D.G.LINGAPPA ,MUSIC DIRECTOR DIED FEBRUARY 5,2000
D.G.LINGAPPA ,MUSIC DIRECTOR DIED FEBRUARY 5,2000 டி.ஜி.லிங்கப்பா இறப்பு பெப்ரவரி 5 திரு கோவிந்தராஜுலு நாயுடு (எம்.ஜி.ஆர்-வைஜெயந்தி மாலா நடித்த பாக்தாத் திருடன் படத்தின் இசையமைப்பாளர்) என்ற பிரபல சையமைப்பாளருக்கு மகனாக பிறந்த லிங்கப்பா ஒரு சிறந்த இசையமைப்பா ளரானார் என்றால் அது மிகையில்லை. இசையரசி திருமதி பி.சுசீலாவிற்கு மிகவும் புகழ் தேடி தந்த “அமுதைப்பொழியும் நிலவே” தங்கமலை ரகசியம் பாடல் இவரது இசையமைப்பே. திருச்சியில் வசித்து வந்தபோது அங்கே எம்.கே.டி, கே.பி.சுந்தராம்பாள் போன்றவர்களுக்கு இசையமைத்து பயிற்சி அளித்தவர் லிங்கப்பாவின் தந்தை. பல வாத்திய கருவிகள் வாசிப்பதில் வல்லுனர் லிங்கப்பா. பல பட நிறுவனங்களில் பணியாற்றினார். மார்டன் தியேட்டர்ஸ் போன்ற பிரம்மாண்ட நிறுவனத்தில் கே.வி.மகாதேவன் மற்றும் பாப்பாவுடன் கூட்டு சேர்ந்து வேலை செய்தார் பின் சுதர்ஸனம் மாஸ்டரிம் வேலை செய்தார்.இப்படி பல நிறுவனங்களில் பல்வேறு இசையமைப்பாளர்களிடம் வேலை செய்தார். டி.ஆர் மகாலிங்கமும் பந்துலுவும் சேர்ந்து தயாரித்த 1951’ல் வெளியான மோகன சுந்தரம் பட...