Posts

Showing posts with the label ( MACAULAY'S

மெக்காலே குறிப்புகள்( MACAULAY'S MINUTES)

Image
மெக்காலே குறிப்புகள்( MACAULAY'S MINUTES) ஒரு மனிதனுடைய வாழ்வில் இன்றியமையாத தேவைகளில் கல்வியும் ஒன்றாகிவிட்டது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கல்வியில் தலைசிறந்து விளங்கி உலகுக்கே அறிவு ஒளி காட்டிய தேசம் இந்தியா. நாளந்தா, தட்சசீலம் போன்ற பல்கலைக்கழகங்களில் லட்சக்கணக்கான வெளிநாட்டு மாணவர்கள் தங்கி தங்கள் அறிவாற்றலை வளர்த்துக் கொண்டு சென்றதற்கு ஆதாரமாக வரலாறே விளங்குகிறது. அத்தகைய புகழ்மிக்க இந்திய தேசத்தின் நவீன கால கல்வித் துறை கடந்து வந்த வரலாற்றை நாம் தெரிந்து கொள்ள இந்தக் கட்டுரை பயன்படும். குருகுலக் கல்வியும் பாடசாலைகளும் மதரசாக்களும் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி நம்முடைய தேசத்தில் ஆதிக்கம் பெறுவதற்கு முன்பு வரையிலும், நம் தேசத்தில் பாடசாலைகள், மதரசாக்கள் மூலம் கல்வி கொடுக்கும் முறையே பிரதானமாக இருந்தது. அந்தப் பாடசாலைகள் பெரும்பாலும் ஒரே ஆசிரியரைக் கொண்டு, பல்வேறு வயதுடைய மாணவர்கள் ஒன்றாக அமர்ந்து கல்வி கற்கும் வழிமுறையைப் பின்பற்றின. மேலும் மன்னர்கள், பிரபுக்கள், அரசு அதிகாரிகள் வீட்டுக் குழந்தைகள் அவரவர் வீடுகளுக்கே ஆசிரியரை வரவழைத்துப் பாடம் கற்றுக் கொண்டனர்....