Showing posts with label 1801. Show all posts
Showing posts with label 1801. Show all posts

Thursday, 24 October 2019

MARUDHU PANDIYAR EXECUTED BY HANGING 1801 OCTOBER 24

MARUDHU PANDIYAR  EXECUTED 
BY HANGING  1801 OCTOBER 24

சிவகங்கை மண்ணின் வீரப் பெருமைகளையும் அரசி வேலு நாச்சியாரின், தன் நாட்டை மீட்க வேண்டுமென்ற வேட்கை மற்றும் அவருக்கு துணையிருந்தவர்களைப் பற்றிய முந்தைய கட்டுரையை  வாசித்துவிட்டு வந்தால், இந்த கட்டுரை மேலும் விறுவிறுப்பாக இருக்கும்.

ஆங்கிலேயர்களுக்கு எதிரான வீர முழக்கத்தை முதலில் உரைத்தவர் வீரர் புலித்தேவன் அவரை தொடர்ந்து, திப்பு சுல்தான், அவர்களுக்கு அடுத்தபடியாக அதே துணிச்சல் கொண்டவர்கள் மருதுபாண்டியர்கள் தான்.

ஆங்கிலேயரின் அதிநவீன ஆயுதத்திற்கு முன்னால் வேல்கம்பு, வீச்சரிவாள், மட்டுமே ஆயுதமாக வைத்திருக்கும் ஒருவனுக்கு ஆங்கிலேயரை “போருக்கு வா” என்று கேட்க தைரியம் வேண்டும். அந்த தைரியம் திப்பு சுல்தானுக்கு அடுத்தபடியாக மருபாண்டியர்களுக்கு மட்டும் தான் இருந்தது.

மருதுபாண்டியர் என்றால் வேலு நாச்சியாருக்கு துணையாக இருந்த படைத்தளபதிகளான மருது சகோதரர்களையே சாரும். இன்றும் சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு அருகிலுள்ள திருப்பத்தூரின் பேருந்து நிலையத்திற்கு எதிரில் அடையாளமாக மருதுபாண்டியரை தூக்கிலிடப்பட்ட இடம் என்று தனியாக சட்டம் கட்டிய ஒரு இடம் இருக்கும். அங்கு நமது காட்சிக்கு தெரிவது ஒரு கம்பமும், மருது பாண்டியரை தூக்கிலிடப்பட்ட இடம் என்ற கல்வெட்டு மட்டும் தான்.

அங்கு தான் மருது சகோதரர்கள் இருவரும் தூக்கிலிடப்பட்டனர். அதனை மையமாகக் கொண்டு தான் சிவகங்கை நகரத்தின் நகராட்சியே நகரத்தை வடிவமைத்துள்ளது.

பெரிய மருதுவின் மரண வாக்குமூலம்
“என்னுடைய வாரிசுகளைக் கம்பெனியார்களாவது எனக்கு விரோதிகளாவது யாதோர் இம்சையும் செய்யாமல் இருக்கும்படிக் கேட்டுக்கொள்கிறேன். முருகன் துணையாகவும் ஆகாசவாணி பூமாதேவி சாட்சியாகவும் நான் என் கழுத்தில் கயிறு போட்டுக் கொள்கிறேன். மேலே சொன்னபடி நீங்கள் கத்தியைப்போட்டுச் சத்தியம் செய்து கொடுத்ததை நான் நேரில் பார்த்துக்கொண்டேன்.”

இப்படிக்கு ஒப்பம் பெரிய மருது சேர்வை

மருது சகோதரர்களை அடக்கம் செய்ததும் நாம் இதுவரை கேட்டிராத முறையில் தான் நடைபெற்றது. அதாவது, மருதிருவரின்  இறுதி ஆசைக்கிணங்க தூக்கிலிடப்பட்டு இறந்த இருவரின் தலைகளை காளையார் கோயிலிலும், இருவரின் முண்டத்தை (உடல்களை) திருப்பத்தூரிலும் தனித் தனியாக அடக்கம் செய்திருக்கின்றனர்.

காளையார் கோயிலிலிருந்து 68 கி.மீ தொலைவில் நரிக்குடி என்னும் கிராமத்தில் உள்ள சத்திர வளாகத்தில் மருதிருவருக்கான சிலையெடுத்து மக்கள் இன்றும் வழிபட்டு வருகின்றனர். அந்த ஊர் மக்களின் பார்வையில் இவர்கள் கடவுளாகத் தெரிந்தாலும் உண்மையில் அவர்கள் தமிழ் மண்ணின் மூத்த சுதந்திர போராட்ட வீரர்களில் இருவர் என்பதையும் நாம் மறவாது இருக்க வேண்டும்.

மருதிருவர்களுக்கு சிலை எழுப்பத்தோன்றிய மக்களுக்கு, விவசாயிகளின் நலன் கருதி மருதிருவர்கள் வெட்டிய பல குளங்களையும், ஊரணிகளையும் காக்க தவறியது, மக்களின் அலட்சியம் தான் என்று கூறுவதை விட வேறு என்ன சொல்வதென்று தெரியவில்லை. வேலு நாச்சியாரோடு இணைந்து மன்னன் ஹைதர் அலி கொடுத்து உதவிய படைகளைக்கொண்டு சிவகங்கையை மீட்க போரிட்ட காலம் தொட்டு உண்மையிலேயே மக்கள் நலம் கருதி தான் சிவகங்கை நாட்டின் சட்டதிட்டங்களை ஏற்றியதோடு, நடைமுறைப்படுத்தினர். அது மட்டுமல்லாது ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய முதல் இரட்டை அரசர்கள் என்ற பெயரைப் பெற்றனர்.

Maruthupandiyar Memorial In Kalaiyar Koil (Pic: kaalaiyarkovil123)
அரசாட்சி
இவர்களின் ராஜ தந்திரத்தால் தான் சிவகங்கையின் அரசர்கள் ஆனார்கள் என்ற கருத்து ஒரு பக்கம் இருந்தாலும், அரசர்களாக இவர்கள் ஆற்றிய பணி என்று பார்க்கிறபோது, மொழி, கலை என்று அனைத்திற்கும் சிறப்பு செய்திருக்கின்றனர் என்று தான் சொல்ல வேண்டும்.

குன்றக்குடியில் அரண்மனை ஒன்றை கட்டியுள்ளனர். மருது பாண்டியர் அவையில் புலவர் குழு ஒன்றை அமைத்து, தமிழ்ச்சங்கம் மூலம் தமிழ் வளர்த்ததாகவும் கூறப்படுகின்றது. மயூரி கோவை என்ற கவிதை நூல் அரங்கேற்றப்பட்டுள்ளது.

மருது சகோதரர்கள் கலைகளை வளர்த்ததாகவும், அதற்கு சான்றாக காளையார் கோயிலைச் சுற்றியுள்ள சிறு கோயில்களின் சிற்பக்கலையையும், திருக்கோயில் திருப்பணியையும் குறிப்பிடுகின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு தேர் வழங்கியுள்ளார்கள். காளையார் கோயில் அருகே உள்ள சருகனியில் தேர் செய்து கொடுத்திருக்கிறார்கள்.

Warriors Maruthus (Representative Pic: youtube)
மருதிருவரை நெருங்கிய மரணம்

மருதிருவரின் மரணத்தருணம் தொடங்கியதே கர்னல் ஸ்டிரே காளையார் கோயில் ஊரை கைப்பற்றிய நாழிகையில் தான். சரியாக 1.10.1801 அன்று மும்முனைத் தாக்குதலில் காளையார் கோயில் விழுந்தது. அதாவது முற்றிலுமாக காளையார் கோயிலை ஆங்கிலேய ராணுவ கர்னல் ஸ்டிரே கைப்பற்றியதே மருதிருவரை குறிவைத்து தான். ஆனால் மருதுபாண்டியர் இருவரும் அவர் கையில் கிடைக்கவில்லை. அடுத்தக்கட்டமாக மருது பாண்டியர்களுக்கு வேண்டியவர், உறவினர்கள் என தேடித்தேடிக் கொலை செய்யப்பட்டனர். காளையார் கோயிலிலிருந்து வெளியேறிய மருதிருவர்கள் தனது படை வீரர்களோடு காடுகளில் மறைந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகின்றது. நிச்சயம் அவர்கள் இருவருக்கும் பயம் தொற்றிக்கொண்டிருக்க வேண்டும். இல்லையெனில் ஏன் மறைந்து வாழ வேண்டிய நிலை.

கர்னல் ஸ்டிரேவின் படையும் மருது பாண்டியர்களை தேடும் பொருட்டே செயல்பட்டனர். மருது பாண்டியர்களை கண்டுபிடித்துக் கொடுத்தால் ஏராளமான பொற்காசுகளும், அரசாங்கத்தில் பல நல்ல பதவிகளும் பரிசாக வழங்கப்படும் என்று அறிவித்தனர். மருது பாண்டியரின் படை வீரர்களில் சிலர் பரிசுக்கும், அரசாங்கப்பதவிக்கும் ஆசைப்பட்டு மருது பாண்டியரை ஆங்கிலேயருக்குக் காட்டிக்கொடுக்க முற்பட்டது சோகக்கதை தான்.

ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்

காளையார்மங்களம் கிராமத்தின் காடுகளில் மறைந்திருக்கின்றார்கள் மருதுபாண்டியர்கள் என்ற செய்தி, ஒரு ஒற்றன் மூலம் தெரிய, பரங்கிப் படைகள் பாய்ந்தன. ஆங்கிலேயர்களின் பெரும்படைக்கும் எஞ்சி இருந்த மருது படைக்கும் வாழ்வா, சாவா என்ற உணர்வோடு கூடிய போர் நடந்தது. பல நாட்கள் நல்ல தூக்கம்,உணவு இல்லாததால் காடு மேடு என்று ஓடியும் ஒளிந்தும் திரிந்ததால் மருது பாண்டியர்களின் உடல்கள் களைத்துப் போயின. தொடையில் குண்டடிப்பட்ட நிலையில் பெரிய மருதுவை மேஜர் அகன்யூ கைது செய்தார். சின்னமருதுவை காட்டிக் கொடுத்ததும் அவரிடம் முன்பு வேலைக்காரனாக இருந்த கரடிக் கறுத்தான் என்பவன் தான். நான்கு நாட்களுக்குப் பிறகு இருவரையும் 24.10.1801 அன்று மேஜர் அகன்யூ திருப்பத்தூர் கோட்டையில் தற்பொழுது பேருந்து நிலையத்திற்கு எதிரே உள்ள இடத்தில் முச்சந்தியில் இருக்கும் புளியமரத்தில் தூக்கிலிட்டனர். இந்தியாவில் ஆங்கிலேயர்கள் ஆட்சி புரிந்த போது, ஆங்கிலேயர்களின் பெருமைக்குரிய வெற்றிகளில் ஒன்றாக இதை அவர்கள் கருதினர் என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்தமாக மருதுவின் வீரர்களையும் சேர்த்து 500 பேர் தூக்கிலிடப்பட்டார்கள். இறந்தவர்களின் உடலை தலை வேறு உடல் வேறாக பிரித்து உடலை திருப்பத்தூர் வீதிகளில் உலவ விட்டுள்ளார்கள். தலைகளை நகர வீதிகளில் வேல் கம்புகளில் செருகி பார்வைக்கு வைத்துள்ளார்கள். நடந்த நிகழ்வுகளால் திருப்பத்தூரில் மக்கள் வெளிவரவே பயமுற்று இருந்துள்ளனர்.

காப்டன் பிளாக்பர்ன் தலைமையில் சாகோட்டை, எலவன் கோட்டை வழியாக கிழக்குப் பகுதியில் இராமநாதபுரத்திலிருந்து வருகை தரும் கூலிப்படையுடன் 30.9.1801 அன்று ஆறு வழிகளிலும் எழுபத்து இரண்டு மக்கள் தலைவர்களையும் நாடு கடத்த உத்திரவிட்டனர். ஈராயிரம் மைல் தொலைவில் உள்ள பெங்கோலோன் என்ற தீவில் கைதிகளாக வைத்திருக்க முடிவு செய்தனர். அதற்கு பிரின்ஸ் ஆப் வேல்ஸ் தீவு என பெயரிட்டனர்.

ஆறு வார காலக் கப்பல் பயணத்தில் 11.12.1802 ஆம் தேதி தூத்துக்குடி கொண்டு போய் சேர்க்கப்பட்டன. இவர்கள் அனைவரும் எண்பது நாட்கள் கையில் விலங்கிடப்பட்டவர்களாக கப்பலுக்குள்ளேயே அடைப்பட்டுக் கிடந்ததால் கப்பலைவிட்டு வெளியே காலடி வைத்து இறங்கி வருவதே அவர்களுக்கு மிகவும் சிரமமாக இருந்தது. அவர்களது உடல்நிலை மோசமாகவும், தெம்பு இல்லாதவர்களாகவும் காணப்பட்டனர். அதனால் வரும் வழியிலேயே  மூவர் இறந்துவிட்டனர்.

மாவீரன் வேங்கை பெரிய உடையத்தேவர் அதே கப்பலில் கொண்டு செல்லப்பட்டாலும், அங்கிருந்து சுமத்ரா தீவிலுள்ள பெங்கோலன் சிறைக்கு மாற்றப்பட்டு அங்குள்ள மால்பரோ கோட்டையில் தனிக் கொட்டடியில் அடைத்து வைக்கப்பட்டார்.

மருது சகோதரர்களை தூக்கிலிட்டதற்கு ஆங்கிலேயர்கள் கூறும் முக்கிய காரணம், மருது சகோதரர்கள், வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துரைக்கு அடைக்கலம் கொடுத்தது தான்.

மருது சகோதரர்கள் மரணித்த கதை கணத்தை இதயத்தோடு சில ஆங்கிலேயர்களே தனது டைரி குறிப்புகளில் தெரிவித்திருக்கின்றனர்.

Statues Of Maruthupandiyar (Pic: flickr)
கர்னல் ஜேம்ஸ் வேல்ஸ் தமது நினைவுகளில் ஓரிடத்தில் மருது சகோதரர்களின் வீழ்ச்சியைப் பற்றி கூறுகையில் சில மாதங்களுக்கு முன் இதே வழியாகச் சென்று வெள்ளை மருதுவின் விருந்தாளியாக இருந்துவிட்டு அதே பிரதேசத்தில் அவரது எதிரியாக மீண்டும் என்பதை நான் சிறிதளவுகூட அறியாததேயாகும் என்று தெரிவித்திருந்தார். மேலும் ஆங்கிலேயர்களை அனுசரித்து ஆட்சி செய்யாத காரணத்தினாலும் மருது பாண்டியர்கள் குறி வைக்கப்பட்டனர் என்று கூறியுள்ளார்.

