Posts

Showing posts with the label LABOUR

LABOUR LEADER SENKALIAPPAN - CALLED AS KOVAI KAMARAJAR

  LABOUR LEADER SENKALIAPPAN -  CALLED AS KOVAI KAMARAJAR தொழிலாளர் தலைவர் செங்காளியப்பன் சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத் தியாகிகள். 48. தொழிலாளர் தலைவர் செங்காளியப்பன் தொகுப்பு: வெ.கோபாலன் பல்லடம் அருகே மல்லகவுண்டன்பாளையம் எனும் சிற்றூரில் ஓர் எளிய விவசாயக் குடும்பத்தில் ராம கவுண்டர் பழனியம்மாள் தம்பதியருக்கு 1926ஆம் ஆண்டில் பிறந்தவர் செங்காளியப்பன். கோவையில் ஒரு பஞ்சாலையில் தொழிலாளியாக வாழ்க்கையைத் துவக்கினார். காலப் போக்கில் மகாத்மா காந்தியடிகளின் வழிகளைப் பின்பற்றி தேச சுதந்திரப் போரில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 1942 ஆகஸ்ட்டில் இந்தியா முழுவதும் பற்றி எரிந்த "வெள்ளையனே வெளியேறு" இயக்கத்தில் இவர் பங்கெடுத்துக் கொண்ட போது இவருக்கு வயது 16. சூலூர் விமான தளம் எரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு 1943 மே மாதத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டு, இவர் ஏழு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை பெற்றார். அலிப்பூர் சிறையில் அடைபட்டிருந்த காலத்தில் இவருக்கு வயிற்றுக் கடுப்பு நோய் ஏற்பட்டு உயிருக்குப் போராடினார். கிட்டத்தட்ட உயிர் பிரிந்து விட்டது என்று சொல்லும் அளவில் இவர் எலும்பும் தோலுமாக அலிப்பூர...

FIRST FREEDOM FIGHTER FOUGHT AGAINST LABOUR EXPLOITATION V.SUBBAIAH BORN 1911 FEBRUARY 7 - 1993 OCTOBER 12

Image
  FIRST FREEDOM FIGHTER FOUGHT AGAINST LABOUR EXPLOITATION  V.SUBBAIAH  BORN 1911 FEBRUARY 7 - 1993 OCTOBER 12 இந்தியாவில் தொழிற்சாலையில் 8 மணி நேர வேலை   அமுல் படுத்திய முதல் தேச பக்தர் வ .சுப்பையா வ .சுப்பையா பிப்ரவரி மாதம் 7 ஆம் தேதி 1911 ஆம் ஆண்டு பிரெஞ்சிந்தியப் பகுதியான பாண்டிச்சேரியில் பிறந்தார் .இவர் கலவை கல்லூரி உயர்நிலை பள்ளியில் கல்வி கற்றவர் ஆவர்.ஆரம்பகால அரசியல் வாழ்வில் மகாத்மா காந்தியால் ஈர்க்கப்பட்டார் .1933 ஆம் ஆண்டு அரிஜன சேவா சங்கம் துவக்கினார் .இவர் "சுதந்திரம்" என்ற பத்திரிகை நடத்தி வந்தார். இவர் புதுவை ஒன்றிய பிரதேசத்தின் தொழிற்சங்க இயக்கம் உருவாக்கப்பட்டதின் முன் னோடி ஆவர் . இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கு ஏற்று இந்திய விடுதலைக்கு பாடுபட்டதிற்காக தாமரை பட்டயம் பெற்ற 97 சுதந்திர போராட்ட வீரர்களில் இவரும் ஒருவர். [1] அரசியல் பணி[மூலத்தைத் தொகு] 1935, 36 களில் புதுவைப் பஞ்சாலைகளில் நடைபெற்ற போராட்டங்கள் அனைத்திற்கும் வழிகாட்டியாகவும் உந்துசக்தியாகவும் இருந்து செயலாற்றியுள்ளார்.1936 இல் தொழிற்சங்க உரிமை கோரி மூன்று பஞ்சாலைத் தொழிலாளர்களும்...

IMPORTANCE OF HARD LABOUR

Image
 IMPORTANCE OF HARD LABOUR உழைப்பின் உன்னதத்தை  உணர்த்துகின்ற கதை. கடற்கரை ஓரமாக பெரிய மரம் ஒன்று வளர்ந்திருந்தது. அதன் கிளை ஒன்று மிக நீண்டு கடல் நீருக்கு மேலாக நீட்டிக் கொண்டிருந்தது. அதன் உச்சியில் கடற்குருவி ஒன்று கூடு கட்டியது. அதனுள் நாலைந்து முட்டைகளை இட்டு அடைகாத்து வந்தது. ஆண் குருவியும் பெண் குருவியும் அதே கூட்டில் வசித்தபடி தங்கள் குஞ்சுகள் வெளிவரும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தன. ஒரு நாள் பெரும் காற்று வீசியது. பெரிய அலைகள் பொங்கி எழுந்தன. கிளையில் இருந்த கூடு நழுவி காற்றின் வேகத்தில் கடலில் விழுந்து மூழ்கியது. குருவிகள் மனம் பதறிக் கதறின. கடல் நீரில் விழுந்து கூடு மூழ்கிய இடத்திற்கு மேலாக கீச், கீச் என்று கத்தியபடியே சுற்றிச் சுற்றி வந்தன. பெண் குருவி மனம் உடைந்து சொல்லியது. எப்படியாவது முட்டைகளை மீண்டும் நான் காண வேண்டும். இல்லையேல் நான் உயிர் வாழ மாட்டேன் என்றது . ஆண் குருவி சொன்னது. அவசரப்படாதே ஒரு வழி இருக்கிறது. நமது கூடு கரையின் ஓரமாகத் தான் விழுந்துள்ளது. கூட்டுடன் சேர்ந்து முட்டைகள் விழுந்ததால் நிச்சயம் உடைந்திருக்காது. அத...