CHITTOOR RANI PADMINI COMMITTED JUHAR 1303 AUGUST 26
CHITTOOR RANI PADMINI COMMITTED JUHAR 1303 AUGUST 26 உடன் பிறவாச் சகோதரியின் அழகை காண வந்திருக்கிறேன் என்று அலாவுதீன் கில்ஜீ சித்தூர் வந்த போது கலவரமான ராஜபுதனம் சற்றே பெருமிதமும் கொண்டது.தங்கள் ராணியின் பேரழகு டெல்லி பாதுஷாவரை எட்டியிருப்பதை நினைத்து வந்த பெருமிதமது.!பெரும் விபரீதம் அது என்பதை யாரும் அப்போது அறியவில்லை.! உபரிகையில் நின்ற ராணி பத்மினி பேரழகின் எதிரொளியை கண்ணாடியில் பார்த்த அலாவுதீன் உன்மத்தம் பிடித்தவன் ஆனான்.ராணியின் அழகு முறையற்ற,நெறியற்ற ஆசை நோக்கி அவனைத் தள்ளியது.மணமான மங்கை என்பதை மறந்தான்.மறுநாள் வேட்டையாட சிறு குழுவுடன் கிளம்பிய ரத்தன்சிங் டெல்லி பாதுஷாவால் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டான்."என்ன வேண்டும் நண்பா.?"என்ற கேள்விக்கு இடியாய் பதில் வந்தது. "என் அந்தப்புரத்தில் உன் மனைவி வேண்டும்.!"தீ யென திக்கெட்டும் பரவியது அலாவுதீனின் அறமற்ற ஆசை.உருகிய உலோகத்தின் கொதி நிலையில் ராஜபுதனம் சீறி சிவந்தது.வந்த அந்நியருக்கெல்லாம் பொன் கொடுத்த,பொருள் கொடுத்த,பூமியும் கொடுத்த இந்திய சரித்திரம் வெட்கி தலைகுனிந்தது.மணமான மங்கை...