WHY CONGRESS FELL DOWN
WHY CONGRESS FELL DOWN .தேவரய்யா சட்டமன்ற உறுப்பினராக சென்னையில் இருந்த நேரம். சசிவர்ணத் தேவரை அழைத்து ‘பாண்டியனூருக்குப் போய் காவிப் புடவையில் சிவப்புப் புள்ளி வைத்தபடி வாங்கிட்டு வா’ என்கிறார். சசிவர்ணத் தேவருக்கோ குழப்பம். யாருக்காக வாங்கிவரச் சொல்கிறார் என்று.போய் இரண்டு புடவைகளை வாங்கி வருகிறார். டாக்ஸி பிடித்து நேரே வீட்டுக்கு வருகிறார். தங்கையான இந்திராணி அம்மையாரிடம் ஒரு அம்மாளை அழைத்துவரச் சொல்ல – அவரும் வயதான பெண்மணியை அழைத்து வருகிறார். அவர் வந்ததும் சாஷ்டாங்கமாக அந்த அம்மையார் காலில் விழுந்து வணங்குகிறார் தேவர். கொண்டு வந்திருந்த காவிப் புடவைகளையும், பணத்தையும் கொடுக்கிறார். அந்த அம்மையார் – வீர வாஞ்சிநாதனின் மனைவி. எப்போது அவர் வந்தாலும் பணம் கொடுக்கச் சொல்கிறார். அவரின் பென்ஷனுக்காகச் சட்ட மன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுக்கிறார்; பென்ஷன் கிடைக்கவில்லை. விடுதலைக்குப் பிறகு வந்த காங்கிரஸ்காரர்கள் ஆதிக்க மனப்பான்மையில் இருந்தனர் என்பதற்கு ‘வாஞ்சிநாதன் பென்ஷன்’ ஒரு உதாரணம். அதனால்தான் 67ல் விட்டதை அவர்களால் 2007லும் பிடிக்க முடியவில்லை. இந்தத் தொடர் கொஞ்சம் த...