மருது சகோதரர்களுடைய வீரமும், நாட்டை காலனியாக வைத்திருந்து ஆதிக்கம் செலுத்திய, வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு எதிரான அவர்களது போராட்டமும், இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தமிழனுடைய பங்களிப்புகளாக, ஒட்டுமொத்த தமிழகமும் நினைவுபடுத்தி பார்க்க வேண்டிய நிகழ்வு.

இன்று உலகமயமாக்களின் காலத்தில் அந்நிய நாட்டு ஊடுருவல்கள் சமூக, பொருளாதார, ராணுவ, பண்பாட்டு ரீதியான, சந்தை ரீதியான உறவுகளில் உள்ளே நுழையும் சூழலில், கடந்த காலங்களில் தமிழன் அஞ்சாமல் அந்நியரை எதிர்த்துப் போராடிய வரலாறுகளை நாம் நினைவுபடுத்தி பார்க்க வேண்டிய தேவை இருக்கிறது.

குழந்தை பருவம் : -

1748 ஆம் ஆண்டில் டிசம்பர் 15ஆம் தேதி உடையார்சேர்வை என்ற மூக்கையா பழனியப்பனுக்கும், ஆனந்தாயி என்ற பொன்னாத்தாளுக்கும் மகனாக இன்றைய விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டைக்கு அருகே உள்ள நரிக்குடியில் பெரிய மருது பிறந்தார். 5 ஆண்டுகள் கழித்து 1753-ல் சின்ன மருது பிறந்தார்.

அரச சேவை :-

சிவகங்கையில் விஜயரகுநாத சேதுபதி அரசராக இருந்தபோது, தகுதிவாய்ந்த இளவல்களை தேடியபோது, மருது சகோதரர்களை அனுப்பி வைத்தார்கள். 1761 ஆம் ஆண்டில் அவர்களை முத்து வடுகநாதரும், வேலு நாச்சியாரும் சிவகங்கை அழைத்து வந்தனர். வேட்டையாட சென்ற மன்னருக்கு உதவி செய்ய சென்ற மருது சகோதரர்கள், வேங்கையை எதிர்கொண்டு வீழ்த்தியதாகவும் வரலாறு உண்டு.

அரசி வேலு நாச்சியாருக்கு போர் பயிற்சியை கொடுத்தவர் சின்ன மருது என்றும் சொல்வார்கள். விஜயரகுநாத சேதுபதி மன்னன் சேது நாட்டை வென்றான். நாட்டை ஆளவந்த ஆங்கிலேயர்களின் தளபதி ஜோசப் சுமித் தஞ்சை மீது போர் தொடுத்தான். தஞ்சை மன்னன் ஆற்காடு நவாப்பிற்கு கப்பம் கட்ட ஒப்புக்கொண்டான்.

முத்து வடுகநாதர் மரணம் :-

ஆங்கிலேய படையுடன் புதுக்கோட்டை தொண்டைமான் படை உதவி செய்து ராமநாதபுரத்தை முற்றுகையிட்டது. அதன் பிறகு சிவகங்கை சீமையை கைப்பற்ற நவாப் சூழ்ச்சி செய்தான். முத்து வடுகநாதர் போரில் மரணமடைந்தார். வேலு நாச்சியாரை காப்பாற்ற மருது சகோதரர்கள் படை திரட்டுகிறார்கள்.

படை திரட்டல் :-

திண்டுக்கல் அருகே உள்ள விருப்பாட்சியில், ஹைதர் அலியை சந்திக்கிறார்கள். அவரது பாதுகாப்பில் வேலு நாச்சியாரை தங்கவைக்கிறார்கள். 1772 முதல் 1780 வரை தலைமறைவு வாழ்க்கை நடத்தி, மருது சகோதரர்கள் படை திரட்டுகிறார்கள்.

ஆற்காடு நவாப்பிற்கும், ஆங்கிலேயர்களுக்கும் எதிராக படை திரட்டும் மருது சகோதரர்கள் கட்டபொம்மன் தலைமையில், இணைப்பை ஏற்படுத்துகிறார்கள். ஹைதர் அலியின் உதவி அவர்களுக்கு கிடைக்கிறது. ஊமத்துரையும், சின்ன மருதுவும் நெருக்கமான நண்பர்களாகிறார்கள். சிவகங்கை காட்டுப் பகுதி கிராமங்களில், அடிப்படை மக்களுடன் இரண்டறக் கலந்து வாழத் தெரிந்த மருது சகோதரர்கள், சுதந்திரப் படையைத் திரட்ட முடிகிறது.

ஆட்சி மீட்பு :-

1772க்குப் பிறகு காட்டில் மறைந்து வாழ்ந்த மருது சகோதரர்கள் தமது கிளர்ச்சியை 1779ல் தொடங்கி ஆற்காடு நவாப், தொண்டைமான் மற்றும் கும்பினியர்களின் படைகளை வெற்றி கொண்டு 1780ல் சிவகங்கைச் சீமையை மீட்டு வேலு நாச்சியாரை மீண்டும் அரியணையில் அமர்த்தினர்.

இந்தப் போரில் பெரிய மருது மணலூர் வாயிலிலும், தளபதி சந்தனம் சேர்வை பூவந்தி வாயிலிலும், வேலு நாச்சியார் மேலூர் வாயிலிலும் முகாமிட்டு போரிட்டனர். அரசியாரின் போர் வியூகத்தையும், வீரத்தையும் வெளிப்படுத்தியது. மேற்கில் திண்டுக்கல்லிருந்து தக்க சமயத்தில் வந்த ஹைதர் அலியின் படையும் வெற்றிக்கு உதவியது.

வேலு நாச்சியார் மீண்டும் ஆட்சியில் அமர்ந்த விழாவிற்கு ஹைதர் அலி நேரில் வந்திருந்து வாழ்த்து கூறினார். மருது சகோதரர்களை அரச பிரதிநிதிகளாக வேலு நாச்சியார் அறிவித்தார். காளையார்கோவிலை சீரமைத்ததிலும், குன்றக்குடிய முருகன் கோவில், ஆவுடையார் கோவில், செம்பொன் நாதர் கோவில், சிங்கம்புணரி சேவக பெருமாள் கோவில் ஆகியவற்றின் சீரமைப்புகளையும் மருது சகோதரர்கள் செய்கின்றனர்.

மக்கள் பணி :-

குன்றக்குடியில் அரண்மனை ஒன்ற¨ கட்டியுள்ளனர். மருது பாண்டியர் அவையில் புலவர் குழு ஒன்றை அமைத்து, தமிழ்ச்சங்கம் மூலம் தமிழ் வளர்த்ததாகவும் கூறப்படுகிறது. மயூரி கோவை என்ற கவிதை நூல் அரங்கேற்றப்பட்டுள்ளது. பெரிய மருது பிறந்த நரிக்குடியில் அவர்கள் தாய் பொன்னாத்தாளுக்கு சத்திரம் கட்டப்பட்டுள்ளது. சகோதரர்கள் கலைகளை வளர்த்தனர். நாடகக் கலை வளர்ச்சி பெற்றுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு தேர் வழங்கியுள்ளார்கள். காளையார் கோவில் அருகே உள்ள சருகனியில் தேர் செய்து கொடுத்திருக்கிறார்கள்.

போர் :-

1799ஆம் ஆண்டு கயத்தாரில் அக்டோபர் 17ஆம் நாள் கட்டபொம்மன் ஆங்கிலேயரால் தூக்கிலப்படுகிறார். அதற்குப் பிறகு, வீரபாண்டிய கட்டபொம்மன் தம்பி ஊமத்துரைக்கு சின்ன மருது அடைக்கலம் தருகிறார். அதற்காகவே 1801 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள், சிவகங்கை மீது தாக்குதல்களை தொடுக்கின்றனர்.

முதலில் ஆங்கிலேயர்களிடமிருந்து போராடி 3 மாவட்டங்களை மருது சகோதரர்கள் மீட்கின்றனர். மருது பாண்டியர்களுடைய போர் திறமையை அடக்குவதற்காக, ஆங்கிலேயர்கள் இங்கிலாந்திலிருந்து அதிகமான படை பலத்தைப் பெற்று வந்ததாக ஒரு வரலாற்று செய்தி உண்டு. காளையார் கோவிலில் ஆங்கிலேயர்களுடைய படை மருது பாண்டியர்களுடைய படையை சுற்றி  வளைத்தனர் , ஆனால் மருது சகோதரர்கள் தப்பிவிட்டனர். 

விருப்பாச்சியில் ஆங்கிலேயர் படையுடன் மோதி, சகோதரர்கள் வென்றிருக்கிறார்கள் என்றும் சரித்திரம் இருக்கிறது. போர் வீரர்களாக மட்டுமில்லாமல், நிர்வாகத் திறமையையும் மருது சகோதரர்கள் நிரூபித்திருக்கிறார்கள். 1753லிருந்து 1801 வரை மக்களுக்கான நல்வாழ்வு திட்டங்களை செயல்படுத்தியிருக்கிறார்கள். பல்வேறு ஊரணிகளையும், குளங்க¨யும் கட்டியிருக்கிறார்கள். இன்றும் கூட அவை ஆதாரமாக அங்கே இருக்கின்றன.

ஆனால், இன்றைய நிர்வாகத்தினர், அவற்றை சரியாகப் பராமரிக்காத காரணத்தினாலும், தூர்வாரி ஆழப்படுத்தாத காரணங்களினாலும், அவை நீரை தேக்கி நிறுத்தி, வறட்சிக் காலங்களில் விவசாயிகளுக்கு பயன்படுத்துவதற்கு ஏதுவாக இல்லாமல் ஆகிவிட்டன. மருது சகோதரர்கள் காலங்களில் சிவகங்கை வட்டாரம், பசுமையாக இருந்தது என்று கூறுகிறார்கள். மருது சகோதரர்களும், அவர்களது குடும்ப உறுப்பினர்களும் சோழபுரத்தில் ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டு, 1801 ஆம் ஆண்டில் அக்டோபர் 24ஆம் தேதி தூக்கிலிடப்படுகிறார்கள்.

போர் களம் :- 

அவர்கள் ஆங்கிலேயர்களை எதிர்த்து நடத்திய போர் களங்களை, மனலூர் போர், திருப்புவனம் போர், முத்தனேந்தல் போர், காளையார் கோவில் போர், சிவகங்கை போர், மங்களலம் போர், மானாமதுரை போர், மானாமதுரை போர், திருப்பத்தூர் போர், பார்த்திபனூர் போர், காரான்மலை போர் என்று பட்டியல் போட்டு கூறுகிறார்கள்.

மரணம் :-

அக்டோபர் 24ஆம் தேதி தூக்கிலிடப்பட்ட மருது சகோதரர்கள், அவர்களது விருப்பப்படி காளையார் கோவில் கோபுரத்திற்கு எதிரே அடக்கம் செய்யப்பட்டனர்.

நாட்டிற்காக இன்னுயிர் ஈந்த மன்னர்கள் என்பதாக அவர்கள் வழங்கப்படுகிறார்கள். 2004 ஆம் ஆண்டு அக்டோபர் 24ஆம் நாள் மருது சகோதரர்களின் படம் கொண்ட அஞ்சல் தலை இந்திய அரசால் வெளியிடப்பட்டது.

முதல் சுதந்திரப் போர்:-

1857ஆம் ஆண்டைத்தான் வட இந்தியாவில், சிப்பாய் கலகம் நடந்ததையொட்டி, இந்திய முதல் சுதந்திரப் போர் என்பதாக பதிவு செய்யப்பட்டது.

ஆனால், அதற்கு 56 ஆண்டுகளுக்கு முன்பே 1801 ஆம் ஆண்டில் ஜூன் மாதம் 10ஆம் தேதி திருச்சியிலுள்ள ஸ்ரீரங்கம் கோவிலில் நின்றுகொண்டு, ஆங்கிலேயர்களுடைய ஆட்சிக்கு எதிராக சுதந்திரப் பிரகடனத்தை, மருது பாண்டியர்கள் அறிவித்தார்கள் என்ற செய்தி முக்கியமான ஒரு நிகழ்வு.

மேற்கண்ட நினைவு தினம், மருது சகோதரர்களை கதாநாயகர்ளாக்குவதற்கோ, அவர்களை வீரர்களாக்கிவிட்டு, நாம் கோழைகளாக நிற்பதற்கோ எடுத்துக்கொள்வது நியாயமான நினைவேந்தலாக இருக்காது.

மாறாக, நமது மூதாதையர்கள், தமிழ்நாட்டில் இந்த மண்ணை நேசித்தவர்கள், ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்துப் போரிட்டு மடிந்த கதைகள், நமக்கு இன்றும் கூட அந்நிய ஏகாதிபத்தியங்களின் ஊடுருவல்களும், ஆதிக்கங்களும் இருக்கின்ற சூழ்நிலையில், மீண்டும் மீண்டும் நினைவேந்தி தொடர்ந்து போராட உணர்வுகளை கூர்மைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே.

விவசாயத்தில், நிதி மூலதனத்தில், ராணுவத்தில் நுழைகின்ற அந்நிய கரங்களை, மீண்டும் ஒரு சுதந்திரப் போராட்ட உணர்வுகளுடன் கணக்கு பார்க்கத் தயாராக இருக்கிறோமா என்று அந்த நினைவு நாள் நம்மைக் கேட்கிறது.

மாமன்னர் மருது பாண்டியர்கள் இன்றைய விருதுநகர் மாவட்டம் நரிக்குடிக்கு அருகில் உள்ள முக்குளம் என்ற கிராமத்தில் வாழ்ந்த உடையார்த் தேவர் என்ற மொக்க பழநியப்பன் என்பவருக்கும் அவரது மனைவி ஆனந்தாயி என்ற பொன்னாத்தாள் என்பவருக்கும் மகனாக 1748ல் மகனாகப் பிறந்தவர் பெரியமருது பாண்டியர்.

