VICTORIA HALL HELPED IN CONSTRUCTION OF THEATRES
VICTORIA HALL HELPED IN CONSTRUCTION OF THEATRES . சரியாக நூறு ஆண்டுகளுக்கு முன் ....... டவுன் ஹால் என்று அழைக்கப்பட்டது மதராஸின் விக்டோரியா ஹால். சங்கரதாஸ் சுவாமிகளும் பம்மல் சம்பந்த முதலியாரும் நாடகம் நடத்திய ஹால் அது. ஜட்கா வண்டிகள், ரயிலில் வந்திறங்கி சிலுசிலு கடற்கரைக் காற்றை அனுபவித்தபடி அந்த ஹாலில் விடிய விடிய நாடகம் பார்ப்பது அன்றைய மதாராஸ்வாசிகளுக்கு ஆனந்த அனுபவமாக இருந்திருக்கிறது. ஷேக்ஸ்பியரின் ஆங்கில நாடகங்கள் ‘ஷேக்ஸ்பியர் வீக்’ என்ற நாடகத் திருவிழாவாக இங்கே நிகழ்த்தப்பட்ட வரலாறும் உண்டு. அரங்கம் நிரம்பி வழிய பாரதியும் விவேகானந்தரும் கோபால கிருஷ்ண கோகலேவும், வல்லபாய் படேலும் பேசிய பெருமைக்குரிய இடம் இது. இன்று பயன்பாடற்றுச் சிதைந்துகொண்டிருக்கும் வரலாறாக, சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை எதிரே உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு நிற்கிறது. விக்டோரியா ஹாலின் பேசும் சித்திரம் வெள்ளைக்காரர்களின் பால் ரூம் நடனத்துக்காக இந்தப் பொது அரங்கின் முதல் தளம் ஒதுக்கப்பட்டிருந்தது. இத்தனை பெருமைக்குரிய இந்த டவுன் ஹால், மதராஸின் முதல் திரையரங்கு என நாம் கொண்டாடும் ‘எலெக்ட்ரிக் திய...