BYZANDIUM DYNASTY - JUSTIN II BIOGRAPHY
BYZANDIUM DYNASTY - JUSTIN II BIOGRAPHY ‘‘எனக்கு அ... அடுத்து... அரியணை ஏ... ஏற வேண்டியது... ஜஸ்டின்!’’ கி.பி. 565 நவம்பர் 14 நள்ளிரவில் பைசாந்தியப் பேரரசர் முதலாம் ஜஸ்டினியன், தமது மரணப்படுக்கையில் கூறிய இறுதி வார்த்தைகள் இவை என்று நம்பப்படுகிறது. அதை உடனிருந்து கேட்ட ஒரே நபர், அரண்மனையின் தலைமை அதிகாரி பொறுப்பிலிருந்த கல்லினிகஸ். இந்த விஷயத்தை அவர்தான், பேரரசி தியோடோராவிடம் கொண்டு போய்ச் சேர்த்தார். 83 வயதுவரை வாழ்வாங்கு வாழ்ந்துவிட்டுத்தான் இறந்து போயிருக்கிறார் என்றாலும், ஜஸ்டினியனின் மரணம் பைசாந்தியப் பேரரசுக்கு பேரிழப்பே. காரணம், இவரின் 38 வருட ஆட்சிக்காலம், பைசாந்தியப் பேரரசின் பொற்காலம். இத்தாலியின் பெரும் பகுதி, பால்கன் பகுதிகள், ஸ்பெயினின் தெற்கில் ஒரு பகுதி, வட ஆப்ரிக்காவில் சில பகுதிகள் என்று பைசாந்தியப் பேரரசின் எல்லைகளை ஏராளமாக விரிவாக்கியவர் இவரே. ரோமானியச் சட்டங்களை நெறிப்படுத்தி, தன் ராஜ்ஜியத்தில் அமலுக்குக் கொண்டு வந்தவர். மத்தியத் தரைக்கடலைச் சுற்றி மீண்டும் வலுவான ரோமப் பேரரசை நிறுவ வேண்டும் என்பது இவரது பெருங்கனவு. அது அரைகுறையாக நிறைவேறுவதற்கு முன்பாக,...