Posts

Showing posts with the label INCA

Shabdkosh- NARAPALI -140 CHILDS KILLED 1450-1500 A.D IN PERU

Image
Shabdkosh பெரு: 550 ஆண்டுகளுக்கு முன் நரபலி கொடுக்கப்பட்ட 140 குழந்தைகள் பெரு நாட்டில் தொல்லியலாளர்கள் கண்டுபிடித்துள்ள நரபலிதான் உலக வரலாற்றிலேயே அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள் நரபலி கொடுக்கபட்ட சம்பவமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.550 ஆண்டுகளுக்கு முன்னால், பெருவின் வட பகுதியில் அமைந்துள்ள கடலோர பிரதேசத்தில், ஒரே சமயத்தில் 140 குழந்தைகளுக்கு மேலாக நரபலி கொடுக்கப்பட்டுள்ளது.முற்கால சிமு நாகரிக மையத்திற்கு அருகில் அமைந்துள்ள இன்றைய ட்ருஜிலோவுக்கு அருகில் இந்த நரபலி கொடுக்கப்பட்ட இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரே சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ள 200க்கு மேலான லாமா வகை ஒட்டகங்களும் இந்த குழந்தைகளோடு புதைக்கப்பட்டுள்ளன.தேசிய புவியியல் நிறுவனத்தின் நிதி ஆதரவோடு நடைபெற்றுள்ள இந்த ஆய்வின் கண்டுபிடிப்பு, இந்த நிறுவனத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது."நான் இதுபோன்றதொரு கண்டுபிடிப்பை ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. வேறு யாரும் கூட இந்த கண்டுபிடிப்பை எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்" என்று இந்த ஆய்வை தலைமையேற்று வழிநடத்திய ஜான் வெரானோ கூறியுள்ளார். 2011ம் ஆண்டு 3,500...

FRANCISCO PIZARRO WHO KILLED INCA KING ATAHUALPA LATER, ASSASINATED AT LIMA 1541 JUNE 26

Image
FRANCISCO PIZARRO  WHO KILLED INCA KING  ATAHUALPA  LATER ASSASINATED AT LIMA 1541 JUNE 26 1533 இன்கா பேரரசை முடிவுக்குக் கொண்டு வந்த பிரான்சிஸ்கோ பிசாரோ 1541 june 26 லிமாவில் கொல்லப்பட்டான். பெரு நாட்டிலிருந்த இன்கா பேரரசினை வெற்றி கொண்ட துணிச்சல் மிகுந்த ஸ்பானிய வெற்றி வீரர் பிரான்சிஸ்கோ பிசாரோ ஆவார். இவர் ஸ்பெயின் நாட்டில் ட்ருஜிலோ என்னும் நகரில் 1475 ஆம் ஆண்டில் பிறந்தார். இவர் கல்வி கற்கவில்லை. பல வகையிலும் இவரை ஒத்த வாழ்க்கையை கொண்டிருந்த ஹெர்னாண்டோ கோர்ட்டே போலவே இவரும் புகழும் பொருளும் தேடிப் புதிய உலகுக்கு வந்தார். இன்று ஹைட்டியும், டொமினிக்கன் குடியரசும் அமைந்துள்ள கரீபியத் தீவாகிய ஹிஸ்பானி யோலாவில் இவர் 1502 முதல் 1509 வரை வாழ் ந்தார். 1513 ஆம் ஆண்டில் வாஸ்கோ நூனஸ் டி பால்போவா என்பவரின் தலைமையில் சென்று பசிபிக் பெருங்கடலைக் கண்டுபிடித்த நாடாய் வுக் குழுவில் வரும் ஓர் உறுப்பினராக இடம் பெற்றிருந்தார். 1519 ஆம் ஆண்டில் இவர் பனாமாவில் குடியமர்ந்தார். 1522 ஆம் ஆண்டில் பிசாரோ 47 வயதை எட்டியிருந்தபோது, இன்கா பேரரசுக்குச் சென்று வந்த பாஸ்குவல் டி ஆண்...

MACHU,PICHCHU THE SECRET CITY OR SACRED CITY

Image
MACHU,PICHCHU  THE SECRET CITY  OR SACRED CITY குவியல் குவியலாய் பெண் சடலங்கள் பூகம்பத்துக்கும் அசராத கட்டிடங்கள்….. தென்அமெரிக்க நாடான பெருவில் காடுகள் மிகவும் பயங்கரமானவை. மலைகள், நதிகள்,பள்ளத்தாக்கு, அடர்ந்த மரங்கள், வழிமறிக்கும் கொடிகள், இலைச் சருகுகளுக்கு இடையே ஊர்ந்து மறையும் கட்டுவிரியன் பாம்புகள் என காட்சியளிக்கும் அந்த காட்டு வழியாக பயணிப்பது மிகவும் கடுமையானது. 1911ம் ஆண்டுஅமெரிக்காவில் உள்ள யேல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் பிங்காம், மர்ம போர்வை அணிந்திருந்த காட்டுக்குள் ஆய்வுக்காக நுழைந்தார். மண்டிக் கிடந்த புதர்களுக்குஇடையே, மலைச்சரிவுகளில் செதுக்கப்பட்ட தளங்கள்.. அதில் கற்களால் கட்டப்பட்ட பிரமிக்க வைக்கும் கட்டுமானங்கள் தெரிந்தன. உடனே அதை மீட்டெடுக்கும் பணியில் இறங்கினார். புதர்களை அகற்றி ஆய்வுகளை தொடங்கினார். பல நூற்றாண்டுகள் பராமரிப்பின்றி கிடந்தாலும் அவை சேதம் ஏதும் அடையாமல் பரிமளித்தன. நீண்ட ஆய்வுக்கு பிறகு மச்சுபிச்சு மலை அதிசயங்கள், அதில் மறைந்திருந்த ரகசியங்கள் குறித்து உலகுக்கு அறிவித்தார். பெரு நாட்டில் வாழ்ந்த இன்கா சாம்ராஜ்யம் வ...