ஐந்து ஆண்டுகள் கழிந்து 1753ல் சிறிய மருது பாண்டியர் பிறந்தார். பெரிய மருது பாண்டியர் வெள்ளை நிறத்துடன் இருந்ததால் வெள்ளை மருது பாண்டியர் என்ற பெயரும் உண்டு. பெரிய மருதுவைவிட உயரத்தில் சிறியவராக இருந்ததால் இளைய மருது சின்ன மருது பாண்டியர் என்ற பெயரும் உண்டு. மொக்க பழனியப்பர் சிறந்த பக்திமானாகவும் வீரராகவும் திகழ்ந்தார். இவர் சேதுபதி நாட்டின் தளபதியாக இருந்தார். சிறுவர்களான பெரியமருதுவும் சின்ன மருதுவும் எதற்கும் அடங்காதவர்களாகவும் விளையாட்டில் விருப்பம் உள்ளவர்களாகவும் இருந்தனர் . தாயார் பொன்னாத்தாள் அவர்களுக்கு வீரர்களின் வரலாற்றை சொல்லி துணிவையும் 
ஏற்படுத்தினார். அவர்கள் தொல்லைகள் பெருகவே, அவற்றைத் தாங்கமுடியாத தாயார் மொக்கைப் பழநியப்பருடன் சேதுபதிநாட்டிற்கு அனுப்பி வைத்தார். அங்கும் அவர்களின் தொல்லைகள் தொடர்ந்தன.இரவு வேளையில் கோட்டைக் கதவுகளை மூடி அவற்றிற்கு அணைவாக 5 அல்லது 6 பேர்கள் சேர்ந்து ஒரு பீரங்கியை குறுக்காக தள்ளி வைப்பது வழக்கம்.ஒருநாள் இரவு சிறுவர்களான பெரியமருதுவும் சின்னமருதுவும் அந்த பீரங்கியைத் தள்ளிவைத்து கோட்டைக் கதவுகளை திறந்து வைத்துவிட்டனர். யார் இதைச் செய்தது என்று அறியாத காவலர்கள் மறுநாள் இரவு கதவுகளை அடைத்துவிட்டு மறைந்திருந்து காத்துக்கிடந்தனர். நடு இரவில் மருது சகோதரர்கள் அந்தபீரங்கியைத் தள்ளிக் கதவுகளைத் திறந்தனர். மறைந்திருந்த காவலர்கள் அவர்களைப் பிடித்த பொழுது அவர்கள் தளபதி மொக்க பழநியப்பரின் மைந்தர்கள் என்றறிருந்து செய்வதறியாது திகைத்தனர். மொக்க பழநியப்பர் வெளியூர் சென்றிருந்ததால் காவலர்கள் அரசரின் கவனத்திற்கு அந்த நிகழ்ச்சியைக் கொண்டு சென்றனர். பயந்தனர். எனினும் சேதுபதி அரசர் சிறுவர்களின் பலத்தையும், புத்திசாலித்தனத்தையும், அஞ்சாமையையும் கண்டு வியந்தார், மொக்க பழநியப்பர் ஊருக்கு திரும்பிய பொழுது, அந்த செய்திக் கேட்டு என்ன செய்வது என்று திகைத்திருந்தார். அரசர் அழைக்கவே, தளபதி அவரைச் சந்தித்தார். சிறுவர்களின் வீரத்தை மெச்சி புகழ்ந்ததோடு, அவர்களுக்கு சூரக்கோட்டையில் சிறந்த போர் பயிற்சிக்கு ஏற்பாடு செய்தார். தந்தையின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. பயிற்சிக்குப் பின் அவர்களை அரண்மனைக் காவல் பணியில் அரசர் அமர்த்தினார்.

மருது பாண்டியர்கள் சிவகங்கை சீமைக்கு வந்த விதம
ஒரு நாள் அரசர் விசயரகுநாத கிழவன் சேதுபதி வேட்டைக்கு சென்றுவிட்டு ஆறுமுகக் கோட்டையில் தங்கி இருந்தார். அப்பொழுது சிவகங்கைச் சீமையின் அரசரும் தனது மருமகன் முத்து வடுகநாதத் வேரும், அரசி வேலுநாட்சியாரும் அங்கு வந்தனர். தமது அரசியல் அமைச்சரான தாண்டவராய பிள்ளைக்கும், தளபதியான சுப்பிரமணியத் தேவருக்கும் வயதாகி விட்டதாகவும் , அவர்களுக்குப் பின்பு நாட்டைத் திறமையுடன் ஆளத் தகுதிவாய்ந்த இளவல்களை சேது நாட்டிலிருந்து அனுப்பினால் தக்க பயிற்சி கொடுத்து நியமிக்கலாம் என்று அரசர் முத்துவடுகநாத தேவர் கோரிக்கை விடுத்தார். அதனை ஏற்று, அனைத்துத் தகுதிகளையும் பெற்றுத் தனது மதிப்பிற்குப் பாத்திரமாகத் திகழ்ந்த மருதுபாண்டியர் சகோதர்களை அனுப்பலாமென்று விசய இரகுநாத அரசனின் தளபதி மொக்க பழனியப்பனிடம் தமது விருப்பத்தைச் சொன்னார். அவரும் அவர்களைச் சிவகங்கை அரசரிடம் ஒப்படைத்து அழைத்து செல்லுமாறு கூறினார். இளவல்களைக் கண்ணுற்ற முத்துவடுக நாதரும் வேலு நாட்சியாரும் சிறிது ஐயத்துடன் அவர்களை சிவகங்கைக்கு அழைத்து வந்தனர். இது 1761 ம் ஆண்டில் நடந்தது.தொடரும் . . . . . . . .

வீரமும் திறமையும் வெளிப்படுதல
சிவகங்கைச் சீமையின் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் தேர்ந்த வீரமும், பண்பும், சிறந்த பக்கியும் , மக்கள் நலம் பேணும் குணமும் கொண்டு நாட்டை ஆண்டு வந்தார். அவரது ஆட்சிக் காலத்தில் நாட்டில் பஞ்சமின்றி, பயமின்றி வளமுடன் நாட்டு மக்கள் வாழ்ந்து வந்தனர். வேலு நாச்சியாரோ சிறந்த பக்தை, போர் பயிற்சி பெற்றவர். பலமொழிகளைக் கற்றவர். இலக்கிய புலமை பெற்றவர், ஆங்கிலம் அறிந்தவர். மதிநுட்பமிக்கவர். மன்னருக்கு சிறந்த அரசியல் ஆலோசனைகளை வழங்கி வந்தார். வனப்பகுதிகள் நிறைந்து அரணாக நின்ற காளையார் கோவிலில் தான் கோட்டையும் இதற்கு ஒரே ஒரு கோட்டை வாயில்தான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அரசர் முத்துவடுகநாதத் தேவர் இந்த காளையார் கோவில் காட்டில் தான் வேட்டையாடும் பழக்கம் உள்ளவர். அந்த மாதிரி ஒரு வேட்டைக்குச் செல்லும் பொழுது மருது சகோதரர்களும் உடன் அழைத்துச் செல்லப்பட்டனர். பல மிருகங்களை வேட்டையாடிக் கொன்றனர். வேங்கை ஒன்று அரசர் மீது பாய்ந்தது , சின்ன மருதுகுறுக்கில் பாய்ந்து வேங்கையுடன் கட்டிப் புரண்டார். சின்ன மருதுவின் தாக்குதலால் வேங்கைப்புலி புதர் மறைவில் ஓடி மறைந்தது. அடிப்பட்ட புலி சும்மா இருக்காது என்பதை உணர்ந்த பெரிய மருது சமயம் பார்த்திருந்தார். திடீரென வேங்கையின் வாலைப் பிடித்திழுத்து தலைக்குமேல் சுழற்றி தரையில் ஓங்கி அடித்தார் பெரிய மருது. பிறகு அதன் வாயைப் பிளந்து கொன்றார். அந்த நிகழ்ச்சி நடந்த இடம் தான் புலியடி தம்மம் என்று இன்று அழைக்கப்பட்டு வருகிறது. இதில் நெகிழ்ந்து போன அரசர் சிறுவயல் என்ற கிராமத்தை பெரிய மருதுவிற்கும் புலியடி தம்மம் என்ற கிராமத்தை சின்ன மருதுவிற்கும் அளித்து பெருமை செய்தார். இவர்கள் அந்தந்த பகுதியில் சமீன்தார்களாக 1769 ஆண்டில் இருந்தனர். அந்தச் சமயத்தில் தான் சருகணி மாதா கோவிலுக்கு பெரிய மருது சமீன்தார் என்ற முறையில் தேர் ஒன்றை வழங்கியதாகச் செய்தி உள்ளது. இந்த நிலையில் தான் பிரதாணி தாண்டவராயப் பிள்ளை மற்றும் தளபதி சுவப்பிரமணியத் தேவர் ஆகியோர்கள் வயது முதிர்ந்தனர். அவர்களிடம் பயிற்சி பெற்ற பெரிய மருதுவை தளபதியாகவும் ,மதிநுடட்பம் நிறைந்த சின்னமருதுவை அமைச்சராகவும் அரசர் முத்து வடுகநாதர் நியமித்தார். அரசி வேலு நாச்சியருக்கு சிறந்த முறையில் போர் பயிற்சியைத் தந்தவர் சின்ன மருதாவார். தொடரும் . . . . .. 

முத்து வடுகநாதரின் இறப்பும் அரசி வேலு நாச்சியாரின் பரிதவிப்பு
சேது நாட்டரசர் விசயரகுநாத சேதுபதி 1762ல் காலமானார். அவரது சகோதரியுடன் 2 வயது மகன் ஆட்சிக் கட்டிலில் அமர்த்தப்பட்டான். முத்துவை நாட்சியார் தளபதி வெள்ளையன் சேர்வை, அமைச்சர் தாமோதரன் பிள்ளை ஆகியோர்களின் ஒத்துழைப்புடன் சேது நாட்டின் ஆட்சி நடந்து வந்தது.
இதற்கிடையில் தளபதி காலமானார். தாமோதரன் பிள்ளை, தஞ்சை மன்னன் 1770ம் ஆண்டு சேது நாட்டுடன் போர் தொடுத்ததில் போர்காலத்தில் கொல்லப்பட்டார். சேது நாடு தஞ்சை மன்னன் வசமானது. தஞ்சை மன்னன் இவ்வாறு போர்தொடுத்து சேது நாட்டை தனதாட்சியின் கீழ் கொண்டு வந்ததை வெறுத்து நேரம் பார்த்திருந்தான். ஓராண்டு கழித்து ஆங்கிலேய தளபதி ஜோசப் சுமித் என்பவன் தலைமையில் தனது படையுடன் தஞ்சை மீது போர் தொடுத்தது. ஈடுகொடுக்கமுடியாத தஞ்சை மன்னன் ஆர்காட்டு நவாப்பிற்கு கப்பம் கட்டவும் பிடிப்பட்ட சேது நாட்டுப் பகுதிகைளத் திருப்பித் தரவும் ஒத்துக் கொண்டான். அதற்கு அடுத்த ஆண்டில் ஜோசப் சுமித் நவாப்பின் படை, புதுக் கோட்டைத் தொண்டைமான் படை உதவிஞடன் இராமநாதபுரத்தை முற்றுகையிட்டு வெற்றி கொண்டான். அரச குடும்ப வாரிசுகளைச் சிரைப்படுத்தி திருச்சிராப்பள்ளிக்கு கொண்டு சென்றான். அதன் பிறகு மீதமிருந்த சிவகங்கைச் சீமையைக் கைப்பற்ற நவாப்பு விரும்பினான். இதை சூழ்ச்சி முறையில் செய்து முடிக்க திட்டமிட்டான். ஏனெனில் ஆரக்காட்டு நவாபுடன் நட்புடன் அரசர் முத்துவடுகநாதர் இருந்து வந்தார்.
வஞ்சகத் திட்டம் ஒன்றை நாவபு தீட்டினான். இதையறியாத நிலையில் அரசர் முத்துவடுகநாதர் தனது இளைய ராணியுடன் காளையார் கோவில் காட்டிற்கு வெட்டையாடச் செல்கிறார் . ராணிவேலுநாட்சியார் கர்ப்பிணியாக இருந்ததால் கொல்லங்குடியில் தங்குகிறார். அன்றைய தினத்தில் நவாப்பின் படை கர்நாடக பட்டாளியனுடன் மங்கலம் நோக்கி வருவதாக ஒற்றன் மூலம் செய்தியறிந்த பெரிய மருது மங்கலம் சென்று அப்படைகளுடன் போரை எதிர் கொள்கிறார். இதனால் வெற்றி கிட்டாது என்பதை அறிந்து கொண்ட நவாப்பு மற்றொரு பிரிவு படையை கயவன் ஒருவன் உதவியுடன் குறுக்கு வழியில் காளையார் கோவில் கோட்டையை முற்றுகையிடுகிறான். நடு இரவில் இந்த படையெடுப்பை கோட்டை வீர்கள் எதிர்த்துப் போராடுகின்றனர். உறக்கத்திலிருந்த அரசர் முத்துவடுகநாதர் எழுந்து சீறிப் பாய்ந்து போரிடுகிறார். வஞ்சகத்தால் ஏற்பட்ட போரில் அவரும் அவரது இளைய ராணியும் கொள்ளப்படுகின்றனர். உயிர் சேதம் அதிகம். சின்னமருதுவை இச்செய்தி திகைக்க வைக்கிறது. உடனே கொல்லன் குடியில் தங்கியிருந்த வேலுநாட்சியாரைக்காப்பற்ற துரித நடவடிக்கை மேற்கொண்டார் மங்கலத்தில் போர் செய்துக் கொண்டிருந்த பெரிய மருதுவும் , வேலு நாச்சியாரைக் காப்பாற்றவும் சிவகங்கைச் சீமையைக் கைப்பற்றவும் ஆலோசனை செய்கின்றனர். முதலில் அரசியைக் காப்பற்றவேண்டும். பிறகு ஆங்காங்கே இரகசியமாக படைதிரட்டி நாட்டைப் பிடிப்பது என்று முடிவு செய்கின்றனர். அதற்கு ஒரே வழி திண்டுக்கல் விருப்பாட்சியில் உள்ள நண்பர் ஹைதர்அலியுடன் பாதுகாப்பைக் கோருவதென்று விருப்பாச்சிக்கு இரவோடு இரவாக காட்டு வழியில் சென்று ஹைதர்அலியைச் சந்தித்து நடந்தவற்றை எடுத்துச் சொல்கின்றனர். பதட்டமும் கோபமும் கொண்ட ஹைதர்அலி வேலுநாச்சியாரை தனது சகோதரியாக்கி பாசத்துடன் பாதுகாப்பு வழங்கினார். பெரிய மருதுவும் சின்ன மருதுவும் சிறிது இளைப்பாருதலுக்கு பின்பு இரகசியமாக படைத்திரட்டும் பணிக்கு சிவகங்கை கிராமங்களை நோக்கி புறப்பட்டனர். 1772 முதல் 1780 வரை மறைவு வாழ்க்க நடத்தும் நிலை ஏற்பட்டது. அதற்காக அரசிவேலு நாச்சியார் பட்ட மனவேதனைகள் பல. விருப்பாட்சியில் தங்கி இருந்த பொழுது தான் ஒரு பெண் மகவை அரசி பெற்றெடுத்தார். வெள்ளட்சி என்ற பெயர் சூட்டி மகிழ்ந்தார். ஒரு சகோதரன் செய்ய வேண்டிய அனைத்து உதவிகளையும் அரசிக்கு ஹைதர்அலி செய்து கொடுத்தார்.
இந்த காலக் கட்டத்தில் மருது சகோதரர்களின் தீவிரவாதத் திட்டம் 3
விருப்பாட்சியில் ஹைதர்அலியின் பாது காப்பில் அரசி வேலுநாச்சியாரை வைத்த மருது சகோதரர்கள் ஆரக்காடு நாவப்பிற்கும், கும்பினியார்களுக்கும் எதிராக தீவிரவாதப் படைகளைத் திரட்டும் பொருட்டு செயல்திட்டம் ஒன்றை ஹைதர்அலியடன் கலந்தாலோசித்து முடிவு செய்தனர். அத்திட்டப்படி தெற்கே உள்ள பாளையக்காரர்களை வீரபாண்டிய கட்ட பொம்மன் தலைமையில் தூத்துக்குடி வரை ஒன்றுபடுத்தி நவாப்பிற்கும் கும்பினியார்களுக்கும் எதிராகச் செய்லபடுத்துவது என்ற முடிவாகியது. சிவகங்கை சீமை மக்களை அங்குள்ள காட்டுப் பகுதியில் ஆங்காங்கே கும்பினியர்களுக்கு எதிராக தீவிரவாதத்தை அளிப்பது என்றும் முடிவாயிற்று. இதற்கு தனது பங்கிற்கு படை வீரர்களையும் குதிரைகளையும் வேண்டும் பொழுது தருவதாக ஹைதர்அலி உறுதியளித்தார். இது அவரது நாட்டுப் பற்றை வெளிப்படுத்தியது.இதனை செயல் திட்டமாக்க ஹைதர்அலி விருந்துஒன்றுக்குஏற்பாடு செய்து அதில் ஊமத்துரையை கலந்து கொள்ள வைத்தான். மருதுவைப் போன்ற மதிநுட்பமும், வீரமும் கொண்ட ஊமைத்துரையும் சின்னமருதுவும் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு நண்பர்களாயினர். விருந்திற்கு பிறகு மருது சகோதரர்கள் சிவகங்கை காட்டுப் பகுதி கிராமங்களில் செயல்பட்டு வந்த கும்பினியர் எதிர்பாளர்களுக்கு பயிற்சி அளிக்க உடன் புறப்பட்டனர். மருது சகோதரர்கள் தாம் சாதரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்த காரணத்தால் கீழ் மட்ட மக்களின் மனதைக் கவர்ந்து அவர்களைத் தங்கள் செயல்திட்டத்திற்கு ஆட்கொள்வதில் எளிதில் வெற்றி கண்டனர். காட்டுப் பகுதியில் ஆயுதம் தயாரிக்கும் பட்டறைகளை நிறுவினர். சிறந்த வீர்களைத் தேர்ந்தெடுத்துப் போர் பயிற்சி அளித்தனர். உளவுப் படை வீர்களைத் தயார் செய்து நவாப், தொண்டைமான், கும்பினியர் ஆகியோர்களின் போர் நடவடிக்கைகளை உடனுக்குடன் அறிந்து கொண்டு செயல்பட்டனர். மருதுசகோதரர்களோ மக்களோடு மக்களாக ஒன்றாகக் கலந்து செயல்பட்டதால் மக்களும் உற்சாகத்துடன் நாட்டை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். மக்களின் இந்த நிலை ஏனைய பாளையங்களிலோ, அரசாட்சிகளிலோ இல்லை எனலாம்.
சிவகங்கைச் சீமை மீட்பு - 41772க்குப் பிறகு காட்டில் மறைந்து வாழ்ந்த மருது சகோதரர்கள் தமது கிளர்ச்சியை 1779ல் தொடங்கி ஆர்க்காட்டு நவாப், தொண்டைமான் மற்றும் குப்பினியர்களின் படைகளை வெற்றிக் கொண்டு 1780ல் சிவகங்கைச் சீமையை மீட்டி வேலுநாச்சியாரை மீண்டும் அரியணையில் அமர்த்தினர். இந்தப் போரில் பெரியமருது மணலூர் வாயிலிலும், தளபதி சந்தனம் சேர்வை பூவந்தி வாயிலிலும், வேலுநாச்சியார் மேலூர் வாயிலிலும் முகாமிட்டு போரிட்டது. அரசியாரின் போர் வியூகத்தைத்தையும் வீரத்தையும் வெளிப்படுத்தியது. மேற்கில் திண்டுக்கல்லிலிருந்து தக்க சமயத்தில் வந்த ஹைதர்அலியின் படையும் வெற்றிக்கு உதவியது. வேலுநாச்சியார் மீண்டும் ஆட்சியில் அமர்ந்த விழாவிற்கு ஹைதர்அலி நேரில் வந்திருந்து வாழ்த்துக் கூறினார்.

