Posts

Showing posts with the label KUSALA KUMARI

FORGOTTEN TAMIL ACTORS - - மறக்கப்பட்ட நடிகர்கள்:

Image
FORGOTTEN  TAMIL ACTORS -  - மறக்கப்பட்ட நடிகர்கள்:   - மறக்கப்பட்ட நடிகர்கள்:  பி.வி. நரசிம்ம பாரதி ‘நான் கண்ட சொர்க்கம்’ படத்தில் நாரதராக... ‘சம்பூர்ண ராமாயணம்’ படப்பிடிப்பில் என்.டி.ஆர்., ஏ.பி.என்.னுடன் | படங்கள் உதவி: ஞானம் கட்டுடலும், கவர்ச்சியான முகமும் கொண்ட நரசிம்ம பாரதி, பதினைந்து வயதில் தேர்ந்த ஸ்திரீ பார்ட் நடிகராகப் பெயர்பெற்றிருந்தார். எகிப்து நடனம், குறத்தி நடனம் ஆடி நாடக ரசிகர்களை மகிழ்விப்பதிலும் வல்லவராக இருந்தார். இவரது திறமையைக் கண்ட புளியம்பட்டி ஜமீன்தார் நாடக சபா ஆறு மாதக் குத்தகையில் அவரை மலேசியக் கலைப் பயணத்துக்கு அழைத்துச் சென்றது. அங்கே ‘பாமா விஜயம்’ நாடகத்தை 100 நாட்கள் நடத்தினார் புளியம்பட்டியார். அதில் கர்வமும் மிடுக்கும் நிறைந்த ‘பாமா’வாகப் பெண் குரலில் பேசிப் பாடி, ஆடி நடித்தார் நரசிம்ம பாரதி. ஆடியதும் பாடியதும் பெண்ணா இல்லை ஆணா என்று மலேசியத் தமிழ் ரசிகர்கள் பலருக்கும் சந்தேகம். நாடகம் முடிந்ததும் மாலையுடன் மேடையேறிவிட்டார்கள் ரசிகர்கள். வேஷம் கலைக்காமல் சதுர் நடை நடந்துவந்து வந்து கழுத்தை நீட்டி ரசிகர்களிட...