Posts

Showing posts with the label CONSTRUCTED OPENED

ST.GEORGE FORT IN CHENNAI CONSTRUCTED AND OPENED ON 1640 APRIL 23

Image
ST.GEORGE FORT IN CHENNAI CONSTRUCTED  AND OPENED ON 1640 APRIL 23 கோட்டை என்றாலே தமிழக அரசு என்று சொல்லுமளவிற்கு பெயர் பெற்றது செயின்ட் ஜார்ஜ் கோட்டை. இந்தியாவில் பிரிட்டீஷார் கட்டிய முதலாவது கோட்டை இதுதான். 1600-ம் ஆண்டில் வணிக நோக்குடன் இந்தியாவுக்குள் நுழைந்த கிழக்கிந்தியக் கம்பெனி சூரத்தில் அனுமதி பெற்று தனது வணிக நடவடிக்கைகளைத் தொடங்கியது. வங்கக் கடலில் தனது வணிகக் கப்பல்களையும், வாசனைப் பொருள் வணிகத்தில் தங்களுடைய நலன்களையும் பாதுகாத்துக் கொள்வதற்காக, மலேஷியா, இந்தோனேஷியா ஆகிய நாடுகளுக்கு அருகில் ஒரு துறைமுகம் இருந்தால் நன்றாக இருக்கும் என கிழக்கிந்தியக் கம்பெனியினர் கருதினர். அதற்காக நிலம் தேடும் பணி கிழக்கிந்திய கம்பெனியின் ஏஜெண்ட் பிரான்ஸிஸ் டே என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது. சந்திரகிரியில் ஆட்சிபுரிந்த விஜயநகர மன்னர் மூன்றாம் வெங்கடனிடம் (1630-1642) வேங்கடப்பர், அவரது சகோதரர் அய்யப்பர் ஆகிய இரு நாயக்கத் தலைவர்களும் (தாமல் சகோதரர்கள்) செல்வாக்குப் பெற்று விளங்கினர். வேங்கடப்பரின் தலைமையிடம் வந்தவாசியில் இருந்தது. அய்யப்பர் பூவிரிந்தமல்லியைத் தலைமையிடமாகக்கொண...