மருது பாண்டியர் ஆட்சிப் பொறுப்பு
அரசி வேலுநாச்சியாருக்கு ஆண் மகவு இல்லை. மேலும் அவர் அடிக்கடி நோய்பட்டிருந்தார் மனம் நொந்த நிலையில் இருந்தார். ஆண் வாரிசு இல்லாத தனது அரசுக்கு தனத தாதையர்களும் கும்பினியாரும் தொல்லை கொடுக்கக் கூடும் என்பதை உணர்ந்து சிவகங்கைச் சீமையை தனது கணவர் முத்துவடுகநாதருக்கும், தனக்கும் போர்காலங்களிலும், நிர்வாகத்திலும் உறுதுணையாக நின்ற மருது சகோதர்களிடம் ஒப்படைக்க முன்வந்தார். தளபதி சந்தன ராசாவும் அதற்கு இசைவு தந்தார். தனது ஆபத்துகால நண்பனான ஹைதர்அரலியின் விருப்பத்துடன் செய்வதாக வேலு நாச்சியார் கூறினார். அதற்கு மருது சகோதரர்கள் எப்படி தாதாதையர்கள் ஏற்பர் என்று வாதிட்டனர்."எனது மறைவிற்குப் பிறகு நாடும், மக்களும் நிம்மதியாகவும் வளமாகவும் வாழ வேண்டுமென்ற நல்லெண்ணத்தில் தான் இந்த முடிவை எடுத்துள்ளேன். நீங்கள் அரசர்களாக வேண்டாம், அரசின் பிரதிநிதிகளாக இருந்து ஆட்சியை நடத்துங்கள்"என்று கூறி சம்மதிக்க வைத்தார். உடனே அரண்மனை விழாக்கோலம் காண ஏற்பாடாயிற்று. மக்கள் வெள்ளமென திரண்டிருந்தனர். அந்த விழாவில் அன்பும் பாசமும் கொண்ட மருது சகோதரர்களை நாட்டின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அரசப் பிரதிநிதிகளாக நாட்டை நிர்வாகம் செய்வார்கள் என்றும் அதற்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டுமென்றும் அறிவித்தார். மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.இந்த நிகழ்ச்சி நடந்தது 1780ல் 1793ல் வேலு நாச்சியாரின் மகள் வெள்ளச்சி நோய்வாய்ப்பட்டு இறந்து விடுகிறாள் . 1796ல் வேலுநாச்சியாரும் இறந்து விடுகிறார். அதன் பிறகு பெரியமருது சிவகங்கைச் சீமையின் மன்னராகவும், சின்னமருது அமைச்சராகவும் தளபதியாகவும் நாட்டை சிறப்புடன் அவர்கள் இறக்கும் வரை ஆண்டு வருகின்றனர். சந்தனராசா தளபதியக தொடர்கின்றார்.

அறப்பணிகளும் மக்கள் தொண்டும்
வெலு நாச்சியார் மீண்டும் சிவகங்கைச் சீமைக்கு அரசியாக ஆட்சிப் பொறுப்பை ஏற்றதும் மருது சகோதரர்களை அழைத்து, தனது கணவர் விரும்பிய அறப்பணிகள் தொடர வேண்டும், காளையார் கோவில் மீண்டும் சீரமைக்க வேண்டும் , மக்களுக்குத் தேவையான நிவாரணப்பணிகளைச் செய்ய வேண்டும், என்று கூறினார். அதனை ஏற்று முதன் முதலில் காளையார் கோவிலை சீரமைத்தனர். அக்கோவிலில் மருது சகோதரர்களின் சிலைகள் யானை கட்டி மண்டப வாயில் வைக்கப்பட்டுள்ளதை இன்றும் காணலாம். மதுரை மீனாட்சியம்மன் கோவில் உயர் கோபுரத்திற்கு இணையான முகப்புக் கோபுரத்தைக் கட்டினார்கள். குன்றக்குடி முருகன் கோவில் , ஆவுடையார் கோவில், செம்பொன் நாதர் கோவில், சிங்கம்புனரி சேவகப் பெருமாள் கோவில், ஆகிய திருக்கோவில்களுக்கு சீரமைப்பு, திருப்பணிச் செலவு ஆகியவற்றை நல்கி உள்ளனர். காஞ்சி சங்கரமடத்திற்கு முத்து வடுகநாதர் பெயரில் தானம் வழங்கப் பட்டதாக செப்பேடு செய்தி ஒன்றும் உள்ளது.
குன்றக்குடியில் அரண்மனை ஒன்றையும் கட்டினர். மருதுபாண்டியர் அவையில் புலவர் குழு ஒன்று இருந்ததாகவும் அதன் மூலம் தமிழ் சங்கம் அமைத்து தமிழ் வளர்க்கப்பட்டதாகவும் செய்தி உள்ளது. மயூரிக் கோவை என்ற கவிதை நூல் அரங்கேற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
நரிக்குடியில் கற்புக்கரசி பொன்னாத்தாளுக்கு சத்திரம் கட்டப் பட்டது. பெரிய மருதுவின்மமைவியர் ஐந்து பேருக்கும் அங்கு சிலைகள் வைக்கப்பட்டன. மருதுபாண்டியர் கலைகளையும் வளர்த்தனர். நாடக கலை வளர்ச்சி பெற்றதாகவும் கவிஞர் கண்ணதாசன் கூறியுள்ளார்.திருவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு மருதுபாண்டியர் தேர் வழங்கியுள்ளனர், இதைப் போல் பல கோவில்களுக்கும் தேர்கள் அளித்துள்ளனர். மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் உள்ள அலங்கார சிலைகளை சமீபத்தில் தான் சீரமத்துள்ளனர். சருகனியில் மாதாகோவிலுக்கு தேர் செய்து கொடுத்து பாரி வள்ளல்களானார்கள் . சிவகங்கை ஆட்சியை மீண்டும் பிடித்து வேலுநாச்சியார் ஆட்சிப் பொறுப்பேற்றபொழுது நிதிநிலை சீர் கெட்டிருந்தது. இதை எதிர்க் கொள்ள வேண்டி ; திருவிதாங்கூரில் தங்களுக்கு வேண்டாத அந்த மன்னன் நடத்திய மல்யுத்த போட்டிகளில் மாறுவேடமணிந்து கலந்து கொண்டு வெற்றி பெற்று அதன் மூலம் பரிசாக கிடைத்த பெருந்தொகையினை சிவகங்கை அரசின் நிதி நிர்வாகத்தைச் சீர்படுத் செலவிட்டனர்.
பெரிய மருது காளையார் கோவிலுக்குத் தேர்கள் செய்ய திருப்புவனம் நதிக்கரையில் இரண்டு உயரந்த மருத மரங்கள் உள்ளதை அறிந்து, அவற்றை வெட்டிக் கொண்டுவர ஆண் வீரர்களை அனுப்பினார். அவற்றை வெட்ட விடாது குருக்கள் ஒருவரும் அவர் மகளும் தடுப்பதை அறிந்து பெரிய மருது மாறுவேடத்தில் நேரில் சென்று குருக்களிடம் காரணம் கேட்க, அவர்கள் அவ்விரு மரங்களையும் பெரிய மருது சின்ன மருதுவாகப் பாவித்து வளர்ப்பதாகவும் பூசை செய்வதாகவும் கூறினர் அது கேட்டு அவர்களது பாசத்தை உணர்ந்தார். மரங்களை வெட்டாது இருவரையும் அரண்மணைக்கு அழைத்து வந்து தங்க வைத்தக் கொண்டார். இது மக்களிடையே மருது சகோதரர்களுக் இருந்த மரியாதையை எடுத்துக் காட்டுகிறது.
காளையார் கோவிலுக்குச் தேர் செய்யப்படுகிறது. தேர் ஓட்டத்தன்று தேர் நகர மறுக்கிறது. அப்போது வடிவாகத் தேரைச் செய்த குப்பமுத்து ஆசாரி மன்னரிடம் அவரது செங்கோலையும், மோதிரத்தையும் கொடுத்து தம்மை ஒருநாள் வேந்தராக அறிவித்தால் தேர் நகரும் என்று சொல்ல, அதனை ஏற்று பெரியமருது குப்பமுத்து ஆசாரியை வேந்தராக அறிவிக்கிறார். குப்ப முத்து ஆசாரி மன்னர் உடையில் தேரில் உட்காரத் தேர் நகர்கிறது. ஆனால் குப்பமுத்து ஆசாரி தேரிலிருந்து தவறி விழுந்து இறந்து விடுகிறான். தேரோட்டத்தன்று மன்னர் இறப்பார் என்பது தேர் செய்த குப்பமுத்து ஆசாரிக்கு முன்பே தெரிந்துள்ளது. இது கண்டு பெரிய மருது வருந்துகிறார். ஆசாரியின் நாட்டுப் பற்றை வியந்து அவனுக்கு கோவிலில் சிலை ஒன்றை வைத்துச் சிறப்புச் செய்கிறார்.

