S.W.R.D. PANDARA NAYAKKA BORN 1899 JANUARY 8 - 1956 SEPTEMBER 26
S.W.R.D. PANDARA NAYAKKA BORN 1899 JANUARY 8 - 1956 SEPTEMBER 26 செப்டம்பர் 26: அமரர் பண்டாரநாயக்க நினைவு தினம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபக தலைவரும் முன்னாள் பிரதமருமான எஸ். டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்காவின் 61 வது நினைவு தினம் செப்டம்பர் இருபத்தாறாகும். இலங்கை வரலாற்றில் இருபதாம் நூற்றாண்டின் முன்னரைப் பகுதியில் தனித்துவமிக்க அரசியல் தலைவராக விளங்கியவர் அமரர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க ஆவார். இவர் நாட்டின் சமூக, கலாசார, பொருளாதார மற்றும் அரசியல் துறைகளின் மறுமலர்ச்சிக்கு அளித்துள்ள பங்களிப்புக்கள் அழியாத் தடம் பதித்திருக்கின்றன. அவர் மறைந்து ஆறு தசாப்தமாகியுள்ள போதும், இன்றும் நினைவு கூரப்படுகிறார். அமரர் பண்டாரநாயக்க 1899 ஜனவரி 8 ஆம் திகதி ஹொரகொல்லவில் பிறந்தார். செல்வச் செழிப்புமிக்க மகாமுதலி சேர் சொலமன் டயஸ் பண்டாரநாயக்கவுக்கும், டெஸி எஸிலின் ஒபேசேகரவுக்கும் மகனாக அவர் பிறந்தார். கல்கிசை சென். தோமஸ் கல்லூரியில் இரு மொழி கல்வி பெற்றார். இக்கல்வியை பூர்த்தி செய்த பண்டாரநாயக்க, 1919 இல் இங்கிலாந்து சென்று ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் இணைந்து சட்டத் துறையில...