச்சம் வைக்காமல் எல்லாப் பாம்புகளையும் பிடித்து விட்டதால் அதன் எண்ணிக்கை மிக மிக மிக குறைய ஆரம்பித்து பாம்பை பார்ப்பதே அரிதாகி விட்டதால் அதில் இருந்த ஆர்வம் குறைந்து போய் விட்டது. அந்த பணக்காரர் விடவில்லை. இப்போது 50 ரூபாய் தருவதாக அறிவித்தார். உடனே ஊரில் உள்ள மக்கள் அ...