ARUVI -MOVIE REVIEW
ARUVI -MOVIE REVIEW திசை மாறி பாய்ந்த 'அருவி' Posted by J.P Josephine Baba திரை விமர்சனம் சமீபத்தில் வெளி வந்த திரைப் படங்களில் அனைவராலும் கவரப்பட்ட படமாகும் ‘அருவி’. படத்தின் இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன், பாலுமகேந்திரா பட்டறையில் மாணவராகவும் கமர்ஷியல் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமாரின் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர். எடுத்து சொல்லும்படியாக அதிதி பாலன் எனும் புதுமுக நடிகை அறிமுகமாகி உள்ளார். தன்னுடைய மகிழ்ச்சி, விருப்பம், சுதந்திரம் என வாழ்க்கையை சுவாரசியமாக நகர்த்தும் ஒரு இளம் பெண்ணின் வாழ்க்கையில் எதிர்பாராத விதமாக நடக்கும் சம்பவத்தால்; தோழியுடன் இருசக்கிர வாகனத்தில் செல்லும் போது எதிர்பாரா விதமாக வழியில் விழுந்து விட தன்னை ஆசுவாசப்படுத்தி கொள்ள குடித்த இளநீர் ஸ்றா வழியாக எய்ட்ஸ் எனும் உயிர்கொல்லி நோயின் பிடியில் தாக்கப்பட கதை துவங்குகின்றது. தன்முன் இருந்த குடும்பம், கல்லூரி படிப்பு, சமூகம் என ஒவ்வொன்றாக புரக்கணித்து ஒதுக்கி தள்ள திசைமாறிய பறவையாக வழிமாறி,தனிமையிலும் கோபத்திலும் பின்பு சோகத்திலும்...