U.R.JEEVARATNAM ,ACTRESS -SINGER BORN 1927 SEPTEMBER 14 - 2000 JULY 26
U.R.JEEVARATNAM ,ACTRESS -SINGER BORN 1927 SEPTEMBER 14 - 2000 JULY 26 யூ. ஆர். ஜீவரத்தினம் ( U. R. Jeevarathinam , 1927 செப்டம்பர் 14 [1] - 2000, சூலை 26) பழம்பெரும் தமிழ்த் திரைப்பட நடிகையும் பாடகியும் ஆவார். தமிழ், தெலுங்கு மொழிப் படங்களில் நடித்துள்ளார். வாழ்க்கைக் குறிப்பு [ தொகு ] தமிழ்நாடு ஈரோடில் சுப்பிரமணியம், குஞ்சம்மாள் ஆகியோருக்குப் பிறந்த ஜீவரத்தினம், அவரது 9வது வயதிலேயே சென்னையில் கிருஷ்ணையா நாடகக் கம்பனியில் சேர்ந்தார். பின்னர் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். ஜீவரத்தினம் கைலாச பாகவதர், குன்னக்குடி வெங்கட்ராமையர் போன்றோரிடம் பல ஆண்டுகள் முறையாக இசைப் பயிற்சி பெற்றார். 1937 ஆம் ஆண்டில் வெளிவந்த மாடன் தியேட்டர்சின் சதி அகல்யா என்ற படத்தில் தேவலோகப் பெண்ணாகத் தோன்றினார். தொடர்ந்து பத்ம ஜோதி (1937), தாயுமானவர் (1938), சந்தனத்தேவன் (1939), ராக யோகம், சதி மகானந்தா, உத்தம புத்திரன், சத்தியவாணி, பரசுராமர் (1940) போன்ற படங்களில் நடித்தார். பக்த கௌரி திரைப்படத்தில் இவர் பாடி நடித்த தெருவில் வாராண்டி வேலன்.. என்...