Posts

Showing posts with the label இதயக்கனி

#இதயக்கனி

Image
  #இதயக்கனி மக்கள் திலகம் என்றென்றும் #இதயக்கனி   சத்யா மூவீஸ் தயாரிப்பில், ஏ.ஜெகன்னாதன் இயக்கத்தில் வெளிவந்த ப்ளாக்பஸ்டர் படம். ஐம்பதுகள், அறுபதுகள், எழுபதுகள் எந்த வருடமானாலும் மக்கள் திலகம் வசூல் மன்னன் என்பதனை மீண்டும் ஒரு முறை அழுத்தமாக நிரூபித்த படம்.    இலட்சங்களில் தயாரிக்கப்பட்ட இந்தப்படம் பாக்ஸ் ஆபீசில் சுமார் 2.5 கோடி வசூலை குவித்தது. இன்றைய மதிப்பில் இது கிட்டத்தட்ட 57 கோடிக்கு சமமாகும்.    தேயிலை எஸ்டேட் உரிமையாளரும், கடமை தவறா காவல் துறை அதிகாரியுமான மோகன் ((மக்கள் திலகம்)) ஒரு பொதுஉடமைவாதி. தன் எஸ்டேட்டில் வருகிற லாபம், செல்வம் அனைத்தையும் அனைத்து தொழிலாளர்களுக்கும் பொதுவில் வைத்து அவர்கள் அன்பை பெற்றவர். ஒரு நாள் தன்னை அடைக்கலமாக வந்தடைந்த லட்சுமி யை((ராதா சலூஜா)) தன் எஸ்டேட் வீட்டில் தங்க வைக்கிறார். பின் பெரியவர்களின் ஆசியோடு லட்சுமியை மணந்து கொள்கிறார்.    ஒரு புகழ் பெற்ற விஞ்ஞானி கொலையின் பின்னணியில் கொள்ளைக்கூட்டம் இருப்பதை தன் மேலதிகாரியின் மூலம் அறிந்து கொள்கிறார் மோகன். அந்த கொலைக்கான முக்கிய சந்தேகப்படும் குற்றவாளியாக தன் ...