ALANGUDI SOMU ,LYRICS WRITER BORN 1932 DECEMBER 12 -1990 JUNE 6
ALANGUDI SOMU ,LYRICS WRITER BORN 1932 DECEMBER 12 -1990 JUNE 6 #நினைவு_அஞ்சலி ஆலங்குடி சோமு (12 திசம்பர் 1932 - 6 சூன் 1990) தமிழ்த் திரைப்பட பாடலாசிரியரும், தயாரிப்பாளரும் ஆவார். தமிழ்த் திரையுலகில் 1960-களில் நுழைந்து 1990-களின் இறுதிக் காலம் வரை திரையிசைப் பிரியர்களுக்குப் பல கருத்தாழம் நிறைந்த பல வெற்றிப் பாடல்களைத் தந்தவர் ஆலங்குடி சோமு. சிவகங்கை மாவட்டம், காரைக்குடியை அடுத்த ஆலங்குடியைச் சேர்ந்தவர் சோமு. 1932-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12-ஆம் திகதியன்று பிறந்தவர். திரைக்கதை எழுதவேண்டுமென்ற ஆவலோடு திரையுலகை நாடி வந்த சோமுவுக்கு பாட்டெழுதும் வாய்ப்பைப் பெற்றுக் கொடுத்தவர் இவரது பள்ளித் தோழனும், பக்கத்து ஊர்க்காரருமான கவிஞர் புரட்சி தாசன். சோமுவைத் தயாரிப்பாளர் சின்னப்பா தேவரிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். ‘’யானைப்பாகன்’’ திரைப்படத்தைத் தயாரித்துக் கொண்டிருந்த தேவர் இப்படத்திற்குப் பாடல் எழுதும்படி கேட்டுக்கொண்டார். அதன்படி ஆலங்குடி சோமு எழுதிய முதற்பாடல் 1960-இல் வெளிவந்த ‘’யானைப்பாகன்’’ திரைப்படத்தில் ஏ.எல்.இராகவனும், எல்.ஆர்.ஈஸ்வரியும் இணைந்து பாடிய ’ஆம்பளைக்குப் பொம்பள...