பசும்பொன் ஆண்டுமலரிலிருந்துவீரபாண்டிய கட்டபொம்மன் வீழ்சி:மருது சகோதர்களின் வீரத்திற்கு முன் வெள்ளையரின்போர்த்திறமை வெற்றி பெறவில்லை. வெள்ளையர்கள் தக்க தருணம் பார்த்துக் காத்திருந்தனர். அப்பொழுது வீரபாண்டிய கட்டபொம்மன் பாஞ்சாலங்குறிச்சியில் ஜக்கம்மாதேவி வழிபாட்டில் இருந்தான். இரவோடு இரவாக எட்டப்பனின் சூழச்சியால் பானர்மேனின் ஆங்கிலப் படைகள் பீரங்கிகள் உதவியுடன் பாஞ்சாலங் குறிச்சிக்குள் புகுந்தது. இதை சற்றும் எதிர்பாராத வீரபாண்டிய கட்டபொம்மன், தம்பி ஊமைத்துரை ஆகியோர் தாக்கப்பட்டு கட்ட பொம்மன் அவன் குடும்பத்தினர் கைது செய்யப்பட்டனர்.ஊமைத்துரை தப்பித்து உடம்பெல்லாம் இரத்தம் சொட்ட சிவகங்கைச் சீமைக்கு வந்து சின்னமருதுவை சந்தித்து நடந்த விவரங்களைக் கூறினான். பெரிய மருது மனம் துடித்தார். சின்னமருது பொங்கி எழுந்தார். நம்மை நம்மவர்களே காட்டிக்கொடுக்கும் இழிநிலை இருப்பதால்தான் கட்டபொம்மனுக்கு தோல்விஏற்பட்டுள்ளது என்று பெரிய மருது வருந்தினார். ஊமைத்துரைக்கு தாம் அடைக்கலம் கொடுத்தால் வெள்ளையர் தம்மீது வெறுப்பு கொண்டு போர்த் தொடு்க்கலாம் எனவே அவசர அவசரமாக சில மாறுப்பட்ட ஏற்பாடுகளை மேற்கொண்டனர். அமராவதிப் புதூர் கோட்டையை வலுவுடையதாக்கி ஊமைத்துரையை அங்கு தங்க வைத்தனர். திருமயம் கோட்டையையும் ஊமையன் கோட்டையும் தரப்பட்டது. பெரியமருது எதிர்பார்த்தது போலவே, வெள்ளையர்களின் போக்கு பிடிக்காமல் ஆர்காடு நவாப் உம்தார்-உல் உத்ரா மருது சகோதரர்களுக்கு உதவுவது என்று முடிவெடுத்து ஊமைத்துரையை விடுவிக்காவிட்டால் வெள்ளையர்கள் போர்தொடுக்க இருக்கிறார்கள் என்றும், கட்டபொம்மனின் குடும்பத்தை பாளையங்கோட்டைச் சிறையில் வைத்துள்ளதாகவும் கடிதம் அனுப்பி இருந்தான். கட்டபொம்மனின் குடும்பத்தை சின்ன மருது காப்பாற்ற வேண்டுமென்று முடிவெடுக்கப் படுகிறது. அப்பொழுது வெள்ளையன் கர்னல் சுமித்திடமிருந்து ஓலை ஒன்று ஆங்கில வீரன் கொண்டு வந்து கொடுத்தான்.அவ்வோலையில், ஊமைத்துரையை உடனே வெள்ளையரிடம் ஒப்படைக்க வேண்டும், இல்லைவிட்டால் வெள்ளையரரின் எதிர்ப்பு ஏற்படும் என்று எழுதப்பட்டிருந்தது.ஊமைத்துரையை ஒப்படைக்கு இயலாது எதிர்ப்பை எதிர்கொள்வதாகவும் ஆங்கில வீரனிடம் சொல்லி அனுப்பப்படுகிறது. அத்துடன் அன்று இரவே பாளையங்கோட்டை நோக்கி சின்னமருது உதயபெருமாள் தலைமையில் வீரர்கள் நாட்டு வெடிக்குண்டுகளுடன் மாறுவேடத்தில் செல்ல ஏறட்பாடாயிற்று.காட்டில் இளைப்பாறிவிட்டு நடு இரவில் பாளையங்கோட்டையை அடைந்தனர். உதயப்பெருமாள் தலைமையில் சில வீரர்கள் கோட்டையைச் சுற்றி உள்ள காவலர்களை எதிர்க்க ஏற்பாடு செய்துவிட்டு கோட்டைக் கதவுகளை உடைத்தெறிந்து உள்ளே புகுந்தனர். இந்த திடீர் தாக்குதலை எதிரபாராத ஆங்கில வீரர்கள் அலறிக் கொண்டு ஓடினர். சிறை வைக்கப்பட்டிருந்த வீரபாண்டியனின் குடும்பத்தார், சிறையிலிருந்து மீட்கப்பட்டனர். சிறைக் கூடமும் சின்னா பின்னமாக்கப்பட்டது. கட்டபொம்மனின் குடும்பத்தார் சிவகங்கை அரண்மனையில் சகல மரியாதைகளுடன் வைக்கப்பட்டனர். கட்ட பொம்மனின் குடும்பம் காப்பாற்றப்பட்ட செய்தி அறிந்து கவர்னர் வெல்ஸ்லி கடுங்கோபம் கொண்டான். அவனது ஆதராவால் தஞ்சையின் ஆட்சிக்கு வந்த சரபோசி மன்னனை தஞ்சையிலிருந்து இறக்கிவிட்டு ஆட்சிப் பொறுப்பை தாமே ஏற்றுக் கொண்டு தஞ்சைக் கோட்டை, வல்லம் ஆகியவற்றை தஞ்சை மன்னனிடம்ஒப்படைத்தான். அடுத்ததாக தஞ்சை மன்னன் சரபோஜின் உதவியோடு சிவகங்கை மீது படையெடுக்க வெள்ளையர்கள் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் ஒன்றை ஆர்க்காடு நவாப் பெரிய முருதுவுக்கு அனுப்பி இருந்தான். படையெடுப்பை எதிர்கொள்ள ஏற்பாடுகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டது.திருமயம் கோட்டைக்கு சின்னமருது அனுப்பப்பட்டார். அங்கு எதிர்பாராத விதமாக தொண்டைமான் தளபதி சர்தார் கிருஷ்ணன் சின்னமருது, ஊமைத்துரை ஆகியவர்களிடம் சிக்கி மனம் மாறி தொண்டைமானுக்கு எதிராகச் செயல்பட அவர்களிடம் உறுதி அளித்தான். கட்டப் பொம்மனின் குடும்பத்தார் பத்திரமாக சிவகங்கை அரண்மனையில் இருப்பதை சின்னமருது சொல்லக் கேட்டு சின்னமருதுவைக் கட்டித் தழுவிக் கொண்டான்.அதன் பிறகு ஊமைத்துரையின் தலைமையில் தூத்துக்குடி துறைமுகம் பெளர்ணமி நாளொன்றில் தாக்கப்பட்டது. வெள்ளையர் வீரர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். துறைமுகம் தீயிட்டு அழிக்கப்பட்டது. சர்தார் கிருஷ்ணன் எதிபாராத விதத்தில் வெள்ளைக் காரனின் துப்பாக்கிக் குண்டிற்கு இறையானான்.இதைக் கண்ட ஊமைத்துரை கோபம் தலைக்கேறியது. துரை அக்னியூவைத் தேடினான். ஆனால் அவன் சில வீரர்களுடன் தப்பி விட்டான். மருது பாண்டியரின் உதவியால் தான் ஊமைத்துரை தூத்துக்குடியை அழித்தான் என்றறிந்த கர்னல் ஸ்மித் மருது பாண்டியரே ஆங்கிலேயர்களின் முதல் எதிரி என்று கருதினான்.
பசும்பொன் ஆண்டுமலரிலிருந்த
ஆங்கிலேய படையெடுப்பு - 5இந்நிலையில் மருது சகோதரர்கள் உதயக்குமார் ஆகியோர் திருக் கோஷ்டியூர் சென்று வழிபட்டுவிட்டு , ஏரியூர் வழியாக குனறக்குடி சென்று முருகனை வழிபட்டனர். மலையை விட்டு இறங்கிய பொழுது தூரத்தில் படையொன்று அணிவகுத்து வருவதைக் கண்டனர். அப்படை சிவகங்கை நோக்கி வந்து கொண்டிருந்தது. உடனே மருதுபாண்டியர்கள் குறுக்கு வழியாக சிவகங்கைக்கு திரும்பினர். சிவகங்கைக்குத் திரும்பிய மருது சகோதரர்கள் போருக்கான விரைவு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதற்கிடையில் திருச்சியிலிருந்தும் தஞ்சையிலிருந்தும் ஆங்கிலப் படை வீரர்கள் சிவகங்கை நோக்கி விரைந்தன.

போர் பிரகடனம்:
சிவகங்கைப் போர் ஆங்கிலேயர்களுக்கச் சவாலாக இருந்தது. நவாப், தொண்டைமான், தஞ்சைமன்னன், இராமநாதபுரம் அரசர், மற்றைய பாளையக்காரர்கள் ஆங்கிலேயர்களிடம் சரணடைந்த நிலையில் சிவகங்கைச் சீமை மட்டும் அவர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது. எப்படியும் சீமையை வீழ்த்தி வெற்றி பெறத் துடித்தது ஆங்கில கம்பெனி. இந்த நிலையில் ஊமைத்துரை தொண்டைமானுக்கு. ஒரு கடிதம் எழுதினான் அதில் ஆங்கிலேயர்களுக்குத் துணை நிற்பது மோசமான நிலையை உருவாக்கும், எனவே உனது ஆதரவை எனக்குக் கொடுத்து வெள்ளையரிடமிருந்து நாட்டைகக் காப்பாற்ற வேண்டும் என்று ஆதரவுக் கேட்டிருந்தான். சின்ன மருதுவோ நடக்க போகும் போரை எதிர்க்கொள்ள ஜம்புத் தீவு பிரகடனம் ஒன்றை தயார் செய்து திருவரங்கம் கோவில் கதவிலும் திருச்சி மலைக் கோட்டையிலும் ஒட்டி ஆங்கிலேயர்களுக்கு ஒரு போதும் துணை பொக வேண்டாம், அப்படி துணை போகிறவர்கள் கங்கைக் கரையில் காராம் பசுவைக் கொன்ற பாவத்தை அடைவர், என்று அறிவித்தார்.இதை அனுசரிக்காத முசல்மான்கள் (முஸ்லீம்) பன்றியின் இரத்தத்தை குடித்தவர்களாவர் என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், ஆங்கிலேயர்களை மட்டுமின்றி, ஐரோப்பிய இழி பிறவிகளை ஒரு போதும் மன்னிக்காத, மருது பாண்டியன் என்று தன்னை அடையாளம் கொண்டிருந்தார். இந்த மாதிரி ஆங்கிலேயர்களுக்கு எதிராக இந்தியாவில் வேறு எந்த அரசரோ பாளையக் காரர்களோ கண்டன அறிக்கை வெளியிட வில்லை. அந்த அளவுக்குத் துணிவும் இல்லை.
இந்திய நாட்டில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக மைசூரில், மைசூர் போர்; மைசூர் போர்!!! என்றும், கர்நாடகப் போர் ; கர்நாகப் போர் !!! என்றும் குறிப்பிட்ட பெரிய போர்களைப் போல் சிவகங்கைச் சீமையில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடந்த போர்க்களங்கள் அநேகம். அவற்றில் மணலூர் போர், திருப்புவனம் போர், முத்தனேந்தல் போர், காளையார் கோவில் போர், சிவகங்கைப் போர், மங்கலம் போர் மானாமதுரைப் போர், திருப்பத்தூர் போர், பார்த்திபனார் போர், காரான்மைலைப் போர் ஆகியவை குறிப்பிடபத்தக்கவை. இப்படி நடந்த போர்களை இக்கட்டுரையில் விவதாதிக்க இடம் போதாது. இந்த முறை 150 நாட்களுக்கு மேலாக போர் நடந்தன. அப்பொழுது மருது பாண்டியரை வெற்றி கொள்ள வேண்டுமானால் சிறுவயல், முத்தூர், சோழபுரம் ஆகிய மூன்று வழிகளில் சென்றால் காளையார் கோவிலை நெருங்கலாம் என்று உடையத் தேவன் உளவு கூறினான்.அதன்படி காளையார் கோவிலை ஆங்கிலப் படை சுற்றி வளைத்தது. அவர்களின் பிடியிலிருந்து மருது சகோதரர்கள் காட்டுவழியே தப்பி மங்கலம் சென்றடைந்தனர்.புரட்சிப் படையினர் பாதுகாப்புக் கொடுத்தனர். அப்படி தப்பி வரும் வழியில் களைப்புத் தீர பழையச் சோறு கொடுத்துதவிய மூதாட்டிக்கு ஒரு கிராமத்தைத் தானமாக ஓலையில் எழுதிக் கொடுத்ததும் மனதில் நிற்கிறது.அங்கும் ஆங்கிலப் படையினர் திமுதிமுவென நுழைந்தனர். அங்கு நடந்த போரில் சின்னமருது துப்பாக்கிக் குண்டுபட்டு கைதானார். பெரிய மருதுவும் கைது செய்யப்பட்டார். மருது பாண்டியர்களும் அவர்களது குடும்பங்களும் திருப்பத்தூர் கொண்டு சென்று காவலில் வைக்கப்பட்டனர். 24.10.1801 அன்று அவர்கள் அனைவரும் தூக்கிலிடப்பட்டனர். அவர்களுடன் 500க்கும் மேற்பட்ட மன்னர் குடும்பத்தார்கள், வீரர்கள் இரக்கமின்றி தூக்கிலிடப்பட்டனர். இது ஜாலியன் வாலாபாக் படுகொலையைவிடக் கொடுமையானது.

