VIDWAN VE.LAKSHMANAN , ASTROLOGER ,LYRICS ,STORY,DIALOGUE,PRODUCER BIOGRAPHY
VIDWAN VE.LAKSHMANAN , ASTROLOGER ,LYRICS ,STORY,DIALOGUE,PRODUCER BIOGRAPHY வித்வான் வெ.லட்சுமணன் [சோதிட வல்லுநர் | கவிஞர் | கதை, வசனகர்த்தா | தமிழ்ப் பண்டிதர் | பத்திரிகையாளர் | படத் தயாரிப்பாளர்] வித்வான் வே.லட்சுமணன்..... இந்த பெயரைக் கேட்டவுடன் உங்களுக்கு சட்டென என்ன தோன்றும்? பிரபல ஜோதிடராயிற்றே என்று தானே? அப்படி இவரை அவ்வளவு எளிதாக சுருக்கி விட முடியுமா? முடியாது என்கிறேன் நான். மக்கள் திலகம் எம்ஜிஆருக்கு ஆஸ்தான ஜோதிடர் என்பதைத் தாண்டி வே.லட்சுமணனுக்கு பல முகங்கள் உண்டு. கதை வசனக்கர்த்தா, திரைக்கதை ஆசிரியர், தயாரிப்பாளர், பாடலாசிரியர் என அவர் பயணித்த பாதை மிகப்பெரியது. எம்ஜிஆர் இயக்கத்தில் மகத்தான வெற்றி பெற்ற நாடோடி மன்னன் படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம் படத்தின் கதை, வசனம் தான். அப்படத்தின் கதை இலாகாவில் இருந்தது மூன்று பேர். ஆர்எம...