Posts

Showing posts with the label MARUTHA

MARUTHA KASI ,LYRICS WRITER ,A LEGEND 1920 FEBRUARY 13 -1989 NOVEMBER 29

Image
MARUTHA KASI ,LYRICS  WRITER   ,A LEGEND 1920 FEBRUARY 13 -1989 NOVEMBER 29 ‘உடுமலை நாராயண கவியைப்போல் பாடல் எழுத இன்னொருவர் பிறக்க வேண்டும்’ என்று இசையமைப்பாளர் சி.ஆர்.சுப்பராமன் சொன்னபோது, ‘அவரை விட சிறந்த நூற்றுக்கணக் கானவர்களை உருவாக்குவேன் என்று கண்ணதாசன் குரல் கொடுத்தபோது, பலரும் ஏளனமாக சிரித்தார்கள்.  அப்போது அப்படிச் சிரித்தவர்களில் எம்.எஸ்.விஸ்வநாதனும் ஒருவர்.    அந்த அளவுக்கு அப்போது புகழ் உச்சியில் இருந்த உடுமலை நாராயணகவி, தனது திரைப்பாடல் வாரிசாக மருதகாசியை கருதி, அவர் மேல் அன்பு வைத்திருந்தார்.  மருதகாசியும் உடுமலை நாராயணகவியை தனது குருவாக பாவித்தார். உடுமலையை அன்று சி.ஆர்.சுப்பராமன் புகழ்ந்தது போலவே, இன்று, ‘உலகத்திலேயே கண்ணதாசன் தான் சிறந்த கவிஞன்’என்று இசையமைப்பாளர் இளையராஜா புகழ்கிறார்.   அவரே, கேட்டமாத்திரத்தில் உடனே மெட்டுக்கு பாட்டு எழுதுவதில் வல்லர் கண்ணதாசன் என்றும் புகழ்ந்து வருகிறார்.  ஆனால்,  ஆரம்ப காலங்களில் மெட்டுக்கு பாட்டு எழுதுவது கண்ண தாசனுக்கும் சிரமமானதாகவே இருந்திருக்கிறது.  மெட்ட...