தூக்கிலிடுமுன் உங்களின் கடைசி ஆசை என்ன என்று கேட்கப்பட்டது. அதற்கு தூக்கிலிடப்பட்டபின் தங்களது உடல்களை காளையார் கோவில் கோபுர வாசலுக்கு எதிராகப் புதைத்து விட வேண்டும் என்றும், நாங்கள் இதுநாள் வரை எடுத்துமூலமாக, ஓலை மூலமாக வாய்மொழி மூலமாக கொடுக்கப்பட்ட மானியங்கள் தொடரவேண்டும் என்றும், அப்படி அறிவித்து இருக்கும் மானியங்களையும் உடன் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். இது அவர்களது கொடைத் தன்மையையும் , நன்றி மறவாத் தன்மையையும் மன உறுதியையும் வெளிப்படுத்துகிறது.அவைகள் அனைத்தும் வழங்கப்படும் என்று ஆங்கிலேயக் கர்னல் அக்னியூ உறுதி அளித்தான். அதன்படி அவைகளை பின்பு நிறைவேற்றப்பட்டன.24-10-1801 அன்று தலைகள் துண்டிக்கப்பட்ட நிலையில் வீரர்களின் உடல்கள் குவிந்திருந்த காரணத்தாலும், ஆங்கிலேயர்களிடம் ஏற்பட்ட பயம் காரணத்தாலும் மக்கள் இறந்தவர்களை அடையாளம் தெரிந்து அடக்கம் செய்ய துணியவில்லை, இரண்டு, மூன்று நாட்கள் கழித்து 27-10-1801ல் அன்று மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் உடலகளை காளையார் கோவிலுக்கு கொண்டுவரப் பெற்று அவர்களது விருப்பப்ட்ட கோபுரத்திற்கு எதிரே அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இதில் சின்னமருதுவின் மூன்றாவது மகன் துரைசாமி மட்டும் தேசத்துரோக கைதியாக சுமத்திரா தீவிற்குக் கொண்டு செல்லப்பட்டான். அவனோடு மேலும் 72 வீரர்கள் கைதிகளாக நாடு கடத்தப்பட்டனர். என்று கூறப்படுகிறது.
நாட்டிற்காகத் தங்கள் இன்னுயிர் ஈந்த மாமன்னர் மருதுபாண்டியர்களின் தியாகம் வேறு எவரும் செய்திராத ஒன்று அவர்கள் நவாப்பிற்கோ, ஆங்கிலேயருக்கோ மற்ற அரசர்களைப் போல், பாளையக்காரர்களைப் போல் கப்பம் கட்டவில்லை. சிவகங்கைச் சீமை பல வளங்களும் பெற்று சிறந்த நிர்வாகத்தின் கீழ் தனித்தொரு நாடாக - சீமையாக - விளங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.இவர்கள் இந்தியாவில் சுதந்டதிரத்திற்கு வித்திட்ட முதல் மாமன்னரக்களாவர். சுதந்திரமடைந்த குடியரசு பெற்ற இந்தியாவில் பல ஆண்டுகளாக அவர்களுக்கு மணி மண்டபமும் , அஞ்சல் தலை வெளியிடவும் கோரிக்கைகள் வைக்கப்பட்டன. ஆனால் கடந்த 24-10-2004 அன்று தான் அஞ்சல் தலை நடுவன் அரசாலும், மாநில அரசாலும் வெளியிடப்பட்டது. பல ஊரக்களை மக்களுக்கும் கோவில்களுக்கும் மாநியமாக வழங்கிய அவர்க்களுக்கு காளையார் கோவிலில் மணி மண்டபம் கட்ட வேண்டும் என்ற நமது கனவை நிறைவேற்றுவது மாநில அரசின் கடமையாக நான் கருதுகிறேன். ஆட்சிப் பொருப்பில் உள்ளவர்கள் செய்வார்கள் என்று நம்புகிறேன்.தியாகிகளுக்கோ, தலைவர்களுக்கோ நினைவு நாள் ஒரு நாள் தான் கொண்டாடப்படும். மாமன்னர் மருது பாண்டியர்கள் இரட்டை மன்னர்கள் என்பதாலும், அவர்கள் தியாகிகள் என்பதாலும் அவர்களுக்கு ஆண்டு தோறும் அக்டோபர் திங்கள் 24ம் நாளும் 27ஆம் நாளும் முறையே தமிழ்நாடு அரசு விழாவாக திருப்பத்தூரிலும், சமுதாய விழாவாக காளையார் கோவிலிலும் கொண்டாடப்பட்டு வருவது இயற்கையன்னை மருது பாண்டியர்களுக்கு வழங்கிய பெருமையாகும்..

Wednesday, 15 November 2017

OOMAIDURAI DIED 1801 NOVEMBER 16

OOMAIDURAI DIED 1801 NOVEMBER 16

வாழ்க்கைக் குறிப்பு[மூலத்தைத் தொகு]

இவரது இயற்பெயர் குமாரசாமி. அழகிய வீரபாண்டியபுரம் எனும் ஊரில் (இன்றைய ஒட்டபிடாரம்) ஆட்சிபுரிந்து வந்த ஜெகவீரபாண்டியனின் (நாயக்க வம்சம்) அவையில் அமைச்சராக பொம்மு என்கிற கெட்டி பொம்மு (தெலுங்கு) இடம்பெற்றிருந்தார். இவரது பூர்வீகம் ஆந்திரமாநிலம், பெல்லாரி ஆகும். வீரமிகுந்தவர் என்ற பொருளை தெலுங்கில் உணர்த்தும் கெட்டி பொம்மு எனும் சொல் நாளடைவில் கட்டபொம்மு என்று மாறி பின் தமிழில் கட்டபொம்மன் என்ற சொல்லாயிற்று. ஜெகவீரபாண்டியனின் மறைவிற்குப்பின் அரசகட்டிலில் ஏறிய கட்டபொம்மு பின் ஆதிகட்டபொம்மன் என்று மக்களால் அழைக்கப்பட்டனர். இவரே பொம்மு மரபினரின் முதல் கட்டபொம்மன். .

இந்த பொம்மு மரபில் வந்தவர்களே (திக்குவிசய கட்டபொம்மன்) ஜெகவீர கட்டபொம்மன், ஆறுமகத்தம்மாள் தம்பதியர் இவர்களுக்கு மகனாகப் பிறந்தார் ஊமைத்துரை . இவர் வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பி .இவருக்கு சுப்பா நாயக்கர் என்ற செவத்தையா என்ற தம்பியும் இருந்தார் .தமிழ் நாட்டார் தரவுகள் இவரது பேச்சாற்றலைப் பகடி செய்யும் வண்ணம் இவருக்கு “ஊமைத்துரை” என்று பட்டப்பெயர் வந்ததாகச் சொல்கின்றன. இவரை எதிர்த்துப் போர் புரிந்த ஆங்கிலேயத் தளபதி மேஜர் வெல்ஷின் குறிப்புகள் இவர் பேச்சு திறன் குன்றியவர் என்பதால் இவ்வாறு அழைக்கப்பட்டார் எனத் தெரிவிக்கின்றன.

ஊமைத்துரை ஒளிந்திருந்த குகை

இவர் ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராகப் போர்புரிந்தார். முதல் பாளையக்காரர்கள் போரில் இவர் பிடிக்கப்பட்டு பாளையங்கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் 1801-ஆம் ஆண்டு அங்கிருந்து தப்பி முதல் போரில் அழிக்கப்பட்ட பாஞ்சாலக்குறிச்சி கோட்டையை மீண்டும் கட்டியெழுப்பினார். இவர் பின்னர் மருது சகோதரர்களுடன் கூட்டாகச் சேர்ந்து வெள்ளையர்களை எதிர்த்தார். மேலும் வெள்ளையர்களை எதிர்த்து உருவான, தீரன் சின்னமலை, கேரள வர்மா ஆகியோரைக் கொண்ட ஒரு பெரும் அணியிலும் இடம் பெற்றிருந்தார். இரண்டாவது போரில் அவரது கோட்டை வீழ்ந்த பின் மருது சகோதரர்களுடன் சேர்ந்து தப்பி காளையார் கோவிலில் தங்கியிருந்தார். பின்னர் காளையார் கோவிலும் ஆங்கிலேயர்களால் வீழ்த்தப்பட்டு 1801 நவம்பர் 16-ஆம் நாள் இவரும் மருது சகோதரர்களும் தூக்கில் இடப்பட்டனர்.

பண்புகள்[மூலத்தைத் தொகு]

ஊமைத்துரை நட்போடும் , மனிதாபிமானத்தோடும் திகழ்ந்து வந்ததாக வரலாறு கூறுகிறது. மருது பாண்டியர், வெள்ளையத்தேவன் , தீரன் சின்னமலை , விருப்பாச்சி கோபால நாயக்கர் மற்றும் எல்லைத்தகராறு காரணமாக பகையாளியாக கருதப்பட்ட எட்டயபுரம் பாளையக்காரர்களிடம் என்று அனைவரிடமும் நட்போடு வாழ்ந்து வந்ததாகவும், ஆங்கிலேயர்கள் பலரை அழித்த ஊமைத்துரை அவரிடம் அடைக்கலம் கேட்டு வந்த ஆங்கிலேயர்களையும் அரவணைத்து நட்போடு உபசரித்து அனுப்பினார் என்று ஆங்கிலேய ஆவணங்களில் உள்ளது

ஆங்கிலேய அதிகாரிக்கும் பரிவு[மூலத்தைத் தொகு]
காலநெல் என்ற ஆங்கிலேயர் 1801 இல் தூத்துக்குடி மாவட்ட கம்பனி தளபதியாக ஆங்கிலேயர்களால் நியமிக்கப்பட்டார். அவர் தூத்துக்குடி கடற்கரையில் நடந்து சென்று கொண்டிருந்தநேரத்தில் ஊமைத்துரையின் படை வீரர்களால் சிறைபிடிக்கப்பட்டு பாஞ்சாலங்குறிச்சியில் அடைக்கப்பட்டார். அவரது மனைவி தன் கணவரை விடும்படி கேட்டுக்கொண்டதற்கு ஊமைத்துரை இசைந்தார். அவர்களுக்கு வீரவாள் பரிசாகவும் கொடுத்து , தூத்துக்குடி வரையிலும் பாதுகாப்பாக செல்ல குதிரை, இரண்டு வீரர்களையும் அனுப்பி வழி அனுப்பினார். ஊமைத்துரை தான் எனது நண்பர் என்றும், ஊமைத்துரையின் நட்பு, மனிதாபிமானம், வீரம் அனைத்தையும் கால்நெல் கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்.[1]

Monday, 24 October 2016

MARUTHU PANDIYARS மருது சகோதரர்கள் சுதந்திரத்திற்காக வீர மரணம் எய்திய நாள் 1801 அக்டோபர் 24

MARUTHU PANDIYARS 
மருது சகோதரர்கள் சுதந்திரத்திற்காக
  வீர மரணம் எய்திய நாள் 1801 அக்டோபர் 24

மருது பாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள் தமிழ்நாட்டில் ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்ட முன்னோடிகளுள் குறிப்பிடத்தக்கவர்கள். ஆங்கிலேயரைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்ட 1785 முதல் 1801 இறுதி வரை ஆயுதம் தாங்கிப் போராடினார்கள். 

மருது பாண்டியர்களின் சிலைகள், காளையார் கோயில்-சிவகங்கை மாவட்டம்
பெரிய மருது, சின்ன மருது எனப்படும் இவர்கள் ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடிய அனைத்திந்திய குழுக்களையும் ஒன்றிணைத்துத் திரட்ட முயன்ற போதுதான் ஆங்கிலேயரின் அதிருப்திக்கும் கோபத்திற்கும் ஆளானார்கள். இவர்களது களம் சிவகங்கைச் சீமையைச் சேர்ந்த காளையார்கோயில் ஆகும்.

ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியரால் 1801 அக்டோபர் 24 இல் திருப்பத்தூரில் இவ்விருவரும் தூக்கிலிடப்பட்டனர். இவர்களது நினைவாலயம் காளையார் கோவிலில் அமைந்துள்ளது

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]
சிவகங்கை மாவட்டம் காளையார் கோயிலில் 
உள்ள பெரிய மருதுவின் சிலை
இன்றைய விருதுநகர் மாவட்டம் நரிக்குடிக்கு அருகில் உள்ள முக்குளம் என்ற கிராமத்தில் வாழ்ந்த உடையார் சேர்வை என்ற மொக்க பழநியப்பன் என்பவருக்கும் அவரது மனைவி ஆனந்தாயி என்ற பொன்னாத்தாள் என்பவருக்கும் மகனாக 1748 திசம்பர் 15 இல் மகனாகப் பிறந்தவர் பெரிய மருது பாண்டியர். 

சிவகங்கை மாவட்டம் காளையார் கோயிலில்
 உள்ள சின்ன மருதுவின் சிலை

ஐந்து ஆண்டுகள் கழிந்து 1753 இல் சிறிய மருது பாண்டியர் பிறந்தார். பெரிய மருது பாண்டியர் வெள்ளை நிறத்துடன் இருந்ததால் வெள்ளை மருது பாண்டியர் என்ற பெயரும் உண்டு. பெரிய மருதுவை விட உயரத்திற் சிறியவராக இருந்ததால் இளைய மருது சின்ன மருது பாண்டியர் என்று அனைவராலும் அழைக்கப்படலானார்.

இவ்விருவரும் சிவகங்கைச் சீமையின் அரசர் முத்து வடுகநாதரின் போர்ப்படையில் வீரர்களாகச் சேர்ந்து தமது திறமையை நிரூபித்தனர். இவர்களின் வீரத்தை கண்டு மெச்சிய மன்னர் முத்து வடுகநாதர் மருது சகோதரர்களை தன் படையின் முக்கிய பொறுப்புக்களில் நியமித்தார்.

சிவகங்கைச் சீமை மீட்பு[தொகு]

திருப்பத்தூரில் மருதிருவருக்கு அமைக்கப்பட்டிருக்கும் நினைவுத் தூண்
ஆற்காடு நவாப் வரி வசூலை ஆங்கிலேயருடன் பங்கிட்டுக் கொள்வதாக ஒப்பந்தம் செய்து கொண்ட ஜோசப் ஸ்மித் தலைமையிலான கம்பெனிப் படை 1772 இல் இராமநாதபுரத்தைக் கைப்பற்றிய பின் உடனடியாகச் சிவகங்கை மீது போர் தொடுத்தது. இந்த திடீர் தாக்குதலை எதிர்பாராத அரசர் முத்து வடுகநாதர் காளையார் கோவில் போரில் பலியானதால் அவரது பட்டத்தரசி வேலுநாச்சியார், மகள் வெள்ளச்சி, அமைச்சர் தாண்டவராயன் பிள்ளை, மருது சகோதரர்கள் ஆகியோர் திண்டுக்கல் அருகே விருப்பாட்சி காட்டுக்குத் தப்பிச் செல்கின்றனர்.

1772 இற்குப் பிறகு காட்டில் மறைந்து வாழ்ந்த மருது சகோதரர்கள் தமது கிளர்ச்சியை 1779 இல் தொடங்கி ஆற்காட்டு நவாப், தொண்டைமான், கும்பினியார் ஆகியோரின் படைகளை வெற்றி கொண்டு 1780 இல் சிவகங்கைச் சீமையை மீட்டு வேலு நாச்சியாரை மீண்டும் அரியணையில் அமர்த்தினர். 

