MERCHANT ROYAL DROWNED 1641 SEPTEMBER 23
MERCHANT ROYAL DROWNED 1641 SEPTEMBER 23 மெர்ச்சண்ட் ராயல் (Merchant Royal) ராயல் மெர்ச்சண்ட் என்றும் அழைக்கப்படுவது, 17ஆம் நூற்றாண்டின் ஆங்கிலேய வணிகக் கப்பலாகும். இது 1641 செப்டம்பர் 23அன்று கோர்ன்வால் கவுண்டியில், லாண்ட்'ஸ் எண்டில் கடலில் மூழ்கியது. இக்கப்பலில் (இன்றைய மதிப்பில் 1.5 பில்லியன் அமெரிக்க டாலர்) குறைந்தது 100,000 பவுண்டு தங்கம் [3], மெக்சிகன் வெள்ளிப் பாளங்கள் 400 (மேலும் 1 மில்லியன்) கிட்டத்தட்ட 500,000 எசுப்பானிய டாலர்கள் மற்றும் பிற நாணயங்கள், என அனைத்தும் சேர்ந்து இதை அனைத்து காலத்துக்காமான மிகவும் மதிப்புமிக்க மூழ்கிய கப்பலாக ஆக்கியது. [4] மர்ச்சன்ட் ராயால் 1637 முதல் 1640 வரை மேற்கு இந்திய தீவுகளில் எசுமானியக் குடியேற்றங்களில் மூன்று ஆண்டுகள் வணிகம் செய்தது. இக்காலகட்டமானது இங்கிலாந்துக்கும் எசுபானியாவுக்கும் அமைதியான நல்லுறவு நிலவிவந்தத காலமாகும். மேற்கு இந்தியத் தீவுகளில் வணிக நோக்கில் நங்கூரமிட்டிருந்தத மெர்ச்சண்ட் ராயல் மற்றும் அதன் தங்கைக் கப்பலாக, டோவர் மெர்ச்சண்ட், ஆகிய இரு கப்பல்களும் லண்டனை நோக்கிப் புறப்படும் வழியில் ஸ்பெயினின் காடிஸ...