CHEMMEEN 1965 AUGUST 19 செம்மீன் 50 ஆண்டுகள் நிறைவு
19 ஆகஸ்ட் 1965: செம்மீன் 50 ஆண்டுகள் நிறைவு தேசத்தின் தென்முனையில் வாழும் மலையாள சினிமா மீது அழுத்தமான தாக்கத்தைச் செலுத்தின சத்தியஜித் ராய் படைத்த வங்காளத் திரைப்படங்கள். இதனால் ஆறுபதுகளின் ஆரம்பத்திலேயே மலையாள சினிமா கலையுணர்வின் வண்ணத்தை பூசிக்கொண்டது. நவீன மலையாள இலக்கியமும் செழித்து நின்ற அக்காலகட்டத்தில் ஓர் அசலான இலக்கியப் படைப்பு அங்கே திரைவடிவம் பெற்றது. அதுதான் தென்னிந்தியாவுக்கு முதல் ஜனாதிபதி விருதைப் பெற்றுத் தந்த ‘செம்மீன்’ திரைப்படம். தகழி எனும் தலைமகன் நவீன மலையாள இலக்கியத்தில் யதார்த்த வகை எழுத்தைத் தொடங்கி வைத்தவர் என்று புகழப்படும் தகழி சிவசங்கரன் பிள்ளை, ஒடுக்கப்பட்ட மற்றும் பட்டாளி மக்களுக்காக தன் படைப்புகளில் தந்த இடம் மலையாள இலக்கியத்தின் போக்கை யதார்த்தம் நோக்கித் திருப்பியது. இவரது ‘செம்மீன்’ நாவல் இந்தியாவின் சிறந்த இலக்கியப் படைப்புக்கான சாகித்ய அகாடமி விருதைப் பெற்றது. அதேபோல் யுனெஸ்கோவால் தேர்ந்தெடுக்கப்பட்ட செம்மீன் 50க்கும் அதிகமான உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியானது. இதனால் தகழி உலகப்புகழ் எழுத்தாளர் ஆனார். தமிழில் செம்மீன...