இந்தப் போரில் பெரிய மருது மணலூர் வாயிலிலும், தளபதி சந்தனம் சேர்வை பூவந்தி வாயிலிலும், வேலு நாச்சியார் மேலூர் வாயிலிலும் முகாமிட்டு போரிட்டனர். மேற்கில் திண்டுக்கல்லிலிருந்து தக்க சமயத்தில் வந்த ஹைதர் அலி யின் படையும் வெற்றிக்கு உதவியது. வேலு நாச்சியார் மீண்டும் ஆட்சியில் அமர்ந்த விழாவிற்கு ஹைதர் அலி நேரில் வந்திருந்து வாழ்த்துக் கூறினார்.

ஒற்றுமை[தொகு]

திருப்பத்தூரில் மருதிருவருக்கு அமைக்கப்பட்டிருக்கும் நினைவுத் தூண்

மருது சகோதரர்களின் ஆட்சி மத ஒற்றுமை, நல்லிணக்கம் ஆகியவற்றுக்குக் குறிப்பிடத்தக்கதாக அமைந்தது. இவர்கள் முஸ்லிம்களுக்கும் கிறித்தவர்களுக்கும் வழிபாட்டு இடங்களை அமைத்துக் கொடுத்தனர்.

இவர்கள் காளையார் கோவில் கோபுரத்தைக் கட்டியதுடன் குன்றக்குடி, திருமோகூர் கோயில்களுக்கும் திருப்பணி செய்தனர்.[1]

இளையவரான “சின்ன மருது” அரசியல் தந்திரம் மிக்கவராக விளங்கினார். இவர்கள் தஞ்சாவூர் முதல் திருநெல்வேலி வரை மாபெரும் அரசியல் கூட்டணி ஒன்றைத் தொடங்கி ஆங்கிலேயருக்கு எதிரானப் போராட்டத்திற்கு வித்திட்டனர்.

சின்ன மருதுவின் திருச்சி பிரகடனம்[தொகு]

1801 ஜுன் 12 ஆம் திகதி சின்ன மருது திருச்சி திருவரங்கம் முதலிய இடங்களில் வெளியிட்ட அறிக்கை “ஜம்புத் தீவு பிரகடனம்” என அழைக்கப்படுகிறது. அவ்வறிக்கையின் மூலம் எல்லா இனங்களையும் சேர்ந்த மக்கள் நாட்டுப் பற்று மிக்க பணிகளை மேற்கொள்ள வேண்டுமென்றும், ஆங்கிலேயருக்கு எதிராகப் போர் தொடுக்க வேண்டுமென்றும் அறை கூவல் விடுக்கப்பட்டது.[2]

 காட்டில் அலைந்து திரியும் புலிகளையும், சிறுத்தைகளையும்கூட எதிர்த்து நின்று போரிட்டு வெற்றி பெறும் ஆற்றல் படைத்தவர் பெரிய மருது. அந்தக் காலத்தில் ஆற்காட்டு நவாப் வெள்ளியில் தடித்த நாணயமொன்றை வெளியிட்டிருந்தார்கள். அந்த கனத்த நாணயத்தைத் தனது விரல்களுக்கிடையில் வைத்து விரலால் வளைத்து ஒடித்துவிடும் எஃகு போன்ற பலமுடைய மாவீரன் அவர். தேக்கு மரத்தில் இழைத்துச் செதுக்கிய அற்புத சிற்பம் போல உடலமைப்பு கொண்ட மாவீரன் சின்ன மருது. உடல் பலத்தால் மட்டுமல்ல, தோற்றத்தாலும் மற்றவர்கள் பார்த்து வியக்கும் வண்ணம் இருந்தவன். அறிவிலே சிறந்தவன்; சாணக்கியனுக்கு நிகரானவன். பாஞ்சாலங்குறிச்சியின் பாளையக்காரர் கட்டபொம்மு நாயக்கர் 1799 ஜூன் மாதம் 5ஆம் தேதி சிவகங்கை சீமைக்கு வந்து சேர்ந்தார். தனது பாளையத்தில் வெள்ளைக்காரன் ஆக்கிரமித்துக் கொண்டு மக்களைக் கசக்கிப் பிழிந்து ஆற்காட்டு நவாப் கொடுத்த சலுகையைப் பயன்படுத்திக் கொண்டு, மக்களிடம் வரிவசூல் செய்வதையும், தென்னக பாளையக் காரர்களைத் தங்கள் எடுபிடிகளைப் போல நடத்திக் கொண்டு அவர்களை அவமரியாதை செய்து கேவலப்படுத்தி வருவதையும், பொருள்களை விற்க வந்த இந்த கும்பல் நாடுபிடிக்கக் கடந்து அலைவதையும் சொல்லி வருத்தப் பட்டார் கட்டபொம்மு நாயக்கர். 

கட்டபொம்மு நாயக்கரைவிட பெரிய மருது பன்னிரெண்டு வயது மூத்தவர். தன்னுடைய இளைய சகோதரனைப் போன்ற கட்டபொம்மு நாயக்கர் தனது பாளையத்திலிருந்து விரட்டப்பட்டு இங்கு வந்து சரண் புக காரணமாயிருந்த வெள்ளைக் கும்பினியாரை பழிவாங்கத் துடித்தார் பெரிய மருது. தன்னை நாடி உயிர் பிழைக்கத் தஞ்சம் புகுந்துவிட்ட கட்டபொம்மனுக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறினார். தன்னோடு தங்கிக் கொள்ளவும் அனுமதியளித்தார். சமயம் நேரும்போது பழிக்குப் பழி வாங்கிட உறுதியளித்தார். 1801ஆம் வருஷம் மருதுபாண்டியர் கமுதி கோட்டையைக் கைப்பற்றிக் கொண்டார். ஆங்கிலப் படைக்கு கர்னல் அக்னியூ என்பவன் தலைமை தாங்கி வந்தான். அவன் தன்னுடைய படைகளை மட்டும் கொண்டு போர் புரிந்து தோல்வியடைந்த பின் எதிரிகளைத் துரோகிகளாக மாற்றி, பிரித்தாளும் வழக்கமான ஆங்கில பாணியைப் பின்பற்றி அங்கிருந்த மற்ற பாளையக்காரர்களுக்கு ஆசை வார்த்தைகள் கூறி தன் பக்கம் இழுத்துக் கொண்டான். தென்பாண்டிச் சீமையின் வீர மறவர்களுக்குள் பிரிவினை நேர்ந்தது. புதுக்கோட்டை தொண்டைமான் அரசர் தன் பங்குக்கு ஆங்கிலக் கம்பெனியாருக்கு உதவவும் முன்வந்தனர். காளையார்கோயில். மருதிருவரின் மானம் காக்கும் கோட்டை. கானப்பேரெழில் என்பது அதன் பழைய பெயர். அந்த காளையார்கோயில் கோட்டையை நாற்புறமும் கம்பெனியாரின் வெள்ளைக்காரப் படையும் தோழமையுடன் சேர்ந்துகொண்ட மற்ற துணைப் படைகளும் சூழ்ந்து கொண்டன. கிழக்கிலிருந்து கர்னல் பிளாக்பர்ன் என்பவன் தலைமையில் ஒரு படை. மேற்கு திசையிலிருந்து கர்னல் அக்னியுவின் தலைமையில் ஒரு படையும், தெற்கிலிருந்து மெக்காலே என்பவன் தலைமையில் ஒரு படையும் 
காளையார்கோயிலைத் தாக்கின.  மருதுவின் படை வீரர்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் ஆங்கில கம்பெனியாரின் படைகளை எதிர்த்து நின்றனர். கடுமையான போர். பாண்டிய நாடு கண்டிராத கடுமையான பீரங்கித் தாக்குதல். அந்தப் போரின் இறுதியில் கம்பெனியார் படைகள் வென்றன. மருது சகோதரர்கள் தப்பி ஓடி காடுகளில் தஞ்சம் புகுந்தனர். 1801ஆம் வருஷம் அக்டோபர் மாதம் முதல் தேதி காளையார்கோயில் கோட்டை ஆங்கிலேயர் வசம் போனது.  தப்பி ஓடிவிட்ட மருது சகோதரர்களைப் பிடித்துக் கொடுத்தால் ஏராளமான பரிசுகள் தரப்படும் என்று கும்பினியார் முரசு கொட்டி அறிவிப்பு செய்தனர். அன்னியன் தரும் பிச்சைப் பரிசுக்கு ஆசைப்பட்டு இந்த புண்ணிய மண்ணில் பிறந்த துரோகிகள் பலரும் நாயாய் அலைந்தனர் அந்த வீரத் திருமக்களைப் பிடித்துக் கொடுப்பதற்காக. துரோகிகளின் முயற்சிகள் பயன் அளிக்கவில்லை. மருதிருவரைப் பிடிக்க இவர்களால் ஆகவில்லை.  வீரம் செறிந்த இந்த மாவீரர்களைப் பிடிக்க வேண்டுமானால் ஏதாவது தந்திரம் செய்து ஏமாற்றிப் பிடித்தால்தான் உண்டு என்பதை கும்பெனியார் உணர்ந்தனர். ஆட்கள் தேடி அலைந்தும் பிடிக்க முடியாத இந்த வீரர்களை பிடிக்க ஒரு உத்தியைக் கையாண்டனர்.

பரங்கிகளை  அழித்து ஒழியுங்கள்

 1801ஆம் வருஷம் ஒரு அறிவிப்பு வெளியாகிறது. அந்த அறிவிப்பு கூறும் செய்தி மிக நீண்டது. அதில் ஒரு பகுதி மட்டும் இதோ: -- "....நாவலந்தீவு எனப்படும் இந்த நாட்டின் அனைத்து சமூகத்தினருக்கும் இந்த அறிவிப்பு கொடுக்கப் படுகிறது. .... பரங்கியர்களின் அந்தரங்கத்தை அறியாத நீங்கள் எங்களுடன் ஒத்துப் போக மறுக்கிறீர்கள். உங்களிடையே ஒற்றுமை இல்லை ... இழிகுலத்தவர் பரங்கியர்களுடன் இணைந்து இந்த நாட்டை அடிமைப் படுத்தியுள்ளது நாமறிந்த விஷயம். ஆகையால் நீங்கள் பரங்கிகளை எங்கு கண்டாலும் அவர்களை அழித்து ஒழியுங்கள்
 .... " இப்படி போகிறது அந்த அறிவிப்பு. இந்த அறிக்கையின் பிரதிகள் அப்போது இந்த பாரத புண்ணிய பூமியில் நாடு பிடித்துக் கொண்டிருந்த வெள்ளை கும்பினியாரின் கைகளுக்கும் போய்ச் சேர்ந்தது. இதைப் படித்த வெள்ளை அதிகாரிகளுக்குக் கோபம் தலைக்கேறியது. அறிக்கையின் நகல்களைக் கிழித்தெறிந்து தங்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்தினர். யார் வெளியிட்ட அறிக்கை இது? இதனை வெளியிட்டவர்களையும் இந்த அறிக்கையைக் கிழித்தெறிந்தது போல கிழித்தெறிய வேண்டுமென துடித்தனர். வெறிகொண்டு அலைந்தனர். 

மருது சகோதரர்கள் வீர மரணம் 

எங்கேயோ ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பாலிருந்து இங்கு வாணிபம் செய்ய வந்த ஒரு சிறு கூட்டம், தாங்களாக மட்டும் இந்த மண்ணுக்கு உரிய மாவீரர்களை அழித்து விடுவது என்பது சாத்தியமா என்ன? முடியாது என்பது அவர்களுக்கும் தெரியும். இருந்தாலும் இங்கேயே பிறந்து, இங்கேயே வளர்ந்து, இந்த மண்ணுக்கு விசுவாசமாக இருக்க வேண்டிய சில கருங்காலிகள் தங்கள் உடன் பிறந்தவர்களையே காட்டிக் கொடுத்து, அன்னியன் இடும் பிச்சைக்கு ஆலாய் பறந்து கொண்டிருக்கிறார்களே! என்ன செய்வது. இல்லாவிட்டால் வீரம் செறிந்த கட்டபொம்மனைத் தூக்கில் போட முடியுமா? நூற்றுக் கணக்கான ஆண்டுகள் இங்கு வந்து நம்மை கட்டியாள முடியுமா? சரி! அந்த அறிக்கையை வெளியிட்டவர்கள்தான் யார்? வேறு யார்? சிவகங்கைச் சீமையின் சிறுத்தைகளான மருது சகோதரர்கள்தான் அவர்கள். சிவகங்கைச் சீவையின் வரலாற்றைப் படித்தால் தான் இந்த வீரம் செறிந்த பாளையக்காரர்களைப் பற்றி அறிந்து கொள்ள முடியும். மருதுபாண்டியர் என்றும், மருதரசர் என்றும் மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட இந்த சகோதரர்கள் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் எழுதப்பட வேண்டிய சாதனை படைத்தவர்கள்.

