MALCOM X - REVOLUTIONIST OF BLACK AMERICANS,KILLED BY NATION OF ISLAM
MALCOM X - REVOLUTIONIST OF BLACK AMERICANS,KILLED BY NATION OF ISLAM “கறுப்பின சமூகத்தின் மீது நடக்கும் கொடுமைகளை ஏற்றுக்கொண்டும், நாசுக்கோடும் நடந்து கொள்பவர்கள் மனிதகுலத்தில் கோழைத்தனத்திற்கான உதாரணங்களாக அவர்களின் பெயர்கள் வரலாற்றில் பதிவாகும்’’. Malcom X மால்கம் எக்ஸின் வரிகள் இவை : அமெரிக்காவின் அதிகார மையத்தின் நாற்காலியை நடுநடுங்க வைத்த கறுப்பின போராளி மால்கம் எக்ஸ். இவரின் வரலாற்றை எழுத்தாளர் ரவிக்குமார் எளிய மொழிநடையில் எழுதியுள்ளார். மிகவும் நேர்த்தியாக காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. “பொதுக்குழாயில் தண்ணீர் பிடிக்கத் தடை, பூங்காக்களில் விளையாடத் தடை, பேருந்தில் ஒன்றாக பயணிக்கத் தடை, கறுப்பர்கள் பள்ளியில் படிக்கத் தடை’’ இவையனைத்தும் நம்நாட்டில் தலித்துகளுக்கு எதிராக நடைபெறும் கொடுமையாய் தெரியும். இது இங்கு மட்டுமல்ல அமெரிக்காவில் வாழும் கறுப்பர்களின் நிலையும் இதுவே. இப்படியான சூழலில் மால்கம் எக்ஸ் செய்தது ஒன்றும் மிகப்பெரிய காரியம் அல்ல. வெள்ளையர்கள் மனிதர்கள்தான் என சொல்வதற்கு யாரும் தேவைப்படவில்லை. ஆனால் கறுப்பர்களும் மனி...