WORLD CINEMA - A HISTORY -WORLD THEATRE DAY
WORLD CINEMA - A HISTORY -WORLD THEATRE DAY `உலக சினிமா...!' - ஒரு குட்டி வரலாறு! கண் விழித்தபடியே ஒரே கனவை ஆயிரம்பேர் காண்பதுதான் சினிமா என்பார் பெர்டோலூசி. மனிதனுக்கு சிந்திக்க கற்றுக்கொடுத்தது சினிமா எனலாம். நல்ல திரைப்படங்கள் பல்வேறு மக்களின் வாழ்வியலை காட்டியது. அன்பைப் போதித்தது. ஒவ்வொரு காட்சியும் முழுமையடைந்து அது பிறவற்றுடன் இணையும்போது கூடுதல் அர்த்தம் பொதிந்ததாக மாறுகிறது. பொழுதுபோக்கிற்காக பார்த்தாலும் அதில் கூறும் கருத்தை யோசிக்கிறான். அவ்வாறான சினிமாக்களின் வரலாறும் உலகளவில் கவனம் பெற்ற திரைப்படங்களும் சில.. #முதல் திரைப்படம் பாரிஸ் நகரில் 1895-ம் ஆண்டு லூமியர் சகோதரர்களால் கிராண்ட்கபே எனும் ஹோட்டலின் கீழ்தளத்தில் முதல் திரைப்படம் திரையிடப்பட்டது. அதன் பிறகு ஜூலை 1896-ம் ஆண்டில் அதேபோல் பம்பாயில் முதலில் திரைப்படம் திரையிடப்பட்டது. இவ்வாறு படிப்படியாக வந்து இந்தியாவில் 1907-ம் ஆண்டு முதல் காட்சி படமாக்கப்பட்டது தாதா சாகேப் ஃபால்கே 1913-ல் தயாரித்த ராஜா அரிச்சந்திராவை கிராமம் கிராமமாக மாட்டுவண்டியில் எடுத்துச் சென்றாராம். அதற்கு அவர் கொடுத்த விளம்பரமாக.. `57000...