யானைகளைப் பிடிக்க பள்ளம் தோண்டி விழவைத்துப் பிடிக்கலாம், மனிதர்களைப் பிடிக்க முகஸ்துதி செய்து பிடிக்கலாம் என்றாலும் மருது சகோதரர் போன்ற வீரர்களைப் பிடிக்க என்ன செய்யலாம்? அவர்கள் உயிரினும் மேலாக நினைக்கும் ஆலயங்களை இடிப்பதாகச் சொன்னால், தானாக அந்த சிறுத்தைகள் மறைவிடம் விட்டு வெளிவந்து அந்த ஆலயங்களைக் காக்கப் போராடும் என்பதனை யாரோ சொல்லி அறிந்து கொண்டனர் வெள்ளையர்கள். ஒரு அறிவிப்பு வெளியானது. "மருது சகோதரர்கள் வந்து உடனடியாக ஆங்கிலப் படையிடம் சரண் அடையாவிட்டால், அவர்களது காளையார் கோயில் ஆலயம் இடித்துத் தரைமட்டமாக்கப்படும்" என்பது அந்த அறிக்கை. தாங்கள் ஒவ்வொரு செங்கல்லாய் எடுத்து வைத்து கட்டிய, தங்கள் உயிரினும் மேலான காளையார்கோயில் இடிபடுவதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை மருது சகோதரர்களால். தங்கள் உயிர் போனாலும் கவலை இல்லை தங்கள் நினைவைப் போற்றக் காலம் காலமாய் இருக்கப் போகும் அந்த ஆலயத்தைக் காப்பாற்றியே தீரவேண்டுமென்று முடிவு செய்தனர். மறைவிலிருந்து வெளிப்பட்டார் பெரிய மருது. வெள்ளையனின் சூழ்ச்சியால் பிடிபட்டார். விரட்டிச் சென்று காட்டில் இருந்த சின்ன மருதையும் பிடித்துக் கொணர்ந்தனர் வெள்ளைக் கும்பினியார். பிடித்துவிட்ட பின் விசாரணை செய்ய வேண்டுமே! ஒரு நாயைக் கொல்வதானாலும் விசாரணை செய்துதான் கொல்வோம் என்று மார்தட்டிக் கொண்ட வெள்ளையன் பெயருக்குக்கூட ஒரு விசாரணை இல்லாமல் மருது சகோதரர்களை திருப்பத்தூர் கோட்டையில் 1801 அக்டோபர் 24ஆம் தேதி தூக்கிலிட்டனர். பெரிய மருது தன் உயிரினும் மேலாகக் கருதிய காளையார்கோயிலின் முன்பு தனது உடல் சமாதி வைக்கப்பட வேண்டும் என்று விரும்பினார்.
அவர் விருப்பம் நிறைவேற்றப்பட்டது. ஒரு நாட்டை வீரத்தால் ஜெயிக்கலாம். துரோகத்தால் ஜெயிப்பது என்றால்? துரோகத்தால் அடிமைப்பட்ட நாடுகள் ஏராளம் ஏராளம். அதிலிருந்து பாரத நாடு மட்டும் தப்புமா என்ன? எந்த நாளும் துரோகம் இங்கு கோலோச்சிக் கொண்டுதான் இருந்தது, இருக்கிறது, இருக்கும். மண்ணோடு மண்ணாகிப் போன தியாக மன்னர்களும், தேசபக்தர்களும், வீராதி வீரர்களும் நம் மக்களுக்கு நல்ல புத்தியைக் கொடுக்க வேண்டும். அப்போதுதான் அன்னிய பக்தியும், அன்னியனுக்கு கால்கழுவும் புத்தியும் இல்லாமல் நம் பெருமை, நம் தன்மானம் இவற்றால் உயர முடியும். உலகத்துக்கு வழிகாட்ட முடியும். செய்ய முடியுமா? முடியும், நிச்சயம் முடியும். இளைய தலைமுறை உரக்க சபதம் ஏற்றுக்கொண்டு செயல்பட்டால்! வாழ்க பாரதம்

மருது பாண்டியர் நினைவிடக் காட்சி

மருது பாண்டியர் நினைவிடக் காட்சி
தூக்குத் தண்டனை[தொகு]

வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துரைக்கு அடைக்கலம் தந்ததற்காக 1801 மே 28 இல் ஆங்கிலேயர் போர் தொடுத்தனர். இப்போர் 150 நாட்கள் இடையறாமல் நடந்து, மருது பாண்டியர் தூக்கிலிடப்பட்ட பின் தான் நின்றது.[3]

1801 ஒற்றோபர் 24 அன்று மருது பாண்டியர்களை தூக்கிலிட்டது வெள்ளையரசு. இவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தோரும், ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட மன்னர் குடும்பத்தாரும் தூக்கிலிடப்பட்டனர்.

வெள்ளையர்களிடம் பிடிபட்ட சின்ன மருதுவின் மகன் துரைச்சாமியும் மருதுவின் தளபதிகளும் பிரின்சு ஆப் வேல்சு (இன்றைய பினாங்கு) நாட்டுக்கு நாடு கடத்தப்பட்டனர்.[4]

நினைவிடம்[தொகு]

மருது சகோதரர்களின் முழு உருவ கற்சிலைகள் சிவகங்கை மாவட்டம் காளையார்கோயில் காளீஸ்வரர் கோயிலின் உட்புறமும், மருது சகோதரர்களின் சமாதி காளீஸ்வரர் கோயிலின் எதிர்ப்புறமும் அமைக்கப்பட்டுள்ளன.[5]

நினைவுத் தபால் தலை[தொகு]

மருது சகோதரர்களின் வீரத்தையும், தியாகத்தையும் பெருமைப்படுத்தும் வகையில் இவர்களது நினைவுத் தபால் தலையை இந்திய அஞ்சல் துறை 2004 அக்டோபர் 23 இல் மதுரையிலும், சென்னையிலும் வெளியிட்டது.

. காட்டில் அலைந்து திரியும் புலிகளையும், சிறுத்தைகளையும்கூட எதிர்த்து நின்று போரிட்டு வெற்றி பெறும் ஆற்றல் படைத்தவர் பெரிய மருது. அந்தக் காலத்தில் ஆற்காட்டு நவாப் வெள்ளியில் தடித்த நாணயமொன்றை வெளியிட்டிருந்தார்கள். அந்த கனத்த நாணயத்தைத் தனது விரல்களுக்கிடையில் வைத்து விரலால் வளைத்து ஒடித்துவிடும் எஃகு போன்ற பலமுடைய மாவீரன் அவர். தேக்கு மரத்தில் இழைத்துச் செதுக்கிய அற்புத சிற்பம் போல உடலமைப்பு கொண்ட மாவீரன் சின்ன மருது. உடல் பலத்தால் மட்டுமல்ல, தோற்றத்தாலும் மற்றவர்கள் பார்த்து வியக்கும் வண்ணம் இருந்தவன். அறிவிலே சிறந்தவன்; சாணக்கியனுக்கு நிகரானவன். பாஞ்சாலங்குறிச்சியின் பாளையக்காரர் கட்டபொம்மு நாயக்கர் 1799 ஜூன் மாதம் 5ஆம் தேதி சிவகங்கை சீமைக்கு வந்து சேர்ந்தார். தனது பாளையத்தில் வெள்ளைக்காரன் ஆக்கிரமித்துக் கொண்டு மக்களைக் கசக்கிப் பிழிந்து ஆற்காட்டு நவாப் கொடுத்த சலுகையைப் பயன்படுத்திக் கொண்டு, மக்களிடம் வரிவசூல் செய்வதையும், தென்னக பாளையக் காரர்களைத் தங்கள் எடுபிடிகளைப் போல நடத்திக் கொண்டு அவர்களை அவமரியாதை செய்து கேவலப்படுத்தி வருவதையும், பொருள்களை விற்க வந்த இந்த கும்பல் நாடுபிடிக்கக் கடந்து அலைவதையும் சொல்லி வருத்தப் பட்டார் கட்டபொம்மு நாயக்கர்.  கட்டபொம்மு நாயக்கரைவிட பெரிய மருது பன்னிரெண்டு வயது மூத்தவர். தன்னுடைய இளைய சகோதரனைப் போன்ற கட்டபொம்மு நாயக்கர் தனது பாளையத்திலிருந்து விரட்டப்பட்டு இங்கு வந்து சரண் புக காரணமாயிருந்த வெள்ளைக் கும்பினியாரை பழிவாங்கத் துடித்தார் பெரிய மருது. தன்னை நாடி உயிர் பிழைக்கத் தஞ்சம் புகுந்துவிட்ட கட்டபொம்மனுக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறினார். தன்னோடு தங்கிக் கொள்ளவும் அனுமதியளித்தார். சமயம் நேரும்போது பழிக்குப் பழி வாங்கிட உறுதியளித்தார். 1801ஆம் வருஷம் மருதுபாண்டியர் கமுதி கோட்டையைக் கைப்பற்றிக் கொண்டார். ஆங்கிலப் படைக்கு கர்னல் அக்னியூ என்பவன் தலைமை தாங்கி வந்தான். அவன் தன்னுடைய படைகளை மட்டும் கொண்டு போர் புரிந்து தோல்வியடைந்த பின் எதிரிகளைத் துரோகிகளாக மாற்றி, பிரித்தாளும் வழக்கமான ஆங்கில பாணியைப் பின்பற்றி அங்கிருந்த மற்ற பாளையக்காரர்களுக்கு ஆசை வார்த்தைகள் கூறி தன் பக்கம் இழுத்துக் கொண்டான். தென்பாண்டிச் சீமையின் வீர மறவர்களுக்குள் பிரிவினை நேர்ந்தது. புதுக்கோட்டை தொண்டைமான் அரசர் தன் பங்குக்கு ஆங்கிலக் கம்பெனியாருக்கு உதவவும் முன்வந்தனர். காளையார்கோயில். மருதிருவரின் மானம் காக்கும் கோட்டை. கானப்பேரெழில் என்பது அதன் பழைய பெயர். அந்த காளையார்கோயில் கோட்டையை நாற்புறமும் கம்பெனியாரின் வெள்ளைக்காரப் படையும் தோழமையுடன் சேர்ந்துகொண்ட மற்ற துணைப் படைகளும் சூழ்ந்து கொண்டன. கிழக்கிலிருந்து கர்னல் பிளாக்பர்ன் என்பவன் தலைமையில் ஒரு படை. மேற்கு திசையிலிருந்து கர்னல் அக்னியுவின் தலைமையில் ஒரு படையும், தெற்கிலிருந்து மெக்காலே என்பவன் தலைமையில் ஒரு படையும் காளையார்கோயிலைத் தாக்கின.  மருதுவின் படை வீரர்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் ஆங்கில கம்பெனியாரின் படைகளை எதிர்த்து நின்றனர். கடுமையான போர். பாண்டிய நாடு கண்டிராத கடுமையான பீரங்கித் தாக்குதல். அந்தப் போரின் இறுதியில் கம்பெனியார் படைகள் வென்றன. மருது சகோதரர்கள் தப்பி ஓடி காடுகளில் தஞ்சம் புகுந்தனர். 1801ஆம் வருஷம் அக்டோபர் மாதம் முதல் தேதி காளையார்கோயில் கோட்டை ஆங்கிலேயர் வசம் போனது.  தப்பி ஓடிவிட்ட மருது சகோதரர்களைப் பிடித்துக் கொடுத்தால் ஏராளமான பரிசுகள் தரப்படும் என்று கும்பினியார் முரசு கொட்டி அறிவிப்பு செய்தனர். அன்னியன் தரும் பிச்சைப் பரிசுக்கு ஆசைப்பட்டு இந்த புண்ணிய மண்ணில் பிறந்த துரோகிகள் பலரும் நாயாய் அலைந்தனர் அந்த வீரத் திருமக்களைப் பிடித்துக் கொடுப்பதற்காக. துரோகிகளின் முயற்சிகள் பயன் அளிக்கவில்லை. மருதிருவரைப் பிடிக்க இவர்களால் ஆகவில்லை.  வீரம் செறிந்த இந்த மாவீரர்களைப் பிடிக்க வேண்டுமானால் ஏதாவது தந்திரம் செய்து ஏமாற்றிப் பிடித்தால்தான் உண்டு என்பதை கும்பெனியார் உணர்ந்தனர். ஆட்கள் தேடி அலைந்தும் பிடிக்க முடியாத இந்த வீரர்களை பிடிக்க ஒரு உத்தியைக் கையாண்டனர். யானைகளைப் பிடிக்க பள்ளம் தோண்டி விழவைத்துப் பிடிக்கலாம், மனிதர்களைப் பிடிக்க முகஸ்துதி செய்து பிடிக்கலாம் என்றாலும் மருது சகோதரர் போன்ற வீரர்களைப் பிடிக்க என்ன செய்யலாம்? அவர்கள் உயிரினும் மேலாக நினைக்கும் ஆலயங்களை இடிப்பதாகச் சொன்னால், தானாக அந்த சிறுத்தைகள் மறைவிடம் விட்டு வெளிவந்து அந்த ஆலயங்களைக் காக்கப் போராடும் என்பதனை யாரோ சொல்லி அறிந்து கொண்டனர் வெள்ளையர்கள். ஒரு அறிவிப்பு வெளியானது. "மருது சகோதரர்கள் வந்து உடனடியாக ஆங்கிலப் படையிடம் சரண் அடையாவிட்டால், அவர்களது காளையார் கோயில் ஆலயம் இடித்துத் தரைமட்டமாக்கப்படும்" என்பது அந்த அறிக்கை. தாங்கள் ஒவ்வொரு செங்கல்லாய் எடுத்து வைத்து கட்டிய, தங்கள் உயிரினும் மேலான காளையார்கோயில் இடிபடுவதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை மருது சகோதரர்களால். தங்கள் உயிர் போனாலும் கவலை இல்லை தங்கள் நினைவைப் போற்றக் காலம் காலமாய் இருக்கப் போகும் அந்த ஆலயத்தைக் காப்பாற்றியே தீரவேண்டுமென்று முடிவு செய்தனர். மறைவிலிருந்து வெளிப்பட்டார் பெரிய மருது. வெள்ளையனின் சூழ்ச்சியால் பிடிபட்டார். விரட்டிச் சென்று காட்டில் இருந்த சின்ன மருதையும் பிடித்துக் கொணர்ந்தனர் வெள்ளைக் கும்பினியார். பிடித்துவிட்ட பின் விசாரணை செய்ய வேண்டுமே! ஒரு நாயைக் கொல்வதானாலும் விசாரணை செய்துதான் கொல்வோம் என்று மார்தட்டிக் கொண்ட வெள்ளையன் பெயருக்குக்கூட ஒரு விசாரணை இல்லாமல் மருது சகோதரர்களை திருப்பத்தூர் கோட்டையில் 1801 அக்டோபர் 24ஆம் தேதி தூக்கிலிட்டனர். பெரிய மருது தன் உயிரினும் மேலாகக் கருதிய காளையார்கோயிலின் முன்பு தனது உடல் சமாதி வைக்கப்பட வேண்டும் என்று விரும்பினார். அவர் விருப்பம் நிறைவேற்றப்பட்டது. ஒரு நாட்டை வீரத்தால் ஜெயிக்கலாம். துரோகத்தால் ஜெயிப்பது என்றால்? துரோகத்தால் அடிமைப்பட்ட நாடுகள் ஏராளம் ஏராளம். அதிலிருந்து பாரத நாடு மட்டும் தப்புமா என்ன? எந்த நாளும் துரோகம் இங்கு கோலோச்சிக் கொண்டுதான் இருந்தது, இருக்கிறது, இருக்கும். மண்ணோடு மண்ணாகிப் போன தியாக மன்னர்களும், தேசபக்தர்களும், வீராதி வீரர்களும் நம் மக்களுக்கு நல்ல புத்தியைக் கொடுக்க வேண்டும். அப்போதுதான் அன்னிய பக்தியும், அன்னியனுக்கு கால்கழுவும் புத்தியும் இல்லாமல் நம் பெருமை, நம் தன்மானம் இவற்றால் உயர முடியும். உலகத்துக்கு வழிகாட்ட முடியும். செய்ய முடியுமா? முடியும், நிச்சயம் முடியும். இளைய தலைமுறை உரக்க சபதம் ஏற்றுக்கொண்டு செயல்பட்டால்! வாழ்க பாரதம்!