NANMARAN ,EX-MLA OF COMMUNIST LIVED IN POVERTY
NANMARAN ,EX-MLA OF COMMUNIST LIVED IN POVERTY கம்யூனிஸ்ட் தியாகி மேடைக்கலைவாணர் நன்மாறன் Ex. எம்எல்ஏ. சட்ட மன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க நன்மாறன் அவர்கள் மதுரையிலிருந்து பேருந்தில் பயணம் செய்து திண்டுக்கல் வந்து கொண்டிருந்தார். . நிகழ்ச்சி துவங்கும் நேரமாகி விட்டதாலும், நிகழ்ச்சி நடைபெறுமிடம் ஸ்டேட் வங்கியின் அருகில் என்பதாலும், பேருந்து நிலையத்துக்கு செல்லாமல் ஸ்டேட் வங்கி பக்கத்திலிருக்கும் நிறுத்தத்தில் அவரை இறங்கச் சொல்லியிருந்தோம் , முகம் கழுவவும், இயற்கை உபாதையை சரிப்படுத்தவும் ,நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் வசதி இல்லாததால் , அருகிலுள்ள நான்பணி செய்யும் வங்கிக்கு அவரை அழைத்துச் சென்றேன். இரவு நேரமாதலால் முன்புறம் பூட்டியிருந்தது. ஆயுதக்காவலரை அழைத்து திறக்கச் சொல்லி தோழரை உள்ளே அழைத்துச் சென்றேன் . ஒரு அதிகாரி மட்டும் பணியிலிருந்தார் . வேட்டியை மடித்துக் கொண்டு முகம் கழுவ உள்ளே சென்று அவர் திரும்புவதற்குள் அந்த அதிகாரியும் காவலரும் வந்தவர் யாரெ...