BANUMATHI RAMAKRISHNA BIOGRAPHY
BANUMATHI RAMAKRISHNA BIOGRAPHY தடைகளை உடைத்த வெற்றி! பதிமூன்று வயதில், இரண்டாம் நாயகி. 18 வயதில், கதாநாயகி, மணப்பெண். 21 வயதில், நட்சத்திர நாயகி, பாடகி மற்றும் ஒரு குழந்தைக்கு அம்மா. 22 வயதில், கதாநாயகி, பாடகி, 'ஸ்டோரி ரைட்டர்' மற்றும் தயாரிப்பாளர் என்று, அடுத்தடுத்த வளர்ச்சிகள். புது வெள்ளம் பாய்ந்து வரும்போது, பழசெல்லாம் அடித்துச் சென்று விடும். வெற்றி பேரலையில், 'இனி, பானுமதி நடிக்க மாட்டாள்...' என்ற தடை உத்தரவு, வெள்ளத்தில் அடித்துச் சென்றது. தடை போட்டவரே, நடிக்க வைத்து, இயக்கும் சூழல் உருவானது; விதி வலியது. பரணி நட்சத்திரத்தில், அழகு மகன் பிறந்த நேரம், தங்கள் வாழ்வில் செல்வமும், செல்வாக்கும் பெருகுவது கண்டு பெருமகிழ்ச்சி கொண்டனர். ஸ்வர்க்கசீமா கொடுத்த மாபெரும் வெற்றியை பயன்படுத்திக் கொள்ள, 'பானுமதி நடித்தால், படம் நன்றாக ஓடும். அவர், ராசியான நடிகை...' என்று, 'கால்ஷீட்' கேட்டு, தமிழ், தெலுங்கு இயக்குனர்கள் - தயாரிப்பாளர்கள் தேடி வந்தனர். 'நாமளே சொந்த பட கம்பெனி ஆரம்பிக்கலாமே... நீங்க,'டைரக் ஷன்' பண்ணுங்க...' என்று, புது ஐட...