SHAKILA , DISAPPOINTED ABANDONED PERSON
SHAKILA , DISAPPOINTED ABANDONED PERSON உடான்ஸ் Vs உண்மை (பாகம் 4) கதாநாயகிகள் டூ பீஸ் உடையில் வந்தால்-முத்தக் காட்சியில் நடித்தால்- படுக்கையறை காட்சிகளில் நெருக்கமாக இருந்தால் அதை தைரியம் என்று பாராட்டித் தள்ளும் நாம்தான், சிலரை மட்டும் செக்ஸ் நடிகைகள் என்று தள்ளி வைத்துப் பார்க்கிறோம். அது ஒரு படப்பிடிப்புத் தளம். டைரக்டர் ‘ஆக்சன்‘ என்று கத்துகிறார். குளித்து முடித்து ஈரத்துணியுடன் தேகத்தை மெல்ல சிலிர்த்தபடி மாடிப்படியில் சில்க் ஸ்மிதா இறங்கி வருகிறார். கீழே வரும் சில்க் ஸ்மிதாவுக்கு கோப்பையில் காபி கொடுக்க அவரது தங்கை கேரக்டரில் நடிக்கும் 16 வயது பெண் தயாராக நிற்கிறார். சில்க் ஒவ்வொரு படியாக இறங்கி வருகிறார். சில்க்கிடம் ‘அக்கா காபி‘ என்று சொல்லியடி கோப்பையை அவரிடம் நீட்ட, அப்போது சில்க் அந்தப் பெண்ணின் முகத்தில் அறைவதுதான் காட்சி. சில்க் ஸ்மிதா நடந்து வரும் போது அவர் அணிந்திருந்த பேன்டீஸ் மிகத் தெளிவாக தெரிகிறது. கவனக் குறைவினால் அது நடந்துவிட்டதாக நினைத்த அந்தப் பெண், ஷாட் போய்க் கொண்டிருப்பதை பற்றிக் கூட கவலைப்படாமல் சில்கிமிடம், ‘எக்ஸ்க்யூஸ் மீ மேடம், ஐ கேன் சீ யுவர...