MOSQUES DEMOLISHED IN CHINA - 16000 IN 5 YEARS
MOSQUES DEMOLISHED IN CHINA - 16000 IN 5 YEARS சீனா: 3 ஆண்டுகளில் 16,000 மசூதிகள் இடிப்பு! - ஆஸ்திரேலியாவின் ASPI அறிக்கை சொல்வதென்ன? . மசூதி அழிப்பு நடவடிக்கைகளின் பெரும்பகுதி கடந்த மூன்று ஆண்டுகளில் நிகழ்ந்திருக்கிறது. குறிப்பாக, நகர்ப்புற மையங்களான உரும்கி மற்றும் காஷ்கருக்கு வெளியே கிட்டத்தட்ட 8,500 மசூதிகள் அழிக்கப்பட்டிருக்கின்றன என்று ஆஸ்திரேலியாவின் ASPI தெரிவித்திருக்கிறது. ஆஸ்திரேலியாவின் தன்னார்வ புள்ளியியல் நிறுவனம் (ASPI) வெளியிட்டிருக்கும் அறிக்கையில், சீனாவின் வடக்கு மேற்கு பகுதிகளிலுள்ள 16,000 மசூதிகளை கடந்த மூன்று வருடங்களில் சீன அதிகாரிகள் இடித்திருக்கிறார்கள் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருக்கிறது. சீனாவின் வடக்குப் பகுதியிலுள்ள ஜின்ஜியாங் மாகாணம் ரஷ்யா, மங்கோலியா, இந்தியா, பாகிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான், கிர்கிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய எட்டு நாடுகளுடன் தனது எல்லையைப் பகிர்ந்துகொள்கிறது. அங்கு வசிக்கும் உய்குர் இன மக்களை, சீனமயமாக்க அந்நாட்டு அரசு முயன்றுவருவதாக, பல ஆண்டுகளாக குற்றச்சாட்டு இருக்கிறது. அதற்காக அதிகமான முகாம்களையும், சிறைகளையும் சீ...